Featured post

Sudhan Sundaram’s Passion Studios presents, Siddharth-Raashi Khanna starrer “Rowdy & Co” Teaser Poster Concept surprises K-Town

 *Sudhan Sundaram’s Passion Studios presents, Siddharth-Raashi Khanna starrer “Rowdy & Co” Teaser Poster Concept surprises K-Town* Passi...

Sunday, 25 August 2019

தளபதி 64 செய்தி வெளியீடு


"நீண்ட காலத்திற்குப் பிறகு தளபதி விஜய்யுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து அறிவிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். முன்னதாக, தளபதி விஜய் அவர்களின் மூன்று திரைப்படங்களைத் தயாரிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது, மேலும் #தளபதி 64 (தற்காலிக தலைப்பு) விரைவில் எங்களின் தயாரிப்பு நிறுவனம் எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் (XB Film Creators) மூலம் தயாரிக்க உள்ளோம் என்பதை உங்கள் அனைவருக்கும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.

நம்பிக்கைக்குரிய இளம் திறமைசாலியான இயக்குனர் லோகேஷ் கனகராஜ் #தளபதி 64 படத்தை இயக்கவிருக்கிறார். இவர் 'மாநகரம்' மற்றும் 'கைதி' ஆகிய படங்களை இயக்கியவர். 'கத்தி' படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து, தளபதி விஜய் மற்றும் ராக்ஸ்டார் அனிருத் ஆகியோர் மீண்டும் #தளபதி 64 படத்தில் கைகோர்க்கின்றனர் என்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.

சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய பிலோமின் ராஜ் எடிட்டிங் கவனிக்க  ‘ஸ்டண்ட்’ சில்வாவின் ஸ்டண்ட் இயக்கம் மற்றும் சதீஷ்குமாரின் கலை இயக்கம் என மிகவும் வலுவான படக்குழு இந்தப் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளனர். மீதமுள்ள நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக்கலைஞர்கள் தேர்வு நடைபெறுகிறது.

எங்களின் லைன் ப்ரொட்யூசர்ஸ் ஜெகதீஷ் மற்றும் லலித் குமார் #தளபதி 64 இன் ப்ரொடக்‌ஷன் மற்றும் வணிக அம்சங்களை கவனிக்கின்றனர்.

#தளபதி 64 படத்தின் படப்பிடிப்பு வருகிற அக்டோபர் மாதம் 2019  தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது, மேலும் ஏப்ரல் 2020ல், ஒரு ஜனரஞ்சகமான பொழுதுபோக்கு படமாக இந்தப் படம் வெளியாகும் என்று நாங்கள் உறுதியளிக்கிறோம்.

No comments:

Post a Comment