Featured post

Jio Studios, A for Apple, and Cine 1 Studios Release Trailer of the Highly Anticipated ‘Baby John’

 *Jio Studios, A for Apple, and Cine 1 Studios Release Trailer of the Highly Anticipated ‘Baby John’ – Starring Varun Dhawan, with Massive F...

Saturday, 31 August 2024

Virunthu Movie Review

 virunthu tamil movie review 

Hi மக்களே  இன்னிக்கு  action king Arjun od padam  virundhu தான்  பாக்க  போறோம் . 29 aug அன்னிக்கு  release ஆனா  இந்த  படத்துல  Arjun, nikki kalrani,  Gireesh Neyyar and Aju Varghese லாம்  நடிச்சியூர்க்காங்க . Varal, udambu, vidhi the verdict, pattabhiram போன்ற  பல  hit மலையாள  படங்களை  குடுத்த  Kannan tamarakulam தான்  இந்த  படத்தை  direct பண்ணிருக்காரு .  இது  ஒரு  bilingual படமா  release ஆயிருக்கு . இந்த  படத்தை  Malayalam ல  virunnu னு  title வச்சிருக்காங்க . Arjun க்கு  இது  Malayalam cinema ல  நாலாவுது படம் . 

So வாங்க  இந்த  படத்தோட  கதை  என்னனு  பாப்பபோம் . berley அ நடிச்சிருக்க  Nikki kalrani   jon அ வர mukesh ன்ற பெரிய  businessman ஓட  பொண்ண  இருக்காங்க. jon ஓட  business ஒரு  பெரிய  loss ல போயிடு இருக்கும் போது finiancial advisor devanarayanan அ வர arjun கிட்ட help கேட்குறாரு. devanarayanan ஓட advise படி எல்லாத்தயும் சேரி பண்ணிட்டு கொஞ்சம்  கொஞ்சம்  அ  நல்ல  நிலைமை  க்கு  வருது. அப்போ  sudden அ ஒரு சிலவங்க இவரை தொரத்துறாங்க. அண்ட் இவரு ஒரு ஆத்துல விழுந்து  இறந்துடுறாரு . இவரோட body நாலு நாள் கழிச்சு கிடைக்குது. ஆனா autopsy பண்ணும் போது இவரு இறந்து அஞ்சு நாள் ஆச்சு னு வெளி வரும்போது இந்த கேஸ் இன்னும் விறுவிறுப்பா போகுது.   என்னதான்  இவரோட  கொலையா  police investigate பண்ணலாம் , இவரு  எப்படி  இறந்து  போறாரு  ன்றதே  ஒரு  பெரிய  mystery அ  இருக்கு. jon இறந்தநாளா இவரையோட wife elisabeth 

அ வர sona nair business அ take over பண்றங்க. இவங்களும் devanarayan ஓட advise படி நடந்து business ஓரெழுவுக்கு profit பாக்குது.  கொஞ்சம்  நாள்  கழிச்சு இவங்க  ஒரு  பெரிய car accident ல  இறந்து  போய்டுறாங்க. இந்த accident அ நேர்ல பாக்கறாரு ஆட்டோ டிரைவர் ஆனா krish neyyar . இவருகிட்ட elisabeth ஒரு secret சொல்ராங்க. அடுத்த நாலு ல இவரோட தங்கச்சி க்கு கல்யாணம் என்ன பண்றது னு தெரியாம இருக்கும் போது இவரோட friend கிட்ட சொல்லுறாரு. இவரோட friend பிரச்னை வேண்டாம் அமைதியா இரு னு சொல்லிடற.   ஒரே family ல சேந்த ரெண்டு பேரும் இறந்து போறனாள இது ஒரு வேலை கொலை யா இருக்குமோ னு சந்தேகம் வருது.  இதோட  இந்த  problem நிக்கல . ஒரு  group nikki kalrani அ  போட்டு  தள்ளுறதுக்கு  தொரத்திக்கிட்டு  வராங்க . இங்க பாலா வ வர baiju sandhosh இந்த பொண்ண காப்பாத்தி விட்டுடுறாரு. அதுக்கு அப்புறம் auto driver krish அ யும் மீட் பன்றாரு. இப்போ தான் elizabeth சொன்னதை சொல்லுறாரு. இதுக்கு எல்லாம் காரணம் elumalai னு சொல்லும் போது ரெண்டு பேருக்கும் ஏழுமலை யாருன்னே தெரில.  nikki அ safe அ இன்னொரு இடத்துக்கு அனுப்பும் போது அங்க அதே gang பிரச்சனை பண்ணுது.  இங்க  தான்  Arjun entry கொடுக்கறாரு . இவங்க  கூட  வெறித்தனமா  சண்டை  போட்டு  nikki kalrani  அ காப்பதிட்றாரு. இவங்கள  தன்னோட  வீட்ல   தங்க  வைக்கிறாரு  Arjun. ஒரு  கட்டத்துல  Arjun அ  கொலை  பண்ண  try பண்றங்க  nikki. Nikki kalrani ஓட  parents ஏன்  இறந்துபோய்டுறாங்க ? யாரு  elumalai? Nikki kalraniya எதுக்கு  Arjun காப்பாத்துறாரு ? Nikki எதுக்கு  Arjun அ  கொலை  பண்ண  try பண்றங்க  ? ன்ற  பல  கேள்விக்களுக்கு  பதில்  தான்  virunthu. 

Arjun ஓட  நடிப்பை  பத்தி  சொல்லவே  வேண்டாம் . அவரோட  action sequences, body language னு  அவரோட  style ல எப்பவுமே  அசத்துவார் . இந்த  படத்துலயும்  nikki யா  கெட்டவங்க  கிட்ட  இருந்து  காப்பாத்துறது , இவங்களோட  parents எப்படி  இறந்தாங்க  ன்றது  investigate பண்றது  னு  இவரோட  acting அ  பாக்கறதுக்கு  ரொம்ப  interesting அ  இருக்கு . Nikki kalrani ஓட  நடிப்பு  ரொம்ப  எதார்த்தமா  நல்ல  நடிச்சிருக்காங்க . தண்ணனோட  parents மர்மமான  முறை i ல  இறக்கறதும்  , ஒரு  group இவங்கள  தொரத்தும்  பொது  இவங்களோட  confusion, பயம் , னு  எல்லா  emotions யும்  realistic அ  கொண்டு  வந்திருக்காங்க  னு  தான்  சொல்லணும் . ஆட்டோ driver அ வர krish தான் இந்த படத்துக்கு producer . இவரோட scenes கம்மியா இருந்தாலும் இவரோட presence இந்த ஸ்டோரி க்கு strong அ இருக்கு. இவங்கள தவிர supporting actors அ வர harish , aju varghese , dharmajan bholkatti , baiju santhosh னு எல்லாரோட நடிப்பும் நல்ல இருக்கு.   

Suspense, mystery, crime னு  எல்லா  aspects யும்  வச்சு  ஒரு  மிரட்டல்  ஆனா  கதை  யா  கொண்டு  வந்திருக்காரு  kannan tamarakulam. First half ரொம்ப  விறுவிறுப்பா  போகுது  and second half கொஞ்சம்  slow ஆனாலும்  கதை  ஓட  சுவாரஸ்யம்  கொஞ்சம்  கூட  குறையல  னு  தான்  சொல்லணும் . Rathish vega and sanadh George ஓட  music இந்த  படத்துக்கு  பக்க  பழமை  இருக்கு . pradheep அண்ட் ravichandran ஓட cinematography பழைய மலையாள படங்கள் ஓட picturisation எப்படி இருக்குமோ அதே மாதிரி ஸ்டைல் ல எடுத்துட்டு வந்திருக்காங்க. 


சோ ஒரு நல்ல mystery ஆனா ஒரு suspense  story  அ பாக்கணும்னா இந்த படத்தை miss  பண்ணிடாதீங்க.

Shruti Haasan Practices Martial Arts and MMA During

 *Shruti Haasan Practices Martial Arts and MMA During "Coolie" Shoot*

Shruti Haasan, known for her dedication to fitness, has been incorporating Martial Arts and Mixed Martial Arts (MMA) into her routine while shooting for her upcoming film, "Coolie." Shruti's commitment to staying fit is unwavering, and she ensures that her workout regime is never compromised, even amidst a hectic shooting schedule.

Recently, the actress shared a video on her social media, showcasing her martial arts skills. Interestingly, Shruti is practicing the same martial art form that her father, the legendary actor Kamal Haasan, performed in the iconic film "Thevar Magan."

கூலி' படத்தின் படப்பிடிப்பிலும் தற்காப்பு

 *'கூலி' படத்தின் படப்பிடிப்பிலும் தற்காப்பு கலை பயிற்சியில் ஈடுபடும் ஸ்ருதிஹாசன்*

உடற் தகுதியை நேர்த்தியாக பராமரிப்பதில் அர்ப்பணிப்புடன் செயல்படுவதாக அறியப்படும் நடிகை ஸ்ருதிஹாசன், தற்போது அவர் நடித்து வரும் 'கூலி' திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்தாலும்.. தற்காப்பு கலை மற்றும் ஒருங்கிணைந்த தற்காப்பு கலைக்கான ( மிக்ஸ்ட் மார்சியல் ஆர்ட்ஸ்) பயிற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அவரது இந்த முயற்சி... அவரின் அசைக்க முடியாத நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. மேலும் பரபரப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வரும் தருணத்திலும் தன்னுடைய உடற்பயிற்சி முறையில் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் இருப்பதையும் காண முடிகிறது. 

