Featured post

உலக ஹெபடைட்டிஸ் தினத்தையொட்டி மாணவர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

 உலக ஹெபடைட்டிஸ் தினத்தையொட்டி மாணவர் விழிப்புணர்வு நிகழ்ச்சி மகாலட்சுமி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நுண்ணுயிரியல் துறை மற்றும் ...

Friday, 1 August 2025

மகாஅவதார் நரசிம்மா' முதல் வாரத்தில் 53 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்திருக்கிறது

 *'மகாஅவதார் நரசிம்மா' முதல் வாரத்தில் 53 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்திருக்கிறது*



இதயங்களை தூண்டும் வகையிலும், கலாச்சாரத்தை எழுப்பும் வகையிலும் வெளியான 'மகாஅவதார் நரசிம்மா'  முதல் வாரத்தில் இந்தியாவில் 53 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருக்கிறது. 


க்ளீம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் அஸ்வின் குமார் இயக்கத்தில் ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் வழங்கிய 'மகாஅவதார் நரசிம்மா' இந்தியாவில் வெளியான ஒரே வாரத்தில் 53 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருக்கிறது. இது வணிக ரீதியிலான வெற்றியை மட்டுமல்ல.. நாடு முழுவதும் ஆழமாக எதிரொலிக்கும் பிரத்யேக கலாச்சார அலையையும் குறிப்பிடுகிறது. 


இந்தப் படத்தை வித்தியாசப்படுத்துவது அதன் மன்னிப்பு கேட்காத சனாதனி எனும் மையமாகும். இந்து தத்துவம் - இந்து தர்மம் மற்றும் பண்டைய மதிப்பீடுகள் மீது ஒளியை போல் பிரகாசிக்கும் ஒரு கதை.. காட்சி ரீதியாக சக்தி வாய்ந்த கதை மூலம் உயிர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. இது தலைமுறைகள் முழுவதும் உரையாடல்களையும் ,விவாதங்களையும் தூண்டும் ஒரு ஆழமான கலாச்சார அனுபவம். மேலும் இது ஒரு திரைப்படத்தை விட அதிகமாக தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 


பார்வையாளர்களும், விமர்சகர்களும் இந்த மகாஅவதார் நரசிம்மாவை ' குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என இருவரும் பார்க்க வேண்டிய படம் ' என்று குறிப்பிடுகிறார்கள். இது பாரம்பரியத்தில் வேரூன்றி இருக்கும் அதே தருணத்தில் கல்வி கற்பிக்கும் மற்றும் ஊக்கமளிக்கும் வகையில் குடும்பங்கள் திரையரங்குகளுக்கு திரண்டு வருகின்றன. மகாஅவதார் நரசிம்மா பொழுதுபோக்கிற்காக மட்டுமல்லாமல், நம் மதிப்புகள், வரலாறு மற்றும் ஆன்மீக பாடங்களை அடுத்த தலைமுறைக்கும் கடத்துவதற்காக உருவாக்கப்பட்டிருக்கிறது.


இந்திய சினிமாவை அடித்தளமாகவும்,  பிரமாண்டமாகவும் கதை சொல்லல் மூலம் மறு வரையறை செய்வதில் புகழ்பெற்ற ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க பயணத்தில் மகாஅவதார் நரசிம்மா மற்றொரு மைல்கல். 'காந்தாரா', 'கே ஜி எஃப் 'மற்றும் ' சலார் 'ஆகிய படைப்புகளின் மகத்தான வெற்றியை தொடர்ந்து.. இந்த நிறுவனத்தின் அண்மைய வெளியீடான 'மகாஅவதார் நரசிம்மா' எனும் படைப்பும் இந்திய அடையாளத்தில் வேரூன்றிய மற்றும் சினிமா பார்வையில் பலமான கதைகளை வடிவமைக்கும் அவர்களின் பாரம்பரியத்தை தொடர்கிறது.

No comments:

Post a Comment