Featured post

குழந்தைகளுடன் யோகிபாபு மற்றும் செந்தில் கலக்கும் “குழந்தைகள்

 குழந்தைகளுடன் யோகிபாபு மற்றும் செந்தில் கலக்கும் “குழந்தைகள் முன்னேற்றக் கழகம்”  திரைப்படம், 2025  ஜனவரி 24 ஆம் தேதி திரைக்கு வருகிறது!!   ...

Monday, 30 September 2024

லப்பர் பந்து’ வெற்றியை தொடர்ந்து கேப்டன் விஜயகாந்தின்

 *’லப்பர் பந்து’ வெற்றியை தொடர்ந்து கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் டிஎஸ்கே*

*“கேப்டனின் குரல் தான் எனக்கு சோறு போட்டது” ; திருமதி பிரேமலதா விஜயகாந்திடம் நெகிழ்ந்த நடிகர் டிஎஸ்கே*


*‘லப்பர் பந்து’ படத்தில் நடிகர் டிஎஸ்கேவின் வில்லத்தனமான நடிப்பை பாராட்டிய பிரேமலதா விஜயகாந்த்*


கலக்கப்போவது யாரு உள்ளிட்ட பல சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களில் சாம்பியன் பட்டம் வென்று தனது நகைச்சுவை நடிப்பால் பிரபலமானவர் நடிகர் டிஎஸ்கே. இதனைத் தொடர்ந்து ‘பெட்ரோமாக்ஸ்’ என்கிற படத்தின் மூலம் சினிமாவிலும் ஒரு நகைச்சுவை நடிகராக நுழைந்து கவனம் ஈர்த்தார். 


இந்த நிலையில் சமீபத்தில் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டக்கத்தி தினேஷ் நடிப்பில் வெளியான ‘லப்பர் பந்து’ படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ள டிஎஸ்கே, இதுவரை தனது பாணியாக இருந்த நகைச்சுவை நடிப்பிலிருந்து விலகி சற்று வில்லத்தனம் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவரது நடிப்பிற்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பும் கிடைத்துள்ளது.


அது மட்டுமல்ல இந்த படத்தில் நடிகர் அட்டகத்தி தினேஷ், விஜயகாந்த் ரசிகராக நடித்திருக்கிறார் என்பதால் படம் முழுவதிலும் விஜயகாந்தின் புகைப்படங்கள், போஸ்டர்கள் இடம்பெற்றுள்ளது மற்றும் கிரிக்கெட் மைதானங்களில் கேப்டன் விஜயகாந்தின் புகழ்பெற்ற பாடல்கள் ஒலிப்பது என புரட்சி கலைஞரின் புகழ் பாடும் படமாக இது அமைந்து விட்டது. 


இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இன்று மறைந்த புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு சென்ற நடிகர் டிஎஸ்கே அங்கே அவருக்கு தனது அஞ்சலியை செலுத்தினார். மேலும் விஜயகாந்தின் மனைவி திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களையும் நேரில் சந்தித்தார் டிஎஸ்கே. 


அப்போது ‘லப்பர் பந்து’ படத்தை தான் பார்த்ததாகவும் கேப்டனை பெருமைப்படுத்தும் விதமாக அந்த படத்தில் பல காட்சிகளை அமைத்திருந்ததாகவும் கூறிய பிரேமலதா விஜயகாந்த், படத்தில் டிஎஸ்கேவின் வில்லத்தனம் கலந்த நடிப்பு நன்றாக இருந்தது என்றும் இதேபோன்று பல நல்ல கதாபாத்திரங்களை ஏற்று திரை உலகில் மேலும் முன்னேற வேண்டும் என்றும் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.


அப்போது டிஎஸ்கே கேப்டன் விஜயகாந்த் குறித்து பிரேமலதாவிடம் நினைவுகூறும்போது. “நான் சின்னத்திரையில் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் குரலை மிமிக்ரி செய்து அதன் மூலமாக வாய்ப்பு பெற்று தான் இந்த அளவிற்கு உயர்ந்தேன். அவருடைய குரல் தான் எனக்கு சோறு போட்டது. இன்று அவரை பெருமைப்படுத்தும் விதமாக உருவாகியுள்ள படத்தில் நானும் ஒரு அங்கமாக இடம் பெற்றதன் மூலம் மீண்டும் எனக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் கிடைத்து வருகின்றன. இதுவும் அவரது ஆசீர்வாதம் தான்.


என் தந்தை இறந்துவிட்டாலும் அவர் ஏதோ வேறு ஒரு இடத்தில் உயிருடன் வாழ்ந்து வருகிறார் என்கிற நினைப்பில் தான் இருந்து வருகிறேன். அதேபோலதான் கேப்டன் விஜயகாந்த்தும் நம்மை விட்டு மறையவில்லை. எங்கோ ஒரு இடத்தில் இருந்து நம்மை எல்லாம் கவனித்து ஆசீர்வதித்து வருகிறார் என்று நான் நினைத்துக் கொள்கிறேன்” என நெகிழ்ச்சியுடன் விஜயகாந்த் குறித்த தனது நினைவுகளை பிரேமலதா விஜயகாந்த்திடம் பகிர்ந்து கொண்டுள்ளார் நடிகர் டிஎஸ்கே.

Sunday, 29 September 2024

பாரத் யாத்ரா' நிகழ்வின் தொடக்க

 *'பாரத் யாத்ரா' நிகழ்வின் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் ஜெயராம் கலந்து கொண்டார்!*









சென்னையில் நடைபெற்ற 'பாரத் யாத்ரா' பிரச்சார நிகழ்வின் தொடக்க விழாவிற்கு சிறப்பு விருந்தினராக நடிகர் ஜெயராம் கலந்து கொண்டு தலைமை தாங்கினார். திருவனந்தபுரத்தில் ஸ்ரீ கோபிநாத் முதுகாட் அவர்களின் தலைமையில் இயங்கும் தி டிஃப்ரண்ட் ஆர்ட்ஸ் செண்டர் 'Social Inclusion of Persons with Disabilities' என்ற விழிப்புணர்வு பயண பிரச்சாரத்தை காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரையிலும் நாட்டின் அனைத்து மாநிலங்களையும் உள்ளடக்கி நடத்துகிறது.


நிகழ்வில் கலந்து கொண்ட நடிகர் ஜெயராம் இந்த அசாத்திய முயற்சியின் பின்னணியில் உள்ள முழு குழுவையும் வாழ்த்தினார். மேலும், இந்த சிறந்த நோக்கத்திற்கு ஆதரவளித்த இந்திய அரசின் சமூக நீதி அமைச்சகத்திற்கு தனது மனமார்ந்த பாராட்டுக்களைப் பகிர்ந்து கொண்டார். இந்த பிரச்சாரம் அக்டோபர்6, 2024 அன்று கன்னியாகுமரியில் தொடங்கி டிசம்பர்3, 2024 அன்று புதுதில்லியில் நிறைவடையும்.


சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் ஜெயராம் தலைமை தாங்க, அவருடன் கோகுலம் கோபாலன், பிரவீன், அன்வர், அனூப், நந்தகோவிந்த் ஆகியோரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்

*தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்  *தளபதி** அவர்களின் அறிவுறுத்தலின்படி நேற்று





*தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டிற்காக* *வடசென்னை வடக்கு  மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்* சார்பாக சென்னை, MR.நகர் பிரணித்தா பேலஸ்-ல் *கழக பொதுச்செயலாளர் திரு.என்.ஆனந்த்* அவர்கள் மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் ஒவ்வொருவரையும் மாநாட்டில் கலந்து கொள்ளும்படி நேரடியாக அழைப்பு விடுத்தார். மேலும் கழக பொதுச்செயலாளர் தலைமையில் மாநாடு சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு  ஆட்டோ, அபே ஆட்டோ , 12 பெண்களுக்கு தையல் இயந்திரம், 22 கேஸ் ஸ்டவ், 3 மடிகணினி,1 தள்ளுவண்டி, மருந்துவ உபகரணங்கள், 200 பெண்கள் புடவை ஆகியவற்றை வழங்கினார்.


இக்கூட்டத்தில் கழக நிர்வாகிகள் திரு.கட்பீஸ் விஜய், திரு.V.சிவா, திரு.சுறா.வேலு, திரு.M.L.பிரபு, திரு.B.ஜெகன், திரு. நவின், R.K.மணி, திரு.S.R.கிருபா, திரு.ஜெகன் மற்றும் தொண்டர்கள், தோழர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

பிரபல இயக்குநர் ராஜேஷ் எம் வெளியிட்ட,

 *பிரபல இயக்குநர் ராஜேஷ் எம்  வெளியிட்ட, சீரன் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் !!*










*பிரபல இயக்குனர் ராஜேஷ் எம் உதவியாளர் இயக்கும் சீரன் திரைப்படம்..*


சீரன் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !!


ஜேம்ஸ் கார்த்திக், M.நியாஸ் தயாரிப்பில்,  இயக்குநர் திரு. ராஜேஷ் எம் உதவியாளர் துரை K முருகன் இயக்கத்தில், ஜேம்ஸ் கார்த்திக் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் “சீரன்”. சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளையும், மனிதனுக்கான சம உரிமைகளை உரக்கப்பேசும் ஒரு அழகான கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் வரும் அக்டோபர் 4 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.  



இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை, ஊடக, நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. 


சிவா மனசுல சக்தி, ஒரு கல் ஒரு கண்ணாடி படப்புகழ் இயக்குநர் ராஜேஷ் எம், இவ்விழாவில் கலந்துகொண்டு, படக்குழுவினரை வாழ்த்தியதோடு, படத்தின் இசை மற்றும் டிரெய்லரை வெளியிட்டனர். 


இந்நிகழ்வினில்… 


தயாரிப்பாளர், நடிகர் ஜேம்ஸ் கார்த்திக் பேசியதாவது…


இந்த சீரன் திரைப்படம், உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது. சினிமாவுக்காக சில விசயங்கள் செய்துள்ளோம். சமூகத்திற்கு மிக முக்கியமான விசயத்தைச் சொல்லியுள்ளோம். என்னுடன் இணைந்து இப்படத்திற்காக உழைத்த நடிகர்கள், கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. உங்கள் எல்லோருக்கும் பிடித்த படமாக இப்படம் இருக்கும், நன்றி.  


நடிகை இனியா பேசியதாவது..


சீரன் டிரெய்லர் உங்களுக்குப் பிடிக்குமென நம்புகிறேன். இங்கு தான் நான் பாடல்கள் முழுதாக பார்க்கிறேன். இந்தப்பாடல் நிறைய இடங்களில் ஷீட்  செய்தோம், அங்காளபரமேஸ்வரி கோவில், காஞ்சிபுரம், செய்யாறு, ஆரணி  முதற்கொண்டு பல இடங்களில் ஷீட் செய்தோம். செட் போட்டும் ஷீட் செய்தோம்.  இப்படத்தில் பூங்கோதை எனும் பாத்திரத்தில் மூன்று வித்தியாசமான கெட்டப்பில் நடித்திருக்கிறேன். 20 வயது பெண், இரண்டு குழந்தைகளின் அம்மா, அப்புறம் 56 வயதுப்பெண் என, மூன்று கெட்டப்.   உங்களுக்குப் பிடிக்குமென நம்புகிறேன். இது உண்மையில் நடந்த கதை. ஜேம்ஸ் சாருக்கு ஜோடியாக நடித்திருக்கிறேன். உத்ரா  புரடக்சன்ஸ்  உலகமெங்கும் ரிலீஸ் செய்கிறார்கள். சமூகத்திற்கு மிக முக்கியமான கருத்தைச் சொல்லியிருக்கிறோம். சோனியா அகர்வால் முக்கியமான ரோல் பண்ணியிருக்கிறார். செண்ட் ராயன் ஷீட்டிங்கில் நிறைய காமெடி செய்வார். நிறையப் புதுமுகங்கள் நடித்துள்ளனர். நல்ல படம், வரும் அக்டோபர் 4 ஆம் தேதி திரைக்கு வருகிறது. உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி. 


பின்னணி இசையமைப்பாளர் ஜூபின் பேசியதாவது..


சீரன் எனக்கு ஸ்பெஷல் மூவி, ஜேம்ஸ் எனக்கு நெருக்கமான நண்பர். அவருடன் வேறொரு படம் செய்வதாக இருந்தது. அது நடக்கத் தாமதமானதால், அவர் வாழ்வில் நடந்த ஒரு கதையைப் படமாக எடுத்துள்ளார். எல்லோரும் அருமையாக நடித்துள்ளனர். இந்தப்படம் கண்டிப்பாக எல்லோரையும் பாதிக்கும் படமாக இருக்கும். அனைவரும் இப்படத்தில் உழைத்த கலைஞர்களுக்கு, ஆதரவு தாருங்கள் நன்றி. 


இசையமைப்பாளர் சசிதரன் பேசியதாவது..


இயக்குநர் எனக்கு  நெருக்கமான நண்பர். அவர் எப்போதும் பாடல் அவருக்குப் பிடித்தால் மட்டுமே, ஓகே சொல்வார். டியூன் நன்றாக வரும் வரை விடமாட்டார், டியூன் ஓகே என்றால் கேள்வியே கேட்க மாட்டார். கு கார்த்திக் சினேகன் இருவரும் பாடல் எழுதியுள்ளனர். இருவரும் அருமையான வரிகள் தந்துள்ளார். பாடல்கள் அழகாக வந்துள்ளது. இந்த வாய்ப்புக்கு நன்றி. அனைவருக்கும் நன்றி. 


நடிகர் ஆர்யன் பேசியதாவது…


அக்டோபர் 4 சீரன் வருகிறது. அனைவரும் கொண்டாடும் படமாக இருக்கும். இயக்குநர் தீ மாதிரி இருப்பார், எல்லாவற்றையும் கவனத்துடன் செய்வார். ஜேம்ஸ் அருமையாக நடித்துள்ளார். மிக நல்ல படமாக வந்துள்ளது. அனைவரும் இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி. 


