Featured post

Aegan's Haiku’ Gave Me the Scope to Make Music a Silent Character in the Story”

 *“‘Aegan's Haiku’ Gave Me the Scope to Make Music a Silent Character in the Story” - Music Director Siddhu Kumar* _*The composer opens ...

Friday, 23 October 2026

எல்லம்மா' திரைப்படம் உலகம் முழுவதும் மார்ச் 5, 2027 அன்று வெளியாகிறது!

 *'எல்லம்மா' திரைப்படம் உலகம் முழுவதும் மார்ச் 5, 2027 அன்று வெளியாகிறது!*




தசரா பண்டிகையை முன்னிட்டு ‘எல்லம்மா’ திரைப்படத்தின் உலகளாவிய திரையரங்கு வெளியீட்டுத் தேதியைப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். 


இப்படம் மார்ச் 5, 2027 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை, ‘பலேகம்’ புகழ் வேணு யெல்தண்டி இயக்குகிறார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


தில்ராஜு வழங்க, சிரிஷ் தயாரிப்பில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் இப்படம் உருவாகி வருகிறது.


ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் ‘எல்லம்மா’ திரைப்படம் பிரம்மாண்டமான பான் இந்திய வெளியீடாக

தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் என மொத்தம் ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


'எல்லம்மா' திரைப்படம் மார்ச் 5, 2027 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.

No comments:

Post a Comment