Featured post

மத கஜ ராஜா - வை ராஜா- வாக கொண்டாடும் மக்களின்

 அனைவருக்கும் வணக்கம்,  மத கஜ ராஜா - வை ராஜா- வாக கொண்டாடும் மக்களின் பேராதருடன் 100கோடி வசூலை எதிர்நோக்கி  தமிழர் திருநாளாம் பொங்கல் அன்று ...

Wednesday, 30 October 2024

29/10/2024 தேதியிட்ட தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின்

 பத்திரிகை செய்தி 


29/10/2024 தேதியிட்ட தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அறிக்கையில், நவம்பர் 1-ஆம் தேதி முதல் புதிய தமிழ்த் திரைப்படங்களுக்கான பணிகள் எதையும் துவக்க வேண்டாம் என தயாரிப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.



ஒட்டுமொத்த தமிழ்த் திரைத் துறையிலும் மறுசீரமைப்பை ஏற்படுத்த பேச்சு வார்த்தைகள் மும்முரமாக நடைபெற்று வரும் காரணத்தால், 'புதிய படங்களின் படப்பிடிப்பு இல்லை' என்ற முந்தைய தீர்மானம் தளர்த்தப்பட்டு, கடந்த மாதம் கூட புதிய படங்களை துவங்கி படப்பிடிப்புகளும் நடந்து வரும் நிலையில், தற்போது மீண்டும் படப்பிடிப்பு பணிகளை முடக்குவதாக அறிவிப்பு வெளியானது குழப்பத்தை விளைவிக்கிறது.


இந்த தன்னிச்சையான முடிவினால் மிகப் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகப் போவது தமிழ்த் திரைத்துறை தொழிலாளிகள் மட்டுமல்ல. முதலீடு செய்யும் தயாரிப்பாளர்களுக்கும் அது பெரும் இழப்பையே ஏற்படுத்தும் என்பதை நாம் அனைவரும் உணர வேண்டி உள்ளது.


அனைவரும் ஒன்றிணைந்து உரையாடல் மூலமாக ஒரு சிக்கலுக்கான ஒருமித்த தீர்வு காண முற்படும் வேளையில், அந்தத் தீர்வு எட்டப்படும் தொலைவில் இருக்கும் போது, அந்த முயற்சியை விழலுக்கு இறைத்த நீராக்கும் விதமாக, வேலை நிறுத்தம் போன்ற அவசியமற்ற தீவிரமான முடிவுகள், தீர்வு காணும் முயற்சிக்கு தனிப்பட்ட காரணங்களுக்காக சிலரால் இடப்படும் முட்டுக்கட்டையாகவே கருதப்படும்.


அத்தகைய செயல்பாட்டை தென்னிந்திய நடிகர் சங்கமும் ஒருபோதும் ஆதரிக்காது. அதேசமயம், தமிழ்த் திரைத்துறை தொழிலாளர்களின் நன்மைக்கான எந்த நடவடிக்கையிலும் ஒன்றிணைந்து, ஒற்றுமையாக செயலாற்ற தென்னிந்திய நடிகர் சங்கம் எப்போதுமே முன்னிலை வகித்துள்ளது. இனியும் அந்த நிலைப்பாடு தொடரும்.


ஆகவே, இந்த சந்தர்ப்பத்திலும் திரைத்துறை சிக்கல்களுக்கு தீர்வு காண்பதில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் ஒத்துழைப்பு முழுமையாக உண்டு, முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும், மறுசீரமைப்புக்கும் மட்டுமே... தொழிலாளர் வாழ்வுரிமையை ஒடுக்கவும், வேலைகளை முடக்கவும் அல்ல....

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் மற்றும் குளோபல் ஸ்டார் ராம்

 *பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் மற்றும் குளோபல் ஸ்டார் ராம் சரணின் "கேம் சேஞ்சர்" படத்தின்  வட இந்திய விநியோக உரிமையை AA பிலிம்ஸ் பெற்றுள்ளது.*



*"கேம் சேஞ்சர்" படத்தின்  வட இந்திய விநியோக உரிமையைப் பெற்ற ஏஏ பிலிம்ஸ் !!*


பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் மற்றும் குளோபல் ஸ்டார் ராம் சரணின்  "கேம் சேஞ்சர்" திரைப்படம்,  நீண்ட காலமாக பெரும் எதிர்பார்ப்பிலிருந்து வருகிறது. இப்படம் வரும் 10 ஜனவரி 2025 அன்று  வெளியாகவுள்ள நிலையில், படத்தின் வட இந்திய விநியோக உரிமை, அபரிமிதமான தொகைக்கு விற்கப்பட்டுள்ளது. இந்த தொகை ராம் சரணின் சினிமா கேரியரில் மிக அதிக தொகை என்பது குறிப்பிடத்தக்கது.  


புகழ்மிகு  பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், ராம் சரண் நடித்திருப்பதால் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. ஜனவரி 10, 2025 அன்று சங்கராந்தி அன்று வெளியாகும் இப்படம், S.S. ராஜமௌலியின் "RRR" திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, ராம் சரண் நடிப்பில் வெளியாகும் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.  இதனால் இப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது.


இப்படத்திலிருந்து "ஜருகண்டி" மற்றும் "ரா ரா மச்சா" ஆகிய இரண்டு உற்சாகமிக்க  பாடல்கள் சமீபத்தில் வெளியான நிலையில், படத்தின்  டீசர் மற்றும் டிரெய்லரை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். "கேம் சேஞ்சர்" படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய வணிகம் ஏற்கனவே சிறப்பாக நடந்து வருகிறது, இப்படத்தின் வட இந்திய விநியோக உரிமையை, அனில் ததானியின் AA பிலிம்ஸ் பெரும் தொகைக்கு வாங்கியுள்ளதாகத் தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.


https://x.com/GameChangerOffl/status/1851157038258147661


இந்த அறிவிப்பு  "கேம் சேஞ்சர்" வட இந்தியாவில் மிக அதிகபட்ச திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியிடப்படுவதை உறுதி செய்கிறது,   அனில் ததானியின் வெளியீட்டில் இப்படம் மிகப்பிரமாண்டமாக வெளியாகும் என்பது, ராம் சரண் ரசிகர்களையும் திரைப்பட ஆர்வலர்களையும் மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.


"கேம் சேஞ்சர்" படத்தில் ராம் சரண் நேர்மையான ஐஏஎஸ் அதிகாரியாக ஊழல் மற்றும் செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகளுடன் தாழ்த்தப்பட்டவர்களின் நலனுக்காகப் போராடுகிறார். பாலிவுட் அழகி கியாரா அத்வானி நாயகியாகவும், நடிகை அஞ்சலி ஒரு முக்கிய பாத்திரத்திலும் நடித்துள்ளனர் மற்றும் பல பெரிய  நட்சத்திரங்களும்  இணைந்து நடித்துள்ளனர்.


தமனின் அற்புதமான  பாடல்கள் மற்றும் அதிரடியான பின்னணி இசை,  திருவின் வசீகரிக்கும் ஒளிப்பதிவு  ஆகியவை படத்திற்கு மிகப்பெரும் பலமாக அமைந்துள்ளது  இப்படத்தின் எடிட்டிங்கை இரட்டையர்களான ஷம்மர் முகமது மற்றும் ரூபன் ஆகியோர் கையாள்கின்றனர்.


ஹைதராபாத், நியூசிலாந்து, ஆந்திரப் பிரதேசம், மும்பை மற்றும் சண்டிகர் ஆகிய நகரங்களில் உள்ள பிரமிக்க வைக்கும் இடங்களில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது. இப்படம் பார்வையாளர்களுக்கு ஒரு கண்கவர் அனுபவமாக இருக்கும். பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இப்படத்தின்  கதையை எழுதியுள்ளார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இப்படத்தைப் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளன. 


முன்னணி  நட்சத்திர  நடிகர்கள், வசீகரிக்கும் கதைக்களம் மற்றும் சிறந்த தொழில்நுட்பக் குழுவுடன், "கேம் சேஞ்சர்" ஒரு பிளாக்பஸ்டர் ஹிட் ஆக தயாராக உள்ளது, இப்படம் இப்பொழுதே  நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களின் இதயங்களைக் கவர்ந்துள்ளது.

அமரன்: தீவாளிக்கு காத்திருக்கும் SK-யின் ஆக்ஷன் வெடிகுண்டு

 *அமரன்: தீவாளிக்கு காத்திருக்கும் SK-யின் ஆக்ஷன் வெடிகுண்டு!*  

Click here to watch video:

https://youtu.be/yjlmLyRJFXI?si=Y2T0rxJ0kN2L6T5G






ஹாய் மக்களே என்னதான் தீவாளி க்கு நெறய படங்கள் ரிலீஸ் ஆனாலும் அமரன் படத்தோட ப்ரோமொஷன் இல்லனா அது சம்பந்தப்பட்ட news தான் அதிகமா வந்துட்டுருக்கு. 2017 ல ஏப்ரல் தான் மேஜர் முகுந்த் இறந்து போனாரு. அந்த வருஷம் தான் nadigar விஜய் major ஓட குட்டி பொண்ண meet பண்ணி time spend பண்ணாரு. arsheya க்கு நடிகர் விஜய் அ ரொம்ப பிடிக்குமாம்.  அவரோட songs லாம் கேட்டு ரொம்ப excite ஆனதுனால event coordinator அ இருந்த abdul ghani நடிகர் விஜய் கிட்ட இதை பத்தி சொல்லியும். உடனே அவரோட busy schedule ல இந்த பொண்ண meet பண்ணிருக்காரு. இந்த news தான் இப்போ எல்லாரும் மறுபடியும் share பண்ணி பேசிட்டு இருக்காங்க. 


