Featured post

ZEE5 தமிழ் ஒரிஜினல் வெப்சீரிஸ் “வேடுவன்” டிரைலர் வெளியீடு – அக்டோபர் 10 முதல் ஸ்ட்ரீமிங்காகிறது

 *ZEE5 தமிழ் ஒரிஜினல் வெப்சீரிஸ் “வேடுவன்” டிரைலர் வெளியீடு – அக்டோபர் 10 முதல் ஸ்ட்ரீமிங்காகிறது !!* இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி ஓடிடி த...

Saturday, 20 September 2025

மைத்ரி மூவி மேக்கர்ஸ் வழங்கும் 'Dude' படத்தின் 'நல்லாரு போ' பாடல் ரசிகர்களின் மனதைக் கவர்ந்துள்ளது!*

 *மைத்ரி மூவி மேக்கர்ஸ் வழங்கும் 'Dude' படத்தின் 'நல்லாரு போ' பாடல் ரசிகர்களின் மனதைக் கவர்ந்துள்ளது!*



திரைப்படங்களின் இசையும் பாடல்களும் பலருக்கும் உணர்வுப்பூர்வமாக இரண்டற கலந்திருப்பது.  இதனை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் வெளிவர இருக்கும் 'Dude' படம் மீண்டும் நிரூபித்துள்ளது. ஹை எனர்ஜி பாடலாக வெளியான 'ஊரும் பிளட்டும்' பாடல் ஹிட்டுக்கு பிறகு தற்போது இரண்டாவது பாடலான 'நல்லாரு போ' ஆன்மாவை தொடும் உணர்வுப்பூர்வமான பாடலாக வெளியாகியுள்ளது. குறிப்பாக பெண் இசை ரசிகர்கள் இந்தப் பாடலை  கொண்டாடி வருகின்றனர். 


சாய் அபயங்கர் இசையமைப்பில், ஏக்கம், காதல், பிரிவு ஆகியவற்றின் கலவையாக விவேக் பாடல் வரிகள் எழுதியிருக்க, திப்பு மற்றும் மோஹித் செளஹான் இந்த அர்த்தமுள்ள மெலோடி பாடலை பாடியுள்ளனர். நமக்கு பிடித்தவர்கள் எந்தக் காரணத்திற்காக நம்மை விட்டு பிரிந்தாலும் 'எங்கிருந்தாலும் வாழ்க...' என வாழ்த்துவதை கருவாகக் கொண்டு இந்தப் பாடல் உருவாகியுள்ளது. 


பொதுவாக மற்ற பிரேக்கப் பாடல்களில் கசப்பும் வேதனையும் இருக்கும். ஆனால், இந்த பிரிவுணர்ச்சியை முதிர்ச்சியாக கையாண்டிருப்பதன் மூலம் மற்ற பிரேக்கப் பாடல்களில் இருந்து 'நல்லாரு போ' பாடல் தனித்து தெரிகிறது. காதலித்த பெண் தன்னை விட்டு பிரிந்ததும் அவளை குறை கூறாமல், மரியாதை குறைவாக நடத்தாமல் அவளை அப்படியே பிரிய அனுமதிக்கிறான் ஹீரோ. இந்த மரியாதைக்குரிய, நான் - டாக்ஸிக் பிரிவை பெண் ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். 


உண்மையான உணர்வை மதிக்கும் இந்தப் பாடல் கல்லூரி மாணவர்கள் மத்தியில் வெளியிடப்பட்டு மிகுந்த வரவேற்பு பெற்றது. 


மைத்ரி மூவி மேக்கர்ஸ் பேனரில் நவீன் யெர்னேனி மற்றும் Y. ரவி ஷங்கர் தயாரித்திருக்கும் 'Dude' படத்தை கீர்த்தீஸ்வரன் எழுதி இயக்கியுள்ளார். பிரதீப் ரங்கநாதன் மற்றும் மமிதா பைஜூ முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்க அவர்களுடன் ஆர். சரத்குமார், ஹிருது ஹாரூன், ரோகிணி, ஐஸ்வர்யா சர்மா, டிராவிட் செல்வம் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

No comments:

Post a Comment