Featured post

Padaippaali', a film produced by AVR Anbu Cinemas and directed by Balaji Jayabalan

 *'Padaippaali', a film produced by AVR Anbu Cinemas and directed by Balaji Jayabalan has popular Malaysian actor Yuvaraj Krishnasam...

Sunday 30 June 2024

Lyca Productions Subaskaran present

 *Lyca Productions Subaskaran present* 

*Filmmaker Magizh Thirumeni Directorial* 

*Ajith Kumar’s ‘Vidaamuyarchi’ First Look Revealed* 



The relentless excitement and expectations of AK fans have finally reached the special day as Producer Subaskaran’s  Lyca Productions has officially unveiled the First Look of their prestigious upcoming production ‘Vidaamuyarchi’ starring Ajith Kumar in the lead role. 


Vidaamuyarchi has consistently hit the right meter on the Radar of K-Town for the biggest names joining forces together. The film is bankrolled by Subaskaran’s Lyca Productions, one of the leading and well-esteemed productions of the Indian film industry. Filmmaker Magizh Thirumeni, creator of unparalleled entertainers, and illustrious for distinctly engrossing storytelling is helming this project. 


One of the most intriguing attractions is the Blockbuster ‘Mankatha’ Trio of Ajith Kumar-Trisha-Action King Arjun collaborating after a long time. The others in the star cast include Aarav, Regina Cassandra, Nikhil, and many others, performing pivotal roles. 


G.K.M. Tamil Kumaran, Head of Lyca Productions, says, “It gives us great pleasure to unveil the first look of our special and ambitious project ‘Vidaamuyarchi’. Since its official announcement, the fans have been enormously showcasing their love and support towards this film, and we wanted to gift them something special that will enthrall them. We are vigorously working on the project, and shooting will be wrapped up by mid-August. We will officially announce the release date after the shooting is completed." 


Anirudh, who has already created ‘Chartbuster’ Records with Ajith Kumar is composing music for this film. Om Prakash is handling cinematography, NB Srikanth is overseeing editing works, and Milan is the art director for this film. The others in the technical crew include Supreme Sundar (Stunts), Anu Vardhan (Costumes), Subramanian Narayanan (Executive Producer), J. Girinathan & K Jeyaseelan (Production Executive), G Anand Kumar (Stills), Gopi Prasannaa (Publicity Designer), Hariharasuthan (VFX), Suresh Chandra (PRO), and GKM Tamil Kumaran (Head of Lyca Productions).

பவர் ஆப் டேலண்ட் என்றால் தளபதி விஜய் தான்” ; சிலாகிக்கும் ‘கோட்’ நடிகை கோமல் சர்மா

 *”பவர் ஆப் டேலண்ட் என்றால் தளபதி விஜய் தான்” ; சிலாகிக்கும் ‘கோட்’ நடிகை கோமல் சர்மா* 






*’”கோட்’ தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அலையை உருவாக்கும்” ; நடிகை கோமல் சர்மா நம்பிக்கை*


*”மோகன்லால் இயக்கியுள்ள ‘பரோஸ்’ திரைப்படம் சர்வதேச தரத்தில் உருவாகியுள்ளது” ; நடிகை கோமல் சர்மா பெருமிதம்* 



தமிழ் சினிமாவில் செலக்ட்டிவாக படங்களையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடிக்கும் சில நடிகைகள் படங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் திரையுலகில் நீண்ட நாட்கள் நிலைத்து நின்று பயணிப்பார்கள். அப்படி இருக்கும் வெகுசில நடிகைகளில் நடிகை கோமல் சர்மா தவிர்க்க முடியாத ஒருவர். தமிழில் எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கிய சட்டப்படி குற்றம் என்கிற படத்தில் அறிமுகமான கோமல் சர்மா ‘அமைதிப்படை-2’, ‘வைகை எக்ஸ்பிரஸ்’, ‘ஷாட் பூட் த்ரீ’, ‘பப்ளிக்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் மலையாளத்தில் ‘இட்டிமானி’, ‘மரக்கார்’ மற்றும் பாலிவுட்டில் ‘ஹங்கமா-2’ படங்களில் நடித்ததன் மூலம் ஒரு பான் இந்திய நடிகையாகவே மாறியுள்ளார் கோமல் சர்மா.


வாய்ப்புகளை தேடி செல்வதை விட தனது நடிப்பிற்காக தன்னை தேடி வரும் நல்ல படங்களை மட்டுமே ஒப்புக்கொண்டு நடித்து வரும் கோமல் சர்மாவிற்கு இந்த வருடம் மட்டுமே தமிழிலும் மலையாளத்திலும் கிட்டத்தட்ட நான்கு படங்கள் ரிலீஸுக்காக காத்திருக்கின்றன. நான்குமே பெரிய படங்கள்.  சமீபத்தில் தனக்கு கோல்டன் விசா கிடைத்தது குறித்தும் தனது திரையுலக பயணத்தில் அடுத்தடுத்து வெளியாக இருக்கும் படங்கள் குறித்தும் உற்சாகமாக நம்மிடம் பகிர்ந்து கொண்டார் கோமல் சர்மா.


“காத்திருப்பு எப்போதுமே வீண் போவது இல்லை என்பது போல இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ படத்தில் நடிப்பதற்காக தேடி வந்த வாய்ப்பை பிரியதர்ஷன் சாரின் டைரக்சனில் ஹிந்தியில் உருவான ‘ஹங்கமா-2’வில் நடித்து வந்ததால் ஏற்க முடியாமல் போனது. ஆனால் இப்போது அவருடைய டைரக்சனில் ‘கோட்’ படத்தில் தளபதி விஜய்யுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. 


அவருடன் ‘ஷாட் பூட் த்ரீ’ படத்தில் நடித்தபோது நன்கு பழகி இருக்கிறேன். அவருக்குள் ஒரு அற்புதமான நடிகரும் ஒளிந்து இருக்கிறார். இன்னொரு பக்கம் திறமையான தொழில்நுட்பங்களை, புதுப்புது கண்டுபிடிப்புகளை சினிமாவில் புகுத்த வேண்டும் என்கிற வேட்கையும் அவரிடம் இருக்கிறது. ‘கோட்’ படத்தின் படப்பிடிப்பில் அதை அவர் செயல்படுத்தியதை நேரடியாகவே பார்க்க முடிந்தது. 


‘கோட்’ படத்தில் தளபதி விஜய்யுடன் இணைந்து நடிக்கும் காட்சிகள் நிறைய இருக்கிறது. அவர் மட்டுமல்ல பிரபுதேவா, பிரசாந்த், மோகன் என மற்ற நடிகர்களுடனும் நடிக்கும் மிகப்பெரிய வாய்ப்பு இந்த ‘கோட்’ படத்தின் மூலம் எனக்கு கிடைத்துள்ளது. விஜய்யை ‘பவர் ஆப் தி டேலண்ட்’ என்று சொன்னால் சரியாக இருக்கும்.. நடிப்பில் மேஜிக்கை நிகழ்த்த கூடிய ஒரு அற்புதமான நடிகர். ‘கோட்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக மட்டுமல்ல, தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அலையை உருவாக்கும் படமாகவும் இருக்கும்.


மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் முதன்முறையாக இயக்குனராக மாறி வரலாற்றுப் பின்னணி கதையம்சத்துடன் மலையாளத்தில் ‘பரோஸ்’ என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்தப்படத்தில் உலகத்தரம் வாய்ந்த சர்வதேச நட்சத்திரங்களுடன் நானும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி. இந்த படத்தில் பல சர்வதேச தொழில்நுட்ப கலைஞர்கள் இணைந்து பணியாற்றி வருகிறார்கள். அந்த படமும் இந்த வருடம் உலகளவில் திரையரங்குகளில் வெளியாக தயாராகி வருகிறது..


இது தவிர சதீஷ் குமார் இயக்கும் பெண்டுலம் என்கிற படத்தில் நடித்து வருகிறேன். மேலும் இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் விகர்ணன் அசோக் இயக்கும் மாஸ்க் என்கிற படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். மிகவும் திறமையான இயக்குநர், வித்தியாசமான ஒரு கதையுடன் வந்துள்ளார்.  இந்த படம் வெளியான பிறகு தமிழ் சினிமாவில் அவர் ரொம்ப தூரம் போவார்.


இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் ஹிந்தியில் மீண்டும் ‘அயோத்தியா’ என்கிற படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன் அந்தப் படமும் ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. இன்னொரு பக்கம் பாலிவுட்டிலும் இரண்டு படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளேன். அந்தப் படங்கள் வரும்போது என்னுடைய திரையுலக பயணத்தில் புதிய மாற்றம் நிகழும் என்பது உறுதி” என்கிறார் நம்பிக்கையுடன்.


அதுமட்டுமல்ல இன்னொரு பக்கம் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரெஹைனா இசையில் சர்வதேச தரத்தில் உருவாகி வரும் இசை ஆல்பத்திலும் கோமல் சர்மா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குநர் மணிகண்டன் இந்த ஆல்பத்தை இயக்குகிறார். இத்தனை படங்களில் தான் நடித்து வருவது குறித்து ஆர்வமுடன் கூறும்போதே கோமல் சர்மாவின் கண்களில் மகிழ்ச்சி மின்னல் அடிக்கிறது. 


சமீபத்தில் இவருக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி கவிரவித்தது. அதன்பிறகு பலரும் இவரை இப்போது செல்லமாக ‘கோல்டன் கேர்ள்’ என்றே அழைக்க ஆரம்பித்து விட்டார்களாம். 


“இப்படி ஒரு கவுரவம் கிடைத்ததில் மிகப்பெரிய மகிழ்ச்சி. இந்த இந்த கோல்டன் விசாவை தற்போது எனக்கு வழங்கியதற்காக ஐக்கிய அரபு அமீரக அரசுக்கு மிகப்பெரிய நன்றி. ஸ்குவாஷ் போட்டிகளில் நாட்டுக்காக விளையாடிய ஒரு விளையாட்டு வீராங்கனையாக, மிஸ் சவுத் இந்தியாவாக, பல இந்திய படங்களில் நடித்த நடிகையாக மற்றும் ஒரு சமூக ஆர்வலாராக என் திறமை மீது நம்பிக்கை வைத்த, எக் டிஜிட்டல் ( ECH Digital) நிறுவனத்தின் சிஇஓ திரு. இக்பால் மார்கோனி அவர்களுக்கு என் மனப்பூர்வ நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அவருடைய மாறாத ஆதரவு விலை மதிப்பற்றது. இதுபோன்ற கவுரவத்தால் எனது பொறுப்புகள் இன்னும் அதிகமாகவதாக உணர்கிறேன். இது என்னுடைய எல்லைகளை விரிவாக்கி இன்னும் பல நல்ல விஷயங்களை செய்வதற்கு உந்து சக்தியாக அமையும்.” என்கிறார் கோமல் சர்மா நம்பிக்கையுடன்.

Actress Komal Sharma’s back to back in Bollywood!*

 *Actress Komal Sharma’s back to back in Bollywood!* 


*“BARROZ is world class movie directed by Heart Throbbing PAN Indian superstar Mohanlal sir- Actress Komal Sharma* 






*’Thalapathy Vijay’ is a Power HOUSE of Talent’ - ‘GOAT’ Actress Komal Sharma*

 *’Actress Komal Sharma BRANDING THE TITLE ‘GOLDEN GIRL’ FOR GOLDEN VISA*

 


Actress Komal Sharma is one among the rare league of actresses in Tamil cinema who opt for quality over quantity when it comes to choosing films and roles. Despite appearing in a limited number of films, her talent and dedication ensure her longevity in the indian film industry. Starting her career with the movie 'Sattapadi Kuttram' directed by S.A. Chandrasekar, Komal Sharma has showcased her acting skills in notable films such as Amaidipadai-2,Vaigai Express, Shot Bhoot Three, and Public along with malayalam movies Ittymaani, marakkar and Bollywood movie hungama2.


Actress Komal Sharma firmly believes in letting good films and roles come to her based on her acting potential, rather than actively seeking out offers. Notably, she has a promising lineup of projects in both Tamil,Hindi and Malayalam, set to be released in the near future. It is important to mention that all these upcoming films are part of the major league. Additionally, she is been lined with couple of prestigious Bollywood projects and is very excited about receiving the Golden Visa. 


Actress Komal Sharma says, “Earlier, It was literally disappointing to miss out  Ace Director Venkat Prabhu's offer to work on 'Maanaadu' due to series of shoot assigned in Hungama-2 Directed by  Legendary director  Priyadarshan, she always feels bad about not been able to do mannadu movie with Venkat Prabhu sir . She is now delighted to have been given an opportunity to work with Thalapathy Vijay in his upcoming film 'GOAT' of directed by Venkat Prabhu sir.

Venkat prabhu sir harbors a strong passion for implementing cutting-edge technologies and innovations all his films. This was evident in his work on the set of 'GOAT',

She continues to add, “I had the opportunity to act along Venkat Prabhu sir in  'Shot Boot Three'. 

VP sir have a remarkable talent as an actor too .. 

It’s great that I got more scenes to work with Thalapathy Vijay sir alongside Jayaram sir and Prabhu Deva sir. Thalapathy Vijay sir is ‘Powerhouse of talent’ .He is just pure Magic and a true artist.

 GOAT is going to be a top-notch film,which will create a highest box office hit. 

our beloved heart throbbing Pan Indian superstar Mohanlal sir is going international on his debut directorial movie BARROZ.I had the privilege of working in an important role among the other leads in the prestigious world class movie.. Furthermore, numerous international artist and technicians have come together to be part of this masterpiece of mohanlal sir.The film is soon preparing for a global theatrical release..


Now Komal Sharma is working for a movie titled Pendulum directed by Director Satish Kumar. 

Further Komal adds “ I am doing a Tamil movie ‘Mask’, directed by Director Vikarnan Ashok, which is backed by Ace film director Vetrimaaran sir.

A highly skilled director Vikarnan has crafted a unique narrative.It is evident that how exceptional the film is going to be. 