நடிகர் செண்ட்ராயன் பேசியதாவது…


அனைவருக்கும் வணக்கம், சீரன் மிக சீக்கிரமாகச் சீறிப்பாயும். இயக்குநர் மிக அழகாகப் படம் எடுத்துள்ளார். ஜேம்ஸ் மிக அருமையாக நடித்துள்ளார். எங்கள் எல்லோரையும் அவ்வளவு நன்றாகப் பார்த்துக்கொண்டார். எல்லோரிடமும் அன்பாக இருப்பார், துரை அண்ணனை என் ஆரம்ப காலகட்டங்களிலிருந்து தெரியும். எப்போதும் பரபரப்பாக இருப்பார். அதே பரபரப்போடு படத்தை எடுத்துள்ளார். இந்த படத்தில் எனக்கு டபுள் ஆக்சன், படம் நன்றாக வந்துள்ளது. எப்போதும் போல் உங்கள் ஆதரவை எங்களுக்குத் தாருங்கள் நன்றி. 


நடிகை கிரிஷா குரூப் பேசியதாவது…


இந்தப்படத்தில் யாழினி எனும் ரோல் செய்திருக்கிறேன். மிக நல்ல ரோல், எனக்கு இந்த வாய்ப்பு தந்த இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி. படம் மிக நன்றாக வந்துள்ளது. எல்லோரும் ஆதரவு தாருங்கள்  நன்றி. 


பாடலாசிரியர் கு கார்த்திக் பேசியதாவது..,


இப்படத்தில் பணிபுரிந்தது இனிமையான அனுபவம். இசையமைப்பாளர் வாய்ப்பு தந்ததோடு, மேடையிலும் என்னை அழைத்த இசையமைப்பாளருக்கு நன்றி.    இந்தப்படத்தில் பணிபுரிந்தது மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது. படம் மிக நன்றாக வந்துள்ளது. படம் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி. 


நடிகை சோனியா அகர்வால் பேசியதாவது…


சீரன் மிக முக்கியமான விசயத்தைச் சொல்லும்

படம். அதனால் தான், சின்ன ரோல் என்ற போதும், நடித்தேன். அனைவரும் இணைந்து நல்ல படத்தைத் தந்துள்ளோம், அனைவரும் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி. 


ஆடுகளம் நரேன் பேசியதாவது..


ஜேம்ஸ் கார்த்திக் சார் ரைட்டர், புரடியூசர், ஆக்டர் என அசத்தியிருக்கிறார். பல படங்களில் ஊரில் ஒடுக்கப்பட்டு, விரட்டப்பட்டு, பின் மீண்டெழுந்து ஜெயிப்பதை பார்த்திருப்போம்.  ஜேம்ஸ் கார்த்திக் உண்மையில் அவர் வாழ்ந்த அந்த  வாழ்வைக் கதையாக்கியிருக்கிறார். அவர் வெளிநாடு போய் சம்பாதித்து பெரிய ஆளாக ஆனாலும், மீண்டும் அவர் ஊருக்கு வந்து தான் பாதிக்கப்பட்ட கதையை எடுத்துள்ளார். இயக்குநர் துரை தனக்குச் சரியாக வரும் வரை மீண்டும் மீண்டும் எடுப்பார், ஜேம்ஸும் காம்ப்ரமைஸ் ஆக மாட்டார். படம் மிக நல்ல படமாக வரனும் என்று உழைத்துள்ளனர். இந்த டீமில் நானும் இருப்பது பெருமை. படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி. 


இயக்குநர் ராஜேஷ் எம் பேசியதாவது…


இப்படத்தின் இயக்குநர் துரை என்னிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். அவருக்கு வாய்ப்பு தந்த ஜேம்ஸ் கார்த்திக்குக்கு என் நன்றிகள். என் டீமில் இருந்து ஒருவர் வந்து படமெடுப்பது மகிழ்ச்சி. துரை எப்போதும் பரபரப்பாக இருப்பார். பாடல் எல்லாம் மிக நன்றாக இருக்கிறது. பாடலாசிரியர் பெயரைச் சொல்வதில்லை என கு கார்த்திக் சொன்னார் ஆனால் என் படத்தில் பால் டப்பா அனீஷ் கூப்பிட்டால் கூட இசை நிகழ்வுக்கு, வரவே மாட்டார், நான் ஏன் சார் வரனும் எனக் கேட்பார் இதையும் பதிவு செய்கிறேன். சேது, சதுரங்க வேட்டை போன்ற படங்கள் சின்ன பட்ஜெட்டில் சாதாரணமாக வெளியாகி, மக்களுக்குப் பத்திரிக்கையாளர்களுக்குப் பிடித்ததால் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அது போல் இந்தப்படமும் வெற்றி பெற என் வாழ்த்துக்கள். 


இயக்குநர் துரை K முருகன் பேசியதாவது…


முதலில் என் தயாரிப்பாளர் ஜேம்ஸுக்கு நன்றி. அவர் தந்த வாய்ப்பு தான் இயக்குநர். நான் கதைகள் வைத்துக்கொண்டு அலைந்த போது, ஜேம்ஸ் அவர் கஷ்டப்பட்ட கதையைச் சொன்னார். இன்று பலருக்கு உதவி செய்யும் நிலைக்கு வந்துள்ளார்.  இதே போல் இருங்கள் சார் நன்றி. இயக்குநர் ராஜேஷ் எம் சார், அவர் என்னைச் சேர்த்துக் கொண்டதால் தான் நான் இங்கு இருக்கிறேன். அவரிடம் நான் நிறையக் கற்றுக்கொண்டுள்ளேன் நன்றி சார். இப்படத்தில் கமிட்டானவுடன் நரேன் சாருக்கு தான் போன் செய்தேன். எனக்காக நடித்ததற்கு நன்றி. இனியா மேடம் மூன்று லுக்கில் அசத்தியிருக்கிறார். நடிப்பு ராட்சசி அவர். செண்ட்ராயன் என் நண்பன், சின்ன பாத்திரம் எனக்காக நடித்துள்ளார். தொழில் நுட்ப குழுவில் இசையமைப்பாளர் ஜுபின், சசிதரன், மற்றும் பாடலாசிரியர் கு கார்த்திக் எல்லோரும் நண்பர்கள். மிகச்சிறப்பாக பணியாற்றியுள்ளனர். ஒளிப்பதிவாளர் நண்பர் பாஸ்கர் ஆறுமுகம் மிகச்சிறந்த ஒத்துழைப்பு தந்துள்ளார்.  இந்த படத்தை 30 நாளில்  முடிக்க இவர்கள் தான் காரணம். சோனியா மேம் நல்ல ரோல் செய்துள்ளார். படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது. படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுகிறேன் நன்றி. 



தன் வாழ்வில் சந்தித்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில்,  இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை எழுதியுள்ளார் ஜேம்ஸ் கார்த்திக். மேலும் இப்படத்தை தயாரித்து, நாயகனாக நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் துரை K முருகன் இப்படத்தை  இயக்கியுள்ளார். 


ஜேம்ஸ் கார்த்திக்  நாயகனாக நடிக்க , இனியா , சோனியா அகர்வால்  , ஆடுகளம் நரேன் , அஜீத் , கிரிஷா குருப் , சேந்திராயன் , ஆர்யன் , அருந்ததி நாயர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். 


இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை அருகே வேலூரைச் சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. 


படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில்,  வரும் அக்டோபர் 4 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.  


உத்ரா புரடக்சன்ஸ்  சார்பில், செ. ஹரி உத்ரா இப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறார். 


