Featured post

Sirai Movie Review

Sirai Movie Review, Sirai Movie Rating 4.5/5 ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம sirai படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கி...

Monday, 21 June 2021

பிரபலங்கள் வெளியிட்ட சாயம் படத்தின்

             பிரபலங்கள் வெளியிட்ட சாயம் படத்தின் பஸ்ட் லுக்..!

ஒயிட் லேம்ப் புரொடக்சன் தயாரிப்பில் மற்றும் எஸ்.பி. ராமநாதன் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘சாயம்’. படத்தினை புதுமுக இயக்குனர் ஆண்டனி சாமி இயக்கியுள்ளார்.  அபி சரவணன் கதாநாயகனாக நடிக்க, இந்தியா பாகிஸ்தான் படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்த ஷைனி இந்த படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார். பொன்வண்ணன், போஸ் வெங்கட், சீதா, இளவரசு, தென்னவன், செந்தி, எலிசெபத், பெஞ்சமின், மற்றும் பல நட்சத்திரங்கள்ர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். 

நாகா உதயன் இசையமைத்துள்ள இந்தப்படத்தில் கிறிஸ்டோபர் மற்றும் சலீம் ஆகியோர் ஒளிப்பதிவை மேற்கொள்ள, முத்து முனியசாமி படத்தொகுப்பை கவனிக்கிறார். யுகபாரதி, விவேகா, அந்தோணி தாசன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்

இந்த படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை  தயாரிப்பாளர் தாணு, இயக்குனர்கள் அமீர்,  சுசீந்திரன்,  சமுத்திரக்கனி, ராஜேஷ்,   சுப்ரமணிய சிவா மற்றும் எஸ் ஆர் பிரபாகரன் ஆகியோர் வெளியிட்டனர்.

மேலும் தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறை  அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை இன்று சாயம் படக்குழுவினர் சந்தித்தனர். அவர் இப்படம் பெரும் வெற்றிபெற வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தற்போது போஸ்ட புரொடக்சன் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போதைய நிலைமை சீராவதை பொறுத்து படம் விரைவில் வெளியாகும்.








No comments:

Post a Comment