Featured post

இறுதிக்கட்ட பணிகளில் ஜெய், சத்யராஜ், யோகிபாபு இணைந்து நடிக்கும்

 இறுதிக்கட்ட பணிகளில் ஜெய், சத்யராஜ், யோகிபாபு இணைந்து நடிக்கும்,  பேபி & பேபி !! விரைவில் திரையில் அழகான ஃபேமிலி எண்டர்டெயினர் பேபி &am...

Wednesday 9 June 2021

யூ திங்க் இன்டர்நேஷனல் அறக்கட்டளையின் நிறுவனரும், லோக்கா அறக்கட்டளையின் செயலாளருமான

 

பத்திரிக்கை செய்தி

யூ திங்க் இன்டர்நேஷனல் அறக்கட்டளையின் நிறுவனரும், லோக்கா அறக்கட்டளையின் செயலாளருமான அப்துல் கனி, ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான கொரோனா பாதுகாப்பு உபகரணங்களை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் வழங்கினார். 

கொரோனா இரண்டாவது அலையால் ஏராளமான பொதுமக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து பரிதவித்து வரும் வேளையில், தமிழக அரசும் மக்களைப் பாதுகாக்கும் பொருட்டு, கொரோனாவுக்கு எதிரான போரில் போராடி வருகின்றது. இந்த நிலையில், *bless india initiative* என்ற பெயரில், கொரோனா பரவலைத் தடுக்க தேவையான முகக்கவசம், மல்டி வைட்டமின் மாத்திரைகள், ஜின்கோவிட், கபசுர குடிநீர் மற்றும் சித்தா மருந்து ஆகியவை அடங்கிய, *ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான 15,000 கொரோனா பாதுகாப்பு கருவிகளை, லோக்கா அறக்கட்டளை சார்பில் தமிழக அரசுக்கு அப்துல் கனி வழங்கியுள்ளார்.* 
 





 

சென்னை தமிழக தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த அப்துல் கனி, இதற்கான ஒப்பந்தத்தை வழங்கினார். இதில், முதல்வரின் சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதி மற்றும் சேப்பாக்கம் தொகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு தலா 5,000 கருவிகள் வழங்கப்பட்ட நிலையில், சென்னை மாநகராட்சிக்கு 3,000 கருவிகளும், திருவள்ளூர் மாவட்டத்திற்கு 1,000 கருவிகளும் வழங்கப்பட்டன. முன்னதாக, சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்ற கொரோனா பாதுகாப்பு கருவிகள் வழங்கும் தொடக்க விழாவில் கலந்து கொண்ட சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், பத்திரிக்கையாளர்களின் குடும்பங்களுக்கு 1,000 கருவிகளை வழஙகினார்.

யூ திங்க் இன்டர்நேஷனல் அறக்கட்டளையின் நிறுவனரும், லோக்கா அறக்கட்டளையின் செயலாளருமான அப்துல் கனி, இதுவரை சுமார் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டுள்ளார். முதன்முதலில் மரங்களுக்கான ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்த இவர், சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக தனது அறக்கட்டளையின் மூலம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

No comments:

Post a Comment