Featured post

ZEE5 தமிழ் ஒரிஜினல் வெப்சீரிஸ் “வேடுவன்” டிரைலர் வெளியீடு – அக்டோபர் 10 முதல் ஸ்ட்ரீமிங்காகிறது

 *ZEE5 தமிழ் ஒரிஜினல் வெப்சீரிஸ் “வேடுவன்” டிரைலர் வெளியீடு – அக்டோபர் 10 முதல் ஸ்ட்ரீமிங்காகிறது !!* இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி ஓடிடி த...

Tuesday, 23 September 2025

ஹேஷ்டேக் FDFS புரொடக்சன்ஸ் தயாரிப்பில் அப்பா -மகள் இடையிலான

 *ஹேஷ்டேக் FDFS புரொடக்சன்ஸ் தயாரிப்பில் அப்பா -மகள் இடையிலான அன்பை சொல்லும் கவிதையாக உருவாகியுள்ளது 'மெல்லிசை'- அன்பு மட்டும் அண்டம் தேடும்!*



ஆழமான உணர்வு மற்றும் கவிதைத்துவமான சினிமா அனுபவத்தை பார்வையாளர்களுக்கு கொடுக்கும் வகையில் அப்பா- மகள் இடையிலான அன்பைக் காட்டும் படமாக உருவாகி வருகிறது ஹேஷ்டேக் FDFS புரொடக்சன்ஸின் 'மெல்லிசை'. இந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் முந்தைய விருது பெற்ற 'வெப்பம் குளிர் மழை' திரைப்படத்தை இயக்கிய திரவ் இந்தப் படத்தை எழுதி இயக்குகிறார். 


இரண்டு காலக்கட்டங்களில் மனிதர்களின் ஆழமான உணர்வுகள் பற்றி பேசுகிறது. காதல், லட்சியம், தோல்வி, வெற்றி மற்றும் வாழ்க்கை சுழற்சி, மனித உறவுகளுக்கு இடையேயான புரிதல் என அனைத்தையும் கவிதையாக பேசுகிறது 'மெல்லிசை'.  'வடசென்னை', 'விடுதலை' ஆகிய படங்களில் தனது திறமையான நடிப்புக்குப் பெயர் பெற்ற நடிகர் கிஷோர் குமார் 'மெல்லிசை' படத்தில் அப்பா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 


'பரியேறும் பெருமாள்', 'ஜெய்பீம்' மற்றும் 'பொம்மை நாயகி' ஆகிய படங்களில் தனது நடிப்பால் கவனம் ஈர்த்த சுபத்ரா ராபர்ட் கதாநாயகியாக 'மெல்லிசை' படத்தில் நடிப்பதன் மூலம் இந்தக் கதையின் ஆழத்திற்கும் உணர்வுகளுக்கும் அர்த்தம் சேர்ப்பார். 


இவர்களோடு ஜார்ஜ் மரியான், ஹரீஷ் உத்தமன், ஜஸ்வந்த் மணிகண்டன், தனன்யா, ப்ரோஆக்டிவ் பிரபாகர், கண்ணன் பாரதி மற்றும் பலர் நடிக்கின்றனர். 


ஆழமான உணர்வுகள், நுட்பமான கதை சொல்லல், கவிதைத்துவமான கதை என தலைமுறைகள் கடந்து, அன்பை தேடும் பிரபஞ்சத்தின் கதையாக வெளிவர இருக்கிறது 'மெல்லிசை'. 


*தொழில்நுட்பக்குழு விவரம்:*


எழுத்து, இயக்கம்: திரவ்,

தயாரிப்பு: ஹேஷ்டேக் FDFS புரொடக்‌ஷன்ஸ்,

இசை: ஷங்கர் ரங்கராஜன்,

ஒளிப்பதிவு: தேவராஜ் புகழேந்தி,

பாடல் வரிகள்: திரவ்.

No comments:

Post a Comment