தொழில் நுட்ப குழுவினர் விபரம்


தயாரிப்பாளர்கள்: ஜேம்ஸ் கார்த்திக், M.நியாஸ் இயக்குநர்: துரை கே முருகன் 

ஒளிப்பதிவு : பாஸ்கர் ஆறுமுகம் 

இசை அமைப்பாளர்: அரவிந்த் ஜெரால்ட் & சசிதரன் 

பின்னணி இசை: ஜூபின் 

எடிட்டர்: A.ரஞ்சித் குமார் 

கலை இயக்குனர்: S.அய்யப்பன் 

பாடலாசிரியர்: சினேகன், கு.கார்த்திக் 

நடன இயக்குனர்: பாபா பாஸ்கர் சண்டைக்காட்சி : டி.ரமேஷ்

Seeran Movie- Music and Trailer Launch!

 Seeran Movie- Music and Trailer Launch! 










 Well known filmmaker Rajesh M, released the Music and Trailer! 

The movie has been  directed by  Rajesh M' s former  deputy. 


Produced by James Karthik, M.Niaz, and directed by Rajesh M' s erstwhile assistant,  Durai K Murugan, this flick has debutante James Karthik as the protagonist! “Seeran” is a well crafted commercial potboiler that speaks loudly about social inequalities, insisting onequal rights for human beings. The film is  set to release in theaters worldwide on October 4.



The film's Music and Trailer release function was held in the presence of the Media, Celebrities from the filmdom besides the film’s film crew.


Rajesh M, known for his films as Siva Manasula Shakti, Oru Kal Oru Kannada etc attended the function and congratulated the cast crew while releasing the film's Music and Trailer.


In this event…


Producer and actor James Karthik said...

The movie is based on a true story. We have adapted it for the big screen. We have communicated something very important to society. Thanks to all the actors and artistes who worked with me for the film. This movie will be a favorite movie for all of you! 


Actress Ineya said..

Hope you like the Trailer of Seeran. The songs have been shot in many places, starting from Angalaparameshwari Temple, Kanchipuram, Cheyyaru, Arni.  In the film, I have played the role of Poongothai in three different make-overs. 

As a 20-year-old woman, a mother of two, and then a 56-year-old woman, 

 all the three characters are entirely different. I hope you like it. This is a true story. I have acted opposite James Sir. Uthra Productions is releasing worldwide. We have  presented an  important aspect of life for society through the film. Sonia Aggarwal has played an important role. Sendrayan does a lot of comedy in the film. Many new faces have made their debut.  Coming on 4th October. Thank you for your support.


Background music composer Jubin said..

Seeran is a special movie for me and James is my best friend. I was to do another film with him. As that project got delayed, he decided to take up this  real-life story for the screen. Everyone has done a great job. This movie is sure to be a hit! To all the artistes who worked on this film, thank you for your support.


Music composer Sasitharan said-

The director is my close friend. He says OK only if he likes the song. He won't let go until the tune is good, and if the tune is OK, he won't ask any questions. Both Ku Karthik Snehan have written the songs. Both have given excellent lines. The songs are beautiful. Thank you for this opportunity. Thanks everyone.


Actor Aryan said...

October 4th is the release . It will be a film that everyone will celebrate. The director was fire-brand on the sets and did everything carefully. James has done a great job. It has turned out to be a very good film. Thank you all for supporting this film.


Actor Sendrayan said…

Hello everyone, The director has made a very beautiful film. James has done a great job. He took such good care of all of us. I know Durai Annan from my early days. Always busy. He has taken the film with the same excitement. I have a double-action role in this film and the film has turned out well. Thank you for your support as always.


Actress Krishna kurup said...

I have done the role of Yashini in this film. Very nice role, thanks to the director and producer for giving me this opportunity. The film has turned out very well. Thanks everyone for your support.


Lyricist Ku Karthik said,

Working in this film was a pleasant experience. Thanks to the music director for giving me the opportunity and also inviting me on stage. At a music launch event, has a composer, songwriter ever taken the centre stage?  Working on this film was a great experience. The film has turned out very well. Thank you for watching the movie and supporting.


Actress Sonia Aggarwal said...

Seeran drives home a very important point. That's why I acted even though it was a small role. Together we have made a good film, thank you all for watching and supporting.


Adukalam Naren said..

James Karthik sir is amazing as a writer, producer and actor. In many films, we have seen people who are oppressed, driven away, and then come back and win.

 James Karthik has actually narrated the life he lived. Even though he went abroad and became a big man, he came back to town and picked up the story of the victim of circumstances. Director Durai takes it again and again until he gets it right, and James doesn't compromise. They have worked hard to make the film a very good film. I am proud to be part of this team. Thank you for supporting the film.


Director Rajesh M said...

Durai, the director of the film, has worked as an assistant director for me. My thanks to James Karthik for giving him the chance. It's nice to have someone from my team come and make a film. Durai is always busy. All songs are very good. Films like Sethu and Saduranga Vettai were modestly released on small budgets and became huge hits as people liked it. I wish this film a grand success. 


Director Durai K Murugan said…

First of all thanks to my producer James. The opportunity he gave was a boon! While I was toying with scripts, James told me his story of suffering! Today he has reached the stage of helping many people. Keep it up sir thanks. Director Rajesh M sir, I am here only because he took me under his wings. I have learnt a lot from him, thanks sir. As soon as I got committed to the film, I called Naren sir. Thank you for accepting. Madam Ineya looks amazing in all three looks.   Music composer Jubin, Sasitharan, and lyricist Ku Karthik are all friends in the technical team. They have worked very well. Cinematographer  Bhaskar Arumugam has given excellent cooperation. They are the reasons for completing this film in 30 days. Sonia Madam has done a good role. The film has come out great. Please reach this film to the people... 



James Karthik has written the film's story, screenplay and dialogue based on a true incident in his life. He also produced the film and acted as the hero. Debutante director Durai K Murugan has directed the film.


James Karthik as the lead, Ineya, Sonia Aggarwal, Adukalam Naren, Ajeeth, Krisha Kurup, Sendrayan Aryan, Arundathi Nair in lead roles.


The shooting of the film has been completed in the rural areas around Vellore near Chennai.


With all the work of the film completed, it will release in theaters worldwide on October 4.


On behalf of Uthra Productions, Hari Utra is releasing the film all over Tamil Nadu.


Details of technical crew 

Producers: James Karthik, M. Nias Director: Durai K Murugan

Cinematography : Bhaskar Arumugam

Music - Arvind Gerald & Sasitharan

Background Music: Zubin

Editor: A. Ranjit Kumar

Art Director: S. Ayyappan

Lyricist: Snegan, K. Karthik

Choreographer: Baba Bhaskar Stunt: D. Ramesh

சினிமாகாரன் எஸ்.வினோத் குமார்

 *சினிமாகாரன் எஸ்.வினோத் குமார் வழங்கும் ’குட் நைட்’ & ’லவ்வர்’ படப்புகழ் நடிகர் மணிகண்டனின் அடுத்த படத்திற்கு ‘குடும்பஸ்தன்’ என பெயரிடப்பட்டுள்ளது!*



கெளபாய்ஸ், நாடோடி வீரர்கள், கோஸ்ட்பஸ்டர்ஸ் அல்லது புதையல் வேட்டையாடுபவர்கள் பற்றிய படங்களே பொதுவாக சாகச படங்களாகக் கருதப்படுகின்றன. இருப்பினும், திருமணமான சாதாரண குடும்பஸ்தனின் அன்றாட வாழ்க்கையும் சாகசங்களுக்குக் குறந்ததல்ல. அந்த வகையில் ஒவ்வொரு குடும்பஸ்தனும் ஒரு சாகச வீரனே !

ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், சினிமாகாரன் எஸ்.வினோத் குமார் தயாரிப்பில், ஒரு இளைஞன் குடும்ப வாழ்வில் எதிர்கொள்ளும் சவால்களும் சாகசங்களும் பல இயல்பான  வேடிக்கை நிறைந்த தருணங்கள் கொண்ட விறுவிறுப்பான திரைப்படமாக உருவாகியிருக்கிறது.  மணிகண்டன் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் புதிய திரைப்படத்திற்கு ‘குடும்பஸ்தன்’ என்று பெயரிட்டுள்ளனர்.


ஒவ்வொரு படத்திலும் தனது அசத்தலான நடிப்பின் மூலம் தன்னுடைய ரசிகர்கள் கூட்டத்தை அதிகரித்துக் கொண்டே செல்கிறார் நடிகர் மணிகண்டன். ‘குட் நைட்’ மற்றும் ‘லவ்வர்’ ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, தயாரிப்பாளர் எஸ் வினோத் குமார் மற்றும் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமியுடன் இந்தப் படத்தில் மணிகண்டன் இணைந்துள்ளார்.


படம் குறித்து இயக்குநர் ராஜேஷ்வர் கூறும்போது, “கோயம்புத்தூரில் இருக்கும் புதிதாக திருமணமான தம்பதிகள் பற்றிய மகிழ்வான கதை இது. குடும்பஸ்தன் ஒருவன் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் வேடிக்கையான தருணங்களை சுற்றி இந்தக் கதை நடக்கிறது” என்றார். 


இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்த நிலையில், விரைவில் படத்தை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.  


சான்வே மேகனா, குரு சோமசுந்தரம், இயக்குநர் ஆர். சுந்தர்ராஜன், பிரசன்னா பாலச்சந்திரன், ’ஜெய ஜெய ஜெய ஹே’ படப்புகழ் கனகம்மா, ஜென்சன் திவாகர் மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். 


*தொழில்நுட்பக் குழு:*

இயக்கம்: ராஜேஷ்வர் காளிசாமி,

கதை: பிரசன்னா பாலச்சந்திரன் & ராஜேஷ்வர் காளிசாமி,

திரைக்கதை & வசனம்: பிரசன்னா பாலசந்தரன்,

தயாரிப்பு: எஸ்.வினோத் குமார்,

தயாரிப்பு நிறுவனம்: சினிமாகாரன்,

ஒளிப்பதிவு: சுஜித் சுப்ரமணியம்,

இசை: வைஷாக் பாபுராஜ்,

எடிட்டிங்: கண்ணன் பாலு,

கலை இயக்கம்: சுரேஷ் கல்லேரி,

ஸ்டண்ட் : தினேஷ் சுப்பராயன்,

ஆடை வடிவமைப்பு: மீரா,

விளம்பர வடிவமைப்பு: வின்சிராஜ்,

மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா, அப்துல் நாசர்

Cinemakaaran S. Vinoth Kumar presents*

 *Cinemakaaran S. Vinoth Kumar presents* 

*Good Night & Lover fame Manikandan’s next titled ‘KUDUMBASTHAN’* 



The word "adventure" often conjures up images of cowboys, nomadic warriors, ghostbusters, or treasure hunters. However, an "ordinary family man," especially a newlywed groom, can embody the spirit of adventure when facing unexpected challenges. Actor Manikandan’s upcoming film, directed by Rajeshwar Kalisamy, and produced by S. Vinoth Kumar of Cinemakaaran, is all about fun and reality embossed together. The makers are delighted to announce that the film has been titled ‘Kudumbasthan’. 



Actor Manikandan’s acting nuances keep escalating with every film, and he has now become the much-favorite artiste of universal crowds. Following back-to-back success with ‘Good Night’ and ‘Lover’, he is teaming up with producer S Vinoth Kumar and director Rajeshwar Kalisamy for this film.  


Shedding light on the film, director Rajeshwar says, “In the vibrant setting of Coimbatore, this film unfolds the delightful journey of a newlywed couple. Much Significantly, it revolves around the hilarious situations and challenges faced by the husband and his adventures as a Kudumbasthan (Meaning ‘Family Man’ in English).” 


The film’s shooting is already wrapped up, and preparations on full swing to release the film soon.  


Saannve Megghana, Guru Somasundaram, director R. Sundarajan, Prasanna Balachandran, Kanakamma from the famous movie "Jaya Jaya Jaya Hay," Jenson Diwakar, and many others are a part of this star-cast. 


 

Direction: Rajeshwar Kalisamy

Story: Prasanna Balachandran & Rajeshwar Kalisamy

Screenplay & Dialogue: Prasanna Balasandaran

Production: S. Vinoth Kumar

Production Company: Cinemakaaran

Cinematography: Sujith Subramaniyam

Music: Vaishag Baburaj

Editing: Kannan Balu

Art Direction: Suresh Kalleri

Stunt Choreography: Dinesh Subbarayan

Costume Design: Meera

Publicity Design: Vinciraj

Public Relations: Suresh Chandra, Adbul Nassar

Saturday, 28 September 2024

கிளர்ச்சியின் புதிய மரபு தொடங்கும் - புகழ்பெற்ற ரிட்லி ஸ்காட்

 கிளர்ச்சியின் புதிய மரபு தொடங்கும் - புகழ்பெற்ற ரிட்லி ஸ்காட் இயக்கிய Gladiator II இன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டிரெய்லர் இப்போது வெளியாகியுள்ளது!

காவிய பயணம் தொடர்கிறது, பார்வையாளர்களை பண்டைய ரோமின் மிருகத்தனமான உலகத்திற்கு மீண்டும் கொண்டு வருகிறது, அங்கு சக்தி, பழிவாங்கல் மற்றும் மரியாதை ஆகியவை மோதுகின்றன.


சமீபத்திய டிரெய்லரை இங்கே பாருங்கள் -


● ஆங்கிலம் - https://www.instagram.com/reel/DAQr5LFCetG/?igsh=aGEyeDdtNWRsN2ty

● இந்தி - https://www.instagram.com/reel/DAQsJxviPYo/?igsh=MTduNTd3ZHlzYmVqeQ==

● தமிழ் - https://www.instagram.com/reel/DAQsZaPibjN/?igsh=dGUydDV2cHg1bTM4

● தெலுங்கு - https://www.instagram.com/reel/DAQsuvrC1_Y/?igsh=MXI2ZnJ3cHNneHdldA==


கிளாடியேட்டர் II டிரெய்லர், இப்போது மிருகத்தனமான மற்றும் கொடுங்கோல் பேரரசர்களால் ஆளப்படும் பண்டைய ரோமின் அதிர்ச்சியூட்டும் காட்சிகளுடன் திறக்கிறது. பால் மெஸ்கலின் லூசியஸ், பழிவாங்கும் மனப்பான்மையால் உந்தப்பட்டு, தனது தாயகம் கைப்பற்றப்பட்ட பிறகு உயிர்வாழ்வதற்காகப் போராடும் காவியப் போர்க் காட்சிகள் விரிகின்றன.