சமீபத்தில் நடிகை சுருதிஹாசன் தன்னுடைய சமூக ஊடகத்தில், தான் பயிற்சி பெற்று வரும் தற்காப்பு கலை தொடர்பான திறன்களை வெளிப்படுத்தும் காணொளியை பகிர்ந்திருந்தார்.  இது தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடும்போது, '' எனது தந்தையும், பழம்பெரும் நடிகருமான கமல்ஹாசன் 'தேவர் மகன்' படத்தில் நிகழ்த்திய அதே தற்காப்பு கலையைத் தான் பயிற்சி செய்து வருகிறேன்'' என தெரிவித்திருக்கிறார்.

The 5th Annual Symposium of Neurocritical Care Society

 The 5th Annual Symposium of Neurocritical Care Society of India (NCRI) will be held in Chennai from 30th August to 1st September. This consultation is being conducted by Kaveri Hospital, Chennai Radial Road, in association with NCRI.




NCRI's main objective is to promote evidence-based treatment of neurological diseases. NCRI continues to strive to advance the field of neurology, improve the health of patients and provide them with multidisciplinary care. NCRI strives to provide best clinical practice by reviewing current scientific advances in the field of neurology in consultation with other clinical disciplines. NRCI focuses on education, research, patient safety, multidisciplinary care, innovative and multi-disciplinary clinicians, etc.


Dr. Ponnaiah Vanamurthy, President, Neurocritical Care Society of India, highlighted the clinical merits of modern advances in the treatment of stroke, head injury and other serious neurological diseases.


Dr. MJ University Chancellor Dr. Narayanasamy inaugurated the 5th Annual Symposium of Neurocritical Care Society of India. Dr. K. Sridhar, Secretary, Neurocritical Care Society of India, who was the special guest, shared his joy about joining the Neurocritical Care Society of America for the first time.


15 international neurologists from different countries are participating in this seminar. In this, a pre-consortium workshop on Advanced Monitoring in Neurotherapy has been organized. 400 eminent doctors and neurotherapists from all over the world are participating in the first ever Neurocritical Care Society of India Symposium in Chennai. The seminar is organized around the theme "Emerging Trends, Expanding Opportunities, Changing Perspectives".

நியூரோக்ரிட்டிகல் கேர் சொசைட்டி ஆஃப் இந்தியாவின் (NCRI) 5 ஆம் ஆண்டு

 நியூரோக்ரிட்டிகல் கேர் சொசைட்டி ஆஃப் இந்தியாவின் (NCRI) 5 ஆம் ஆண்டு கருத்தரங்கு சென்னையில் ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 1 வரை நடைபெறுகிறது. இந்தக் கலந்தாய்வினை, NCRI உடன் இணைந்து, சென்னை ரேடியல் சாலையில் உள்ள காவேரி மருத்துவமனை இணைந்து நடத்துகிறது.






நரம்பியல் சம்பந்தமான நோய்களுக்கு, சான்றுகள் அடிப்படையிலான சிகிச்சையினை  நடைமுறைப்படுத்துவதே NCRI-இன் பிரதான குறிக்கோள் ஆகும். நரம்பியல் சிகிச்சைத் துறையை முன்னேற்றுவதற்கும், நோயாளிகளின் ஆரோக்கியத்தை சிறப்பான முறையில் மேம்படுத்துவதற்கும், அவர்களுக்குப் பல்முனை பராமரிப்பு வழங்குவதற்கும், NCRI தொடர்ந்து ஊக்கத்துடன் செயற்பட்டு வருகிறது. நரம்பியல் துறையின் தற்போதைய அறிவியல்  முன்னெடுப்புகளை, பிற மருத்துவப் பிரிவு நிபுணர்களுடன் கலந்தாலோசித்து, சிறந்த மருத்துவ நடைமுறையை வழங்கும் அரும்பணியைச் செய்துவருகிறது NCRI. கல்வி, ஆராய்ச்சி, நோயாளிகளின் பாதுகாப்பு, அவர்களுக்குப் பன்முனை பராமாரிப்பு, புதுமையான மற்றும் பல்துறை மருத்துவர்களை இணைக்கும் விதமான சிகிச்சை முறை முதலியவற்றில் கவனம் செலுத்தி வருகிறது NRCI.  


நியூரோக்ரிட்டிகல் கேர் சொசைட்டி ஆஃப் இந்தியாவின் தலைவரான மருத்துவர் பொன்னையா வனமூர்த்தி, பக்கவாதம், தலையில் அடிபடுவதால் ஏற்படும் காயம் மற்றும் பிற மோசமான நரம்பியல் நோய்களுக்கான சிகிச்சையில் ஏற்பட்டுள்ள நவீன முன்னேற்றத்தின் மருத்துவச் சிறப்புகளைக் குறித்து எடுத்துரைத்தார். 


டாக்டர் எம்ஜியார் பல்கலைக்கழகத்தின் தூணை வேந்தரான மருத்துவர் நாராயணசாமி குத்துவிளக்கேற்றி, நியூரோக்ரிட்டிகல் கேர் சொசைட்டி ஆஃப் இந்தியாவின் 5 ஆம் ஆண்டு கருத்தரங்கினைத் தொடங்கி வைத்தார்.  நியூரோக்ரிட்டிகல் கேர் சொசைட்டி ஆஃப் இந்தியாவின் செயலாளரான மருத்துவர் K. ஸ்ரீதர், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, முதல்முறையாக அமெரிக்காவின் நியூரோக்ரிட்டிகல் கேர் சொசைட்டியுடன் இணைவதைப் பற்றிய மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.


பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 15 சர்வதேச நரம்பியல் வல்லுநர்கள் இந்தக் கருத்தரங்கில் கலந்து கொள்கின்றனர். இதில், நரம்பியல் சிகிச்சையில் மேம்பட்ட கண்காணிப்பு குறித்த முன் கூட்டமைப்புப் பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் முதன்முறையாக நடக்கும், நியூரோக்ரிட்டிகல் கேர் சொசைட்டி ஆஃப் இந்தியாவின் கருத்தரங்கில்,  உலகம் முழுவதிலுமிருந்து 400 புகழ்பெற்ற மருத்துவர்கள் மற்றும் நரம்பியல் சிகிச்சை நிபுணர்கள் கலந்து கொள்கின்றனர். இக்கருத்தரங்கு, "வளர்ந்து வரும் போக்குகள், விரிவடையும் வாய்ப்புகள், மாறும் கண்ணோட்டங்கள்" என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு நடைபெறுகிறது.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இடையே நடந்த ’CorporArt'24

 கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இடையே நடந்த ’CorporArt'24’ கலாச்சார நிகழ்வில் சென்னையின் கார்ப்பரேட் திறமை மிளிர்கிறது!







பிரபல கலை இயக்குநர் உமேஷ் ஜே. குமார் மற்றும் இன்னோவேட்டிவ் கிரியேட்டிவ் இயக்குனர்/ ஈவண்ட்ஸ் ராகினி முரளிதரன் ஆகியோருக்குச் சொந்தமான, சென்னையின் முன்னணி ஈவண்ட்ஸ் மேலாண்மை நிறுவனங்களில் ஒன்று Renaissance Events. அரசு நிகழ்வுகள், கார்ப்பரேட் நிகழ்வுகள், தயாரிப்பு வெளியீடுகள், ஆடியோ வெளியீடுகள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களுக்கான விழாக்களை நடத்தும் நிறுவனங்களில் Renaissance Events மிகவும் விரும்பப்படும் ஒன்றாகும். சென்னையின் மிகப்பெரிய இன்டர் கம்பெனி கல்ச்சுரல் விழாவான ‘CorporArt’-ஐ  நடத்துவதில் இந்நிறுவனம் பெருமிதம் கொள்கிறது. இந்த நிகழ்வின் இறுதிப் போட்டி நாளை சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறவுள்ளது. இதில் சென்னையின் கார்ப்பரேட் சமூகத்தைச் சேர்ந்த சிறந்த திறமையாளர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். 


277-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் பணிபுரியும் 4000-க்கும் மேற்பட்ட பணியாளர்களின் படைப்பாற்றலை இந்த நிகழ்வு ஒன்றிணைக்கிறது. கடுமையான தேர்வுக்குப் பிறகு 4000 பணியாளர்களில் இருந்து 650 இறுதிப் போட்டியாளர்கள் நாளை இறுதிப் போட்டியில் போட்டியிட உள்ளனர். இந்தப் போட்டி காலை 8:30 மணி முதல் இரவு 11:30 மணி வரை நடைபெறும். நிகழ்ச்சியில் பாடல், நடனம், புகைப்படம் எடுத்தல், குறும்படங்கள், பேஷன் ஷோ உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறும்.



கார்ப்பரேட் உலகில் போட்டி மற்றும் படைப்பாற்றலின் உணர்வைக் கொண்டாடும் வகையிலும், கார்ப்பரேட் ஊழியர்களின் கலை ஆர்வத்தை ஊக்குவிக்கும் விதமாக இந்த நிகழ்வு உள்ளது. 


இறுதி சுற்றில் பங்கேற்பாளர்கள் இடம்பெற ப்ரிலிம்ஸ் மற்றும் அரையிறுதி உட்பட பல சுற்றுகளை வெற்றி பெற வேண்டும். கண்கவர் செட், உலகத்தரம் வாய்ந்த ஒலி, விளக்குகள் மற்றும் ஒவ்வொரு பிரிவிற்கும் பிரபல நடுவர்கள் குழு என உலகத்தரத்திலான நிகழ்வாக இது இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. கிராண்ட் ஃபைனல் அனுபவம் இந்த நிகழ்வை ஒவ்வொரு ஆண்டும் பங்கேற்பாளர்கள் பாராட்டக்கூடிய ஒரு நட்சத்திர நாளாக மாற்றும்.