I am once again been roped in Priyadarshan Sir’s latest project ‘Ayodhya’ in Hindi which is set to release soon. recently I’ve been signed for couple of Bollywood movies, by top leading production houses 

One more star add up on her shoulder is a international music single made by music composer and singer AR Raihana, in which Komal Sharma has done the lead.

this music single has been directed by a multitalented director Manikandan.

Komal is so excited when talking about all these projects which is visibly seen in her face.


Recently, Komal Sharma was granted Golden Visa by UAE Government. Following this, many have now started branding  her with the title ‘Golden Girl’ .

she say's, 'I am deeply honoured and humbled to accept this golden visa and my heartfelt thanks goes to Dubai Royal Rulers and Government of Dubai.

I want to express my heartfelt gratitude to Iqbal Marconi CEO of ECH Digital, who believed in my talent as a sports player playing for nation in squash, miss south india, as an artist in indian films and as a social activist..

his constant support has been invaluable, and this golden visa is a testament to that unwavering faith and encouragement. This golden visa motivates me to continue striving for excellence, to keep pushing the boundaries, and to achieve even greater things.”

Saturday 29 June 2024

மழை பிடிக்காத மனிதன்' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா

 *'மழை பிடிக்காத மனிதன்' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!*











இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர் தயாரிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ், மேகா ஆகாஷ் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் 'மழை பிடிக்காத மனிதன்'. ஜூலை மாதம் வெளியாகும் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. 


தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது, "இந்த விழாவிற்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. ஒருவரின் கடந்த காலம் இன்னொருவரின் எதிர்காலம் என்று சொல்வார்கள். அப்படித்தான் இந்தக் கதையும் இருக்கும். டிரெய்லர் போலவே படமும் உங்களுக்குப் பிடிக்கும் என நம்புகிறேன்".


இயக்குநர் விஜய் மில்டன், " இந்தப் படம் மூலம் விஜய் ஆண்டனி சாருடன் இன்னும் நெருக்கமாக பழகுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லோரும் சிறப்பாக செய்திருக்கிறார்கள். 'கருடன்', 'மகாராஜா' என சமீபகாலத்தில் தமிழ் சினிமா நல்ல படங்களைக் கொடுத்து வருகிறது. இந்தப் படமும் அந்த வரிசையில் சேரும்". 


தயாரிப்பாளர் டி. சிவா, "படங்களின் வசூலை பொருத்தவரை தமிழ் சினிமா மோசமான நிலையில் உள்ளது. திரையரங்கிற்கே வராதீர்கள் என்றோ, தரம் தாழ்ந்தோ தயவு செய்து ஊடகங்கள் விமர்சனம் செய்து பார்வையாளர்களை வரவிடாமல் செய்து விடாதீர்கள். இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள். நாம் எல்லோரும் ஒரு குடும்பம் போலதான். உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. விஜய் மில்டன் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள். விஜய் ஆண்டனி தலைகனம் பிடிக்காத மனிதர். அவருடைய கடின உழைப்பிற்கு இந்தப் படம் பெரிய வெற்றி பெற வேண்டும். உங்கள் ஆதரவு அதற்கு தேவை". 


இயக்குநர் சசி, "'ரோமியோ' படத்திற்கு முன்பு விஜய் ஆண்டனி நடிக்க ஆரம்பித்த படம் இது. கதையின் மீதும் இயக்குநர் மீதும் அதிக நம்பிக்கைக் கொண்டவர் விஜய் ஆண்டனி. 'பிச்சைக்காரன்' எனப் படத்தின் டைட்டில் சொன்னபோது பலர் மாற்ற சொல்லி சொன்னார்கள். ஆனால், அந்த டைட்டிலை மாற்றாமல் நம்பிக்கை வைத்தவர் விஜய் ஆண்டனி. அதுபோலதான் இந்தப் படத்தின் டைட்டில் நெகட்டிவாக இருந்தாலும் கதையின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார். படம் வெற்றி பெற வாழ்த்துகள்".


நடிகர் விஜய் ஆண்டனி, "என் நண்பர் விஜய் மில்டன் சாருடன் இணைந்து பணியாற்றி இருப்பது மகிழ்ச்சி. இந்தியாவின் தலைசிறந்த ஒளிப்பதிவாளர்களில் இவரும் ஒருவர். 'பிச்சைக்காரன்' படத்தில் அருமையான வேலை செய்திருப்பார். நான் இதுவரை பணிபுரிந்த படங்களில் பிரம்மாண்டமாக வந்துள்ள படம் இதுதான். சத்யராஜ் சார், சரண்யா மேம், முரளி ஷர்மா சார், டாலி தனஞ்செயன் என இத்தனை சீனியர் நடிகர்களுடன் நடிப்பேன் என நினைக்கவே இல்லை. தயாரிப்பாளரும் எந்தவிதமான சமரசமும் இல்லாமல் நாங்கள் கேட்டதை எல்லாம் கொடுத்தார். இசை, கேமரா என எல்லா தொழில்நுட்ப கலைஞர்களும் சிறப்பாக பணிபுரிந்துள்ளனர். படத்தின் கடைசியில் கெட்டவனை அழிக்கக் கூடாது. கெட்டதைதான் அழிக்க வேண்டும் என்று இயக்குநர் சொன்ன விஷயம் பிடித்திருந்தது. படம் நன்றாக வந்திருக்கிறது. ஜூலை மாதம் படம் வெளியாகும். பார்த்துவிட்டு சொல்லுங்கள்".

இந்திய திரையுலகில் புதிய சாதனையை படைக்கும் பிரபாஸின் 'கல்கி 2898 கிபி

 *இந்திய திரையுலகில் புதிய சாதனையை படைக்கும் பிரபாஸின் 'கல்கி 2898 கிபி'*





வைஜெயந்தி மூவிஸ் நிறுவனத்தின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரான திரைப்படம் 'கல்கி 2898 கிபி'. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த இந்த திரைப்படம் ஜூன் 27 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. வெளியான முதல் நாள் முதல் காட்சியிலேயே இத்திரைப்படம் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தது. இதனால் இந்திய திரையுலகில் இதுவரை எந்த திரைப்படங்களும் நிகழ்த்தாத வகையில் இப்படம் வெளியான முதல் நாளே 191.5 கோடி ரூபாய் மேல் வசூலித்து புதிய சாதனையை படைத்திருக்கிறது. இரண்டாவது நாள் முடிவில் 298.5 கோடி வசூலித்து தொடர் சாதனையை படைத்துக் கொண்டிருக்கிறது. 


இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா படானி ஆகியோர் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் இந்த திரைப்படம்.. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றியை பெற்றிருக்கிறது. வியக்க வைக்கும் வி எஃப் எக்ஸ் காட்சிகள்- ரசிகர்களின் மனம் கவர்ந்த நட்சத்திரங்களின் வித்தியாசமான தோற்றம் - மயக்கும் பின்னணி இசை- வசீகரிக்கும் வசனங்கள்- விறுவிறுப்பான திரைக்கதை என அனைத்து அம்சங்களும் வலிமையாக கூட்டணி அமைத்திருப்பதால்.. திரையரங்குகளில் இந்த அறிவியல் புனைவுடன் கலந்த காவிய படைப்பினை காணும் ரசிகர்கள்.. கண்களை இமைக்க மறந்து, அகல விரித்து ஆச்சரியத்தில் ஆழ்ந்து போகிறார்கள்.  இதனால் ரசிகர்கள் கரவொலி எழுப்பி தங்களின் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறார்கள். 