இரண்டாவது காவிய டிரெய்லரில், லூசியஸ் ரோமானிய பவர் பிளேயரான டென்சல் வாஷிங்டனின் மேக்ரினஸுடன் கூட்டணி அமைக்கிறார். "நான் ஒருபோதும் உங்கள் கருவியாக இருக்க மாட்டேன், ஆனால் நான் என் பழிவாங்கலைப் பெறுவேன்" என்று பவுல் சக்திவாய்ந்ததாக கூறுகிறார்.


தீவிர கிளாடியேட்டர் போர்கள், அரசியல் சூழ்ச்சிகள் மற்றும் இதயத்தை துடிக்கும் நாடகம் ஆகியவற்றை டிரெய்லர் கிண்டல் செய்வதால், பெட்ரோ பாஸ்கலின் பாத்திரம், சக்திவாய்ந்த கூட்டணிகள் மற்றும் துரோகங்களை சுட்டிக்காட்டுகிறது. இறுதி தருணங்கள் லூசியஸ், ரோமின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஒரு மோதலுக்கு தயாராகி வருவதைக் காட்டுகிறது.


நார்மல் பீப்பிள் படத்தில் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட நடிப்பிற்காக அறியப்பட்ட பால் மெஸ்கல், கிளாடியேட்டர் II இல் பழிவாங்கும் மற்றும் மரியாதைக்குரிய பயணத்தைத் தொடங்கும்போது கதாபாத்திரத்தின் தீவிரத்தையும் ஆழத்தையும் கொண்டு வருகிறார். அவருடன் இணைவது, பெட்ரோ பாஸ்கலின் தலைமைப் பிரசன்னம், இந்த வரலாற்றுக் காவியத்தின் பங்குகளை மேலும் உயர்த்துகிறது.


ஜோசப் க்வின் (ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்), ஃபிரெட் ஹெச்சிங்கர் (தி ஒயிட் லோட்டஸ்), லியர் ராஸ் (பௌடா), டெரெக் ஜேகோபி, கோனி நீல்சன் மற்றும் புகழ்பெற்ற டென்சல் வாஷிங்டன் ஆகியோரும் நட்சத்திர குழும நடிகர்களை உள்ளடக்கியுள்ளனர். அத்தகைய ஈர்க்கக்கூடிய வரிசையுடன், கிளாடியேட்டர் II பிடிவாதமான செயல், அதிக-பங்கு நாடகம் மற்றும் தியாகம் மற்றும் மீட்பின் சக்திவாய்ந்த கதையை உறுதியளிக்கிறது.


அவரது மாமாவின் கைகளில் மரியாதைக்குரிய ஹீரோ மாக்சிமஸ் இறந்ததைக் கண்ட பல ஆண்டுகளுக்குப் பிறகு, லூசியஸ் (பால் மெஸ்கல்) கொலோசியத்தில் நுழைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, இப்போது ரோமை இரும்புக்கரம் கொண்டு வழிநடத்தும் கொடுங்கோல் பேரரசர்களால் அவரது வீடு கைப்பற்றப்பட்டது. அவரது இதயத்தில் ஆத்திரம் மற்றும் பேரரசின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது, லூசியஸ் தனது கடந்த காலத்தைப் பார்க்க வேண்டும், ரோமின் மகிமையை அதன் மக்களுக்குத் திருப்பித் தர வலிமையையும் மரியாதையையும் பெற வேண்டும்.


இந்தப் படம் நவம்பர் 15 ஆம் தேதி இந்தியாவில் உள்ள திரையரங்குகளில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் 4DX & IMAX ஆகிய மொழிகளில் வெளியாகிறது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத்

 *சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி !!*








*சென்னையில் "ஜல்லிக்கட்டு" செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில், நடிகர் கார்த்தி பேச்சு !!*


கிராமத்து மண் வாசனையை, நகரத்து மக்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில், நம் பாரம்பரியத்தை, நம் விளையாட்டுக்கள், கலைகள், உணவுகள் என அனைத்தையும் கொண்டாடும் விதத்தில், செம்பொழில் குழு சென்னை YMCA மைதானத்தில் பிரம்மாண்டமாக, கிராமத்துத் திருவிழாவை நடத்தி வருகிறது. இவ்விழாவினில் சிறப்பு விருந்தினராக நடிகர் கார்த்தி இன்று கலந்துகொண்டார். 


தமிழகத்தின் பல கிராமங்களிலிருந்து தாங்கள் விளைவித்த பொருட்களை விவசாயிகள் இங்குக் கடை விரித்துள்ளனர். இந்த திருவிழாவில் கிராமத்து உணவுகள், சிறு தானிய உணவுகள், மாட்டு வண்டி, ஒயிலாட்டம், மயிலாட்டம் என ஒரு திருவிழாவில் காணக்கிடைக்கும் அனைத்தும் உள்ளது. இத்திருவிழா சனி, ஞாயிறு என அடுத்த இரண்டு நாட்களும் நடைபெறவுள்ளது. 



இன்றைய விழாவில் கலந்துகொண்ட 



நடிகர் கார்த்தி பேசியதாவது… 

கோடை விடுமுறைக்கு ஊருக்கு போவது அவ்வளவு பிடிக்கும், ஊரை விட்டு வர மனசே வராது. அந்த மாதிரி கதை என்பதால் தான் மெய்யழகன் படம் செய்தேன். கடைக்குட்டி சிங்கம் படத்திற்குப் பிறகு, உழவன் பவுண்டேசன் ஆரம்பித்த பிறகு, சென்னையில் விவசாயிகள் விவசாயம் சார்ந்து வேலை செய்பவர்களைச் சந்தித்துப் பேசினோம். அதில் முக்கியமானவர்கள் ஹிமாக்கரன் அவர்கள், ரேகா அவர்கள், அவர் நண்பர்கள் புரபசர் இஸ்மாயில் அவர்கள், அவர்களோடு சேர்ந்து பேசும்போது,  அவர்கள் எங்களுக்கு நிறைய அட்வைஸ் தந்தார்கள்.  சென்னையில் விவசாயம் சார்ந்து என்னென்ன செய்யலான என  பேசும்போது, சென்னையில் திருவிழா நடத்திப் பல ஆண்டுகள் ஆகிவிட்டது. கொரோனாவிற்கு முன்னர் நடந்தது, நம் குழந்தைகளுக்குக் கிராமத்தைப் பற்றி, நம் உணவுகள் பற்றி, நம் பாரம்பரியம் பற்றி தெரியவில்லை, அதைத் தெரியப்படுத்தும் வகையில், பல மாதங்கள் போராடி இந்த செம்பொழில் திருவிழாவை  மீண்டும் ஏற்பாடு செய்து நடத்துகிறார்கள். இதற்கு உழவன் பவுண்டேசன் ஒரு சிறு உதவியாக இருந்துள்ளது எனக்குப் பெருமை. இங்கு கிராமத்தில் நடக்கும் எல்லாமும் இருக்கிறது. மாட்டு வண்டியில் ஆரம்பித்து, காளைகள், ஒயிலாட்டம், மயிலாட்டம், சின்ன சின்ன உணவுகள், தெருக்கூத்து,  எனத் திருவிழாவில் இருக்கும் அனைத்தும் இங்கு இருக்கிறது. இந்த விழா இன்னும் இரண்டு நாட்கள் நடக்கிறது. என் குடும்பத்தினர் நாளை வருகிறார்கள். எல்லோரும் வாருங்கள், உங்கள் குழந்தைகளுக்கு நம் பாரம்பரியத்தை அறிமுகப்படுத்துங்கள். ஜல்லிக்கட்டு பற்றிக் கேட்கிறார்கள், சென்னையில் நடந்தால் நல்லது தான், அதையும் இவர்களிடம் சொன்னால் ஏற்பாடு செய்து விடுவார்கள், சென்னையில் மாடு கொண்டு வந்துவிடப் பலர் ஆசைப்படுவார்கள், போட்டி போடுவார்கள், எல்லா காளைகளும் வந்துவிடும். நான் நிஜத்தில் ஜல்லிக்கட்டு பார்த்ததில்லை, மெய்யழகன் பட ஷீட்டிங்கில் தான் சென்று பார்த்தேன். அது பிரமாதமான ஒரு விசயம். மாட்டை அடக்குவதோ, காயப்படுத்துவதோ இல்லை, வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளில் மாட்டைக் காயப்படுத்துவார்கள் ஆனால் நம் ஜல்லிக்கட்டு ஏறி தழுவுவது தான். மாட்டை அரவணைப்பது தான் நம் ஜல்லிக்கட்டு. இங்கு இந்த திருவிழாவில் பல விவசாயிகள் தங்கள் விலை பொருட்களைக் காட்சிப்படுத்தியுள்ளார்கள். எல்லோரும் வந்து பார்வையிடுங்கள். இந்த கொண்டாட்டத்தில் நீங்களும் இணையுங்கள். அனைவருக்கும் நன்றி. 