இந்த படத்துக்கு மட்டும் அப்படி என்ன தனி excitement இருக்கு னு பாத்தீங்கன்னா முதல் விஷயம் இது மறைந்த major mukunth அவரோகளோட வாழக்கை பதிவு தான் இந்த படம். ரெண்டாவுது விஷயம் சிவகார்த்திகேயன் தான். இதுவரையும் நம்ம பாக்காத ஒரு அவதாரத்துல இவரை பாக்க போறோம். இதுனால தான் மக்கள் ரொம்ப ஆர்வமா இருக்காங்க இந்த படத்தை பாக்கறதுக்கு. நம்ம வீடியோ ல இன்னிக்கு ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்துல கமல்ஹாசன் production ல சிவகார்த்திகேயன் சாய்பல்லவி இணைச்சு நடிச்சிருக்க படம் அமரன் ஓட interesting ஆனா விஷயங்களை தான் பாக்க போறோம். 


இந்த படம் hindi , tamil , telugu , malayalam , kannanda language ல ரிலீஸ் ஆகுது. இந்த படத்தோட trailer அ ஓவுவுறு language ளையும் ovuvuru actors release பண்ணிருக்காங்க. தமிழ் ல கமல் hasan யும் telugu ல nani யும், மலையாளம் ல tovino thomas யும், kannada ல shivarajkumar அப்புறம் hindi ல amir khan ரிலீஸ் பண்ணிருக்காங்க. இந்த படத்தோட ட்ரைலர் க்கே மக்கள் கிட்ட நல்ல response இருந்துச்சு னு தான் சொல்லணும். அதுலயும் Major mukund அ நடிச்சிருக்க SK வும் Indu rebecca அ நடிச்சிருக்க saipallavi ஓட chemistry பெருசா பேச பட்டது. இந்த படத்தோட promotion எல்லாம் விறுவிறுப்பா நடந்துட்டு இருக்கு.  


அதுக்கு முன்னாடி major mukund varadharajan அவர்கள் யாருனு பாத்தீங்கன்னா. இவரு தமிழ்நாட்டு அ சேந்த army officer . இவரு Indian Army' ஓட Rajput Regiment, ல commissioned officer அ இருந்தவரு. jammu and kashmir ல 44th Rashtriya Rifles battalion ல deputation ல இருக்கும் போது தீவிரவாதிகள் நடந்த தாக்குதல் ல மூணு தீவிரவாதிகளை சுட்டு கொன்னு 31 வயசு ல வீர மரணம் அடைஞ்சுருக்காரு. இவரோட இறப்பிற்கு அப்புறம் ashoka சக்கர விருது குடுத்து நம்ம இந்தியன் government கெரவிச்சுருந்தாங்க. இவரோட வாழக்கை கதையை சொல்றது தான் அமரன். இவரோட வாழக்கை கதையை Shiv Aroor and Rahul Singh எழுதுன ‘India’s Most Fearless – True Stories of Modern Military Heroes’, ன்ற book ல இவரோட பதிவு யும் இருக்கு. 


இந்த கதையை டைரக்டர் சொல்லும் போது  Sk உடனே ஓகே பண்ணிட்டாரா ஆனா கமல்ஹாசன் தான் produce பண்ண போறாரு னு சொன்ன உடனே இது அவருக்கு தெரியுமா னு கேட்ருக்காரு. கமல் ஹசன் இவரை பாக்கும் போது கண்டேன் சீதையை னு sk அ பாத்து சொல்லிருக்காரு. sk ஓட அப்பா திருச்சி ல jail superintendent அ வேலை பாத்தாரு னு தெரியும். அவரோட அப்பா மத்த officers கிட்ட disciplined அ மரியாதையோடு நடந்துக்கறாரு னு பாத்ததுனால இந்த role அ நடிக்கிறதுக்கு உதைவி யா இருந்துச்சு னு ஒரு பேட்டி ல சொல்லிருக்காரு. இந்த படத்தோட முக்காவாசி shooting அ காஷ்மீர் ல எடுத்திருக்காங்க. இந்த படத்துக்காக கமல்ஹாசன் க்கு இது வரைக்கும் ஷூட்டிங் அ நடக்காத sensitive ஆனா areas ல shoot பண்றதுக்கு காஷ்மீர் government special permission அ குடுத்திருக்காங்க. major mukund வேலை பாத்த இடங்களாலயும் shoot பண்ணிருக்காங்க. அது மட்டும் கிடையாது இவங்களுக்கு three layer protection யும் குடுத்திருக்கங்களை. அதுனால இந்த படம் கண்டிப்பா ஒரு visual treat அ இருக்குமன்றத்துல சந்தேகமே இல்ல. 


sk மேஜர் mukund இருந்த Rashtriya Rifles unit ல இருக்கற officers கிட்ட பேசுறதுக்கு chance கிடைச்சுதாம். அது ரொம்ப touching ஆனா moment னு share பண்ணிருந்தாரு. இந்த படத்தோட special screening அ oct 24 லாம் தேதி army staff soldiers க்கு delhi ல போட்டு காமிச்சிருந்தாங்க. இந்த படத்தை பாத்த ஒரு senior army chief sk வ நீங்க தப்பான proffession ல இருக்கீங்க னு கேட்டாரா  இதை  கேட்டவுடனே அந்தளவுக்கு genuine அ நடிச்சிருக்கோம் னு ரொம்ப சந்தோச பட்டாரா SK . இதுவரைக்கும் SK தொடாத ஒரு சப்ஜெக்ட் அ எடுத்து நடிச்சிருக்காரு இதை பத்தி SK  பேசும்போது limit அ தாண்டி புதுசா ஒரு விஷயம் பண்ணனும்  னு இருந்தாரா இந்த படம் அவருக்கு விருப்பப்பட்ட மாதிரி அமைச்சிருக்குனும். இதுல நெறய action scenes , ஒரு army soldier ஓட life , emotion னு எல்லாமே இருக்கறதுனால கண்டிப்பா மக்கள் க்கு பிடிக்கும் னு சொல்லிருக்காரு. இந்த படத்துக்காக SK உண்மையான guns அ use பண்ணிருக்காரா அது மட்டும் கிடையாது dummy guns லாம் என்னதான் வெயிட் அ இருந்தாலும் உண்மையான guns தான் நல்ல இருக்குனு comment யும் குடுத்திருக்காரு. 


ஒரு military officer மாதிரியே body language க்கு அவரோட அப்பாவ தான் reference க்கு எடுத்துக்கிட்டாரா அது மட்டும் கிடையாது major mukund ஓட senior officers கிட்டயும் பேசிருக்காரு. இந்த படத்துக்காக major mukund ஓட parents யும் சந்திச்சிருக்காரு. major ஓட parents யும் SK க்கு wishes அ சொல்லிருக்காங்க அது மட்டும் கிடையாது Major ஓட அப்பாவ SK அப்பா னு தான் கூப்பிடுவாரா. ரெண்டு பேரும் msges ல பேசிப்பாங்க ல. இந்த படத்துல இவரோட physical transformation அ பத்தி பேசும் போது college days ல இருந்து major அ நெறய role அ நடிக்கிறதுனால அதுக்கு ஏத்த மாதிரி தான் body யும் வச்சிருந்த னு SK ஒரு பேட்டி ல சொல்லிருக்காரு. இதுக்காக இவரு mental அ prepare யும் ஆயிருக்காரு. (Officers Training Academy ல இருக்கும் போது 75 கிலோ யும் Major அ இருக்கும் போது 80 கிலோ அப்புறம் 75 கிலோ னு reduce பண்ணிருக்காரு. இந்த படத்தை பத்தி SK ஓட opinion என்னனு கேட்கும் போது இது வெறும் போரா வச்சு கிடையாது எல்லா emotions யும் இருக்கற ஒரு தனிப்பட்ட army soldier ஓட கதை இதுல வெறும் war scenes மட்டும் இருந்த நான் இதுல நடிச்சிருக்க மாட்டேன் னு சொல்லிருக்காரு. 


