Featured post

Charming Star Sharwa, Blockbuster Maker Sampath Nandi, KK Radhamohan, Sri Sathya Sai Arts’ Prestigious Pan India Project

Charming Star Sharwa, Blockbuster Maker Sampath Nandi, KK Radhamohan, Sri Sathya Sai Arts’ Prestigious Pan India Project #Sharwa38 Titled Bh...

Wednesday, 28 August 2019

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் 18வது படம்

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் 18வது படம். சர்வானந்த் நடிக்கும் புதிய படம் படப்பிடிப்புடன் ஆரம்பம் . 


‘ஜோக்கர்’, ‘காஷ்மோரா’, ‘அருவி’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘NGK’, ‘ராட்சசி’ போன்ற பல வெற்றிப்படங்களை தயாரித்த நிறுவனம் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ். தற்போது கார்த்தி நடித்திருக்கும் ‘கைதி’ படத்தைத் தயாரித்துவருகிறது. ‘மாநகரம்’ லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படம், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளிவருகிறது.

‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் அடுத்ததாக புதிய படம் ஒன்றை தயாரிக்கிறது. ‘எங்கேயும் எப்போதும்‘ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி தற்போது தெலுங்கில் முன்னணி நாயகர்களில் ஒருவராக திகழும் சர்வானந்த் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.  இப்புதிய படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இவருக்கு ஜோடியாக, ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் நாயகி ரீத்து வர்மா நடிக்கிறார். இவர்களுடன் நாசர், சதீஷ், ரமேஷ் திலக் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் மூலம் ஸ்ரீகார்த்திக் இயக்குநராக அறிமுகமாகிறார். ‘துருவங்கள் பதினாறு’  இசைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய், அதே படத்தின் ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங் மற்றும் படத்தொகுப்பாளர் ஸ்ரீஜித் சாரங் மூவரும் இப்படத்தில் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளனர். ‘கைதி’ படத்தைத் தொடர்ந்து இப்படத்திற்கும் கலை இயக்கம் செய்கிறார் என்.சதீஷ்குமார். நிர்வாகத் தயாரிப்பு - அரவிந்தராஜ் பாஸ்கரன், தயாரிப்பு - எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு.

வாழ்கையில் பிரிக்கமுடியாத விஷயங்களான நட்பு, காதல், தாய்பாசம், இவற்றை பின்னணியாக கொண்டு ஜனரஞ்சகமாக அமைக்கப்படுள்ளது இதன் கதை. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் துவங்கியது. இப்படத்தை 2020 கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.

No comments:

Post a Comment