பாரம்பரிய கலைகளின் குரு ஐயா காளீஸ்வரன்  பேசியதாவது…

பாரம்பரிய கலைகளை அரங்கேற்ற மேடை அமைத்துத் தந்த, செம்பொழில் குழுவிற்கு நன்றி. என் மாணவி ரேகா அவர்களுக்கு நன்றி. பெரிய பெரிய ஆட்கள் இருக்கும் இடத்தில் என் போல எளிய கலைஞர்களைக் கௌரவப்படுத்துவதற்கு நன்றி. இதை மக்களிடம் எடுத்துச் செல்லும் கார்த்தி அவர்களுக்கு நன்றி. 1024 கலைகள் தமிழ் நாட்டில் இருக்கிறது, அதைப் பாதுகாத்து நாங்கள் இங்குக் கொண்டு வந்துள்ளோம்.  உழவுக்குப் பயன்படுத்தப்பட்ட நாட்டுப்பாட்டு, களைப்பாட்டு எல்லாம் இல்லாமல் போய்விட்டது, அதைச் சேகரிக்கும் கலைஞர்களை, பாதுகாக்கும் கலைஞர்களை, செம்பொழில், உழவன் பவுண்டேசன் கௌரவிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன் நன்றி. 


மண்புழு ஆராய்ச்சியாளர் சுல்தான் பேசியதாவது..

உழவுக்கு உழவன் பவுண்டேசன் மாதிரி விவசாயத்திற்கு மண்புழு. மண்புழு இருந்தால் அந்த நிலத்தில் ஆரோக்கியம் இருக்கும். இந்த விழாவை மிகச்சிறப்பாக நடத்துகிறார்கள். உழவன் பவுண்டேசன், செம்பொழில் அனைவருக்கும் நன்றி. முன்பு ஒரு முறை இயற்கை விவசாயம் கற்றுத்தரக் கூட்டம் போட்டோம் 4பேர் மட்டும் தான் வந்தார்கள், இவர்கள் மூலம் விவசாயம் பற்றித் தெரிந்து கொள்ள, இன்று  நிறைய இளைஞர்கள் வருகிறார்கள். மகிழ்ச்சி. இங்குள்ள விவசாயிகளிடம் எதாவது ஒரு பொருள் வாங்குங்கள் அனைவருக்கும் நன்றி.

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் & எம் ஆர் பி என்டர்டெயின்மென்ட்

 *மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் & எம் ஆர் பி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் புரொடக்சன் நம்பர் 5* 






*சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்* 


நடிகர் சசிகுமார் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'புரொடக்ஷன் நம்பர் 5' என பெயரிடப்பட்டிருக்கிறது.  அண்மையில் இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்றது. இன்று நடிகர் சசிகுமாரின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தை பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.


அறிமுக இயக்குநர் அபிஷான் ஜீவின்ந் இயக்கத்தில் உருவாகும் 'புரொடக்ஷன் நம்பர் 5' என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.  கலை இயக்கத்தை ராஜ் கமல் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்கிறார். பாடலாசிரியர் மோகன் ராஜன் பாடல்களை எழுத, ஆடை வடிவமைப்பு பணிகளை நவா ராஜ்குமார் கையாள்கிறார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெயின்மென்ட் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள்  நசரேத் பசலியான், மகேஷ் ராஜ் பசலியான், யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். 


இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என்றும், அடுத்த ஆண்டு கோடை மாத விடுமுறையில் இப்படத்தை வெளியிட திட்டமிடப்பட்டிருப்பதாகவும் படக்குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர். 


'குட்நைட்', 'லவ்வர்' போன்ற ஃபீல் குட் திரைப்படங்களை தயாரித்து தமிழ் திரைப்பட உலகில் தரமான பட தயாரிப்பு நிறுவனம் என்ற முத்திரையை பதித்து ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் திரையுலக வணிகர்களிடத்திலும் நன்மதிப்பை பெற்றிருக்கும் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த புதிய திரைப்படத்தினை தயாரிக்கிறது என்பதும், ஹாட்ரிக் வெற்றியை வழங்கிய நட்சத்திர நடிகர் சசிகுமார் கதையின் நாயகனாக நடிக்கிறார் என்பதினாலும், படம் தொடர்பான அறிமுக அறிவிப்பு வெளியானதும் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Million Dollar Studios & MRP Entertainment’s

 *Million Dollar Studios & MRP Entertainment’s “Production No.5”* 

*Sasikumar and Simran starrer new film’s shoot to go on floors from October!*






This film, featuring Sasikumar as the content-driven protagonist is titled as ‘Production No.5’. The film’s launch was recently held at a 5 Star Hotel in Chennai. Marking the special occasion of actor Sasikumar’s birthday, the makers are making the official announcement on the film. 


The film marks the directorial debut of Abishan Jeevinth, and is tentatively titled ‘Production No.5’. The film has an ensemble star-cast of Sasikumar, Simran, Mithun Jai Sankar, Kamalesh, Yogi Babu, Ramesh Thilak, M.S. Bhaskar, Baks (a) Bagavathy Perumal. Arvind Viswanathan is handling cinematography and Sean Roldan is composing music. Raj Kamal oversees the art department, and Bharath Vikraman oversees editing works. Mohan Rajan (Lyrics), &  Navaa Rajkumar (Costume Design) are the others on the technical crew. The film is a family entertainer and is jointly produced by Million Dollar Studios and MRP Entertainment Pasilian Nazareth, Magesh Raj Pasilian, and Yuvaraj Ganesan. 


The film’s shooting is scheduled to commence by the first week of October and is planned for release during the Summer of 2025. 