சாய்பல்லவி இந்த படத்துல இவங்களோட screen time யும் அதிகமா இருக்கணும் னு director கிட்ட சொல்லிருக்காங்களா. usual அ biopic இல்லனா male driven படங்கள் நாளே heroine ஓட scenes அ நெறய cut பண்ணிடுவாங்க அதுனால என்னக்கு நீங்க writing ல குடுக்கணும் னு சாய் பல்லவி கேட்டங்களை. ஆனா major mukund அ நடிச்சிருக்க SK க்கு equal அ தான் indu vargheese அ நடிச்சிருக்க Sai pallavi க்கு இருக்கும் னு சொல்லிருக்காங்களா டைரக்டர். இதுக்கு அப்புறம் தான் படத்துல நடிக்க ஒத்துக்கிட்டாங்களா. இந்த படத்தோட பட்ஜெட் மட்டுமே 200 கோடி அப்புறம் இந்த படத்தை ott ல வெளியிடறதுக்கான streaming rights அ netflix வாங்கியிருக்க. 


இந்த படத்தோட bts scenes அ production team evolution of amaran னு episodes அ ரிலீஸ் பண்ணிருக்காங்க. அதுல நெறய இன்டெரெஸ்ட்டிங் ஆனா விஷயங்களையும் இந்த படத்தோட குழு ஷேர் பண்ணிருக்காங்க. director இந்த படத்தை பத்தி பேசும்போது indian army னு இல்லாம counter insurgency and counterterrorism னு deal பண்ணற குறிப்பிட்ட unit அ மட்டும் focus பண்ணிருக்கோம் னு சொல்லிருக்காரு. இந்த படத்துல SK மட்டும் எல்லாத்தயும் கத்துக்களை இவரோட team members அ நடிக்கிற அத்தனை artist யும் gun shooting , fight , training னு எல்லாத்தயும் கத்துக்கிட்டாங்களா. இந்த படத்துக்காக மும்பை ல இருக்கற vicky arora கிட்ட workshop ல போய் attend பண்ணிருக்காரு sk . இவரு தான் hindi actors அ army based characters அ நடிக்க வைக்க train பண்ணுவாரு. இதுக்கு அப்புறம் kashmir ல ஒரு வாரம் உண்மையான army soldiers ஓட train பண்ணாரா. shooting க்கு வரதுக்கு முன்னாடி SK workout பண்ணிட்டு gym க்கு போயிடு அதுக்கு அப்புறம் தான் வருவாரா. இந்த படத்தோட கதையை முதல் அ கேட்டதுக்கு அப்புறம் நம்ம கேட்ட இந்த கதையை எல்லாரும் பாக்கணும் னு ஆசைபட்டாரா. அன்னிக்கு night full அ தூக்கமே வரலையே SK க்கு அதுக்கு அப்புறம் தான் mental அ prepare ஆயிட்டு இந்த படத்துக்கு ஓகே சொல்லிருக்காரு. 

இந்த படத்தோட audio launch அ oct 18 அன்னிக்கு சென்னை ல grand அ நடந்தது. அமரன் படத்தோட குழு வ தவிர்த்து சிறப்பு விருந்தினர்களா மேஜர் முகுந்த் ஓட மனைவி indu rebacca வும் அவங்களோட பொன்னும் வந்திருந்தாங்க அது மட்டும் கிடையாது டைரக்டர் மணி ரத்னம் அப்பரும் டைரக்டர் லோகேஷ் கனகராஜ் யும் வந்துருந்தாங்க. எல்லாருமே இந்த படத்துக்கும் படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவிச்சுருந்தாங்க. இந்த audio launch event அ நாளைக்கு star vijay ல 3 மணிக்கு போட போறாங்க. மறக்காம இந்த event அ பாத்ரூங்க. 


இந்த படத்துக்கு GV prakash தான் இசையமைப்பாளர் அ இருக்காரு. இவரோட 700 வது song தான் hey minnale . இது தான் இந்த படத்துல இருந்து வந்த முதல் song யும் கூட. இந்த பாட்ட haricharan யும் swetha mohan யும் பாடிருக்காங்க. இந்த song ஓட background பாத்தீங்கன்னா MCC campus ஓட இடங்களை தான் capture பண்ணிருக்காங்க. Major mukund இந்த college ல படிச்சிருந்தாரு. அடுத்த song அ பாத்தீங்கன்னா vennilavu saral . இது ஒரு romantic melody னு சொல்லலாம். இந்த பாட்ட பாக்கும் போது SK யும் saipallavi ஓட parents role அ focus பண்ற மாதிரி அமைச்சிருக்கு. இந்த பாட்ட கபில் kabilan யும் rakshita suresh யும் பாடிருக்காங்க.


2012 ல தீபாவளி ல ரிலீஸ் ஆனா தளபதி யோட துப்பாக்கி படத்துக்கு SK ஒரு tweet போட்டுருந்தாரு. தீபாவளி அன்னிக்கு துப்பாக்கி படத்தோட tickets வச்ருக்கவங்க தான் mass னு இந்த படத்துக்கு tickets arrange பண்ணி குடுத்தது துப்பாக்கி படத்துக்கு AR murugadoss க்கு அப்போ asst director அ வேலை பாத்த rajkumar periyasamy தான் இன்னிக்கு amaran படத்தை இயக்கிறுக்கறாரு. இத்தனைக்கும் சமீபத்துல வந்த GOAT படத்துல துப்பாக்கி ஓட சொந்தக்காரரே இந்தாங்க துப்பாக்கி அ வச்சுக்கோங்க னு SK கிட்ட  சொல்லிட்டாரு. இதுனால SK ஓட மதிப்பு இன்னும் கூடிருச்சு னு தான் சொல்லணும்.  ஒரு program ஓட host அ ஆரம்பிச்சு எல்லாரையும் சிரிக்க வச்சு படத்துல hero வ entry குடுத்து   வெற்றி தோல்வி னு ரசிக்க வைக்கிற hero வ இருந்து இப்போ கொஞ்சம் கொஞ்சமா படி ஏறி  action hero வ   இன்னிக்கு நிலைச்சு  நிக்கறாரு oct 31  deepavali ரிலீஸ்  அ  வர  அமரன் படத்துல ஒரு மரியாதைக்குரிய army officer அ  வராரு  கண்டிப்பா தீபாவளி க்கு வர அமரன் படத்தை மிஸ் பண்ணிடாதீங்க.

Tuesday, 29 October 2024

ஶ்ரீராம் கார்த்திக் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் மெஸன்ஜர்

 *ஶ்ரீராம் கார்த்திக் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் மெஸன்ஜர்*








*மெசேஜ் மூலம் உயிரை காப்பாற்றும் திரைப்படம் 'மெஸன்ஜர்'*


*ஃபேண்டஸி லவ் ஸ்டோரி பாணியில் உருவாகி இருக்கும் மெஸன்ஜர்*



பி.வி.கே ஃபிலிம் ஃபேக்டரி (PVK FILM FACTORY) சார்பில் பா.விஜயன் தயாரித்திருக்கும் படம் மெஸன்ஜர். இதில் ஸ்ரீராம் கார்த்திக் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இவர் கன்னிமாடம், யுத்தகாண்டம் பாத்திரகாட் (மலையாளம்) போன்ற படங்களில் கதாநாயகனாகவும் தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சார் படத்தில் சிறப்புத் தோற்றத்திலும் நடித்து இருக்கிறார். கதாநாயகிகளாக மனீஷா ஜஸ்னானி, ஃபாத்திமா நஹீம், வைசாலி ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்து இருக்கிறார்கள். 


இவர்களுடன் லிவிங்ஸ்டன், பிரியதர்ஷினி ராஜ்குமார் , ஜீவா ரவி, யமுனா, கோதண்டன், இட்இஸ் பிரசாந்த், கூல்சுரேஷ், ராஜேஷ்வரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். கதை, திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் ரமேஷ் இலங்காமணி. இவர் இயக்குனர் A.R. காந்தி கிருஷ்ணா மற்றும் இயக்குனர் பத்ரி அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.


ஐடி கம்பெனியில் வேலை செய்யும் ஶ்ரீராம் கார்த்திக் காதல் தோல்வியால் தற்கொலைக்கு முயற்சிக்கிறார். அப்போது அவரது முகநூலில் இருக்கும் மெஸன்ஜரில் ஒரு பெண் மெசேஜ் செய்து அதை தடுக்கிறாள். அவளுக்கு எப்படி தான் தற்கொலை செய்ய போவது தெரியும் என அவளிடமே மெசேஜ் செய்து ஶ்ரீராம் கார்த்திக் கேட்க, அதற்கு தான் இறந்து விட்டதாக சொல்கிறார். இறந்த பெண்ணொருவர் தன் உயிரைக் எப்படி காப்பாற்றினார், அந்த பெண் யார் என்பதை ஶ்ரீராம் கார்த்திக் விடை தேடி செல்வதே இந்த மெஸன்ஜரின் கதை. ஃபேண்டஸி லவ் ஸ்டோரி பாணியில் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.


பால கணேசன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு பிரசாந்த் படத்தொகுப்பு செய்திருக்கிறார். அபு பக்கர் இசையமைக்க, பாலசுப்ரமணியன் கலை பணிகளை செய்து இருக்கிறார். தக்ஷன் மற்றும் பிரசாந்த் பாடல்கள் எழுத சைந்தவி, சத்யபிரகாஷ், மற்றும் கபில் கபிலன் பாடியிருக்கிறார்கள்.