இந்த கான்செப்ட்டை 2011ஆம் ஆண்டில் இருந்து வடிவமைத்து முன்னெடுத்து, நிர்வகித்த ராகினி முரளிதரன் கூறுகையில், ”கல்லூரி நாட்களில் கலாச்சார நிகழ்வுகளில் எப்படி தங்கள் தனித்திறமையை காட்டி மகிழ்ந்தார்களோ அதுபோலவே கார்ப்பரேட் ஊழியர்கள் தங்கள் மகிழ்ச்சியை ‘CorporArt’ நிகழ்வில் மீட்டெடுக்க முடியும். பணிச்சுமைக்கு மத்தியில் மன அழுத்தத்தைத் குறைக்கவும், தங்கள் ஆர்வங்களைத் தொடரவும் ஒரு அரிய வாய்ப்பு" என்கிறார். 


நிறுவனங்களுக்கிடையிலான இந்த கலாச்சார விழா மூலம் ஊழியர்கள் தங்கள் தினசரி நெருக்கடியிலிருந்து ஆசுவாசப்படுத்திக் கொள்ளவும், ஆக்கப்பூர்வமான செயல்கள் செய்வதற்குமான வெளியாக இது அமைகிறது. நட்சத்திரங்களின் பங்கேற்பு மற்றும் சிறந்த நிகழ்ச்சிகளுடன், சென்னையின் கலாச்சார நாட்காட்டியில் ஒரு முக்கிய நிகழ்வாக ’CorporArt’ அமையும் என உறுதியளிக்கிறது.

Chennai's Corporate Talent Shines at "CorporArt'24" – An Inter-Corporate Cultural

 Chennai's Corporate Talent Shines at "CorporArt'24" – An Inter-Corporate Cultural Fest by Renaissance Events







Chennai, 30th August, 2024 – Renaissance Events, one of Chennai’s leading event management companies, owned by the renowned Art Director Umesh J. Kumar and the innovative Creative Director/Events, Raghini Muralidharan, is proud to host the highly anticipated Chennais biggest inter-company cultural fest, "CorporArt." The grand finale of this extraordinary event will take place tomorrow at the Chennai Trade Center, promising a spectacular showcase of the finest talents from Chennai's corporate community.


CorporArt brings together the creative prowess of employees from over 277 companies, with participation exceeding 4000 contestants throughout the event. After a rigorous selection process, 650 finalists have emerged to compete in tomorrow's grand finale, which will run from 8:30 a.m. to 11:30 p.m. The event will feature a variety of categories, including singing, dancing, photography, short films, and a fashion show.


This year’s CorporArt is distinguished by its first-ever mascot, named Shiv, symbolizing the corporate employee pursuing their artistic passions. Companies will vie for the coveted Shiv Trophy across various categories, celebrating the spirit of competition and creativity within the corporate world.


Participants have undergone multiple rounds, including prelims and semi-finals, to earn their spot in the grand finale. The event promises spectacular sets, world-class sound and lighting, and a panel of celebrity judges for each category, ensuring an unforgettable experience for both participants and attendees. The grand finale experience will make this event a stellar day that participants can cherish every year.


"CorporArt is a unique platform where corporate employees can relive the cultural vibrancy they enjoyed during their college days. It’s a rare opportunity for them to de-stress and pursue their passions amidst their professional commitments," said Raghini Muralidharan, who has conceptualized and curated the entire concept since 2011. 


The concept of an inter-company cultural fest is an innovative step forward in employee engagement, offering a much-needed break from the daily grind and an outlet for creative expression. With star-studded participation and top-notch performances, CorporArt promises to be a landmark event in Chennai’s cultural calendar. Now we finally have an inter-company talent hunt that enthusiastic participants can look forward to every year. Kudos to Renaissance for this brilliant concept. Renaissance Events is one of the most sought after companies that conducts ceremonies for government events, corporate events, product launches, audio launches and reality shows.

Thursday, 29 August 2024

Adharma Kadhaigal Movie Review

 adharma kadhaigal  tamil movie review



ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம சேனல் ல காமராஜ் வேல் எழுதி டைரக்ட் பண்ணி produce  பண்ண படம் adharma kadhaigal தான் pakka போறோம். இந்த படம்  23 aug அன்னிக்கு ரிலீஸ் ஆகி இருந்துச்சு. இந்த படத்துல vetri , sakshi agarwal , ammu abhirami , dhivya , poo ramu னு பல பேர் நடிச்சிருக்காங்க. சோ வாங்க இந்த படம் எப்படி இருக்குனு பாப்போம். 


ஒரு  நாலு  பேரோட  life அ  சுத்தி  நடக்கிறது  தான்  adharma kadhaigal. nurse அ நடிச்சிருக்க ammu abhirami ஒரு local rowdy அடிபட்டு கிடைக்கும் போது உடனே hospital ல admit பண்றங்க ஆனா அவனையே இவங்க பழி வாங்குறாங்க. இன்னொரு character அ வராங்க vetri அண்ட் sakshi . இவங்க ரெண்டு பேரும் அவங்க parents ஓட பேச மீறி love marriage பண்ணிக்கறாங்க. என்னதான் இவங்க ரொம்ப சந்தோஷம் அ இருந்தாலும் ஏதோ ஒரு காரணத்துனால suicide பண்ணிக்குறாரு. அடுத்ததா நம்மள poo ramu கிட்ட introduce பண்றங்க. இவரோட family அ tsunami ல இழந்திருப்பாரு. beach ல balloon அ சுடர ஒரு shop அ வச்சு நடத்திட்டு இருப்பாரு. sudden அ இவரு மூணு பேர கொலை பண்ணிடுவாரு. கடைசியா dhivya துரைசாமி அ காமிக்கிறாங்க. இவங்க சாதாரண middle class family பொண்ணு. குடும்ப கஷ்டக்காகவும் காசுக்காகவும் ஒரு பெரிய பணக்காரன் கிட்ட surrogacy க்கு போறாங்க. கடைசில அவன் மேலயே complaint குடுக்கிறாங்க. Violent scenes, rape, murder, thiruttu னு  ஒரே  கெட்டதை  நடக்குது  இந்த  படத்துல  so எந்த  அளவுக்கு  severe அ  இருக்குன்னு  daytime   ல  கூட  beach க்கு  போறது  safe இல்ல . அந்த  அளவுக்கு  எடுத்துட்டு  போயிருக்காங்க . Director kamaraj இந்த  harsh ஆனா  reality அ  தான்  ரொம்ப  அப்பாட்டம  கதை  ல  எடுத்தது  வந்திருக்காரு . பாக்கறதுக்கு  ரொம்ப  stressful அ  இருந்தாலும்  ரொம்ப  compelling அ  இருக்குனு  தான்  சொல்லணும் . 

   

ஒரு  சின்ன  பையன்  online rummy game ல  காசு  போட்டு  ஏமாந்துடுவா . அதுனால  கொஞ்சம்  கொஞ்சமா  அவனோட  சந்தோஷம்  life ல  இல்லாம  போய்டும் . So sudden அ  பாத்த  ஒரு  சின்ன  பொண்ண  கடத்தி  வச்ருப்ப  காசு  க்காக . அந்த  சின்ன  பொண்ணு  பயப்பட  கூடாது  னு  சொல்லி  maggi பண்ணி  குடுத்து  அந்த  பொண்ண  ஜக்ரித்தையாவும்  பாத்துப்பா  . அவனுக்கு  காசு  வேணும்  என்னதான்  அது  தப்பான  வழி  அ  இருந்தாலும்  அந்த  பொண்ண  safe அ  பாத்துக்கணும்  ன்ற  பய  முறுத்த  கூடாது  ன்ற  இவனோட  transformation scene சூப்பர்  அ  இருக்கும் . 

Second half ல  ரெண்டு  interesting ஆனா  story அ  எடுத்துட்டு  வராரு . ஒரு  local rowdy அ  யாரோ  shoot பண்ணிடறாங்க . So automatic அ  நம்ம  பாக்கும்  போது  இதை  ஒன்னு  police ஓ  military ஓ  இல்லனா  வேற  ஏத்து  rowdy ங்க  பண்ணிருப்பாங்க  னு  தோணும் . ஆனா  இங்க  தான்  director ஒரு  twist குடுக்கறாரு . இப்போ  தான்  கொன்னை வானோட  introduction யும்  இவ  கொலை  பன்னதுக்கான  காரணம்  மம்  சொல்ராங்க . இன்னொரு  story அ  பாத்தீங்கன்னா  surrogacy அப்புறம்  மத்தவங்கள  மன்னிச்சு  விட்றத  பத்தி  சுத்தி  நகரும் . இதுல  வர  ஓவுவுறு  characters யும்  ஏதோ   ஒரு  situation னால  behave பண்ணறீங்க  ன்றது  layer layer அ  காமிச்சிருக்காரு  director. 