'கல்கி 2898 கிபி' படத்தின் முதல் பாகத்தின் நிறைவு.. இரண்டாம் பாகத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. பிரபாஸ் கதாபாத்திரத்தின் சரித்திர பின்னணி- சுப்ரீம் யாஸ்கினின் அடுத்த கட்ட நடவடிக்கை-  சிருஷ்டியை பாதுகாக்கும் அஸ்வத்தாமாவின் பகிரத முயற்சி- புஜ்ஜி வாகனத்தின் மாயாஜால செயல்பாடு.. என இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்திருக்கிறது.


ரசிகர்களின் வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்தத் திரைப்படம் இந்திய திரையுலகில் இதுவரை நிகழ்த்தியிராத வசூல் சாதனையை படைக்கும் என திரையுலக வணிகர்கள் தெரிவிக்கிறார்கள். மேலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட இந்திய திரையுலகின் முன்னணி பிரபலங்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி, நடிகர்கள் நாகார்ஜுனா, அபிஷேக் பச்சன், யஷ், நடிகை நிதி அகர்வால் உள்ளிட்ட ஏராளமானவர்கள் படத்தைப் பற்றி தங்களது கருத்தை சமூக வலைதளங்களில் பதிவு செய்து, பாராட்டுவதுடன், அன்பினையும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். 


பிரபாஸின் 'கல்கி 2898 கிபி' இந்தியாவில் மட்டுமல்லாமல் அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளிலும் புதிய வசூல் சாதனையை படைத்து வருகிறது.

Deadpool & Wolverine’s New Promo Showcases

 *Deadpool & Wolverine’s New Promo Showcases Wolverine in Raw & Fierce Action!*


Deadpool & Wolverine’s anticipation is hitting the roof, and audiences are brimming with excitement to watch the biggest collaboration of these dynamic superheroes! Marvel Studios have been sharing glimpses of how theatres will be turning red and yellow with the sensational chemistry of Ryan Reynolds as Deadpool and Hugh Jackman returning as Wolverine!


The latest promo showcases the biggest fight of the decade, bringing back supervillain Sabretooth to face off with Wolverine. And as Deadpool said, we are huge fans too!


If this is what the promo holds, it’s beyond imagination what all can be expected from the film!


https://www.instagram.com/reel/C8yh8nINk_v/?igsh=ajJubnpya2Uzc2pp

 

Marvel Studios’ “Deadpool & Wolverine” delivers the ultimate team-up throwdown on 26th July in English, Hindi, Tamil & Telugu.


@sureshchandraaoffl @abdulnassaroffl @Donechannel1

நடிகர்கள் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கரின் 'நேசிப்பாயா' படத்தின் ஃபர்ஸ்ட்

 *நடிகர்கள் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கரின் 'நேசிப்பாயா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் லான்ச் விழா!*










XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கத்தில் அறிமுக நடிகர் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் இணைந்து நடிக்கும் 'நேசிப்பாயா' படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் லான்ச் விழா நடைபெற்றது. 


தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ பேசியதாவது, "பிஸி ஷெட்யூலில் நேரம் ஒதுக்கி வந்த நயன்தாரா மேம்க்கு நன்றி. ஆர்யா சாருக்கும் நன்றி. எங்கள் குடும்பத்திற்கே எமோஷனலான நாள் இது. 'மாஸ்டர்' படம் தயாரிக்கும்போது நிறைய சவால்கள் இருந்தது. ஆனால், விஜய் சார் கரியரில் அது சிறந்த படம் எனும்போது நாங்கள் பட்ட கஷ்டமெல்லாம் ஒன்றும் இல்லை என்று நினைத்தோம். அதற்கடுத்த பெரிய படம் என்னுடைய மருமகன் ஆகாஷூக்கு அமையும் என்று நினைக்கவில்லை. என் மகள் சிநேகா, ஆகாஷை விரும்புகிறேன் என்று சொன்னதும் நாங்கள் எந்த விதமான எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. சவால்களை வாய்ப்பாக மாற்றி கடின உழைப்பை நாம் விரும்பும் ஒன்றுக்கு தர வேண்டும். நடிப்பில் அதெல்லாம் தாக்குப் பிடிப்பீர்களா என்று ஆகாஷிடம் கேட்டேன். அந்த நம்பிக்கை ஆகாஷிடம் இருந்தது. ஆகாஷை பெரிய அளவில் அறிமுகம் செய்ய வேண்டும், அவரிடம் இருக்கும் ப்ளஸை திரையில் சரியாக கொண்டு வர வேண்டும். இதற்கெல்லாம் சரியான இயக்குநர் விஷ்ணு வர்தன் தான் என என்னுடைய மகள் முடிவெடுத்து மும்பை போய் அவரைப் பார்த்து பேசி சம்மதிக்க வைத்தாள். விஷ்ணு வர்தனும் கதையை சிறப்பாக செய்து கொடுத்துள்ளார். அதிதியும் சிறப்பான நடிப்பைக் கொடுத்துள்ளார். யுவன் இசையில் பாடல்கள் நன்றாக வந்துள்ளது. தொழில்நுட்ப குழுவினர் சிறந்த பணி கொடுத்துள்ளனர். படம் நன்றாக வர வாழ்த்துக்கள்".


இணைத்தயாரிப்பாளர் சிநேகா, “நிகழ்வுக்கு வந்திருக்கும் நயன்தாரா மேம்க்கு நன்றி.  இந்த வாய்ப்பு கொடுத்த அப்பாவுக்கும் இப்படியான ஒரு ஸ்டைலிஷ் படத்தை எனக்கும் ஆகாஷூக்கும் கொடுத்த விஷ்ணு சாருக்கும் நன்றி. எல்லோரும் ஆகாஷை அன்போடு வரவேற்பீர்கள் என்று நம்புகிறேன்”.


நயன்தாரா, "'நேசிப்பாயா' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஆகாஷ் முரளிக்கு வாழ்த்துகள்! எனக்கு அதிதி ஷங்கரை ரொம்பவே பிடிக்கும்.  மிகத் திறமையானவர். நான் பொதுவாக எந்த விழாவுக்கும் போக மாட்டேன். ஆனால், இது ரொம்பவே ஸ்பெஷல். இயக்குநர் விஷ்ணு வர்தன், அனுவுடைய படம் இது. பதினைந்து வருடமாக எனக்கு இருவரும் நல்ல பழக்கம். என்னுடைய குடும்பம் போலதான் இவர்கள். அதனால், இந்த நிகழ்வுக்கு என்னால் நோ சொல்ல முடியவில்லை. இவர்கள் ஆகாஷை அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி. ரொம்ப நாள் கழித்து ஒரு ஸ்வீட்டான லவ் ஸ்டோரி பார்க்க இருக்கிறீர்கள்" என்று வாழ்த்திவிட்டு படத்தில் ஆகாஷ் முரளியின் ஃப்ர்ஸ்ட் லுக்கை லான்ச் செய்தார். 