விக்ரவாண்டி அதன் சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் சென்னையில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. ரிலீசுக்கு தயாராகி இருக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது. விரைவில் டீசர் மற்றும் டிரைலரை படக்குழுவினர் வெளியிட இருக்கிறார்கள்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், இயக்குநர்

 *மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் 'ஜெய் ஹனுமான்' சீக்வலின் ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியாக இருக்கும் நிலையில் ப்ரீ லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது!*




'ஹனுமான்' படத்தின் அமோக வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் பிரசாந்த் வர்மா, மிகவும் எதிர்பார்க்கப்படும் 'ஜெய் ஹனுமான்' படத்தைத் தொடங்க இருக்கிறார். அவரது பிரசாந்த் வர்மா சினிமாடிக் யுனிவர்ஸின் (பிவிசியு) ஒரு பகுதியான இந்தப் படம் அறிவிக்கப்பட்டதிலிருந்து ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் பிரம்மாண்டமாக படத்தைத் தயாரிக்க உள்ளது. 


தற்போது வெளியாகியுள்ள ப்ரீ-லுக் போஸ்டர், பழங்காலக் கோவிலை நோக்கிச் செல்லும் ஹனுமானைக் கொண்டிருக்கும் காட்சிகள் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வசீகரிக்கும் போஸ்டர் தீபாவளிக்கு ஒரு நாள் முன்னதாக நாளை வெளியிடப்படும் பெரிய அப்டேட்டுக்கான எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.


இந்த ஹனுமான் கதாபாத்திரத்தில் யார் நடிக்க இருக்கிறார்கள் என்ற எதிர்பார்ப்பும், யூகங்களும் இப்போதே கிளம்பியிருக்கிறது. 


தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய் ரவிசங்கர் ஆகியோர் தாங்கள் தயாரிக்கும் படத்தின் உயர் தரத்திற்கும் அர்ப்பணிப்பிற்கும் புகழ் பெற்றவர்கள். 'ஜெய் ஹனுமான்' திரைப்படம் உயர் தயாரிப்பு மதிப்புகள் மற்றும் சிறந்த தொழில்நுட்ப தரங்களைக் கொண்டிருக்கும் என்பது உறுதி.

Prasanth Varma, Mythri Movie Makers, PVCU, Much-awaited Sequel

 Prasanth Varma, Mythri Movie Makers, PVCU, Much-awaited Sequel Jai Hanuman First Look Tomorrow, Pre-look Poster Stirred Excitement



Following the overwhelming success of HanuMan, creative director Prasanth Varma is gearing up to launch the highly anticipated sequel, Jai Hanuman. This film, part of his Prasanth Varma Cinematic Universe (PVCU), has captured the imagination of audiences since its announcement. With the leading production house Mythri Movie Makers on board, expectations are soaring for what promises to be a monumental cinematic experience.


The pre-look poster which is out now stirred excitement among fans, featuring the iconic Lord Hanuman walking towards an ancient temple. This captivating poster builds anticipation for a big update which will be unveiled tomorrow, a day prior to Diwali.


As fans eagerly await the announcement of the film’s lead actor, speculation runs rampant about who will portray the revered character of Hanuman.


Producers Naveen Yerneni and Y Ravi Shankar are renowned for their commitment to quality, and their involvement guarantees that Jai Hanuman will feature high production values and top-notch technical standards.

Mura" trailer Promises High-Octane Action & Youthful Grit in a

 *"Mura" trailer Promises High-Octane Action & Youthful Grit in a Thrilling Gangster Drama*




Malayalam cinema is set to experience a thrilling new chapter with "Mura," a captivating gangster drama directed by the acclaimed Muhammed Musthafa, known for his critically acclaimed debut film "Kappela."


The film, starring a fresh and diverse cast including Hridhu Haroon, Suraj Venjaramoodu, Kani Kusruti, and Maala Parvathi, promises a powerful blend of action, drama, and youthful energy.


The story, inspired by real incidents in Trivandrum, delves into the world of a group of youngsters thrust into a high-stakes mission: to vandalize and break open a vault containing black money. Their journey, filled with courage, determination, and a touch of rebellion, unfolds against a backdrop of gangsters and pursuing police.


https://youtu.be/btEgr48QE2I


The film's trailer, released recently, has captivated audiences with its intriguing opening sequence, introducing the four young protagonists and hinting at the high-octane action to come. The cinematography and background score elevate the scenes to another level, creating a visually stunning and suspenseful atmosphere.


"Mura" marks the Malayalam debut of Hridhu Haroon, known for his roles in the Cannes-winning film "All We Imagine As Light," the Amazon web series "Crash Course," the Hindi film "Mumbaikar," and the Tamil film "Thugs." Haroon is set to showcase his acting prowess in a powerful performance as one of the young protagonists, adding another layer of depth and intrigue to the film.


The film features veteran actor Suraj Venjaramoodu, known for his captivating performances in films like "Jana Gana Mana" and "Driving Licence," in the role of a wise and experienced leader. His presence is sure to bring a touch of gravitas and guidance to the film's youthful energy.


"Mura," set to release worldwide on November 8th, 2024, is a film that promises a thrilling and engaging cinematic experience. With its talented cast, compelling story, and masterful direction, "Mura" is poised to captivate audiences and become a landmark film in Malayalam cinema.


Mura movie


Starring : Suraj Venjaramoodu, Hridhu Haroon, Maala Parvathi, Kani Kusruti, Kannan Nayar, Jobin Das, Anujith Kannan, Yedhu Krishna, P.L Thenappan, Vigneshwar Suresh, Krish Hassan, Siby Joseph, Alfred Jose


Movie Credits:


Director : Muhammed Musthafa

Producer : Riya Shibu

Writer : Suresh Babu

Executive Producer : Rony Zachariah

Dop : Fazil Nazer

Editor : Chaman Chakko

Music & Bgm : Christy Joby

Action : Pc Stunts

Singers : Sreenath Bhasi, Vijay Yesudas, Sithara Krishnakumar, Rhyko, Lal Krishna

Lyrics : Anwar Ali, Vinayak Sasikumar

Rap : Rhyko

Art Director : Sreenu Kallelil

Makeup : Ronex Xavier

Costume Designer : Nisar Rahmath

Production Controller : Jith Pirappancode

Vfx : Dtm [ Lavan & Kushan ] , Paperplanetv

Colorist : Liju Prabhakar

Sound Design : Sankaran As, Kc Sidharthan

Sound Mix : Aravind Menon

Chief Associate : Niranjan

Second Unit Cameraman : Afnas V

Pro : Prathish, Yuvraaj

Publicity Designs : Illuminartist, Collins Leophil

Trailer Cut : Praveen Antony [ Offscreen Studios ]

Assistant Promo Editor : Prasanth K

ஆக்சன் திரில்லரில் அசத்தும் முரா டிரெய்லர்

 *ஆக்சன் திரில்லரில் அசத்தும் முரா டிரெய்லர் !!*




*"கப்பேலா" படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் முஹம்மது முஸ்தபா இயக்கத்தில், அதிரடி ஆக்சன் திரில்லர் டிராமாவாக உருவாகியிருக்கும்  "முரா" படத்தின் அசத்தலான டிரெய்லர் வெளியாகியுள்ளது.*



ரகசியமாக பாதுகாக்கப்படும் கருப்பு பணத்தை கொள்ளையடிக்க திட்டமிடும் இளைஞர் குழு, கேங்ஸ்டர், போலீஸ் என பரபரக்கும் சம்பவங்களை  சொல்லும் இப்படம், திருவனந்தபுரத்தில் நடந்த உண்மைச்சம்பவத்தின் அடிப்படையாக வைத்து, திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. 


ஹிருது ஹாரூன், சுராஜ் வெஞ்சரமூடு, கனி குஸ்ருதி மற்றும் மாலா பார்வதி உள்ளிட்ட புதிய இளம் நட்சத்திரங்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். 

https://youtu.be/btEgr48QE2I


படத்தின் மையத்தையும் கதாப்பாத்திரங்களையும் அறிமுகப்படுத்தும் இந்த டிரெய்லர், கேங்ஸ்டர் ஜானரில் ஒரு புதுமையான திரை அனுபவத்தை தரும் என்பதை உறுதி செய்கிறது. 



கேன்ஸ் விருது பெற்ற "ஆல் வி இமேஜின் அஸ் லைட்", அமேசான் வெப் சீரிஸ் "க்ராஷ் கோர்ஸ்", ஹிந்தி திரைப்படம் "மும்பைகார்" மற்றும் தமிழ் திரைப்படமான தக்ஸ் திரைப்படங்களில் நடித்த  ஆகியவற்றில் நடித்ததற்காக அறியப்பட்ட ஹிருது ஹாரூன் இப்படம் மூலம் மலையாளத் திரையுலகில் அறிமுகமாகிறார். "ஜன கண மன" மற்றும் "டிரைவிங் லைசென்ஸ்" படப்புகழ்  நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு மிக மிக முக்கியமான திருப்புமுனைப் பாத்திரத்தில் நடித்துள்ளார்.