சோ revenge அ main theme அ வச்சு நாலு characters ஓட life ல அவுங்க face பண்ற விஷயங்களை base பண்ணி  எப்படி react ஆகி ஒண்ணா இவங்க story interconnect ஆகுது ன்றது தான்  adharma kadhaigal . இன்னும் சொல்ல போன ஓவதோராட revenge story யும் ஒரு lesson அ சொல்லுது னு தான் சொல்லணும். அம்மு abhirami nurse character ல செமயா நடிச்சிருக்காங்க. ஒரு depressed person அ தன்னை வெளி படுத்திருக்காரு வெற்றி இவரோட acting யும் செமயா இருக்கு. இவருக்கு wife அ வராங்க sakshi agarwal . ஒரு அன்பான wife அ husband க்கு எப்பவும் supportive அ இருக்குற ஒரு person அ நல்ல நடிச்சிருக்காங்க. poo ram அண்ட் dhivya duraisamy ஓட நடிப்பு ரொம்ப எதார்த்தமா இருக்கு அண்ட் இவங்களோட acting நம்மள அவங்க பாக்கும் இழுத்துருச்சு னு தான் சொல்லணும். so மொத்தத்துல ஒரு நல்ல different ஆனா revenge story அ பாக்கணும்னா இந்த story அ மிஸ் பண்ணிடாதீங்க.

சென்னையில் துவங்கும் கார்னர் சீட்ஸ்

 *சென்னையில் துவங்கும் கார்னர் சீட்ஸ் சர்வதேச திரைப்பட விழா 2024 . சினிமாவும் கற்றலும் சங்கமிக்கும் பெருவிழா*



வீ எண்டர்டெயின்மென்ட்ஸ், பாரத் பல்கலைக்கழகத்தின் விசுவல் கம்யூனிகேஷன் துறை, மற்றும் ShortFlix OTT ஆகியவற்றின் ஒத்துழைப்புடன், கார்னர் சீட்ஸ் சர்வதேச திரைப்பட விழா 2024 ஐ பெருமையுடன் வழங்குகிறது. இந்த ஆண்டு விழா, ஆகஸ்ட் 30 மற்றும் 31, 2024 ஆகிய இரு நாட்களிலும், காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, பாரத் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது.


242 நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படங்களின் இத்தொகுப்பில், மாணவர்களுக்கு உலக சினிமா குறித்த பரந்த பார்வையை உருவாக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. ShortFlix OTT உடன் இணைந்து செயல்படுவதன் மூலம், இந்த விழாவின் முக்கியமான அங்கமாக இத்திரைப்படங்கள் மாணவர்களுக்கு திரையிடப்படவிருக்கின்றன.


மேலும், இந்த நிகழ்வில் பல திரைப்படத் துறையின் பிரபலங்கள் பங்கேற்கிறார்கள், மாணவர்கள் சர்வதேச சினிமாக்களை பார்ப்பது மற்றும் விவாதிப்பது மூலம் அவர்களின் கற்றல் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் உரையாடவிருக்கிறார்கள்.


.எதிர்கால திரைப்பட இயக்குநர்களுக்கு ஊக்கமாக அமையும்

இந்த உலக சினிமா விழாவில் அனைவரும் கலந்துகொள்ளலாம்



நடைபெறும் இடம் 


பாரத் கலை அறிவியல் கல்லூரி,

தாம்பரம்


Welcome to the Corner Seats International Film Festival 


VENUE - 

Bharath Institute

Of Higher Education

& Research,

Department Of

Visual

Communication

Tiruvanchery,

Selaiyur, Chennai,*

Sembian Mahadevi movie review

 sembian mahadevi - tamil lmovie



Hi மக்களே  இன்னிக்கு  நம்ம  channel ல  direction, music, production and actor னு  இவ்ளோ  role பண்ண  loga padmanabhan ஓட  படம்   

 sembiyan mahadevi தான்  பாக்க  போறோம் . இந்த  படம்  30 aug அன்னிக்கு  release ஆகா  போது . இந்த  படத்துல  Loga Padmanaban, Amsa Rekha, Jai Bheem Mosakkutty, Manimaran, Regina னு  நெறய  பேர்  நடிச்சிருக்காங்க . So வாங்க  இந்த  படத்தோட  review வ  பாப்போம் . 

நம்ம  எல்லாரும்  ஆணவ  கொலை  ன்ற  வார்த்தை  யா  கேள்வி  பற்றுப்போம் . இது  எதுக்கு  நடுக்கது  நும்  உங்க  எல்லாருக்கும்  தெரியும் . இது  நடக்கறதுக்கு  முழு  காரணம்  ஜாதி  தங்க . ஜாதி  வெறி  பிடிச்சவங்களுக்கு  பசஙக்ளோட  அன்பு  கண்ணுக்கு  தெரியாம  prestige ஜாதி  தான்  முக்கியம்  னு  யோசிக்காம  எடுக்கற  ஒரு  விப்ரதிமான  முடிவு  ஆணவ  கொலை  னு  சொல்லலாம் . 

இந்த  மாதிரி  oru story line தான்  sembian mahadevi னு  சொல்லலாம் . இந்த  கதை  2004 ல  sembian ன்ற  ஒரு  சின்ன  ஊர்  ல  இருந்து  ஆரம்பிக்குது . அந்த  year ல  ஒரு  thalith ஜாதி  யா  சேர்ந்த  ஒரு  பையன  கொன்னுடறாங்க . இவனோட  கொலைக்கு  நியாயம்  வேணும்  னு  இந்த  பையனோட  அப்பா  court la case போட்டு  எப்படியாது  ஜெயிக்கும்  னு  ஒரு  தீர்மானமா  இருக்காரு . ஆனா  10 வருஷம்  ஆகியும்  யாரு  இந்த  கொலை  க்கு  காரணம்  ன்ற  ஆட்களை  தேடாம  விட்டுடுது  police. 

இன்னொரு  பக்கம்  இந்த  இறந்தவரோட  தங்கச்சி  அ  வராங்க   amsa rekha. இவங்கள  தான்  hero வான  loga padamabhan love பன்றாரு . இவரு  மேல்  ஜாதிக்காரர்  அ  இருக்காரு . Starting ல  என்ன  தான்  amsa rekha இவங்கள  avoid பண்ணலாம்  , hero வோட  character அ  புரிஞ்சுக்கிட்டு  love க்கு  accept பண்ணறீங்க . ரெண்டு   பெரும்  சந்தோசமா  love பண்ணிட்டு  இருக்கும்  போது  ஒரு  கட்டத்துல   இவங்க  pregnant ஆயிட்றாங்க . அப்போ  தான்  amsa rekha hero கிட்ட  சொல்லணும்  னு  முடிவு  பண்றங்க . 


Pregnant ணத்துனால  தன்னை  கல்யாணம்  பண்ணிக்க  சொல்லி  loga padmanabhan கிட்ட  சொல்ராங்க . Hero க்கு  என்ன  பண்றதுனே  புரியல  அப்போ  தான்  friends கிட்ட  help கேட்கலாம்  னு  decide பண்ணறாரு . ஆனா  அதுவே  இவருக்கு  ஆபத்தா  மாறிடுது . இவரு  friends கிட்ட  இந்த  situation அ  சொல்லி  help பண்ண  சொன்ன , இவங்க  எல்லாரும்  நம்ம  friend எப்படி  ஒரு  கீழ்  ஜாதி  பொண்ண  போய் கல்யாணம்  பண்ண  முடியும் . இது  நம்ம  ஜாதி  க்கே  பெரிய  அவமானம்  னு  முடிவு  பண்ணி  அந்த  பொண்ண  போட்டு  தாள்ளிடலாம்  னு  பிளான்  பண்ண  ஆரம்பிக்கறாங்க . 

Amsa rekha உயிரோட  தப்பிச்சாங்களா  ? Amsa rekha loga padamnabhan ஓட  காதல்  ஜெய்ச்சிசுஜா ? 2004 ல  இறந்து  போன  அந்த  dalit பையன்  ஓட  கொலைகாரங்க  யாருனு  

 தெரிஞ்சுச்சா  ? ன்றது  தான்  sembian mahadevi ஓட  கதை . 

Newspaper ல  பாத்து  படிச்சி  பழகி  போன  நெறய  true incidents அ  ஒரு  படமா  எடுத்துட்டு  வந்திருக்காங்க  இந்த  படத்தோட  director. நான்  already சொன்ன  மாதிரி  இவரு  தான்  direct பண்ணி  music போட்டு  நடிச்சிருக்கார் . Oru actor அ  செமயா   perform பன்னிரக்கரு  னு  தான்  சொல்லணும் . ஒரு  emotional character அ  எல்லாத்துலயும்  நல்லது  பாக்கற  வர  இருக்காரு . என்ன  தான்  இவரு  கூட  இருக்கறவங்க  எல்லாரும்  நம்ம  உயர்ந்த  ஜாதி  கீழ்   ஜாதி  காரங்களை  மதிக்க  கூடாது  னு  இருந்தாலும் , இவரு  அந்த  கூட்டத்துல  தனித்துவம்  இருக்காரு  னு  தான்  சொல்லணும் . இவரு  அந்த  ஜாதி  வேறுபாடு  அ  பொருட்டு அ  consider பண்ணிக்கல . எல்லார்கிட்டயும்  அன்பா  equal அ  பழகுறாரு . அதே  சமயம்  தன்னோட   lover க்கு  நடக்கற  கொடுமையான  விஷயங்களை  கண்டு  பொங்கி  எழுறதுனு  ஒரு  emotional performance அ  குடுத்திருக்காரு . 


Heroine அ  நடிச்சிருக்க  amsa rekha அவங்க  character அ  புரிஞ்சுகிட்டு  ஒரு  extraordinary performance அ  குடுத்திருக்காங்க  னு  தான்  சொல்லணும் . Beginning ல  ஜாதி  பாகுபாடுனால  hero வ  accept பண்ணாம  இருக்கிறது  அப்பரும்  காதல்  க்காக  hero வ  accept பண்றது , கடைசில  எப்படியாது  hero வ  கல்யாணம்  பண்ணிக்கணும்  னு  உறுதியா  நிக்கிறது  னு  ரொம்ப  அழகா  நடிச்சிருக்காங்க . 

