*இசைக்கலைஞர் நவ்நீத் சுந்தர் புதுமையாக உருவாக்கியுள்ள, மென்மையான காதல் இசையில் செயற்கை நுண்ணறிவுக் காட்சிகள் கைகோர்த்த, இசை ஆல்பம் ' ஒரு மாலை நேரத்தில்' Preview வெளியாகி ரசிகர்களின் வரவேற்பு பெற்றுள்ளது.*
Click here to watch Oru Maalai Nerathil Song Launch:
https://youtu.be/6oaLvAro_b8?si=Ba3ijMUgxmHoSbBv
https://youtube.com/shorts/YeawSkEIZHs?si=by11LDFzEO82szbx
இசையமைப்பாளரும், புதுமையை உருவாக்குபவருமான நவ்னீத் சுந்தர், தொழில்நுட்பத்தை இசையுடன் ஒருங்கிணைப்பதிலும், கர்நாடக இசையை ஐபாடில் கொண்டு வருவதிலும் தனது சிறிய செயல்பாடுகளால் பிரபலமானவர். இவர் தனது புதிய சிங்கிள் 'ஒரு மாலை நேரத்தில்' என்ற காதல் பாடலை எழுதி, இசையமைத்து, செயற்கை நுண்ணறிவு (AI) காட்சிகளை உருவாக்கி மிகப்பிரமாண்டமாக வெளியிட்டுள்ளார்.
இந்த இளமையையும் இனிமையும் நிறைந்த காதல் பாடல் Preview வெளியீடு தமிழ் தனித்துவ இசை வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.
இந்த பாடல் நவ்நீத் சுந்தரின் இனிமையான இசையமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது என்றாலும் இதன் தனிச்சிறப்பு காட்சியமைப்பில் பயன்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு ஆகும். அதாவது 100% மனிதனால் உருவாக்கப்பட்ட இசையில் 100% காட்சியமைப்புகள் AI தொழில்நுட்பத்தில் செய்யப்பட்டுள்ளன. முதல் முறையாக, AI மூலம் நிலையான கதாபாத்திரங்கள், தெளிவான காட்சியமைப்புகள் மற்றும் கலைஞர்களுடன், சரியான விகிதத்தில் கலந்து கேட்கவும் பார்க்கவும் பரவசம் ஏற்படுத்தும் வகையில் இந்த இசை ஆல்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த சாதனை கலை மற்றும் தொழில்நுட்பத்தின் ஆக்கபூர்வமான இணைப்பில் ஒரு புதிய அளவுகோலை அமைக்கிறது. இது மனித கலைத்திறனும் செயற்கை நுண்ணறிவும் எவ்வாறு ஒன்றிணைந்து ஒரு புதிய, எல்லையைத் தொடும் அனுபவத்தை உருவாக்க முடியும் என்பதை நிரூபிக்கிறது.
இந்த பாடல் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய நான்கு மொழிகளில் வெளியிடப்பட்டது. தமிழ் மற்றும் இந்தியில் பாடல் வரிகளை நவ்னீத் சுந்தரும், தெலுங்கில் கிராந்தி வட்லூரியும் எழுதியுள்ளனர். கன்னடத்தில் தீப்தி நடராஜன் பாடல் வரிகளை எழுதியுள்ளார்.
நவ்னீத் சுந்தர் ஒரு இசையமைப்பாளர், சிறந்த கீ போர்டு கலைஞர் மற்றும் நவீனங்களை இசையில் உருவாக்குவதில் கை தேர்ந்தவர். சர்வதேச அளவில் 3,000 க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை அவர் நிகழ்த்தியுள்ளார். ஜியோஷ்ரெட்(GeoShred) செயலி மூலம் கர்நாடக இசை நிகழ்ச்சிகளை ஐபாட் (iPad) இல் உருவாக்குவது உட்பட அவரது நவீன சிந்திக்கும் அணுகுமுறைகளுக்காக அவர் இசையுலகில் அங்கீகரிக்கப்பட்டுள்ளார். ஐபாடில் இசைக்கப்பட்ட முதல் கர்நாடக இசைக்கான லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருதினையும் அவர் பெற்றுள்ளார்.
கமல்ஹாசன் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கிய செஸ் ஒலிம்பியாட் 2022 இன் தமிழ் மண் பாடல், தமிழ்நாடு அரசின் கலைஞர் நூற்றாண்டு பூங்காவின் இசை நீரூற்றுக்கான பின்னணி இசை ஆகியவை நவ்நீத் சுந்தரின் கைவண்ணத்தில் உருவானவை.
மேலும், குப்தாந்த பிரேமா (தெலுங்கு), பட்டி (மலையாளம்), பட்டம்பூச்சி (தமிழ்) ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
மலையாள திரைப்படமான கர்மயோகி (2012)இல் இவரது இசையில் உருவான எவர்கிரீன் ஹிட் "சந்திரசூடா" பாடல் யூடியூபில் 36 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை புரிந்துள்ளது. மேலும் நடனக் கலைஞர்கள் மற்றும் இசைக்கலைஞர்களால் உலகளவில் இந்தப் பாடல் மேடைகளில் தொடர்ந்து நிகழ்த்தப்படுகிறது.
பானி பூரி (தமிழ்) என்கிற வெப் சீரிஸ் அவரது இசையில் வெளியானது. லக்கி என்ற தமிழ் திரைப்படத்திற்கான பின்னணி இசை மற்றும் நாக் நாக் என்ற தமிழ் திரைப்படத்திற்கான பாடல்கள் மற்றும் இசை நவ்நீத் சுந்தரின் உருவாக்கத்தில் விரைவில் வெளியாக உள்ளன .
வெளியீட்டு தகவல்
ஒரு மாலை நேரத்தில் பாடலின் தெலுங்கு பதிப்பான சிரு காளி வேலலோ, அதன் கன்னட பதிப்பான ஹனி மோடா பானாலி மற்றும் அதன் இந்தி பதிப்பான ஏக் ஷாம் கி ராஹ் மே ஆகியவை அக்டோபர் 2 ஆம் தேதி முதல் ஸ்பாடிஃபை, ஆப்பிள் மியூசிக், யூடியூப் மியூசிக், அமேசான் மியூசிக் மற்றும் அனைத்து முக்கிய ஸ்ட்ரீமிங் தளங்களிலும் கிடைக்கும்.
அற்புதமான AI-இயங்கும் காட்சிகள் யூடியூபில் வெளியிடப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment