உலக ஹெபடைட்டிஸ் தினத்தையொட்டி மாணவர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
மகாலட்சுமி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நுண்ணுயிரியல் துறை மற்றும் இந்திய நுண்ணுயிரியல் சங்கம் இணைந்து, திருவேற்காடு மற்றும் ஆவடி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில், உலக ஹெபடைட்டிஸ் தினத்தையொட்டி ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினார்கள்.
இந்நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் டாக்டர் அனிதா ராமன் அவர்கள் துவங்கி வைத்தார். நிகழ்ச்சியை துறைத் தலைவர் டாக்டர் ஜி. சங்கீதா மற்றும் உதவிப் பேராசிரியர் டாக்டர் என். கிருத்திகா அவர்கள் ஒருங்கிணைத்தனர்.
இந்த விழிப்புணர்வு நிகழ்வில், கல்லூரி மாணவிகள் பள்ளி மாணவர்களிடம் ஹெபடைட்டிஸ் குறித்த முக்கியமான தகவல்களை எளிமையான மற்றும் விளக்கமான முறையில் பகிர்ந்தனர். இதில் முக்கியமாக கீழ்க்காணும் அம்சங்களை அவர்கள் எடுத்துரைத்தனர்:
• ஹெபடைட்டிஸின் அறிகுறிகள்
• கண்டறியும் முறைகள்
• பரவுவதற்கான வழிகள்
• தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
மேலும், மோர் (Buttermilk) கல்லீரல் நலனுக்குப் பயனுள்ளதாக இருப்பதை மாணவிகள் வலியுறுத்தினர். மோர் குடிப்பதன் மூலம் ஜீரண அமைப்பு மேம்படுவது மட்டுமின்றி, கல்லீரலிலிருந்து நச்சுப்பொருட்களை நீக்கும் தன்மை உள்ளது என்பதையும் அவர்கள் விளக்கியனர்.
No comments:
Post a Comment