Jaibheem mosakutty அ  பத்தி  சொல்லியே  ஆகணும் . இந்த  படம்  full அ  ஜாதி  வெறி , ஜாதி  பாகுபாடுனு  கொஞ்சம்  serious அ  இந்த  கதை  travel பண்ணாலும் , இவரோட  comedy dialogues and scenes தான்  நம்மள  ரசிக்க  வைக்குது  னு  சொல்லலாம் .  அப்புறம்  supporting actors அ  வர  manimaran, regina எல்லாரும்  அவங்க  best அ  குடுத்திருக்காங்க . 

இந்த  படத்தோட  music director யும்   loga padmanabhan தான் . இவரோட  music இந்த  கதையை  ஒரு  step மேல  தூக்கி  இருக்குனு  தான்  சொல்லணும் . இந்த  படத்தோட  technical team னு  பாக்கும்  போது  k. Rajasekar ஓட  cinematography ரொம்ப  அழகா  அந்த  ஊர்  ல  நடக்கற  ஓவுவுறு  விஷ்யத்யும்  எடுத்திருக்காரு . இந்த  படத்துல  வர  characters ஓட  emotions அ  இருக்கட்டும் , ஜாதி  வேறுபாடு  னால  ஓவுவுறுத்தற்  படர   கஷ்டம் , மேல்  ஜாதிகாரங்களோட  ஆணவம்  னு  எல்லாத்தயும்  நேர்த்தி  யா  நம்ம  கண்ணு  முன்னாடி  நிக்க  வச்சுட்டாரு . இந்த  படத்தோட  கதை  எங்கயும்  distract ஆகம  நம்மள  full அ  engage பண்ணற  மாதிரி  அமைச்சிருக்காரு  editor rajendra cholan. 

என்ன  தான்  loga padmanabhan க்கு  director, music composer, actor, producer னு  எல்லாமே  first அ  இருந்தாலும் , நம்ம  நாட்டில்  இன்னும்  நடந்துட்டு  இருக்கற  ஒரு  harsh reality அ  தான்  படமா  எடுத்துருக்காரு . இன்னும்  சொல்ல  போன   இது  வெறும்  ஜாதி  வேறுபாடு  மட்டும்  இல்ல  இது  பின்னாடி  மறைமுகமா  ஒளிஞ்சிகிட்டு  இருக்கற  அரசியல்  விஷயங்களையும்    பத்தி  சொல்றது  தான்  sembiyan mahadevi படம் . ஒரு  சில  ஜாதி  வெரி  பிடிச்ய்வங்களோட  குறுக்கு  புத்தி  பல  சின்ன  பசங்களோட  காதல் , ஆசை  எல்லாம்  எப்படி  கொடூரமா  அளிக்க  படுது  நும்  காமிச்சிருக்காங்க . 

என்ன  தான்  இந்த  மாதிரி  genre ல  நெறய  படங்கள்  வந்தாலும் , இவங்க  , அவுங்க  னு  யாரு  மேலயும்  தப்ப  காமிக்காம  ஒரு  social issue வ  அருமையா  present பண்ணிருக்காரு  loga padmnabhan . 

Oru social issue வோட  இருக்கற  பக்காவான  commercial படம்  பாக்கணும்னா  இந்த  படத்தை  miss பண்ணிடாதீங்க .

Surya's Saturday Movie Review

Surya's Saturday Movie Review - saripodha sanivaram - telugu movie review 



Ante sundranikki படத்தோட  success க்கு  அப்புறம்  natural star nani and director vivek athreya மறுபடியும்  ஒண்ணா  சேந்து  work பண்ணி  இன்னிக்கு  release ஆகி  வெற்றிகரமா  ஓடிட்டு  இருக்கற  telugu படம்  saripodhaa sanivaraam தான் பாக்க போறோம் . இது  ஒரு  pan indian movie. Tamil, hindi, Malayalam, kannada language ல  இந்த  படத்துக்கு surya’s Saturday னு  title வச்சி  இருக்காங்க .  இந்த  படத்தோட  first single garam garam song செம  hit அடிச்சுது . 

 இந்த  படத்தோட  trailer and songs க்கு  நல்ல  வர  வேற்பு  இருந்துச்சு . So dasara க்கு  அப்புறம்  ஒரு  storng ஆனா  கதையோட  வராரு  னு  எல்லாரும்  expectation ல  இருந்தாங்க . u.s.a and Canada ல  nani க்கு  fans ரொம்ப  அதிகம் . Latest update படி  north America ல  கிட்ட  தட்ட  500k dollars அ  collect பண்ணிக்க  இந்த  படத்தோட  premiere shows ல  இருந்து . இதே  மாதிரி  இருந்துச்சுன்னா  கண்டிப்பா  nani ஓட  dasara collection அ  விட  இந்த  படத்துல  அதிகமா  இருக்கும்  னு  expect பண்ண   படுது . 


So வாங்க  இந்த  படத்தோட  கதை  என்னனு  பாப்போம் . Surya வ  நடிச்சிருக்க  nani க்கு  தப்ப  ஏதாது   நடந்த  அதா  தட்டி  கேக்குற  ஒரு  கோவ  காரரை  இருக்காரு . இவரோட  அம்மா  இறக்கிறதுக்கு  முன்னாடி  தன்னோட  கோவத்தை  control பண்ணிக்கறானேனும் , ஆனா  வாரத்துல  ஒரு  நாள்  அதாவுது  சனிக்கிழமை  அன்னிக்கு  மட்டும்  தன்னை  control பண்ணிக்க  முடியாது  னு  promise பண்ணறாரு . அப்போ  தான்  dayanand அ  இருக்கற  sj surya ஒரு  corrupt police officer அ  இருக்காரு . And koormanand அ  இருக்கற  murali sharma இவருக்கு  brother அ  வராரு . Dayanand ஓட  தப்பான  விஷயங்களை  பாத்து  surya வால   அமைதி  அ  இருக்க  முடியல  அதுனால  ரெண்டு  பேருக்கும்  மோதல்  நடக்குது . அதே  சமயம்  surya ஓட  சின்ன  வயசு  ல  love பண்ண  charulatha வ  வராங்க   priyanka mohan. And dayanand ஓட  brother யும்  story குல  enter ஆகுறாங்க . இதுக்கு  அப்புறம்  surya, dayanand, koormanand இவங்க  மூணு  பேருக்குள  நடக்கற  தரமான  சம்பவம்  தான்  saripodha sanivaram. 

Mental Madhilo, and Ante Sundaraniki,போன்ற  பல  hit படங்கள்  அ  குடுத்த  vivek athreya தானே  எழுதி   direct பண்ண  mass action படம்  தான்  இது . என்ன  தான்  ரெண்டு  பேரும்  family oriented subjects பன்னிரு  இருந்தாலும்  இந்த  படம்  எல்லாருக்கும்  பிடிக்கிற  மாதிரி  family and drama னு  ஒரு  commercial படத்தை  எடுத்திருக்காங்க  னு  தான்  சொல்லணும் . Nani ஓட   introduction scene and villain அ  வர  sj surya ஓட  introduction scene எல்லாம்  நல்ல  இருக்கு . Sj surya story குள்ள  enter ஆனதுக்கு  அப்புறம்  தான்  கதையே  சூடு  பிடிக்குது  னு  சொல்லலாம் . Interval முடிஞ்சு  அடுத்து  வர  45 நிமிஷம்  படமும்  நம்மள  full அ  engaged அ  interesting அ  எடுத்துட்டு  வந்திருக்காங்க . அது  மட்டும்  இல்ல  climax யும்  ரொம்ப  strong அ  நல்ல  இருக்குனு  தான்  சொல்லணும் . 


இந்த  படத்துல  தேவையில்லாத  romantic songs, item song, னு  எதுவுமே  கிடையாது . Vivek athreya murali sharma ஓட  situation misunderstanding அ  செமயா  use   பன்னிரக்கரு  இதே  வச்சு  story அ  நல்ல  நகர்த்திட்டு  போறாரு  னு  தான்  சொல்லணும் . Usual அ  story எப்படி  introduction twist னு  ஒரு  order ல  போகுமோ  அந்த  மாதிரி  கொஞ்சம்  கூட   track மரமா  interesting அ  எடுத்துட்டு  போயிருக்காங்க . 

இந்த  படத்தோட  பெரிய  plus point அ  இதுல  நடிச்சிருக்க  actors தான் . Nani, sj surya, murali sharma, priyanka mohan, saikumar எல்லாருமே  ரொம்ப  enjoy பண்ணி  படத்தை  நடிச்சிருக்காங்க  னு  தான்  சொல்லணும் . 

Nani ஓட  performance extraordinary அ  இருக்கு . வாரம்  full அ  தன்னோட  கோவத்தை  control பண்ணறது  கடைசில  Saturday மட்டும்  control மீறி  போறது  னு  ஒரு  complex ஆனா  character அ  interesting அ  அதே  சமயம்  அற்புதமா  பன்னிரக்கரு  னு  தான்  சொல்லணும் . 

Sj surya ஓட  acting அ  பத்தி  சொல்லவே  வேண்டாம் . இவரோட  casual dialogue delivery villanism எல்லாமே  செமயா  இருக்கும் . அதே  மாதிரி  தான்  இந்த  படத்துலயும்   இவரோட  role ரொம்ப  unique அ  promising அ  இருக்கு . Nani ஓட  மோதிர  scenes எல்லாமே  பக்கவா  நடிச்சிருக்காரு . அது  மட்டும்  இல்ல  இவரோட  sarcasm, dialogue delivery அ  இவரோட  style ல  வெளி  படித்திருக்கிறது  இன்னும்  செம . 