மாறுப்பட்ட திரை அனுபவம் தரும் முரா திரைப்படம் நவம்பர் 8, 2024 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது


நடிப்பு : ஹிருது ஹாரூன், சுராஜ் வெஞ்சாரமூடு, மாலா பார்வதி, கனி குஸ்ருதி, கண்ணன் நாயர், ஜோபின் தாஸ், அனுஜித் கண்ணன், யேது கிருஷ்ணா, பி.எல் தேனப்பன், விக்னேஷ்வர் சுரேஷ், கிரிஷ் ஹாசன், சிபி ஜோசப், ஆல்பிரட் ஜோஷெ. 


தொழில் நுட்ப குழு : 

இயக்கம் : முஹம்மது முஸ்தபா 

தயாரிப்பாளர்: ரியா ஷிபு 

எழுத்தாளர்: சுரேஷ் பாபு 

நிர்வாக தயாரிப்பாளர்: ரோனி ஜக்காரியா 

ஒளிப்பதிவு : ஃபாசில் நாசர் 

எடிட்டர்: சமன் சாக்கோ 

இசை  : கிறிஸ்டி ஜாபி 

சண்டைப்பயிற்சி : PC ஸ்டண்ட்ஸ்

கலை இயக்கம் : ஸ்ரீனு கல்லேலில் 

ஒப்பனை: ரோனெக்ஸ் சேவியர் 

மக்கள் தொடர்பு - பிரதீஷ், யுவராஜ்,

நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

 நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் இசை வெளியீட்டு விழா!


























ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில். சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, திஷா பதானி உள்ளிட்டப் பலர் நடிப்பில் நவம்பர் 14 ஆம் தேதி பான் இந்தியா வெளியீடாக திரையரங்குகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் ‘கங்குவா’. இதன் இசை வெளியீட்டு விழா 26.10.2024  சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.


பாடலாசிரியர் விவேகா பேசியிருப்பதாவது, “’கங்குவா’ படம் நிச்சயம் இந்திய சினிமாவின் பெருமையாக இருக்கும். புதிய உலகம் ஒன்றை உருவாக்குவதில் சிவா மிகப்பெரிய வெற்றியை இந்தப் படத்தில் பெற்றுள்ளார். அவரது இன்னொரு முகத்தை பார்த்தேன். சூர்யா சார் தனது நடிப்பின் உச்சத்தை இந்தப் படத்தில் கொடுத்துள்ளார். காலத்திற்கு ஏற்ப புதிய மனிதனாக இந்தப் படத்தில் தன்னை மாற்றியுள்ளார். தேவிஸ்ரீபிரசாத் இசையில் படம் நெருப்பாக வந்திருக்கிறது. தொழில்நுட்பக் கலைஞர்களும் சிறப்பாகப் பணியாற்றியுள்ளனர். படம் மிகப்பெரிய வெற்றியடையும்” என்றார்.


பாடலாசிரியர் மதன் கார்க்கி, “’புஷ்பா2’ படத்திற்கு வசனம் எழுதிக் கொண்டிருக்கும்போதுதான் சிவா சார் என்னை சந்தித்து இந்தக் கதை சொன்னார். இவ்வளவு பிரம்மாணட கதையை சாத்தியமாக்கியது பெரிய விஷயம். தொழில்நுட்பக் கலைஞர்கள் பெரும் உழைப்பைக் கொடுத்துள்ளனர். சூர்யா சாருடன் நெருங்கிப் பழகும் இந்த வாய்ப்பு இதில் கிடைத்தது. மிகப்பெரிய உழைப்பைக் கொடுத்துள்ளார். பாபி தியோலும் சிறப்பாக நடித்துள்ளார். இந்த படத்தில் நான் 3 பாடல்களை எழுதி இருக்கிறேன். நான் எழுதிய பாடல்களைவிட, விவேகா எழுதிய மன்னிப்பு என்கிற பாடல் எனக்கு ரொம்ப பிடித்த பாடல். ’பாகுபலி’ படத்திற்கு வசனம் எழுதிய போது எனக்கு கிடைத்த மகிழ்ச்சி, ரொம்ப நாட்களுக்கு பின் இந்த படத்தில் கிடைத்தது. அந்த படத்தை பார்த்த போது எனக்கு மனதிற்குள் என்ன அதிர்வு இருந்ததோ அந்த அதிர்வு என் மனதிற்குள் இருந்தது. இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த சிவாவிற்கு நன்றி. அவரின் கனவு அடுத்தடுத்த படத்தில் வெளிவரப்போகிறது. ’கங்குவா’ பத்து பாகமாக வரக்கூடிய அளவிற்கு அதில் கதை உள்ளது” என்றார்.


இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ், “நான் ’சூர்யா 44’ படத்தின் படப்பிடிப்பில் இருக்கும்போது சூர்யாவிடம் ’கங்குவா’ படத்தைப் பற்றி அடிக்கடி கேட்பேன். எப்போது படத்தைப் பற்றி பேசினாலும் சூர்யா உற்சாகமடைந்து விடுவார். ’கங்குவா’ படம் முடிந்த பின் கூட அவர் அந்த படத்தின் தாக்கத்தில் இருந்ததைப் பார்க்க முடிந்தது. ’கங்குவா’ படத்தின் ஐந்து நிமிட காட்சியை  சூர்யா என்னிடம் காட்டினார். இந்த படம் நம் அனைவரையும் பெருமைப்பட வைக்கும். இந்திய சினிமாவில் இந்த மாதிரி ஒரு படத்திற்காக நாம் எல்லாரும் பெருமைப்பட வேண்டும். சூர்யா இந்தியாவில் இருக்கும் தலை சிறந்த நடிகர்களில் ஒருவர். ஹாலிவுட் ஸ்டைலில் நாம் படம் எடுக்க வேண்டும் என்று நினைத்து எழுதுவோம். ஆனால், அதை எழுதும்போதே அப்படி எல்லாம் நம்மால் செய்ய முடியாது என்று தோன்றும் ஆனால் கங்குவா படத்தை உலக தரத்தில் உருவாக்கியிருக்கிறார்கள். சூர்யா நடிப்பில் ‘மெளனம் பேசியதே’, ‘காக்க காக்க’ படங்கள் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். ’கங்குவா’ படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்றார்.


நடிகர் கருணாஸ், “சினிமாவிற்கு வந்த இத்தனை வருடங்களில் நான் எந்த இயக்குநருடனும் வேலை செய்யவில்லையே என்று வருத்தப்பட்டது இல்லை. ஆனால், ’கங்குவா’ படப்பிடிப்பு முடிந்ததும், இவருடன் இணையவில்லையே என்று வருத்தப்பட்டேன். டையலாக் பேப்பர் கூட இல்லாமல் ஒரு இயக்குநர் படம் எடுக்கிறார் என்றால் அது சிவா தான் அவருக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள். நான் லொடுக்கு பாண்டியாக நடித்த முதல் படத்தின் ஹீரோ சூர்யா. இவருடன் எப்படியாவது நான்கு வருடத்திற்கு ஒருமுறை ஒரு படத்தில் நடித்துவிடுவேன். நந்தா, பிதாமகன், அயன், சூரரைப்போற்று தற்போது கங்குவா. நான் அவருடன் நடித்த அனைத்துப்படமும் வெற்றிப்படம் தான். வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்கலாம். ஆனால், தன்னுடைய உழைப்பால் உயர்த்தவர் தான் சூர்யா. நான் பலருடன் நடித்து இருக்கிறேன். ஆனால், தன்னுடைய வேலையை நேசித்து செய்யக்கூடியவர் சூர்யா. ’நந்தா’ படத்தில் நான் சூர்யாவை எப்படி பார்த்தேனோ, அதே சூர்யாவை இந்த படத்திலும், எவ்வளவு பெரிய உயரத்திற்கு சென்றாலும் தான் செய்யும் தொழில் மீது அக்கறையுடன் இருக்கிறார். படம் நிச்சயம் வெற்றி பெறும்” என்றார்.


நடிகர் போஸ் வெங்கட், “ஒரு சூப்பர் ஸ்டார் ரசிகர்களை வழிநடத்த வேண்டும். உங்களை மாதிரி வழிநடத்த வேண்டும். உதவி, தர்மம் செய்ய இப்போவே சொல்லி கொடுக்கணும். அனைவருக்கும் படிப்பை கொடுத்துவிட வேண்டும். அதற்கு பிறகுதான் அரசியலுக்கு வரவேண்டும். ஒரு தலைவன் நடிகனாக, எழுத்தாளனாக, டாக்டராக இருக்கலாம். ஆனால் தலைவன் முகம் ரசிகர்களை முட்டாளாக வைத்திருப்பதைவிட அறிவாளியாக வைத்திருக்க வேண்டும். ரசிகனை படிக்க வைக்க வேண்டும். அவனுக்கு அறிவை வளர்க்கணும். பிறகுதான் அரசியலுக்கு வர வேண்டும். அப்படி பார்த்தால் நீங்கள் அரசியலுக்கு வரணும். கமலுக்கு பிறகு நுணுக்கமான நடிகன் சூர்யாதான். நிறைய திருப்திகரமான படங்களை கொடுத்துவிட்ட பிறகு அரசியலுக்கு வரவேண்டும்" என்றார்.