     

Million Dollar Studios and MRP Entertainment, well known for producing super hit films such as "Good Night" and "Lover," have established a reputation for quality film production in the Tamil film industry, earning respect from audiences and trade circles. Their collaboration on this new film, featuring the star actor Sasikumar in the lead role, who has delivered a hat-trick of successes, has generated significant anticipation, with the announcement of this project.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்

 *தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்  *தளபதி** அவர்களின் அறிவுறுத்தலின்படி,





சற்றுமுன்..


*தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டிற்காக*  *சென்னை புறநகர்  மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்* சார்பாக சென்னை R.S. மஹாலில் *கழக பொதுச்செயலாளர் திரு.என்.ஆனந்த்* அவர்கள் மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் ஒவ்வொருவரையும் மாநாட்டில் கலந்து கொள்ளும்படி நேரடியாக அழைப்பு விடுத்தார். மேலும் கழக பொதுச்செயலாளர் தலைமையில் மாநாடு சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 


அதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம்,  பெண்களுக்கு புடவை மற்றும் கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து கழக நிர்வாகிகளுக்கும் மதிய உணவு வழங்கினார்.


இக்கூட்டத்தில்  சென்னை புறநகர் மாவட்ட கழக நிர்வாகிகள் திரு.ECR. சரவணன், திரு.ரவி, திரு.லோகு, திரு.மதன், திரு.சகாயமேரி மற்றும் கழக தொண்டர்கள், தோழர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

Chennai International Film Festival Successfully Launches Mosfilm Festival to

 *Chennai International Film Festival Successfully Launches Mosfilm Festival to Celebrate 100 Years of Russian Cinema*



The Chennai International Film Festival, in association with the Russian Centre of Science and Culture, hosted a grand inauguration of the Mosfilm Festival today at the AVM Auditorium, Avichi College of Arts and Science. The event marked the beginning of a 3-day cinematic celebration, honoring Mosfilm’s rich legacy as one of Russia’s most iconic movie studios, celebrating its 100th anniversary this year.


The inauguration was graced by the distinguished presence of His Excellency Valery Khodzhaev, Consul General of the Russian Federation in Chennai, and Mr. Alexander Dodonov, Vice Consul and Director of the Russian House in Chennai. Both guests expressed their appreciation for the cultural collaboration and highlighted the significance of Russian cinema in the global film industry.


The first day’s screenings kicked off with *Rent a House with All the Inconveniences* (2016), a comedy that entertained the audience with its light-hearted narrative, followed by *Anna Karenina: Vronsky’s Story* (2017), which transported viewers to a dramatic retelling of one of literature’s most famous love stories.


The festival will continue with a showcase of some of Mosfilm’s most remarkable films, offering audiences a rare chance to delve into the history, culture, and creativity of Russian cinema. The screenings, all of which include English subtitles, provide a unique opportunity for Chennai’s film enthusiasts to appreciate international films in their local setting.


The Mosfilm Festival runs until September 29 at the AVM Auditorium, offering films such as *The Vanished Empire* (2007), *The Star* (2002), *Ward No 6* (2009), and *Decision: Liquidation* (2018).


This initiative by the Chennai International Film Festival and the Russian Centre of Science and Culture has been a great success, further strengthening the cultural exchange between Russia and India.


For more information about the festival’s schedule and upcoming events, visit the Chennai International Film Festival’s website.

 *சென்னை சர்வதேச திரைப்பட விழா, ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது.*




செப்டம்பர் 27, 2024- சென்னை சர்வதேச திரைப்பட விழா, ரஷ்ய அறிவியல் மற்றும் கலாச்சார மையத்துடன் இணைந்து, ஆவிச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஏ.வி.எம் ஆடிட்டோரியத்தில் இன்று MOSFILM 100- வது ஆண்டு விழாவினை பிரமாண்டமாக நடத்தியது. 


இந்த நிகழ்வு , ரஷ்யாவின் மிகச் சிறந்த திரைப்பட ஸ்டுடியோக்களில் ஒன்றான MOSFILM யின் வளமான பாரம்பரியத்தை கௌரவிப்பதோடு,

3 நாள் சினிமா கொண்டாட்டத்தின் துவக்கமாகவும் அமைந்திருந்தது.


சென்னையில் உள்ள ரஷ்ய கூட்டமைப்பின் துணைத்  தூதரகத் தலைவர் மேதகு. வலேரி கோட்சேவ் மற்றும் சென்னையில் உள்ள ரஷ்ய மாளிகையின் துணைத் தூதரும் இயக்குநருமான திரு. அலெக்சாண்டர் டோடோனோவ் ஆகியோர் இந்த தொடக்க விழாவில் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினர் இருவருமே இருநாட்டு கலாச்சார ஒத்துழைப்பிற்கு தங்கள் பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.


 மேலும், உலகளாவிய திரைப்படத் துறையில் ரஷ்ய சினிமாவின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர்.


முதல் நாள் காட்சிகள்


 ரெண்ட் எ ஹவுஸ் வித் ஆல் தி இன்கன்வீனியன்ஸஸ் (2016) என்ற நகைச்சுவை திரைப்படத்துடன் துவங்கியது, இந்த நகைச்சுவை கதை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது, அதைத் தொடர்ந்து அன்னா கரேனினா: வ்ரோன்ஸ்கியின் கதை (2017), இலக்கியங்களில் பரவலாகப் பேசப்படும் காவிய காதலான இப்படம் பார்வையாளர்களை வியத்தகு மறுபரிசீலனைக்கு அழைத்துச் சென்றது. 


ரஷ்ய சினிமாவின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றை ஆராய்வதற்கான அரிய வாய்ப்பை பார்வையாளர்களுக்கு இந்நிகழ்வு வழங்கியது.


 மாஸ்ஃபில்மின் சில குறிப்பிடத்தக்க திரைப்படங்களை திருவிழாவில் திரையிட உள்ளோம்.  திரையிடல்கள், ஆங்கில வசனங்களை உள்ளடக்கியவை என்பது குறிப்படத்தகுந்தது.


 சென்னையின் திரைப்பட ஆர்வலர்கள்  சர்வதேச திரைப்படங்களைப் பாராட்ட ஒரு தனித்துவமான வாய்ப்பை இந்நிகழ்வு வழங்குகிறது.


மாஸ்ஃபில்ம் 100 வது கொண்டாட்ட  விழா செப்டம்பர் 29 ஆம் தேதி வரை ஏ.வி.எம் ஆடிட்டோரியத்தில் நடைபெற உள்ளது.


தி வானிஷ்ட் எம்பயர் (2007), தி ஸ்டார் (2002), வார்டு எண் 6 (2009), மற்றும் டிசிஷன்: லிக்விடேஷன் (2018) போன்ற படங்களை திரையிட உள்ளது.


 சென்னை சர்வதேச திரைப்பட விழா மற்றும் ரஷ்ய அறிவியல் மற்றும் கலாச்சார மையம் ஆகியவற்றின் இந்த முயற்சி மாபெரும் வெற்றி அடைந்துள்ளது. இந்நிகழ்வு ரஷ்யாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான கலாச்சார பரிமாற்றத்தை மேலும் வலுப்படுத்துகிறது.


விழா அட்டவணை மற்றும் வரவிருக்கும் நிகழ்வுகள் பற்றிய 


கூடுதல் விவரங்களுக்கு, 


www.chennaifilmfest.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.