Priyanka mohan and nani ஓட  chemistry நல்ல  work out ஆயிருக்கு . இவங்களோட  romance scene கம்மியா  இருந்தாலும்  கதை க்கு  ஒரு  depth அ  குடுத்திருக்கு  னு  தான்  சொல்லணும் . 

Murali sharma ஒரு  politician அ  sj surya ஓட   brother அ  செமயா  perform பண்ணிருக்காரு .  Saikumar nani ஓட  அப்பாவா  அவரோட  presence அ strong அ  இருக்கு . அதே  சமயம்  supporting actors , harshavardhan, adithi balan ஓட  acting நல்ல  குடுத்திருக்காங்க . 

Murali ஓட  cinematography அவரோட  lighting patterns அ  வச்சு  ஓவுவுறு  mood க்கு  ஏத்த  மாதிரி  எல்லா  scenes யும்  superb அ  capture பன்னிரக்கரு  and jakes bejoy ஓட  music and BGM story அ  இன்னொரு  step க்கு  elevate பண்ணி  இந்த  படத்துக்கு  பக்க  பலமா  இருக்கு  னு  தான்  சொல்லணும் . 


so ஒரு  பக்காவான  mass ஆனா ஒரு action packed movie அ  பாக்கணும்னா  இந்த  படத்தை  miss பண்ணிடாதீங்க .

ஐகான் சினி கிரியேஷன்ஸ் எல்எல்பி வழங்கும் ஏபிஜி ஏழுமலை

 *ஐகான் சினி கிரியேஷன்ஸ் எல்எல்பி வழங்கும் ஏபிஜி ஏழுமலை இயக்கத்தில் ‘மைனா’ புகழ் சேது நடித்திருக்கும் ‘மையல்’ திரைப்படம்!*





நல்ல கதையம்சம் உள்ள கதைகள் மொழிகளைக் கடந்து பலதரப்பட்ட பார்வையாளர்களையும் சென்றடையும். சமீபகாலமாக தமிழ் சினிமா இப்படி பல நம்பிக்கை தரும் படங்களையும் திறமைசாலிகளையும் வரவேற்று வருகிறது. மைனாவில் ‘பாஸ்கர்’ கதாபாத்திரத்தில் நடித்து பரவலான பாராட்டுகளைப் பெற்றவர் நடிகர் சேது. இப்போது முக்கியமான சமூகப் பிரச்சினையை எடுத்துரைக்கும் ‘மையல்’ என்ற ஆழமான உணர்வுப்பூர்வமான படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். 


ஒரு சாதாரண, அப்பாவி மனிதனின் உரிமைகள் மற்றும் வாழ்க்கையை நிலைநிறுத்தவும், பாதுகாக்கவும், சட்ட அமைப்பு எடுத்த தவறான முடிவுகளால் உண்மையான காதல் சிதைந்து விடுகிறது. இப்படி பாதிக்கப்பட்டவரின் கொந்தளிப்பான மனநிலையை மையக்கதையாகக் கொண்டது இந்தப் படம் என்கிறார் இயக்குநர் ஏபிஜி ஏழுமலை.


மலையாள நடிகை சம்ரிதி தாரா இந்தப் படத்தில் கதாநாயகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார். இப்படத்தில் மற்ற நடிகர்களுடன் பி.எல். தேனப்பன் மற்றும் சூப்பர் குட் சுப்ரமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். திருவண்ணாமலைக்கு அருகில் அமைந்துள்ள கல்வராயன் மலையின் அழகிய இடங்களிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் முழுப் படமும் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் மொத்த படப்பிடிப்பும் 37 நாட்களில் நிறைவடைந்துள்ளது.


பேனர்: ஐகான் சினி கிரியேஷன்ஸ் எல்எல்பி, 

தயாரிப்பாளர்கள்: ஆர் வேணுகோபால்-அனுபமா விக்ரம் சிங், 

கதை-திரைக்கதை-உரையாடல்: ஜெய மோகன், 

இயக்கம்: ஏபிஜி ஏழுமலை, 

இசை: அமர்கீத், 

ஒளிப்பதிவு: பாலா பழனியப்பன், 

எடிட்டிங்: பாலா சண்முகம், 

பாடல் வரிகள்: விவேகா-ஏகாதசி-கருணாகரன்,

சண்டைக்காட்சி: ஓம் சிவபிரகாஷ்,

சவுண்ட் எஃபெக்ட்ஸ்: சி. சேது, 

மிக்ஸிங் அட்மோஸ் - டி. உதயகுமார், 

தயாரிப்பு வடிவமைப்பு: வர்ணாலயா ஜெகதீசன் ,

ஆடை: செந்தில் அழகன், 

வடிவமைப்பாளர்: ஷபீர்,

மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா-அப்துல் நாசர்

Icon Cine Creations LLP presents An APG Elumalai Directorial

 Icon Cine Creations LLP presents 


An APG Elumalai Directorial 





’Myna’ fame Sethu starrer “Myyal” 


Stories that are driven by content possess a distinct charm! They resonate with audiences across various cultures and languages while showcasing a diverse range of talented actors. Recently, Tamil cinema has been welcoming many such promising talents. Actor Sethu, who garnered widespread acclaim for his captivating portrayal of ‘Bhaskar’ in Mynaa, is now taking on the lead role in a deeply emotional film titled ‘Myyal’, which addresses a significant social issue.


 Filmmaker APG Elumalai emphasizes that the essence of the film centers on the tumultuous change experienced by an ordinary, innocent man whose genuine love is shattered due to the flawed decisions made by the legal system, which is meant to uphold and defend the rights and lives of the vulnerable and disadvantaged. 


Malayalam actress Samriddhi Tara debuts in the Tamil film industry as female lead in this film. P.L. Thenappan and Super Good Subramani are playing prominent roles alongside other actors in this movie. 


The entire film has been shot in and around the exotically exquisite locales of Kalvarayan Hills located near Thiruvannamalai. The film’s entire shooting has been wrapped up in a span of 37 days. 



Banner: Icon Cine Creations LLP 

Producers: R Venugopal-Anupama Vikram Singh 

Story-Screenplay-Dialogues: Jaya Mohan 

Direction: APG Elumalai 

Music: Amargeeth 

Cinematography: Bala Pazhaniappan 

Editing: Bala Shanmugham 

Lyrics: Vivega-Ekadasi-Karunakaran

Stunts: Om Siva Prakash 

Sound Effects: C Sethu 

Mixing Atmos - T Udhayakumar 

Production Designing: Varanalaya Jegadeesan 

Costume: Senthil Azhagan 

Designer: Shabeer

PRO: Suresh Chandra-Abdul Nassar

ஒரே நாள் இரவு!*

 *ஒரே நாள் இரவு!*

*இரண்டு கதாபாத்திரங்கள்!*

*பொட்டன்சியல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில்*

*வித்தியாசமான த்ரில்லர் கதை “பிளாக்”.*





கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாரித்த ‘மாயா, ‘மாநகரம்’, ‘மான்ஸ்டர்’, ‘டானாக்காரன்’, ‘இறுகப்பற்று’ படங்கள் மக்கள் மத்தியிலும் பரபரப்பாக பேசப்பட்டு சூப்பர் ஹிட்டான படங்களை தயாரித்த நிறுவனம் பொட்டன்சியல் ஸ்டுடியோஸ். 


மீண்டும், வித்தியாசமான மற்றுமொறு தேர்ந்தடுத்த கதைக்கு “பிளாக்” என்று பெயர் வைத்துள்ளார்கள் . 


ஒரே நாள் இரவில் நடக்கும் சம்பவம். 

இரண்டு கதாபாத்திரங்கள் மட்டுமே பிரதானம். 

நொடிக்கு நொடி திரில்லர். ஒரு குறிப்பிட்ட இடம் அனைவரையும் பயமுறுத்தலான இடமாக பார்க்க படும். அதில் நடக்கும் சம்பவங்கள் விசித்திரமானதாக இருக்கும். இதை பிறரிடம் சொன்னால் நம்ப முடியாத வகையிலும் இருக்கும். 

அப்படி பட்ட கதை தான் #பிளாக். 


ஒரு குறிப்பிட்ட இடம் அனைவரையும் பயமுறுத்தலான இடமாக பார்க்க படும். அதில் நடக்கும் சம்பவங்கள் விசித்திரமானதாக இருக்கும். இதை பிறரிடம் சொன்னால் நம்ப முடியாத வகையிலும் இருக்கும். 

அப்படி பட்ட கதை தான் #பிளாக். 

நம்மை சூழ்ந்திருக்கும் இருளை பிளாக் என்று சொல்லலாம். யாரும் நம்மை எளிதில் புரிந்து கொள்ளாத அளவுக்கு நம்முடைய இன்னொரு கருப்பு பக்கத்தை காட்டிகொள்ளாமல் இருப்பதையும் பிளாக் என்று சொல்லலாம். இதுவே இக்கதைக்கு பொருந்தும்.. 

என்கிறார் டைரக்டர் கே.ஜி.பாலசுப்ரமணி


சென்னையில் எடுக்கப்பட்ட இப்படத்தின் படபிடிப்பு வேலைகள் முடிவடைந்து படம் வெளியீட்டு வேலைகள் நடை பெற்று வருகிறது.