ஆகாஷ் முரளி, "இந்த விழாவிற்காக நேரம் எடுத்து என்னை அறிமுகப்படுத்திய நயன்தாரா மேம்க்கு நன்றி. என்னுடைய தயாரிப்பாளர் பிரிட்டோ சார், சினேகாவுக்கு நன்றி. என்னுடைய கோ-ஸ்டார் அதிதிக்கு நன்றி. நடிக்க ஆரம்பித்த புதிதில் நடுக்கமாக இருந்தது. அவர்தான் என்னை கூல் செய்தார். இயக்குநர் விஷ்ணு வர்தன் சார், அனு வர்தன் மேம், தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லோருக்கும் நன்றி. யுவன் சார் இசையில் நடித்திருப்பது மகிழ்ச்சி. அம்மா, அண்ணன் வந்திருக்கிறார்கள். அண்ணாவிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். எல்லோருக்கும் நன்றி".


நடிகர் ஆர்யா, “எனக்குப் பிடித்த இயக்குநர் விஷ்ணு இயக்கத்தில் ஆகாஷ் அறிமுகம் ஆவதில் மகிழ்ச்சி. கொடுத்த காசில் ஸ்டைலிஷ்ஷாக படம் எடுப்பார் விஷ்ணு. அனுவுடைய காஸ்ட்யூமும் சிறப்பாக இருக்கும். இது எங்களுக்கு குடும்ப நிகழ்வு போலதான். படக்குழுவுக்கு வாழ்த்துகள்” எனச் சொல்லி ’நேசிப்பாயா’ படத்தில் அதிதியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அறிமுகப்படுத்தினார். 


நடிகை அதிதி, “முதலில் என்னுடைய தயாரிப்பாளர்கள் சேவியர் சார், சிநேகாவுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். இந்த வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் விஷ்ணு சாருக்கு நன்றி. என்னுடைய முதல் காதல் கதை இது. எல்லோருக்கும் பிடிக்கும். ஆகாஷூக்கு முதல் படம். சிறப்பாக செய்திருக்கிறார். முரளி சார், அதர்வா சார் மற்றும் எனக்கு கொடுத்த அன்பும் ஆதரவும் ஆகாஷூக்கும் கொடுங்கள். இந்த இண்டஸ்ட்ரியில் எனக்கு மிகவும் பிடித்த நயன் மேம் மற்றும் ஆர்யா சார் இருவரும் இந்த நிகழ்வை சிறப்பித்துக் கொடுத்ததற்கு நன்றி”.


இயக்குநர் விஷ்ணு வர்தன், “விழாவிற்கு வந்துள்ள நயன், ஆர்யா, தயாரிப்பாளர்கள் பிரிட்டோ சார், சிநேகா எல்லோருக்கும் நன்றி. இந்தப் படம் ஒரு லவ் டிராமா. கதையில் ஆக்‌ஷனும் உள்ளது. ஆகாஷூக்கு இது முதல் படம் போல இல்லாமல் சிறப்பாக நடித்துள்ளார். அதிதி பயங்கர எனர்ஜியாக உள்ளார். படம் நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும்”.


தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, “இந்த நாள் எங்கள் எல்லோருக்கும் சிறப்பான நாள். படத்தின் முதல் பார்வையே நம்பிக்கை தந்துள்ளது. படக்குழுவுக்கு வாழ்த்துகள்!”.


தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், “படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள். பிரிட்டோ எதைத் தொட்டாலும் வெற்றிதான். இப்போது அவர் மருமகனை வைத்து படம் எடுத்துள்ளார். நிச்சயம் பெரிய வெற்றி கிடைக்கும்”.


தயாரிப்பாளர் தேனப்பன், “முரளி சாருடன் நிறைய படங்கள் வேலை பார்த்திருக்கிறேன். அவருடைய மகன் ஹீரோவாக அறிமுகமாகும் நிகழ்வில் நான் இருப்பது மகிழ்ச்சி. எல்லோருக்கும் வாழ்த்துகள்!”.


இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், “முரளியுடன் நிறைய நல்ல நினைவுகள் எனக்கு உள்ளது. அவருடைய குடும்பமும் எனக்கு நல்ல பழக்கம். அதர்வா இப்போது கலக்கிக் கொண்டிருக்கிறார். ஆகாஷை இந்த போஸ்டரில் பார்த்தபோது, ‘உதயா’ படத்தில் நாகர்ஜூனாவைப் பார்த்தது போல இருக்கிறது. இதற்கெல்லாம் பின்னால் ஸ்டைலிஷ் இயக்குநர் விஷ்ணு வர்தன் இருக்கிறார். படக்குழுவினருக்கு வாழ்த்துகள்!”.


இயக்குநர் இளன், “விஷ்ணு வர்தன் - யுவன் காம்பினேஷனில் ஒரு ஹீரோவுக்கு சூப்பரான அறிமுகம் இது. ஆகாஷ்- அதிதி காம்பினேஷன் போஸ்டரில் சூப்பராக உள்ளது. வாழ்த்துகள்”.


அதர்வா முரளி, "என்னுடைய குடும்பத்திற்கு சந்தோஷமான, அதே சமயம் எமோஷனலான நாள் இது. ஆகாஷூக்கு முதல் படத்திலேயே பிரிட்டோ சார் போன்ற ஒரு தயாரிப்பாளர் கிடைப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஆகாஷ் கனவுக்கு வடிவம் கொடுத்த இயக்குநர் விஷ்ணுவுக்கு நன்றி. என்னுடைய முதல் படமான 'பாணா காத்தாடி'யில் யுவன் இசைக்கு எவ்வளவு சந்தோஷமாக இருந்தேனா அதேபோலதான், ஆகாஷூக்கும். நான் அறிமுகமாகும் போது அப்பா இருந்தார். அந்த சமயத்தில் அவர் என்ன யோசித்திருப்பார் எனத் தெரியவில்லை. ஆனால், ஆகாஷ் மேடையில் பேசுவதை நான் கீழிருந்து பார்க்கும்போதுதான் எனக்கு அப்பாவின் மனநிலை புரிகிறது. ரொம்பவே எமோஷனலாக இருக்கு. அப்பாவின் கடைசி தருணத்தில் அம்மா, அக்கா, நான் என எல்லோருமே எமோஷனலாக இருந்தோம். அப்போ ஆகாஷ் சின்ன பையன். பாத்துக்கலாம் அண்ணா என எனக்கு ஆறுதல் சொன்னார். இப்போ அவர் ஹீரோவாக அறிமுகம் ஆவது மகிழ்ச்சி. அப்பாவுக்கும் எனக்கும் என்ன அன்பும் ஆதரவும் கொடுத்தீர்களோ அதைவிட ஒருபடி மேலே என் தம்பிக்கு நீங்கள் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்".

