Featured post

Aegan's Haiku’ Gave Me the Scope to Make Music a Silent Character in the Story”

 *“‘Aegan's Haiku’ Gave Me the Scope to Make Music a Silent Character in the Story” - Music Director Siddhu Kumar* _*The composer opens ...

Friday, 23 October 2026

ஜெய் நடிப்பில் ஹாரர் காமெடியாகத் தயாராகும் ‘தியாகராஜா டாக்கீஸ் - புரொடக்ஷன் நம்பர் ஒன்’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்*

 *ஜெய் நடிப்பில் ஹாரர் காமெடியாகத் தயாராகும்  ‘தியாகராஜா டாக்கீஸ் - புரொடக்ஷன் நம்பர் ஒன்’  படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்*




*தியாகராஜா டாக்கீஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பு -  ‘தியாகராஜா டாக்கீஸ் - புரொடக்ஷன் நம்பர் ஒன்’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்*


தியாகராஜா டாக்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான ஜெய் கதையின் நாயகனாக முதன்மை வேடத்தில் நடிக்கும் ‘தியாகராஜா டாக்கீஸ் - புரொடக்ஷன் நம்பர் ஒன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பாரம்பரிய முறைப்படி பூஜையுடன்  தென்காசியில் தொடங்கியது.


அறிமுக இயக்குநர் சிவ பிரசன்னா இயக்கத்தில் உருவாகும் ‘தியாகராஜா டாக்கீஸ் - புரொடக்ஷன் நம்பர் ஒன்’ திரைப்படத்தில் ஜெய் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை டெல்னா டேவிஸ் நடிக்கிறார். விஜய் உலகநாத் ஒளிப்பதிவு செய்ய, கலை இயக்கத்தை ஜெயச்சந்திரனும், படத்தொகுப்புப் பணிகளை வி. ஜே. சபு ஜோசப்பும் மேற்கொள்கின்றனர். ஹாரர் காமெடியாகத் தயாராகும் இந்தத் திரைப்படத்தைத் தியாகராஜா டாக்கீஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஏ. எம். பிரபாகரன் தயாரிக்கிறார்.


இப்படத்தின் படப்பிடிப்பு தென்காசியில் பாரம்பரிய முறைப்படி தொடங்கியது. இதில் தென்காசி மாவட்ட ஆட்சியர் திரு. ரஞ்சித் சிங், IAS., சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கேமராவை இயக்கி வைத்தார். தொழிலதிபர் எஸ். சாமிநாத பாண்டியன் முன்னிலையில், தயாரிப்பாளர் ஏ. எம். பிரபாகரன் கிளாப் அடித்து படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார்.


தென்காசியில் தொடங்கியுள்ள இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடர்ந்து 23 நாட்கள் நடைபெறும் எனப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


தியாகராஜா டாக்கீஸ் – இயக்குநர் சிவ பிரசன்னா – ஜெய் ஆகியோர் கூட்டணியில் ஹாரர் காமெடியாகத் தயாராகும் இந்தத் திரைப்படத்திற்கு ரசிகர்களிடமும் திரையுலக வணிகர்களிடமும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


*நடிகர்கள்*

ஜெய்

டெல்னா டேவிஸ்


*தொழில்நுட்பக் கலைஞர்கள்*

தயாரிப்பு நிறுவனம்: தியாகராஜா டாக்கீஸ்

தயாரிப்பாளர்: ஏ. எம். பிரபாகரன்

இயக்குநர்: சிவ பிரசன்னா (அறிமுக இயக்குநர்)

ஒளிப்பதிவாளர்: விஜய் உலகநாத்

படத்தொகுப்பாளர்: வி. ஜே. சபு ஜோசப்

தயாரிப்பு நிர்வாகி: ரங்கராஜ் பெருமாள்

கலை இயக்குநர்: ஜெயச்சந்திரன்

சண்டைப் பயிற்சி: ராம் குமார்

ஸ்டில்ஸ்: ஆனந்தன்

ஆடை வடிவமைப்பு: அபினந்தினி M

நிர்வாகத் தயாரிப்பாளர் (EP): இளங்கோ ஏகாம்பரம்

தலைமை தயாரிப்பு நிர்வாகி: கே. எஸ்.ஹேம்ராஜ் 

ஒப்பனை: எஸ். ஏ. சண்முகம்

No comments:

Post a Comment