Featured post

Docu Fest Chennai தென் ஆசியாவிலும் அதற்கு அப்பாலும் உருவாகும்

Docu Fest Chennai தென் ஆசியாவிலும் அதற்கு அப்பாலும் உருவாகும் ஆவணப்படங்களை கொண்டாடும் ஒரு விழாவாகும். மறைந்துள்ள உண்மைகளை வெளிப்படுத்தவும், ...

Friday, 1 August 2025

நடிகர் விஜய் கௌரிஷ் ஹீரோவாக அறிமுகம் ஆகும் "கடுக்கா" திரைப்படத்தின்

 நடிகர் விஜய் கௌரிஷ் ஹீரோவாக அறிமுகம் ஆகும் "கடுக்கா" திரைப்படத்தின் டீசர் இன்று ஆகஸ்ட் 1 ஆம் தேதி வெளியாகியுள்ளது. எஸ்.எஸ்.முருகராசு இயக்கத்தில் நடிகர் விஜய் கௌரிஷ், ஸ்மேகா, ஆதர்ஷ், கொங்கு மஞ்சுநாதன், மணிமேகலை ,சுதா மற்றும் பலர் நடித்துள்ளனர்.






கடுக்கா திரைப்படத்தின் பாடல்களை நிலவை பார்த்திபனின் வரிகளில் இசை அமைப்பாளர் கெவின் டிகோஸ்டா இசையமைத்துள்ளார். சதீஷ்குமார் துரைக்கண்ணன்  ஒளிப்பதிவு செய்துள்ளார்.

 

மே மாதம் தேனிசை  தென்றல் தேவா அவர்களின் குரலில் "பொல்லாத பார்வை" என்ற  லிரிக்கல் வீடியோ பாடல் வெளியாகி, வித்தியாசமான முறையில் பத்திரிக்கை சந்திப்பில் பாடலின் ரீல்ஸ் வெளியிட்டு பிரபலம் அடைந்த நிலையில்,  இப்போது டீசர் வெளியிட்டு மக்களின் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

 ஏற்கனவே "கடுக்கா" திரைப்படத்தின்  போஸ்டரை இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர், தயாரிப்பாளர் எல்.கே.சுதீஷ், இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபன், தயாரிப்பாளர் 

டி.சிவா, இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் போன்ற பல பிரபலங்கள் வெளியிட்ட நிலையில் , இன்ஸ்ட்டா பிரபலங்களான நடிகை ஸ்ருதி நாராயணன் கடுக்கா பாடலின் ரீல்ஸ் வெளியிட்டு பிரபலமானது. மேலும் "கடுக்கா" திரைப்பட குழு  திருப்பத்தூர் மாவட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வின் போது பேருந்து நிற்காமல் சென்ற அரசு பள்ளி மாணவி சுகாசினி அவர்களுக்கு ஸ்கூட்டி ஒன்றை பரிசாக வழங்கி ஊக்குவித்து  கௌரவித்தது.  


 கிராமத்து காதல் கதையாக உருவாகியுள்ள "கடுக்கா" திரைப்படம் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது.  இரண்டு வாரங்களில் ட்ரெய்லர் வெளியாக உள்ள நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று படம் வெளியாக உள்ளது என திரைப்பட குழு அறிவித்துள்ளது. இது தமிழ் சினிமாவில் இதுவரை வராத வித்தியாசமான காதல் கதையாக இருக்கும் என்றும் திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்து அனைவரையும் சென்றடையும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment