Featured post

ZEE5 தமிழ் ஒரிஜினல் வெப்சீரிஸ் “வேடுவன்” டிரைலர் வெளியீடு – அக்டோபர் 10 முதல் ஸ்ட்ரீமிங்காகிறது

 *ZEE5 தமிழ் ஒரிஜினல் வெப்சீரிஸ் “வேடுவன்” டிரைலர் வெளியீடு – அக்டோபர் 10 முதல் ஸ்ட்ரீமிங்காகிறது !!* இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி ஓடிடி த...

Friday, 26 September 2025

இதுவரை கண்டிராத சினிமா அனுபவத்தை தர இருக்கும் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின்

 *இதுவரை கண்டிராத சினிமா அனுபவத்தை தர இருக்கும் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' படத்தின் புதிய டிரெய்லர் வெளியாகியுள்ளது!*



அக்டோபர் 2, 2025 அன்று இந்தியத் திரையரங்குகளில் 3டியில் (ஒரு வாரத்திற்கு மட்டும்) மீண்டும் வெளியாக இருக்கும் 'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்' படத்துடன் தற்போது வெளியாகியுள்ள புதிய டிரெய்லரையும் கண்டு மகிழுங்கள்!


இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் வரவேற்பு பெற்ற சினிமாட்டிக் உலகின் மிகவும் எதிர்பார்க்கப்படும் அடுத்த பாகமான 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' திரைப்படம் இந்தியா முழுவதும் டிசம்பர் 19, 2025 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்தில் வெளியாகிறது. இந்தப் படத்தின் புதிய டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. பண்டோரா உலகின் காட்சிகள் பார்வையாளர்களுக்கு அட்டகாசமான சினிமா அனுபவத்தை தர இருக்கிறது என்பதை டிரெய்லரின் கிளிம்ப்ஸ் உறுதிப்படுத்துகிறது. 


இந்தப் படம் குறித்து அதிக எதிர்பார்ப்பு இருக்கும் அதே வேளையில், 'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்' திரைப்படம் திரையரங்குகளில் 3டியில் (ஒரு வாரத்திற்கு மட்டும்) வெளியாகிறது. ரசிகர்கள் பண்டோரா உலகிற்கு மீண்டும் செல்வதுடன் 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' படத்தின் டிரெய்லரையும் பெரிய திரையில் பார்த்து ரசிக்கலாம். 


'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' திரைப்படம் மூலம்  மரைன் ஆக மாறிய நவி தலைவர் ஜேக் சல்லி (சாம் வொர்திங்டன்), நவி போர்வீரன் நெய்திரி (ஸோ சல்டானா) மற்றும் சல்லி குடும்பத்துடன் ஒரு புதிய சாகச பயணமாக பண்டோராவின் உலகத்திற்கு பார்வையாளர்களை இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் அழைத்துச் செல்கிறார். ஜேம்ஸ் கேமரூன், ரிக் ஜாஃபா, அமண்டா சில்வர் ஆகியோர் திரைக்கதையையும், ஜேம்ஸ் கேமரூன், ரிக் ஜாஃபா, அமண்டா சில்வர், ஜோஷ் ஃப்ரீட்மேன் மற்றும் ஷேன் சலெர்னோ ஆகியோர் கதையும் எழுதியுள்ளனர். சிகோர்னி வீவர், ஸ்டீபன் லாங், ஊனா சாப்ளின், கிளிஃப் கர்டிஸ், பிரிட்டன் டால்டன், டிரினிட்டி பிளிஸ், ஜாக் சாம்பியன், பெய்லி பாஸ் மற்றும் கேட் வின்ஸ்லெட் ஆகியோர் நடித்துள்ளனர். 


'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்' படத்தின் ரீ-ரிலீஸ் மற்றும் 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' படத்தின் வெளியீடு என இந்த வருடம் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் காத்திருக்கிறது. 


20த் செஞ்சுரி ஸ்டுடியோஸ் இந்தியா வரும் டிசம்பர் 19, 2025 அன்று 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' திரைப்படத்தை ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட ஆறு மொழிகளில் வெளியிடுகிறது.

https://youtu.be/tQj9wlkuPgU?si=WNgGExVV7R7d9r4l

No comments:

Post a Comment