இதில் நாயகனாக ஜீவா நடிக்கிறார். இவரது ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். 




Director - KG. BALASUBRAMANI ( First Film )

DOP - gokul benoy ( monster, Irugapatru ), 

Music - Sam C.S

Editor- Philominraj ( Maanagaram, Kaithi, Master, Jai Bhim, Vikram, Leo ) 

Stunts: Metro mahesh 

Lyrics: Madhan Karky, Chandru

Choreography: Sherif

Produced By : Potential Studios 


Pro : Johnson

POTENTIAL STUDIOS UNVEILS JIIVA STARRING

 *POTENTIAL STUDIOS UNVEILS JIIVA STARRING 'BLACK' – A GRIPPING SUSPENSE THRILLER HITTING THEATRES THIS SEPTEMBER*





Potential Studios, renowned for delivering unique and compelling narratives in Tamil cinema, has unveiled the first look and title of its latest film, 'Black', set for a theatrical release in September 2024. This much-anticipated movie is already generating buzz as it marks a new chapter in the studio’s legacy of pushing the boundaries of storytelling.


‘Black’ stars the talented and leading Tamil actor Jiiva who is known for his intense performance has teamed up with the leading Tamil actress Priya Bhavani Shankar known for featuring in many blockbusters and enhanced them with her cheerful performance. Black is directed by debutant Balasubramani, who will be yet another promising find by Potential Studios after Ashwin, Lokesh Kanagaraj, and Tamizh. 


Actor Jiiva has chosen a unique script with ‘Black’, the film also offers one of the most challenging roles for Priya Bhavani Shankar who is known for her fearless approach in both on and off screen. This suspenseful thriller, focuses on just two main characters, a rarity in Tamil cinema, creating an intense and gripping narrative that promises to keep audiences enthralled.

Potential Studios has a history of producing critically acclaimed and audience-favorite films like 'Maya', 'Maanagaram', 'Monster', 'Tanakkaaran', and 'Irugappatru'. With 'Black,' the studio continues its tradition of excellence, offering a fresh and innovative approach to filmmaking. 


The film features top-tier talent, including renowned cinematographer Gokul Benoy, acclaimed editor Philomin Raj, and celebrated music director Sam CS. Together, they have crafted a visually stunning and captivating experience that will leave a lasting impression on viewers. 


'Black' is set to redefine the suspense thriller genre in Tamil cinema, offering a mind-bending experience that will captivate and intrigue moviegoers.


Director - KG. BALASUBRAMANI ( First Film )

DOP - gokul benoy ( monster, Irugapatru ), 

Music - Sam C.S

Editor- Philominraj ( Maanagaram, Kaithi, Master, Jai Bhim, Vikram, Leo ) 

Stunts: Metro mahesh 

Lyrics: Madhan Karky, Chandru

Choreography: Sherif

Produced By : Potential Studios 


Pro : Johnson

'ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்' (Once Upon A TIme In Madras) திரைப்பட

 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்' (Once Upon A TIme In Madras) திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு  !! 












ஃப்ரைடே பிலிம் பேக்டரி (Friday Film Factory) சார்பில் கேப்டன் எம்.பி. ஆனந்த் தயாரிப்பில்,  ட்ரீம் ஹவுஸ் ஹாரூன் மற்றும் பிஜிஎஸ் ப்ரொடக்ஷன்ஸ் பிஜிஎஸ் ஆகியோரின் இணை தயாரிப்பில்,  பிரசாத் முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்' (Once Upon A TIme In Madras).


இப்படம் ஹைபர் லூப் வகையை சார்ந்த திரில்லராக, மிகவும் வித்தியாசமான கதையம்சத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், கதையின் நாயகர்களாக பரத், சுஹைல், ராஜாஜி நடித்துள்ளார்கள். கதையின் நாயகிகளாக  விருமாண்டி அபிராமி, அஞ்சலி நாயர், பவித்ரா லட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர்.


விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. 


இந்நிகழ்வினில்.. 


தயாரிப்பாளர் பிஜிஎஸ், 


இந்தப் படத்தின் கதை தொடங்கி, திரைக்கதையாக ஒன்றரை ஆண்டுகள் ஆனது, இப்படம் ஒரு சஸ்பென்ஸ் நிறைந்த புதுமையான அனுபவமாக இருந்தது, அது போக படத்தில் அனைத்து கதாபாத்திரங்களிலும் பெரிய நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்தில் ஒப்புகொண்டு நடித்த அனைவருக்கும் நன்றி. இயக்குனர் பிரசாத் சார் என்னிடம் சொன்ன கதையை அப்படியே  அற்புதமக எடுத்துவிட்டார், படம் அருமையாக வந்துள்ளது. பரத் சாருக்கு மிகவும் நன்றி, எங்களது கதையை நம்பி இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். அனைவரும் கதையை கேட்டதும் சரி என சொன்னது எங்களுக்கு மேலும் ஒரு நம்பிக்கையை தந்தது. ஒட்டு மொத்த குழுவிற்கும் நன்றி. அனைவரும் பெரிய உழைப்பை கொடுத்துள்ளனர்.  அதற்கு பெரிய நன்றி. கண்டிப்பாக படம் உங்களுக்கு பிடிக்கும் நன்றி. 



இணை தயாரிப்பாளர் ஹாரூன் பேசியதாவது, 

இந்தப் படத்தில் நான் இணைய காரணம் அருண் சார் தான், இந்தப் படத்தில் ஒரு நல்ல அனுபவம் கிடைத்தது, இந்தக் கதையை இயக்குநர் மிக அழகாக சொன்னார், அதை விட இயக்குநர் படத்தை அட்டகாசமாக எடுத்துள்ளார்.  இந்தப் படம் இந்த தலை முறை ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். தயாரிப்பாளர் பெரிய உதவியாக இருந்தார். படம் நிச்சயமாக உங்களை சிந்திக்க வைக்கும். கண்டிப்பாக படம் உங்களுக்கு பிடிக்கும் நன்றி.


ஒளிப்பதிவாளர் கண்ணன் பேசியதாவது, 

இந்தப் படம் எனக்கு கிடைக்க காரணம் ஹாரூன் சார் தான், அதிகமாக தயாரிப்பாளரை பாடு படுத்தியுள்ளேன், நடிகர்கள் அனைவரும் என்னுடைய வேலையை நம்பி நடித்தனர். படம் நன்றாக வந்துள்ளது.  பரத் சாரின் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும், பட்டியல் படம் மனதுக்கு மிகவும் நெருக்கமான படம். அதே போல, இந்தப் படமும் அவருக்கு ஒரு பெரிய படமாக இருக்கும். நானும் இயக்குநரும் அதிக சண்டை போட்டுள்ளோம் எல்லாமே படத்திற்காக தான்,  படம் சிறப்பாக வந்துள்ளது, அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.  



நடிகை மிருதலா சுரேஷ் பேசியதாவது, 

எனக்கு இதுதான் முதல் படம், எனக்கு இந்தப் படம் கிடைத்தது வரம், பெரிய நட்சத்திரங்கள் நடிக்கும் படத்தில் நானும் நடித்திருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது. இயக்குநர் எனக்கு இது முதல் படம் என தெரிந்து கொண்டு பொறுமையாக சொல்லித்தந்து இந்தப் படத்தில் என்னை நடிக்க வைத்தார்.  படம் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும். பார்த்து விட்டு உங்கள் ஆதரவை கொடுங்கள், நன்றி. 



நடிகை சினிசிவராஜ் பேசியதாவது.., 

எனக்கு கொஞ்சம் புது அனுபவமாக இருந்தது, முதல் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளேன், பரத் சாருக்கு மிகவும் நன்றி, எனக்கு பெரிதும் உதவியாக இருந்தார்.  இயக்குநர் எனக்கு ஒரு கைடாக இருந்தார், பொறுமையாக இருந்து என்னிடம் வேலை வாங்கினர் , இந்தப் படத்தில் எனக்கு ஒரு நல்ல அனுபவம் கிடைத்தது. அதற்கு ஒட்டு மொத்த குழுவிற்கும் நன்றி, உங்கள் ஆதரவை  இந்த படத்திற்கு கொடுங்கள்.


இசையமைப்பாளர் ஜோஷ் பிராங்க்ளின் பேசியதாவது.., 

தயாரிப்பாளர் ஆனந்த் அண்ணனுக்கு மிகவும் நன்றி, என்னை அவர்தான் தேர்வு செய்தார். இது போன்ற ஒரு சஸ்பென்ஸ் படத்திற்கு நான் இசை அமைத்ததில்லை, இந்தப் படத்தில் 3 பாடல்கள் இசையமைத்துள்ளேன், அதற்கு ஜெகன் அண்ணா தான் வரிகள் எழுதினார் அவருக்கு மிகவும் நன்றி. படம் சிறப்பாக வந்துள்ளது, மொத்த குழுவிற்கும் நன்றி.


தயாரிப்பாளர் கேப்டன் எம்.பி. ஆனந்த் பேசியதாவது…

இப்படத்தின் உருவாக்கத்திற்கு தேவையான அனைத்து அம்சங்களையும் செய்து கொடுத்துள்ளோம். படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இப்படம் உங்கள் எல்லோரையும் மகிழ்விக்கும் படமாக இருக்கும். உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி. 