Thursday 27 June 2024

Mega Prince Varun Tej, Karuna Kumar, Vyra Entertainments, SRT Entertainments Pan India

 *Mega Prince Varun Tej, Karuna Kumar, Vyra Entertainments, SRT Entertainments Pan India Movie Matka, Vintage Vizag sets built in RFC worth 15crs for 35 Days Long Schedule!!*



The much-anticipated film 'Matka,' starring Varun Tej, is progressing through its third schedule currently. This is an extensive 35-day long shooting schedule, with a massive budget of 15 crores being allocated to this phase alone. The production team is recreating vintage Vizag locations on elaborate sets at Ramoji Film City (RFC), aiming to transport the audience back in time with authenticity and grandeur.


'Matka' is set to be a high-budget pan-India film. The investment in the vintage sets underscores the commitment to delivering a visually spectacular experience. These sets, meticulously designed to replicate the charm and essence of Vizag from a bygone era, are expected to be one of the highlights of the film. The making video shows the extensive pre-production and grand-scale making. It also shows glimpses of Varun Tej.


Varun Tej, known for his versatile performances, is set to bring another memorable character to life in 'Matka.' His role is pivotal in the film, and his portrayal is expected to resonate with audiences nationwide. 


Director Karuna Kumar has penned a massive script, based on the real events that shook the nation. Meenakshi Chaudhry is the leading lady and Bollywood Actress Nora Fatehi is roped in for a crucial role. 


The makers of 'Matka' are confident that the film's unique concept, combined with the high-budget production and meticulously crafted sets, will strike a chord with audiences. Their aim is not just to entertain but to create a memorable cinematic experience that stands out in the annals of Indian cinema.


'Matka' is poised to be a landmark film in Varun Tej's career, with its ambitious production values and the recreation of vintage Vizag serving as significant highlights.


Cast: Varun Tej, Norah Fatehi, Meenakshi Chowdary, Naveen Chandra, Ajay Ghosh, Kannada Kishore, Ravindra Vijay, P Ravi Shankar, etc.


Technical Crew:

Story, Screenplay, Dialogues, Direction: Karuna Kumar

Producers: Dr Vijender Reddy Teegala and Rajani Thalluri

Banners: Vyra Entertainments, SRT Entertainment

Music: GV Prakash Kumar

DOP: A Kishor Kumar

Editor: Karthika Srinivas R

CEO: EVV Satish

Executive Producer: RK Jana, Prashanth Mandava, Sagar

Costumes: Kilari Lakshmi

PRO: Yuvraaj

Marketing: Haashtag Media

15 கோடியில் வைஸாக் நகரை உருவாக்கிய மட்கா படக்குழு !

 *15 கோடியில் வைஸாக் நகரை உருவாக்கிய மட்கா படக்குழு !!*



மெகா பிரின்ஸ் வருண் தேஜ், கருணா குமார், வைரா என்டர்டெயின்மென்ட்ஸ், மற்றும் SRT என்டர்டெயின்மென்ட்ஸ் இணையும் பான் இந்திய திரைப்படமான  “மட்கா” படத்திற்காக, 15 கோடி செலவில் பழமையான வைஸாக் நகரம் மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளது !!  


நடிகர் வருண் தேஜ் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படம் 'மட்கா'. தற்போது இப்படத்தின் மூன்றாவது ஷெட்யூல் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இது ஒரு விரிவான 35 நாள் ஷூட்டிங் ஷெட்யூலாகும், இந்த மூன்றாவது கட்ட படப்பிடிப்பிற்காக மட்டும் 15 கோடி ரூபாய் பெரிய பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது. ராமோஜி ஃபிலிம் சிட்டியில் (RFC) விண்டேஜ் வைஸாக் நகர அமைப்பை,  தயாரிப்புக் குழு உருவாக்கியுள்ளது. இது பிரம்மாண்டத்துடன் கூடிய பழைய வைஸாக் நகருக்கு பார்வையாளர்களை அழைத்துச் செல்லும் புதுமையான அனுபவமாக இருக்கும். 


'மட்கா' மிகப்பெரும் பட்ஜெட்டில் பான்-இந்திய படமாக உருவாக்கப்படுகிறது. விண்டேஜ் லுக்கை கொண்டு வர, பிரம்மாண்ட செட் அமைப்பது, ரசிகர்களுக்கு கண்கவர் அனுபவத்தை வழங்குவதற்கான படக்குழுவினரின் அர்ப்பணிப்பை காட்டுகிறது. கடந்த காலத்திலிருந்த வைஸாக்கின் வசீகரத்தையும் அதன் அமைப்பையும்  பிரதிபலிக்கும் வகையில், மிக நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட செட், படத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாக இருக்கும். மேக்கிங் வீடியோ படத்தின் முன் தயாரிப்பு மற்றும் பிரம்மாண்டமான படப்பிடிப்பு என படத்தின் மீது ஆர்வத்தை கூட்டுகிறது. 


பன்முக நடிப்புக்கு பெயர் பெற்ற வருண் தேஜ், 'மட்கா' படத்தில் வித்தியாசமான மற்றொரு கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்க உள்ளார். அவரது பாத்திரம் படத்தில் முக்கியமானது, மேலும் அவரது கதாப்பாத்திரத்தின் தாக்கம், நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் பெரிய அளவில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தேசத்தையே உலுக்கிய உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து பிரம்மாண்டமான திரைக்கதையை எழுதியுள்ளார் இயக்குநர் கருணா குமார். மீனாட்சி சவுத்ரி நாயகியாகவும், பாலிவுட் நடிகை நோரா ஃபதேஹி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.


'மட்கா' படத்தின் தனித்துவமான கதை, அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு, உன்னிப்பாக வடிவமைக்கப்பட்ட செட் ஆகியவை பார்வையாளர்களை ஈர்க்கும் என்று

படக்குழுவினர் நம்புகிறார்கள். அவர்களின் நோக்கம் வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல, இந்திய சினிமாவின் வரலாற்றில் தனித்து நிற்கும் ஒரு மறக்கமுடியாத சினிமா அனுபவத்தை உருவாக்குவதாகும்.


'மட்கா' வருண் தேஜின் கேரியரில் ஒரு மைல்கல் படமாக இருக்கும், மட்கா தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியப் படமாக வெளியாகவுள்ளது.


நடிகர்கள்: வருண் தேஜ், நேரா ஃபதேஹி, மீனாட்சி சௌத்ரி, நவீன் சந்திரா, கன்னட கிஷோர், அஜய் கோஷ், மைம் கோபி, ரூபாலட்சுமி, விஜய்ராம ராஜு, ஜெகதீஷ், ராஜ் திரந்தாஸ்


தொழில்நுட்பக் குழு: 

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: கருணா குமார் 

தயாரிப்பாளர்கள்: மோகன் செருகுரி (CVM) மற்றும் டாக்டர் விஜேந்தர் ரெட்டி டீகலா

பேனர்: வைரா என்டர்டெயின்மெண்ட்ஸ் இசை: ஜீ.வி.பிரகாஷ் குமார் 

ஒளிப்பதிவு : பிரியசேத் 

எடிட்டர்: கார்த்திகா ஸ்ரீனிவாஸ் R 

தயாரிப்பு வடிவமைப்பு: ஆஷிஷ் தேஜா 

கலை: சுரேஷ் 

நிர்வாகத் தயாரிப்பாளர் - RK.ஜனா 

மக்கள் தொடர்பு : யுவராஜ் 

மார்க்கெட்டிங் & டிஜிட்டல் - ஹேஷ்டேக் மீடியா

அறம் செய்" திரைப்பட இசை வெளியீட்டு விழா !