நடிகர் யோகிபாபு, “சிவா சாருடன் ‘வீரம்’ படத்தில் அஜித் சாருடன் பணிபுரிந்தேன். அதன்பிறகு ‘வேதாளம்’, ‘விஸ்வாசம்’ படங்களில் நடித்தேன். ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் சூர்யா சாருடன் ஒரு காட்சி நடித்தேன். பின்பு அவர் சொல்லி ‘கங்குவா’ படத்தில் முழுவதும் நடித்திருக்கிறேன். சூர்யா சார் கடுமையான உழைப்பாளி. என் உடன்பிறந்த சகோதரர்தான். நீங்கள் அடுத்து உலக சினிமாவுக்கும் செல்ல வேண்டும்” என்றார்.


நடிகர், இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி, “நான் காலேஜ் படிக்கும் போது வந்த படம் ’காக்க காக்க’. அந்த படம் தான் சூர்யா சார் நடித்து நான் பார்த்த முதல் படம். அந்த படத்தை தொடர்ந்து ‘பிதாமகன்’, ‘ஆயுத எழுத்து’, ‘கஜினி’ இந்த படங்கள் நான் காலேஜில் படிக்கும் போது பார்த்த படம். இப்படி திரையில் நான் பார்த்து வியந்த ஒருத்தர் தான் சூர்யா. இதே நேரு ஸ்டேடியத்தில் பல நிகழ்ச்சியை நான் தொகுத்து வழங்க இருக்கிறேன். தற்போது சூர்யாவின் 45 திரைப்படத்தை இயக்க இருப்பதை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இதற்கு முக்கிய காரணம் சூர்யா தான். அவர் என் கதையை கேட்டு என்மீது நம்பிக்கை வைத்ததால் தான் இது சாத்தியமானது. அனைவரும் இணையத்தில் What are you cooking bro என்று கேட்குறீர்கள். பயங்கரமாக மாஸாக சமைத்து அடுத்த வருடம் தரப்படும் அதற்கு நான் கேரண்டி. சூர்யா சார் அரசியலுக்கு வரவேண்டும் என்று போஸ் வெங்கட் சார் சொன்னார். அவரின் இந்த கருத்தில் எனக்கு ஒரு கருத்து இருக்கிறது. நான் சூர்யாவின் ரசிகன் என்பதால் இதை இந்த இடத்தில் பதிவு செய்கிறேன். ஒரு அரசியல்வாதி என்பது வெறும் தேர்தலில் நிற்பது மட்டுமில்லை. ஒரு தெருவில் மரம் விழுந்து, அதை நான்கு பேராக சென்று எடுத்துப் போட்டால் அவர் தான் அரசியல்வாதி. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று சின்ன சின்னதாக நல்லது செய்தால் அவரும் அரசியல்வாதிதான். அந்தவகையில் சூர்யா சார் அரசியல்வாதியாக மாறி ரொம்ப வருஷம் ஆகிறது. இந்த அரசியலே உங்களுக்கு போதும் சார். மாற்றம் அறக்கட்டளை மூலமாக பல பேரை படிக்கவைத்து 25 வருடத்திற்கு முன்பே அரசியலுக்கு வந்துவிட்டார். இந்த அரசியலே அவருக்கு போதுமானது” என்றார்.


இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத், “சூர்யா மிகச்சிறந்த நடிகர். இந்த மாதிரியான படத்தில் பணியாற்ற அனைத்து டெக்னீஷியன்களுக்கும் ஆசை இருக்கும். அது எனக்கு இதில் நிறைவேறியிருக்கிறது. எவ்வளவுதான் படத்தில் டெக்னீஷியன்கள் வேலை செய்தாலும் ஒரு கதாநாயகன் தான் அந்தப் படத்தின் முகம். சூர்யா அனைவரையும் சமமாக மதிப்பவர்” என்றார்.


நடிகர் கார்த்தி, “எனது அண்ணன் சூர்யா சினிமாவில் நடிக்கச் சென்றபோது நடிக்கத் தெரியலனு சொன்னாங்க, ஆடத்தெரியலனு சொன்னாங்க, ஃபைட் பண்ணத் தெரியலனு சொன்னாங்க, நல்ல உடல் இல்லைனு சொன்னாங்க. எனக்குத் தெரியும் காலையில 3 மணி நேரம் ஃபைட் கிளாஸ், மாலையில் 3 மணி நேரம் டான்ஸ் கிளாஸ் போனார். ’ஆயுத எழுத்து’ படத்தில் நான் வேலை செய்தபோது அதில் சண்டைக் காட்சிகளில் ஃபைட்டர் மாதிரி சண்டை செய்தார். இன்றைக்கு அனைத்து ஜிம்களிலும் அண்ணனின் படம் இருக்கு. எல்லா பசங்களும் ஹெல்த்தை சீரியஸா எடுத்துக்க அண்ணன் காரணமாக இருக்காரு. எதெல்லாம் நெகடிவ்னு சொன்னங்களோ, அதை எல்லாத்தையும் தன் உழைப்பால் மாற்றிக்காட்டியவர். உழைத்தால் முன்னேறலாம் நினைத்த இடத்தை அடையலாம் என்பதற்கு அண்ணனைத் தவிர, சிறந்த எடுத்துக் காட்டு யாரும் இல்லை. படத்தின் ஆர்ட் டைரக்டர் மிலன் சார், நீங்க இங்க இருந்து இருக்கனும் சார். நான் உதவி இயக்குநராக இருந்தபோது, அவர் உதவி ஆர்ட் டைரக்டர். அவரது உழைப்பு எனக்கு தெரியும். ’கங்குவா’ படத்திற்காக அவர் உருவாக்கியுள்ள உலகம் காலத்திற்கும் பேசப்படும். அவர் இங்கு இல்லை என்பது எனக்கு வருத்தமாக உள்ளது. சிவா சார் ‘கங்குவா’ படத்தை பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ளார். படம் நிச்சயம் வெற்றிப் பெறும்” என பேசினார்.


வீடியோ மூலம் இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பேசி, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா உள்ளிட்ட படக்குழுவினருக்கு தன்னுடைய வாழ்த்துக்களை பகிர்ந்துக் கொண்டார். மேலும் அவர் பேசியதாவது, “நான் முன்னதாக இயக்குநர் சிவாவிடம் தனக்காக ஒரு பீரியட் படம் செய்யும்படி கேட்டபோது அவரும் சரி என்று சொன்னார். அப்படி பார்த்தால், ’கங்குவா’ படம் எனக்காக தயார் செய்யப்பட்ட படமாக இருக்கலாம். இந்தப் படத்தை அடுத்து சிவா எனக்காகவும் இதுபோன்ற ஒரு கதையை உருவாக்குவார். வித்தியாசமான கதைகளை தயாரிப்பதில் ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா மிகுந்த விருப்பம் உடையவர். இந்த ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க அவர் கேட்டபோது, ஷூட்டிங்கில் இருந்ததால் என்னால் பங்கேற்க முடியவில்லை. இயக்குநர் சிவாவுடன் ’அண்ணாத்த’ என்ற ஒரு படத்தில்தான் பணியாற்றினேன். ஆனால், 20, 30 படங்களில் பணியாற்றியது போன்ற நெருக்கம் அவருடன் ஏற்பட்டிருக்கிறது. சூர்யாவின் கண்ணியம், ஒழுக்கம் நேர்மை அனைவருக்கும் தெரிந்ததே! அவரை போன்ற ஒருவரை யாராலும் பார்க்க முடியாது. சூர்யா வித்தியாசமான படங்களில் நடிக்க மிகுந்த ஆர்வம் கொண்டவர். அவரது விருப்பப்படியே ’கங்குவா’ படம் அமைந்துள்ளது. படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்றும் கூறியுள்ளார்.


விழாவில் பேசிய இயக்குநர் சிவா, "’கங்குவா’ படத்தை இரண்டு வருடங்கள் எடுத்தோம். அந்த காலத்தில் சூர்யாவுடன் பழகுவதற்கான அற்புத வாய்ப்பை இறைவன் கொடுத்ததற்கு நன்றி. நூறு சதவீதம் கொடுத்திடலாம் என்று 100 தடவை சூர்யா என்னிடம் சொன்னார். நான் அவரை ரொம்ப கஷ்டப்படுத்தி இருக்கேன். ஆனால் அதை சலிக்காமல் செய்தார். கங்குவா கதாபாத்திரம் நடிப்பதற்கு மன ரீதியாகவும், உடல்ரீதியாகவும் பலம் தேவை. அதை மிகச்சிறப்பாக செய்தார் சூர்யா. சிறுத்தை சிவா என்ற அடையாளத்தை ஞானவேல் ராஜா எனக்கு கொடுத்தார். அடுத்த 15 வருடங்களுக்கு ’கங்குவா’ எனது கரியரில் பெஸ்ட்டாக அமையும் என்று நம்புகிறேன். என்னுடைய அப்பா இப்போது உயிரோடு இல்லை. அவர் இருந்திருந்தால் நிறைய சந்தோஷப்பட்டிருப்பார். எனது மனைவி இதுபோன்ற விழாக்களுக்கு வரமாட்டார். சண்டை போட்டு அவரை வரவைத்தேன். ’கங்குவா’ படத்திற்கு ஒப்பந்தமான பிறகு, கண்டிப்பாக இரண்டு வருடங்கள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் கஷ்டப்படுவேன் என்று தெரிந்தது. அந்தச் சமயத்தில் என்னையும், எனது குடும்பத்தையும் மனைவிதான் சந்தோஷமாக பார்த்துக்கொண்டார். அவருக்கு நன்றி.

