Featured post

Aegan's Haiku’ Gave Me the Scope to Make Music a Silent Character in the Story”

 *“‘Aegan's Haiku’ Gave Me the Scope to Make Music a Silent Character in the Story” - Music Director Siddhu Kumar* _*The composer opens ...

Friday, 23 October 2026

செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ் நிகழ்ச்சியில் கண்கலங்கிய நடிகை சமந்தா ரூத் பிரபு!*

 *செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ் நிகழ்ச்சியில் கண்கலங்கிய நடிகை சமந்தா ரூத் பிரபு!*







எண்டமோல் ஷைன் இந்தியா தயாரிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் செஃப் தமிழ் நிகழ்ச்சியில், தனக்குப் பிரியமான உணவான துர்கா ஹோட்டலின் புகழ்பெற்ற தயிர் வடையின் சுவை மூலம் பள்ளிப் பருவத்தின் இனிய நினைவுகளை மீட்டெடுத்து  சமந்தா ரூத் பிரபு கண் கலங்கியது பார்வையாளர்களை நெகிழச் செய்தது.


சில உணவுகளின் சுவை நம் பழைய நினைவுகளை மீட்டெடுக்கும். அப்படியொரு நெகிழ்ச்சியான தருணத்தைச் செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ் நிகழ்ச்சியில் சமந்தா ரூத் பிரபு பகிர்ந்து கொண்டுள்ளார்.


பள்ளிக்காலத்தில் தனக்கு மிகப்பிடித்த உணவாக பல்லாவரத்தில் இருக்கும் துர்கா ஹோட்டல் தயிர் வடையை குறிப்பிடுகிறார் சமந்தா. 


பள்ளிப் பருவத்திற்குத் திரும்பிச் செல்வதாகக் கண்களை மூடிக்கொண்டு கற்பனை செய்யுமாறும், அங்கிருந்து நேராகத் துர்கா ஹோட்டலுக்குச் செல்வதாக நினைத்துப் பார்க்குமாறும் சமந்தாவிடம் சொல்லப்படுகிறது

 தன்னுடைய பள்ளிப் பருவத்தின் எளிமையான, இனிமையான நாட்களை மனக்கண்ணில் மீண்டும் காணும் சமந்தா, உணர்ச்சிவசப்பட்டுக் கண்கலங்குகிறார்.


இந்த நெகிழ்ச்சியான தருணம் உணவுக்கும் நினைவுகளுக்கும் இடையிலான ஆழமான பிணைப்பை எடுத்துக்காட்டுகிறது. ஒரு பழக்கமான சுவை, நாம் வாழ்ந்த இடத்தையும், கடந்து வந்த காலத்தையும், அந்த நினைவுகளைச் சிறப்பானதாக மாற்றிய மனிதர்களையும் மீண்டும் நம் கண்முன் கொண்டு வரும். சமையல் குறிப்புகள் மற்றும் உணவு தயாரிக்கும் நுட்பங்களைத் தாண்டி, உணவு என்பது நம் வாழ்க்கைக் கதைகளைத் தன்னுள் சுமந்து நிற்கும் நினைவுப் பெட்டகமாகும். வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு, அது நம்மை நெகிழ செய்கிறது. 


எண்டமோல் ஷைன் இந்தியா தயாரிக்கும் செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ் நிகழ்ச்சி, தமிழ் பொழுதுபோக்குத் துறையைச் சேர்ந்த பிரபலங்களை ஒன்றிணைத்து, அவர்களின் வழக்கமான பணிச்சூழலிலிருந்து விலகி சமையல் உலகில் புதிய சவால்களை எதிர்கொள்ளச் செய்கிறது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள் பல்வேறு சமையல் போட்டிகளில் தங்களது படைப்பாற்றல், சமையல் திறன் மற்றும் நெருக்கடியான சூழலில் செயல்படும் திறனை வெளிப்படுத்துகின்றனர். அதே நேரத்தில், தமிழர் பண்பாட்டை எடுத்து சொல்லும் உணவுச் சுவைகளும் பாரம்பரியங்களும் இங்கு கொண்டாடப்படுகின்றன.


இந்த நிகழ்ச்சியில் சமந்தா ரூத் பிரபு செலிபிரிட்டி நடுவராகப் பங்கேற்கிறார். அவருடன் சமையல் கலைஞர்கள் வெங்கடேஷ் பட், சாஷி செல்லையா மற்றும் ஸ்ரேயா அட்கா ஆகியோரும் நடுவர்களாக இடம்பெறுகின்றனர். ஆர்.ஜே. விஜய் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார்.


இந்நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 19ஆம் தேதி முதல் சோனி விழாவில் ஒளிபரப்பாகிறது. மேலும், சோனி லிவ் தளத்திலும் இந்நிகழ்ச்சியை பார்க்கலாம்.

No comments:

Post a Comment