Featured post

Aegan's Haiku’ Gave Me the Scope to Make Music a Silent Character in the Story”

 *“‘Aegan's Haiku’ Gave Me the Scope to Make Music a Silent Character in the Story” - Music Director Siddhu Kumar* _*The composer opens ...

Friday, 23 October 2026

தமிழ் ஐடலில் ஆண்ட்ரியா ஜெரெமியாவை கண்ணீர் சிந்த வைத்த நெய்வேலி ஆகாஷ் மற்றும் அவரது தாயின் உருக்கமான ஒப்பாரி பாடல்

 தமிழ் ஐடலில் ஆண்ட்ரியா ஜெரெமியாவை கண்ணீர் சிந்த வைத்த நெய்வேலி ஆகாஷ் மற்றும் அவரது தாயின் உருக்கமான ஒப்பாரி பாடல்


பலருக்கு இது அவர்கள் கடைசியாகக் கேட்கும் பாடலாக இருக்கும்,ஆனால் இன்று இந்தப் பாடல் உன் வாழ்க்கையையே மாற்றியிருக்கிறது – ஆகாஷிடம் நெகிழ்ச்சியுடன் கூறிய பென்னி தயாள்.


சோனி விஷாவில் இந்த வார இறுதியில் ஒளிபரப்பாகவுள்ள தமிழ் ஐடல் நிகழ்ச்சியின் தொடக்க அத்தியாயங்களில்,நெய்வேலியை சேர்ந்த ஆகாஷ் தனது தாயின் நினைவுகளையும், ஒப்பாரி கலை மீதான தனது பிணைப்பையும் வெளிப்படுத்தும் உருக்கமான நிகழ்வு பார்வையாளர்களின் மனதை தொட இருக்கின்றது.


தனது தாய் பாடக் கேட்டே ஒப்பாரி பாடும் கலையின் மீது தனக்கு ஆர்வம் வந்ததாக மேடையில் ஆகாஷ் பகிர்ந்துகொள்கிறார்.


அவரது கதையை கேட்டு நெகிழ்ந்த நடுவர்கள் அவரது தாயையும் மேடைக்கு அழைக்கின்றனர். இதன் மூலம் ஆகாஷின் இசைப் பயணத்தின் பின்னணியைப் பார்வையாளர்கள் அறிந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படுகிறது.


அவரது தாய் ஒப்பாரி பாடத் தொடங்கியதும் அவரது குரலில் வெளிப்பட்ட ஆழமான உணர்வும் வலியும் ஆண்ட்ரியாவை வெகுவாக நெகிழச் செய்து  கண்ணீர் சிந்த வைத்தது.


இந்தத் தருணத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசிய பென்னி தயாள், ஆகாஷிடம் பலருக்கு இது அவர்கள் கடைசியாகக் கேட்கும் பாடலாக இருக்கும்,ஆனால் இன்று இந்தப் பாடல் உன் வாழ்க்கையையே மாற்றியிருக்கிறது என்று கூறுகிறார்.


பென்னியின் இந்த வார்த்தைகள் ஆகாஷின் பயணத்தை அழகாக சொல்கிறது.பொதுவாக இழப்பையும் துயரத்தையும் வெளிப்படுத்தும் கலையாக அறியப்படும் ஒப்பாரி பாடல் இன்று ஆகாஷ் தமிழ்நாட்டின் மிகப்பெரிய பாடல் மேடைகளில் ஒன்றில் தனது திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பை உருவாக்கியுள்ளது.


இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் சூப்பர் ஜட்ஜாகவும்,ஆண்ட்ரியா ஜெரெமியா, கார்த்திக் மற்றும் பென்னி தயாள் நடுவர்களாகவும் இடம்பெறும் தமிழ் ஐடல், தமிழ்நாடு முழுவதும் உள்ள திறமையான பாடகர்களையும் அவர்களின் நெகிழ்ச்சி மிகுந்த கதைகளையும் ஒரே மேடையில் கொண்டுவருகிறது.


உலகளவில் புகழ்பெற்ற Idols நிகழ்ச்சித் தொடரை உருவாக்கிய Fremantle நிறுவனம் இந்த நிகழ்ச்சியைத் தயாரிக்கின்றது.


இந்த வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 8 மணிக்கு சோனி விஷாவில் தமிழ் ஐடல் தொடக்க அத்தியாயங்களைக் காணுங்கள். இந்த நிகழ்ச்சியை எப்போது வேண்டுமானாலும் சோனி LIV தளத்திலும் பார்த்து மகிழலாம்!!

No comments:

Post a Comment