இந்தப் படம் அருமையாக இருக்கிறதாக இதுவரை பார்த்தவர்கள் சொல்லியிருக்கிறார்கள். கமர்ஷியலாக படம் பண்ணிக்கொண்டிருந்தவன் நான். அது சாதாரண விஷயம் இல்லை. ஏனெனில் மக்களுக்கு பிடித்த மாதிரி படங்கள் செய்வது சாதாரண விஷயமில்லை. இந்த மாதிரியான ஒரு படம் பண்ணலாம் என்று ஆசைப்பட்டபோது அந்த ஆசைக்கு அடித்தளம் என்னுடைய நண்பர், வழிகாட்டி, எனக்கு கிடைத்த மிகப்பெரிய வரமாக நினைக்கக்கூடிய அஜித் சாரிடம் இருந்துதான். இத்தனை பேரின் அன்பை சம்பாதித்து வைத்திருக்கும் அஜித் அவரின் நம்பிக்கையை என்னிடம் வைத்தார். சிவா நீ இருக்கக்கூடிய உயரம் இது இல்லை. உனக்கு சினிமாவில் எல்லாமே தெரியுது. நீ சிறகடித்து பறக்க வேண்டும். வானம் மொத்தம் உனக்கு என்று சொன்னார். கங்குவா திரைப்படம் அழகான முயற்சி, கடுமையான உழைப்பு. இதற்கு இறைவன் கண்டிப்பாக பலன் கொடுப்பார்" என்றார் .


கதையின் நாயகன் நடிகர் சூர்யா பேசியதாவது, “அப்பாவிற்கு மரியாதை கொடுத்து, எங்கள் அனைவருக்கும் வாழ்த்து கூறிய சூப்பர் ஸ்டாருக்கு நன்றி. ரசிகர்களுடைய  27 வருட அன்பிற்கும் வாய்ப்பு கொடுத்த என்னுடைய அனைத்து இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு நன்றி. ஞானவேல் தாய்வீடு மாதிரி. அவரிடம் இருந்து தான் நிறைய விஷயங்கள் தொடங்கின. கார்த்தி நடிக்க தொடங்கியதற்கு ஞானவேல் தான் காரணம். என்னுடைய படிக்கட்டு பெரிதாவதற்கும், அடுத்த பாய்ச்சல் பாய்வதற்கும் எப்போதும் ஞானவேல் காரணமாக இருந்துள்ளார். எப்போதும் மார்க்கெட்டை விட பெரிதாக செய்வதற்குத் தயாராக இருப்பார். பாபி என்னுடைய உடன்பிறக்காத சகோதரர். அவரை நான் நிறைய சைட் அடித்திருக்கிறேன். அவர் நடித்ததால், இந்தப் படம் பான் இந்தியா படம் ஆகியிருக்கிறது. யோகி பாபு நல்ல அறிவான நடிகர். தமிழ் வளர வேண்டும் என்று நினைத்து மதன் கார்க்கியும், அவரது நண்பர்களும் நிறைய வேலை செய்கின்றனர்.

சினிமா வெறும் பொழுதுபோக்கு மட்டும் அல்ல. அது ஒரு குரல். அதனால், சினிமாவை நாம் நிச்சயம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். 27 ஆண்டுகளுக்குப் பிறகு, சிவா எடுத்து வந்த இந்த பொக்கிஷத்தில் இருக்கும் காட்சிகள் மிகவும் புதியதாக இருக்கும். தமிழ் சினிமாவை முன்னெடுத்துச் செல்லும் அத்தனை உழைப்பையும் இந்தப் படத்தில் நாங்கள் அனைவரும் போட்டிருக்கிறோம். 107 நாள்கள் எப்படி போனது என்றே தெரியவில்லை.


இந்த படம் பெரிய தலைவாழை விருந்து. மேலும் மலை உச்சியில் இருக்கும் கொம்புத் தேனாகவும், எட்டாக்கனியாகவும் பார்க்கலாம். நல்லதே நடக்கும், என் மனதை புண்படுத்தும் சக்தியை யாருக்கும் தரமாட்டேன். மன்னிப்பு ஒரு அழகான விஷயம் என்பதை எனக்கு சிவா கற்றுக்கொடுத்தார். அதை நான் உங்களுக்குத் தருகிறேன். தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு நேரத்தை வீணாக்க வேண்டாம். என்ன வெறுப்பைக் கொடுத்தாலும், அன்பை மட்டும் பரிமாறி உயர்வோம்.


சூரியன் மேலேயே இருந்தால் புது நாள், புது வளர்ச்சி கிடைத்திருக்காது. அதுமாதிரி தான் என்னுடைய ஏற்ற, இறக்கங்களை பார்க்கிறேன். ரசிகர்களுடைய அன்பை என்னுடைய அம்மாவின் அன்பு மாதிரி பார்க்கிறேன். உதயநிதி ஸ்டாலின் என்னுடைய காலேஜ் ஜூனியராக இருந்தாலும் 'பாஸ்' என்று கூப்பிடுவேன். அவர் என்னை வைத்து இரண்டு படங்கள் எடுத்திருக்கிறார். இப்போது துணை முதலமைச்சராக ஆகியிருக்கிறார். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். அவரை எப்பவுமே எளிதாக அணுகலாம். என்னுடைய இன்னொரு நண்பர் ஒருவர் இருக்கிறார். விஜய் புதிய பயணத்திற்காக புதிய பாதை போட்டிருக்கிறார். அவருடைய வரவும் நல்வரவாக இருக்கட்டும்" என்றார்.

தமிழ்த் திரைப்படப் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தீபாவளி

 தமிழ்த் திரைப்படப் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தீபாவளி விழாவில் மூத்த செய்தியாளர்களை கவுரவித்த அமைச்சர்! 

Click here to watch videos:

https://youtube.com/shorts/mwQ0VNNZAvg?si=pAPyjQ0E0FevQqKv

https://youtube.com/shorts/QkmJ2nL5lcY?si=5s10lpXpgT5bmZzp

https://youtu.be/Umq3na0zjSs?si=X_-MnSuyo5L8YakO

https://youtu.be/Ov16ZRVzfPw?si=m6F8VU6Lz8fN9eaM

TMJA Diwali Event Videos











தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தீபாவளி திருவிழா(2024)  நேற்று  மாலை ,மிகப் பிரம்மாண்டமாகவும் கோலாகலமாகவும் நடந்தது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக மாண்புமிகு ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் டாக்டர் திரு.மதிவேந்தன் அவர்கள் மற்றும் இந்த வருடத்தின் மிக பெரிய வெற்றி பெற்ற லப்பர் பந்து பட ஹீரோ ஹரிஷ் கல்யாண் இருவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.  இந்த நிகழ்வில், மூத்த பத்திகையாளர்கள் , கங்காதரன், தேவி மணி, திரை நீதி செல்வம் ஆகியோருக்கு பாராட்டும் பரிசும் வழங்க பட்டது .



நிகழ்ச்சியின் துவக்கமாக தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டு முதன்மையாக வரவேற்பு உரை செயலாளர் கோடங்கி ஆபிரகாம் மற்றும் தலைவர் கவிதா உரையுடன் விழா இனிதே துவங்கப்பட்டது. பத்திரிகை துறையின் மூத்த நிருபரான திரு கங்காதரன் அவர்களுக்கு சங்கம் சார்பில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நினைவு பரிசு மற்றும் காசோலை கொடுத்து கௌரவித்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் 2024 ஆம் ஆண்டு தீபாவளி சிறப்பிதழை மாண்புமிகு அமைச்சர், திரு மதிவேந்தன் அவர்கள் வெளியிட நடிகர் ஹரிஷ் கல்யாண் பெற்றுக் கொண்டார். 