நடிகை பவித்ரா லக்ஷ்மி பேசியதாவது, 

இந்தப் படம் எனக்கு மிகவும் நெருக்கமான படம். இந்தப் படம் உருவாகக் காரணமாக இருந்த அனைத்து தயாரிப்பாளருக்கும் நன்றி, இந்தப் படத்தின் கதை தாண்டி, படத்தில் ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் ஒரே மாதிரியான மரியாதை கிடைத்தது. ஒரு பெரிய நடிகருக்கு கொடுத்த அதே மரியாதையை அனைத்து நடிகரிடமும் காட்டினார்கள். இயக்குநருக்கு வாழ்த்துகள், இந்தப் படத்தில் பெரிய நடிகர்களுடன் நடித்தது நல்ல அனுபவம்.  பெரிய பயிற்சி கிடைத்தது, ஒட்டு மொத்த குழுவிற்கும் நன்றி, பரத் சாருக்கும் அபிராமி மேமுக்கும் நன்றி, இந்தப் படம் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும். உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.



நடிகர் ஷான் பேசியதாவது, 

இந்தப் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன், மகிழ்ச்சியாக உள்ளது.  அனைவரும் எனக்கு பெரிய உறுதுணையாக இருந்தனர்.  பரத் சார் மற்றும் மற்ற அனைத்து நடிகர்களுக்கும் பெரிய நன்றி. இந்தப் படத்தில் நான் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன், எனக்கு அது ஒரு பாக்கியம். கண்டிப்பாக உங்களுக்கு இந்தப் படம் பிடிக்கும், நன்றி.


பாடலாசிரியர் ஜெகன் கவிராஜ் பேசியதாவது.., 

இந்தப் படம் நடுநிலையை பற்றி பேசியுள்ளது, இயக்குநர் கதையை சொன்னதும், இது தான் எனக்கு தோன்றியது.  அருண் சாருக்கு நன்றி இந்தப் படம் உருவாக முக்கிய காரணம், அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர், என் தம்பி ஜோஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார், இரண்டு பாடல்கள் நான் எழுதியுள்ளேன், பாட்டு அருமையாக வந்துள்ளது. படம் சிறந்த படைப்பாக வந்துள்ளது.  கண்டிப்பாக நல்ல படங்களை நீங்கள் மக்களிடம் கொண்டு சேர்ப்பீர்கள், அதே போல் இந்தப் படத்தையும் நீங்கள் கொண்டு போய் சேர்க்க வேண்டும் நன்றி.



இயக்குநர் பிரசாத் முருகன் பேசியதாவது, 

முதலில் இந்தக் கதையை கேட்டதும் அதற்கு ஆதரவு கொடுத்தது ஆனந்த் சார் அன்றிலிருந்து இன்று வரை என் மீது நம்பிக்கை வைத்தார்கள்.  பரத் சார், அபிராமி மேடம் என அனைவரும் பெரிய நடிகர்கள், என்னுடைய கதையை நம்பி இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்.  இந்தப் படம் ஒரு புது அனுபவமாக இருக்கும், ஒரு ஹைப்பர் லிங்க், நான்லீனியர் படம் சுவாரஸ்யமான படமாக இருக்கும். அனைவருக்கும் நன்றி.



நடிகை அபிராமி பேசியதாவது..

எங்கள் படக்குழு அனைவருக்கும் பெரிய வாழ்த்துகள், இப்போது தான் நான் இந்தப் படத்தை பார்த்து விட்டு வந்தேன், எங்கள் குழு மீது எனக்கு பெரிய நம்பிக்கை வந்துள்ளது. ஒரு சில படங்கள் தான், ஒரு பெரிய ஈடுபாட்டுடன் நம்மளை பயணிக்க வைக்கும், அது போன்ற படம் தான் இது. இயக்குநர் என்னிடம் கதையை சொல்லும்போது மொத்த ஸ்கிரிப்ட்டையும் கொடுத்தார், மிகவும் தெளிவாக இருந்தார் , இந்தப் படத்தில் பல உணர்வுகளை மிக அழகாக கடத்தியுள்ளார்.   படம் சிறப்பாக வந்துள்ளது, எனக்கு மட்டுமல்ல மொத்த குழுவுக்கும், இது ஒரு முக்கிய படமாக அமையும் நன்றி.



நடிகர் பரத் பேசியதாவது..,

எனக்கு மிச்சம் வைக்காமல், அனைவரும் அனைத்தையும் பேசிவிட்டனர், என்ன பேசுவது என்று தெரியவில்லை, இந்தப் படத்தில் நான் கதையின் நாயகனாக நடித்துள்ளேன், கடந்த ஐந்து ஆறு வருடங்களில், தமிழ் சினிமா வேறொரு இடத்திற்கு சென்று விட்டது. அதே போல தான் இந்தப் படமும் இருக்கும். எனக்கு இது ஒரு புதுமையான கதாபாத்திரம் , நான் மொத்த கதையையும் கேட்கவில்லை, அவர் சொன்ன சிறு நேரத்திலே, எனக்கு அவர் மீது எனக்கு நம்பிக்கை வந்தது. அதை நம்பித்தான் இந்த படத்தில் நடித்தேன். அதை சரியாக செய்தும் காட்டி விட்டார். படம் பார்த்தேன் நன்றாக வந்துள்ளது. படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர், முழு ஈடுபாட்டைக் கொடுத்து இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். இசை மற்றும் ஒளிப்பதிவு என அனைத்தும் சிறப்பாக அமைந்துள்ளது, படத்தின் தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி. அனைவரும் ஒன்றிணைந்து இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார்கள், கண்டிப்பாக உங்களுக்கு ஒரு வெற்றி கிடைக்கும். இப்படம் ரசிகர்களை கண்டிப்பாக சுவாரசியப்படுத்தும். உங்களுக்கு கண்டிப்பாக ஏமாற்றம் கிடைக்காது, படத்தை பார்த்து விட்டு உங்கள் கருத்துகளையும் ஆதரவையும் கொடுங்கள் நன்றி. 


இப்பபடத்தில் மாறுபட்ட  கதாபாத்திரங்களில் கன்னிகா,  தலைவாசல் விஜய், அருள் டி சங்கர், பொற்கொடி, பிஜிஎஸ், கல்கி, சையத் மற்றும் பலர் நடித்துள்ளனர். 


நெடுநல்வாடை  படத்தின் இசையமைப்பாளர் ஜோஸ் ப்ராங்க்ளின் இசை அமைத்துள்ளார்.  படத்தின் வசனத்தையும் பாடல்களையும் ஜெகன் கவிராஜ் எழுதியுள்ளார்.


காளிதாஸ் மற்றும் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். 'ராட்சசன்' படத்தின் எடிட்டர் சான் லோகேஷ் எடிட்டிங் பொறுப்பை ஏற்றுள்ளார்.  கலை இயக்குநராக நட்ராஜ் பணியாற்றியுள்ளார். படத்தின் சண்டைக்காட்சிகளை சுகன் அமைத்துள்ளார். காஸ்ட்யூம் டிசைனராக ரிஸ்வானா பணியாற்றியுள்ளார். 


படத்தின் லைன் புரொடியூசர்: ஸ்ரீதர் கோவிந்தராஜ், பொன்சங்கர் எக்ஸிகியூட்டிவ் புரொடியூசர்: கே.எஸ்.கே. செல்வகுமார்

தயாரிப்பு மேற்பார்வை: சிவமாணிக்க ராஜ்



விரைவில் இப்படத்தின் வெளியீட்டு தேதி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.


PRO KSK Selva & 

R Mani Madhan

Wednesday, 28 August 2024

மக்களோடு இணைந்து கேக் வெட்டி கொண்டாடிய போகுமிடம் வெகு

 *மக்களோடு இணைந்து கேக் வெட்டி கொண்டாடிய போகுமிடம் வெகு தூரமில்லை படக்குழுவினர்*








*மக்கள் ஆதரவு... நன்றி தெரிவித்த போகுமிடம் வெகு தூரமில்லை படக்குழுவினர்*


Shark 9 pictures சார்பில் சிவா கில்லரி தயாரிப்பில் அறிமுக இயக்குநர் மைக்கேல் கே.ராஜாவின் இயக்கத்தில் விமல், நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'போகுமிடம் வெகு தூரமில்லை'. இப்படத்தில் விமலுடன் கருணாஸ், ஆடுகளம் நரேன், பவன், தீபா சங்கர், சார்லஸ் வினோத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். 


இப்படம் கடந்த வாரம் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்கில் ஓட்டிக்கொண்டு இருக்கிறது. பொதுமக்கள் பலரும் படத்தை பாராட்டி வருகின்றனர். பதற வைக்கும் இடைவேளை காட்சியும், பரபர என்று செல்லும் திரைக்கதையும் ரசிகர்களை கவர்ந்து இருப்பதால் அதிக வரவேற்பு பெற்று வருகிறது. 


மனித உணர்வுகளை அழகாகவும் அழுத்தமாகவும் இயக்குனர் பேசி இருப்பதாக ரசிகர்கள் பொது மக்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள். மக்களின் இயல்பு வாழ்க்கையை அப்படியே படமாக்கி இருப்பதால் இப்படம் மக்களிடம் சென்றிருக்கிறது. தற்போது போகுமிடம் வெகு தூரமில்லை திரைப்படத்திற்கு அதிக திரையரங்குகள் கிடைத்துள்ளது. இது படக்குழுவினரை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. 


இந்த சந்தோஷத்தை கொண்டாடும் விதமாக போகுமிடம் வெகு தூரமில்லை படக்குழுவினர் திரையரங்கம் சென்று மக்களோடு இணைந்து கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்கள். மக்களின் ஆதரவுக்கு படக்குழுவினர் நன்றி தெரிவித்தனர்.