*"என் சினிமா கரியரில் எப்போது வெளியாகும் என நான் எதிர்பார்த்துக் காத்திருக்கும் படங்களில் ஒன்று 'தணல்'"- நடிகர் அஸ்வின் காகுமனு!*
நடிகர் அதர்வா முரளியின் 'தணல்' படத்தில் நடிகர் அஸ்வின் காகுமனு வில்லனாக நடித்திருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. செப்டம்பர் 12, 2025 அன்று உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது 'தணல்' திரைப்படம். படம் வெளியாவதற்கு முன்பே பத்திரிகையாளர்களுக்கு என பிரத்யேகமாகத் திரையிடப்பட்ட ஷோவில் படம் பாராட்டுகளை குவித்தது. படத்தின் ஒவ்வொரு ஃபிரேமிலும் பவர்ஃபுல் நடிப்பில் மிரட்டிய அஸ்வின் நடிப்பும் பாராட்டுகள் பெறத் தவறவில்லை.
படம் குறித்து நடிகர் அஸ்வின் காகுமனு பகிந்திருப்பதாவது, "என்னை இந்தக் கதாபாத்திரத்திற்குத் தேர்ந்தெடுத்த இயக்குநர் ரவீந்திர மாதவா சாருக்கே அனைத்து பாராட்டும் தகும்" என்றார்.
இதுவரை மென்மையான, ரொமாண்டிக் ஹீரோ கதாபாத்திரத்தில் அஸ்வினை பார்த்த ரசிகர்களுக்கு 'தணல்' படத்தில் அவரது வில்லன் கதாபாத்திரம் நிச்சயம் ஆச்சரியமாக இருக்கும்.
தனது கதாபாத்திரம் பற்றி அஸ்வின் பேசியதாவது, "இயக்குநர் ரவீந்திர மாதவா படத்தின் கதையை என்னிடம் கூறியபோது வில்லனாக நடிக்கப் போகிறோம் என்றே தோன்றவில்லை. கதாநாயகனுக்கு இணையாக ஆண்டி-ஹீரோ கதாபாத்திரத்தில் நடிக்கிறோம் என்றுதான் தோன்றியது. கான்ஸ்டபிளாக தனது வேலையை தொடங்கும் ஒருவன் மற்றும் தன் வாழ்வில் ஆறாத வடுவை சுமக்கும் மற்றொருவன் என இரு நபர்களை சுற்றி நடக்கும் கதை இது. நிச்சயம் ரசிகர்களுக்கும் பிடிக்கும். என் சினிமா கரியரில் எப்போது வெளியாகும் என நான் எதிர்பார்த்துக் காத்திருக்கும் படங்களில் ஒன்று 'தணல்'. தற்போது, படம் பார்த்திருக்கும் பத்திரியாளர்கள் தரப்பில் இருந்து பாரட்டுகள் குவிவது மகிழ்ச்சியாக உள்ளது. படப்பிடிப்பில், என் நடிப்பைப் பாராட்டி ஊக்கப்படுத்திய அதர்வாவுக்கும் நன்றி! அவருடன் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம்" என்றார்.
*நடிகர்கள்:* அதர்வா முரளி, அஸ்வின் காகுமனு, லாவண்யா திரிபாதி, ஷா ரா, பாரத், லக்ஷ்மி பிரியா மற்றும் அழகம் பெருமாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
*தொழில்நுட்பக்குழு விவரம்:*
தயாரிப்பு: எம். ஜான் பீட்டர்,
தயாரிப்பு நிறுவனம்: அன்னை ஃபிலில் புரொடக்சன்ஸ்,
இசை: ஜஸ்டின் பிரபாகரன்,
ஒளிப்பதிவு: சக்தி சரவணன்,
படத்தொகுப்பு: கலைவண்ணன். ஆர்,
பாடல் வரிகள்: கார்த்திக் நேத்தா,
நடனம்: ஹரி கிரண்,
கலை: எஸ். அய்யப்பன்,
சண்டை பயிற்சி: ஆர். சக்தி சரவணன்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா- அப்துல் ஏ நாசர்.
No comments:
Post a Comment