 "அறம் செய்" திரைப்பட இசை வெளியீட்டு விழா !! 






























படம் சர்ச்சையில் சிக்குமென முன்பே தெரியும் , "அறம் செய்" திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பயில்வான் ரங்கநாதன் !! 


எனக்கு டான்ஸ் என சொல்லி தனியாக அவரே ஹீரோயினுடன் ஆடி விட்டார் - "அறம் செய்" திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ஜீவா !!

Thaaragai cinimas தயாரிப்பில் பாலு எஸ் வைத்தியநாதன் தயாரித்து இயக்கியிருக்கும் படம் "அறம் செய்". நடிகர் ஜீவா, நடிகைகள் மேகாலி மீனாட்சி, அஞ்சனா கீர்த்தி, பயில்வான் ரங்கநாதன், திருச்சி சாதனா ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில், மக்களுக்கான முழுமையான அரசியல் படமாக உருவாகியுள்ளது "அறம் செய்". விரைவில்  திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு  விழா படக்குழுவினருடன், திரை பிரபலங்கள் கலந்து கொள்ள, பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது

இந்நிகழ்வினில்


நடிகர்  பயில்வான் ரங்கநாதன் பேசியதாவது....

இயக்குநர் பாலு எஸ் வைத்தியநாதன் ஒரு நாள் போனில் பேசினார். நான் நடிக்க வேண்டும் என்றார், நான் Youtube ல்,  பேசுவது பற்றித் தெரியுமா என கேட்டேன், தெரியும் சார், தெரிந்து தான் கூப்பிட்டேன் என்றார்.  மகிழ்ச்சி என்றேன். இவரிடம் உள்ள நல்ல விசயம் வசனத்தை முதல் நாளே போனில் அனுப்பிவிடுவார், அவர் எழுதின டயலாக்கை அப்படியே சொன்னேன். அப்போதே தெரியும், இந்தப்படம் கண்டிப்பாகச் சர்ச்சையில் சிக்குமெனத் தெரியும். முழுக்க முழுக்க அரசியலில் நடந்த உண்மை சம்பவங்களை எடுத்திருக்கிறார் ஆனால் போஸ்ட்ரில் இப்படத்தில் அரசியல் இல்லை எனப் பொய் சொல்லியிருக்கிறார். இன்று எனக்கு தமிழ்நாட்டில் பெண் ரசிகைகள் அதிகம் இருக்கிறார்கள். நான் எப்போதும் தவறான தகவலைப் பேசுவதில்லை, என் சமீபத்துப் பதிவுகளைப் பார்த்தால் தெரியும், கள்ளச்சாரயத்தை காச்சுவபவனை தூக்கில் போட வேண்டும் என்று   பேசியுள்ளேன். எல்லா மது ஆலைகளையும் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் தான் அவர்கள் எப்படி கள்ளை கொண்டு வருவார்கள். நான் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என எல்லோரையும் விமர்சனம் செய்கிறேன். ஆனால் என் சில வீடியோக்களை மட்டும் பார்த்துவிட்டு தவறாக பேசுகிறார்கள். இந்தப்படத்தில் பேசிய தொகையைச் சரியாகத் தந்தார்கள், ஆனால் பாவம் ஜீவாவை ஹிரோ என சொல்லி ஏமாற்றிவிட்டார்கள் என நினைக்கிறேன். ஜீவாவை எனக்கு 35 வருடமாகத் தெரியும், நல்ல நடிகர். நான் அரசியல்வாதி கேரக்டர் செய்துள்ளேன், இயக்குநர் ஒரு சிறு அசைவு கூட சரியாக வர வேண்டும் என அடம்பிடித்து எடுப்பார். டயலாக்கை எல்லாம் மாற்றவிடமாட்டார். மிக நன்றாகப் படத்தை எடுத்துள்ளார். படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள் 


திருச்சி சாதனா பேசியதாவது...

எனக்கு மிகச் சந்தோசமாக இருக்கிறது, அறம் செய் இசை விழா பிரம்மாண்டமாக இருக்கிறது. அரசியல் சம்பந்தமான ஒரு படத்தைத் துணிந்து மிகத் தைரியமாக எடுத்திருக்கிறார் இயக்குநர். இயக்குநர் படத்தைப் பற்றி மட்டும் தான்  பேச சொன்னார் ஆனால் மற்ற எல்லாத்தையும் பேசி பிரச்சனையாகிவிடும் போல் தெரிகிறது. இந்தப்படத்தில் நான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மா கேரக்டரில் நடித்திருக்கிறேன். இந்த ரோலில் எல்லோரும் நடிக்க மறுத்துவிட்டார்கள் நீ நடிக்கிறாயா எனக் கேட்டார், எனக்குத் தயக்கமாக இருந்தது. எல்லோரும் அரசியல் பேச வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த படத்தை எடுப்பதாக இயக்குநர் சொன்னார். எனக்குத் தைரியம் கொடுத்து, நடிக்க வைத்தார். இந்த படத்திற்காக ஜெயலலிதா அம்மாவின் நடை, உடை, பாவனைகளைப் பார்த்துக் கற்றுக்கொள்ளச் சொன்னார். வீடியோக்கள் பார்த்து கற்றுக் கொண்டு, நடித்திருக்கிறேன். நீங்கள் உங்கள் ஆதரவை இந்த திரைப்படத்திற்குத் தர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் நன்றி.


நடிகை  மேகாலி மீனாட்சி பேசியதாவது...

அறம் செய் திரைப்படம், மிக இனிமையான அனுபவம். இந்த படத்தில் மிக நல்லதொரு கேரக்டர் செய்துள்ளேன். பப்ளி கேரக்டர்.   என்னை நம்பி இந்த கேரகடர் தந்ததற்கு இயக்குநர் பாலு சாருக்கு நன்றி. இயக்குநர் பாலு சார் மிக எனர்ஜி ஆனவர், செட்டில் எப்போதும் பரபரப்பாகவே இருப்பார். எங்களுக்கு மிக அன்பாக எல்லாம் சொல்லித் தருவார். படத்தை மிகச் சிறப்பாக எடுத்து உள்ளார். தயாரிப்பாளர் ஸ்வேதா மேடத்திற்கும் நன்றி எங்களையெல்லாம் நன்றாகப் பார்த்துக் கொண்டார். ஜீவா நடிக்கும்போது  நல்ல ஒத்துழைப்பு தந்தார். படக்குழ்வினர் மிக உறுதுணையாக இருந்தார்கள். படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது. அனைவரும் உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி. 


நடிகை அஞ்சனா கீர்த்தி பேசியதாவது...