சிறப்பிதழை பெற்றுக்கொண்டு நடிகர் ஹரிஷ் கல்யாண் பேசுகையில் 


இதற்கு முன்பு இந்த மேடையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு, இசை வெளியீட்டு விழா உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு தான் பேசியிருக்கிறேன். முதல்முறையாக பத்திரிகையாளர்களுக்கு ஒரு விழா அதில் நான் கலந்து கொண்டது பெருமையாக நினைக்கிறேன். உங்கள் கையெழுத்து தான் எங்களின் தலையெழுத்து. என்னைப் போன்ற எத்தனையோ நடிகர்களையும் தொழில்நுட்ப கலைஞர்களையும் பல உயரங்களுக்கு கொண்டு சென்றவர்கள் நீங்கள். சமூகத்தின் மிகப்பெரும் தூண் நீங்கள் தான். பல மூத்த அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர்களை இன்று நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக கங்காதரன் சாரை இன்று நேரில் சந்தித்தது மட்டுமின்றி அவரை கௌரவிக்கும் பொறுப்பு எனக்கு கிடைத்தது பெருமையாக நினைக்கிறேன். இரண்டு வருடங்களுக்கு முன்பு என்னுடைய திருமண அறிவிப்பையும் திருமண நிகழ்வையும் இங்கு தான் நடத்தினேன். அதே திருமண நாளில் இன்று இந்த தீபாவளி நிகழ்வில் கலந்து கொள்வதை மகிழ்வாகவும் பெருமையாகவும் நினைக்கிறேன்.  தொடர்ந்து உங்களுடைய  ஆதரவை எனக்கு கொடுத்து உதவுங்கள். அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் என தனது உரையை நிறைவு செய்தார் நடிகர் ஹரிஷ் கல்யாண். 


தொடர்ந்து அமைச்சர்  டாக்டர் திரு மதிவேந்தன் அவர்கள் பேசுகையில் 


அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். தம்பி ஹரிஷ் கல்யாண்க்கு திருமண நாள் நல்வாழ்த்துக்கள். இதற்கு முன்பு பொங்கல் விழாவுக்கு என்னை அழைத்திருந்தார்கள். இப்போது  போங்கள் நான் தீபாவளிக்கு கலந்து கொள்கிறேன் எனக் கூறியிருந்தேன். ஏனெனில் மூன்றாவது முறையாக ஒரு துறைக்கு பொறுப்பு கொடுத்து என்னை கழகம் அமர்த்தி இருக்கிறது. இதற்கு முன்பு சுற்றுலாத்துறை, அடுத்து வனத்துறை, தற்போது ஆதிதிராவிட பழங்குடியினர் நலவாழ்வுத்துறையைக் கவனித்து வருகிறேன். அதனாலயே பொறுப்புகளுக்கு மரியாதை கொடுத்து தொடர்ந்து பணியாற்றும் நிலை இருக்கிறது. எனவேதான் தீபாவளிக்கு வருகிறேன் எனக் கூறியிருந்தேன். ஆனால் தவறாமல் இந்த தீபாவளிக்கு என்னை அழைத்தார் திருமதி. கவிதா. நிரந்தர தலைவியாக ஒருவர் இத்தனை காலமும் ஒரு சங்கத்தை வழிநடத்திச் செல்வது அவ்வளவு சுலபமல்ல. ஆனால் உறுப்பினர்களான நீங்கள் தொடர்ந்து ஒருவரை முன்னிறுத்தி அவரையே தலைவியாக ஏற்றுக் கொண்டு சங்கத்தை திறம்பட செயல்படுத்துகிறீர்கள் எனில் அதுவே அவரது கடின உழைப்பை காட்டுகிறது. பத்திரிகையாளர்கள் அவ்வளவு சாதாரணமானவர்கள் அல்ல வெயில், மழை எதையும் பாராமல் கொரோனா  போன்ற உயிருக்கே ஆபத்தான நிலையிலும் கூட தனது உயிரைப் பற்றி கவலைப்படாமல் பணியாற்றுபவர்கள். அவர்களின் நிகழ்வில் கலந்து கொண்டது மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னதான் அரசியல் பணியில் ஈடுபட்டிருந்தாலும் தொடர்ந்து எல்லா படங்களையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்த திரைப்படங்கள் பலவும் பார்த்திருக்கிறேன். ஒழுக்கமும், கடின உழைப்பும் இருந்தால் ஒரு துறையில் சரியான இடத்தைப் பிடித்து உயரலாம் என இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார் நடிகர் ஹரிஷ் கல்யாண். உங்களின் அத்தனை படங்களும் பார்த்திருக்கிறேன் ..நல்ல கதைகளை தேர்வு செய்து மிகவும் அற்புதமாக நடித்து வருகிறீர்கள். நீங்கள் சினிமாத்துறையில் மென்மேலும் வளர வாழ்த்துக்கள். பத்திரிகையாளர்கள் நிகழ்வு என்றவுடன் நிச்சயமாக எப்படியாவது இந்த நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும் என திட்டமிட்டு விட்டேன். காரணம் எங்களது கழகத் தலைவர் கலைஞர் ஐயா எப்போதும் தன்னை கழகத்தின் தலைவர் என்பதற்கு முன் ,தன்னை முதலில் பத்திரிகையாளர் என்றுதான் அடையாளப்படுத்திக் கொள்வார். அவர் வழித்தோன்றல்களான நாங்களும் நிச்சயம் பத்திரிக்கையாளர்களுக்கு முதலிடம் கொடுப்போம். பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் தொடர்ந்து உங்கள் பணி சிறக்கட்டும்' என  வாழ்த்தினார் . நிருபர்களின்  சில கேள்விகளுக்கு மகிழ்வூட்டும் விதமாகவும்  கலகலப்பாகவும் பேசி தனது உரையை நிறைவு செய்தார் அமைச்சர்  டாக்டர் திரு மதிவேந்தன் அவர்கள். 


நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக மாண்புமிகு அமைச்சர் திரு மதிவேந்தன் அவர்கள் திருமண நாள் கொண்டாடும் நடிகர் ஹரிஷ் கல்யாண்க்கு பட்டாடைகளை , பரிசு கொடுத்து மேடையில் சிறப்பு சேர்த்தார்.  மேலும் தீபாவளி மலர்,  சிறப்பாக உருவாகக் காரணமாக இருந்த உறுப்பினர்களுக்கும் , மற்றும் விளம்பரங்கள் பெற்றுத் தந்த உறுப்பினர்களுக்கும் அமைச்சர் கையால்  கௌரவிக்க ப்பட்டனர். மேலும் நிகழ்ச்சியின் நிறைவாக , சங்க உறுப்பினர்களுக்கு  நல்லெண்ணை முதல் ஸ்வீட்ஸ் பாக்ஸ் வரை 8 பொருட்கள் அடங்கிய ,, தீபாவளி பரிசுத்தொகுப்பு கொடுக்கப்பட்டு , இரவு உணவோடு விழா இனிதே நிறைவுற்றது.

நடிகர் ராகவா லாரன்ஸ் தனது பிறந்த நாளை

 நடிகர் ராகவா லாரன்ஸ் தனது பிறந்த நாளை முன்னிட்டு,  விதவைப்  பெண்களுக்கு இலவச தையல் மெஷின்களை வழங்கினார். !!



விதவைப் பெண்களுக்கு, இலவச தையல் மிஷின்களை வழங்கிய நடிகர் ராகவா லாரன்ஸ்!!.


தமிழின் முன்னணி நட்சத்திர நடிகர் ராகவா லாரன்ஸ்,  தன் உதவும் குணத்தால் மக்கள் மத்தியில் பிரபலாமானவர். இதுவரையில் பல எளிய மக்களுக்கு தனிப்பட்ட முறையில் பல  உதவிகள் செய்து வந்துள்ளார், சில மாதங்களுக்கு முன்பு “மாற்றம்” எனும் பெயரில் புதிய அறக்கட்டளை துவங்கி, பல ஊர்களுக்கு தானே நேரில் சென்று, பல டிராக்டர்களை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கியுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.


அந்த ஊர்களில் உள்ள விதவை தாய்மார்கள் தங்களுக்கு தையல் மிஷின் வழங்கினால் நாங்கள் அதை வைத்து எங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்வோம் என்று கேட்டிருந்ததைத் தொடர்ந்து, தானும் வாங்கித் தருவதாக வாக்குறுதி அளித்திருந்தார்.


அதனை செயல்படுத்தும் விதமாக நாளை அக்டோபர் 29ஆம் தேதி தனது பிறந்த நாளை முன்னிட்டு,   அந்த விதவை தாய்மார்களுக்கு தான் சொந்த செலவில் தையல் மெஷின்களை, இன்று தனது வீட்டிற்கு நேரில் வர வைத்து வழங்கி, அவர்களை நெகிழவைத்துள்ளார்.


Pro.புவன் செல்வராஜ்

( 28.10.2024 )

Monday, 28 October 2024

Faces Foundation & Chaanv Foundation சார்பில் இந்தியா முழுவதும் ஆசிட்

 Faces Foundation & Chaanv Foundation சார்பில் இந்தியா  முழுவதும் ஆசிட் வீச்சுக்கு (Acid Attack Victim)








 பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சிகிச்சை அளித்தும். தன்னம்பிக்கையுடன் செயல்பட அவர்களுக்கு  அழகுசாதன நிபுணர்களாகவும் மற்றும் இதர ஒப்பனை அம்சங்களில் பயிற்சி அளிக்கப்பட்டு, வேலை வாய்ப்பையும் ஏற்ப்படுத்தி கொடுக்கும் நிகழ்வு சென்னையில் நடைப்பெற்றது அதில் நடிகர் விஷால் கலந்துக்கொண்டு அவர்களை ஊக்குவிக்கும் விதமாய் அனைவருக்கும் உணவளித்து அவர்களுடன் உணவுண்டு மகிழ்ந்து அவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவப்படுத்தினார்.