Featured post

இறுதிக்கட்ட பணிகளில் ஜெய், சத்யராஜ், யோகிபாபு இணைந்து நடிக்கும்

 இறுதிக்கட்ட பணிகளில் ஜெய், சத்யராஜ், யோகிபாபு இணைந்து நடிக்கும்,  பேபி & பேபி !! விரைவில் திரையில் அழகான ஃபேமிலி எண்டர்டெயினர் பேபி &am...

Tuesday 2 April 2019

இந்த வாரம் அரசியல்வாதியாக இரண்டு படங்களில் மிரட்டவரும் கலை இயக்குனர் கிரண்..


என்னை முதன்முறையாக நடிகனாக பார்க்கநினைத்த இயக்குனர்  பார்த்திபன் சாருடன் நடித்தது மகிழ்ச்சி - கலைஇயக்குனர் கிரண் ..!

  ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் பாபா பாஸ்கர் இயக்கத்தில் உருவாகி வரும் "குப்பத்து ராஜா" படத்தில் முக்கிய வில்லனாக கலை இயக்குனர் கிரண் நடித்துள்ளார்.இதற்கு முன் பல படங்களில் நடித்திருந்தாலும் முதன்முறையாக முக்கிய வில்லன் பாத்திரத்தில்நடித்தது  தனக்கு மிகவும் புதிது என குறிப்பிட்டார்.

   குப்பத்துராஜா பட அனுபவம் பற்றி  கலை இயக்குனர் கிரண் கூறுகையில்-

        "நடிகர் பார்த்திபன் சார் தன என்னை முதன் முதலாக 'ஹவுஸ்புல்' படத்தில் நடிக்க அழைத்தார் அப்போது நான் மறுத்துவிட்டேன்.காரணம்   ஒரு தொழில்நுட்ப கலைஞனாக  பணிசெய்யும் போது  கம்பிரமாக பணியாற்றுவோம்.அதுவே ஒரு நடிகனாக கேமரா முன்னால் நடிக்கும் போது  படகுழுவினர் கவனம் முழுவதும் நம்மீது இருக்கும்.அது ஒருவித பயத்தையும் பதட்டத்தையும் உருவாக்கும்.இந்த பயம் எனக்கு மட்டுமல்ல  புதிதாக நடிக்கும் ஒவ்வொரு தொழில்நுட்ப கலைஞருக்கும்  இருக்கும்.பல டேக்  எடுக்கும் போது அனைவரும் ஏளனமாக பார்ப்பார்கள் என்ற பயம்  வந்தது . இப்போது பல  படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்தபின்பு  தற்போது தான் அந்த பயம் தணிந்து எனக்குள் இருக்கும் நடிகனை வெளிகொண்டுவந்திருக்கிறது 

.பின்பு ஒருமுறை 'நானும் ரௌடிதான்' படப்பிடிப்பில் நடிக்கும்போது தான் முன்பே நடிக்க அழைத்தபோது  மறுத்ததை பார்த்திபன் நினைவுகூர்ந்தார்.நான் அப்போது நடிக்காததற்கு அந்த பயம் தான்  காரணம் என்றேன். 

    

    தற்போது குப்பத்துராஜாவில் அதே நடிகர் பார்த்திபனுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தது பெருமையாக இருந்தது.இந்த படத்தில் கவுன்சிலராக   படம் முழுக்க வரும் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.எனது நடிப்பை பாராட்டி  ஜி.வி.பிரகாஷ் நான் வரும் காட்சிகளில் மட்டும் தனியாக R.R வாசித்திருப்பதாக கூறியது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

    நான் சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்தவனாக இருந்தாலும் மெட்ராஸ் பாஷை என்னும் சென்னை வழக்கு மொழி எனக்கு சரிவர வருவதில்லை.குப்பத்துராஜா படத்தில் என் கதாபாத்திரப்படி நான் சென்னை பாஷை பேசி நடிக்க வேண்டி இருந்தபோது இயக்குனர் பாபா பாஸ்கர் எனக்கு கற்று கொடுத்து நடிக்க வைத்தது மறக்கமுடியாத அனுபவமாக இருந்தது.


    குப்பத்துராஜா மட்டுமின்றி நடிகரும் தயாரிப்பு மேற்பார்வைர்வையாளருமான 'நான் கடவுள்' கிருஷ்ணமுர்த்தி 'குடிமகன்' என்ற திரைப்படத்தில் முக்கிய வில்லன் பாத்திரத்தில் நடிக்கவைத்துள்ளார்.டாஸ்மாக் முதலாளியாக அமைதியான வில்லதனத்தில்  குள்ளநரித்தனம் செய்யும் அரசியல்வாதி பாத்திரத்தில்  நடித்தது என் நடிப்பு திறமைக்கு பெருமை சேர்க்கும்  என நம்புகிறேன்.


     போலீஸ் அதிகாரி,அரசியல்வாதி என என்னை நானே  வெவ்வேறு மனிதனாக பார்ப்பதை நான் மிகவும்  ரசித்திருக்கிறேன்  இப்படி  எனக்குள் இருக்கும் பன்முக கலைஞனை காணும்போது நடிகனாக இருப்பது எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது .


 கலை இயக்குனர் பணி  என்பது என் தாய்வீடு போன்றது. நான்  சிறந்த கலை இயக்குனராக பயணிக்கவும்  விரும்புகிறேன்.அதேபோல் நடிப்பு என்பது என் மனைவி போல அதனோடும் பயணிக்க விரும்புகிறேன் அதனால் நடிப்பு 'கலைஇயக்குனர் இரண்டும் என் இரண்டு கண்கள் போல.. 

    எனக்குள் இருக்கும் பல பரிமாணங்களை எனக்கே அறிமுகம் செய்யும் பாத்திரங்களில் நடிப்பது ஒரு நடிகனாக ஆத்ம திருப்தியை தருவதால்,நடிகனாக இருப்பதிலும் பெருமையடைகிறேன்.

No comments:

Post a Comment