இந்த விழாவிற்கு வருகை தந்து, எங்களையெல்லாம் வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. இந்தப் படத்தில் எனக்கு மிக அழுத்தமான கேரக்டர், ரசிகர்களிடம் ஒன்று நிறையப் பாராட்டுக்கள் வாங்குவேன், அல்லது திட்டு  வாங்குவேன் என நினைத்தேன். இயக்குநரிடம் அதைத்தான் சொல்லிக் கொண்டிருந்தேன்,  இயக்குநர் மிக அற்புதமாகப் படத்தை எடுத்துள்ளார். படம் மிக நன்றாக வந்துள்ளது. படத்தில் உழைத்த அனைவருக்கும் என் நன்றிகள். படத்தைப் பார்த்து உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி. 


நடிகர் ஜீவா பேசியதாவது...

பாலு எஸ் வைத்தியநாதன் இந்தப்படத்தின் நாயகன் இயக்குநர் ஒன்  மேன் ஆர்மி மாதிரி செயல்பட்டு தன் மனதிலிருந்ததை படமாக எடுத்துள்ளார். மிக இளகிய மனதுக்காரர் நல்ல மனிதர். தயாரிப்பாளர் ஸ்வேதா மேடத்திற்கு நன்றி. ஹீரோயின் மேகாலி நல்ல நடிகை, நன்றாக டான்ஸ் ஆடியுள்ளார், அவருடன் எனக்கு சாங்க் இருக்கிறது எனச் சொல்லிவிட்டு பாலு சார் அவரே தனியாக போய் டான்ஸ் ஆடிவிட்டு வந்துவிட்டார். பரவாயில்லை, மேகாலி மிகத் திறமையான நடிகை, அஞ்சனா கீர்த்தி, அவரும் நன்றாக நடித்துள்ளார். ஜாக்குவார் தங்கம் மிகச் சர்ச்சையான வசனங்கள் பேசி நடித்துள்ளார். இயக்குநர் கடைசி வரை கதையே சொல்லவில்லை அவர் சொன்னதைத் தான், எல்லோரும் செய்துள்ளோம். பயில்வான் அண்ணன் நல்ல கேரக்டர் செய்துள்ளார் அவருடன் நடித்தது நல்ல அனுபவம். என்னைப் பற்றி எதுவும் சொல்ல மாட்டேன் என்கிறார் சும்மாவாச்சும் ஏதாவது என்னைப் பற்றிச் சொல்லி விடுங்கள் நன்றாக இருக்கும். வெற்றி அண்ணன் வில்லனாக நடித்திருக்கிறார். நாங்கள் பார்த்தவரைக்கும் சாவித்திரி மேடத்தின் அன்பான அழைப்பில் தான் இந்த விழாவிற்கு வந்தேன். இந்தப்படம் நன்றாக வந்துள்ளது. . படத்தைப் பார்த்து உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி. 


ஜாக்குவார் தங்கம் பேசியதாவது... 

அறம் செய் மிக நல்ல கருத்து சொல்லும் படம், இயக்குநர் பாலு மிக நன்றாக இயக்கியுள்ளார். பாடல்கள் எல்லாம் நன்றாக உள்ளது. பாடலாசிரியர் சினேகனுக்குத் தேசிய விருது கிடைக்கும் என  நம்புகிறேன். படமும்   மிக மிக நல்ல கருத்து சொல்கிறது. எல்லோருமே இங்கு நல்லவர்கள் தான், கெட்டவன் அழிய வேண்டும் நல்லது நிலைக்க  நிலைக்க வேண்டும் என எல்லோருமே நினைக்கிறோம். இன்று அமெரிக்காவில் குடும்பம் என்பதே சிதைந்து அழிந்துவிட்டது, எதற்காக வாழ வேண்டும்,  குடும்பம், பாசம், எதுவும் இல்லாமல் மனித வாழ்க்கையே இல்லை. தனித்தனி ரூம், தனித்தனி செல்போன், என வாழ ஆரம்பித்துவிட்டோம். எப்படி சாராயம் மிகப்பெரிய கொடுமையோ, அது போல் செல்போன் மிகப்பெரிய கொடுமை, அதை தவிர்க்க வேண்டும். பணம் எல்லாத்தையும் மாற்றி விடாது, எதையும் தந்து விடாது, ஒழுக்கமாக நல்லவனாக இருந்தால் தான் நமக்கு நல்ல வாழ்வு கிடைக்கும். இரண்டு ஹீரோயினுக்கும் நன்றாகத் தமிழ் தெரியும், ஆனால் ஏனோ தமிழில் பேசவில்லை, தமிழ்நாட்டில் தமிழில் பேசுங்கள். இந்தப்படம் நன்றாக நல்ல கருத்தைச் சொல்லும் படமாக வந்துள்ளது. உங்கள் ஆதரவைத்தாருங்கள் நன்றி. 


இயக்குநர் நடிகர்  பாலு எஸ் வைத்தியநாதன் பேசியதாவது... 

இது அரசியல் படம் தான் ஆனால் நாங்கள் அரசியல் பேசவில்லை, ஏனென்றால் இந்த படத்தில் நடித்த எல்லோருக்கும்  அடுத்த வாழ்க்கை இருக்கிறது. ஜீவா நீட் பற்றி பேசி இருக்கிறார். அஞ்சனா கீர்த்தி அவருடைய கதாபாத்திரத்தின் அரசியல் பேசி இருக்கிறார். இப்படி ஒவ்வொரு கதாபாத்திரமும் அவர்களுக்கான அரசியலைப் பேசி உள்ளார்கள், இந்த படம் அரசியல் படம் தான். ஆனால்  நாங்கள் பேசவில்லை, அடுத்த படத்தில் நாங்கள் வேறு கதை சொல்வோம்.  நமக்குத் தேவை ஆட்சி மாற்றம் இல்லை, முழுமையான அரசியல் மாற்றம். இதுதான் இப்படத்தின் திரைக்கதை. இப்படத்தில்  நாட்டிலுள்ள அரசியல்வாதிகளையும், தனிநபர்களையும் அரசியல் கட்சியையும்  தாக்கி பேசவில்லை, எந்த ஒரு தனி நபரையும் தாக்கி காட்சிகள் வைக்கவில்லை, அப்புறம் எப்படி இது அரசியல் படம் என நீங்கள் கேட்கலாம். 74 ஆண்டு காலம் மாறி மாறி ஆட்சி செய்த, அரசியல் கட்சிகள் மக்களுக்கு எதிராகச் செய்த செயல்களை இப்படத்தில் நாங்கள் பேசியிருக்கிறோம் அதனால் தான் இது அரசியல் படம். இந்திய அரசியல் சாசனப்படி மக்கள் ஆட்சி எப்படி இருக்க வேண்டும் எனப் பேசி இருக்கிறோம். படத்தைப் பார்த்துவிட்டு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி

Thaaragai cinimas  பாலு எஸ் வைத்தியநாதன் தயாரித்து இயக்கியிருக்கும் இப்படத்தை, ஸ்வேதா காசிராஜ்  இணை தயாரிப்பு . செய்துள்ளார். விரைவில் இப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.