பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜத்துக்கு
வாழ்நாள் சாதனையாளர் விருது !
நடிகர் சங்கம் அறிவிப்பு!
பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம். 1950 முதல் 1960களின் இறுதி வரை முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். ரத்தக்கண்ணீர், பெண்ணின் பெருமை, புதையல், தங்கப்பதுமை, நாடோடி மன்னன், பாசமலர், தாலி பாக்கியம், அலிபாபாவும் 40 திருடர்களும், அரங்கேற்றம் போன்றவை அவர் நடித்த முக்கியமான படங்களில் சில. 200 படங்கள் வரை நடித்திருக்கிறார். பெரும்பாலும் குணசித்திர வேடங்களில் நடித்தார். சமீபத்தில் 90 வது பிறந்தநாளைக் கொண்டாடிய அவருக்கு, வரும் 21 ஆம் தேதி காமராஜர் அரங்கில் நடைபெற இருக்கும் தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது. தென்னிந்திய நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி அவர்களும் துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன் அவர்களும் இன்று அவரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.
#NadigarSangam #ns #siaa
@actornasser @VishalKOfficial @Karthi_Offl @PoochiMurugan
@karunaasethu
@johnsoncinepro
No comments:
Post a Comment