Featured post

Karuppu Pulsar Tamil Movie Review

 Karuppu Pulsar Movie Review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம  karuppu pulsar படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது mu...

Tuesday, 30 April 2019

இந்தியாவின் முதல் முத்தொகுப்பு திரைப்படமான "பிரம்மாஸ்திராவின்" சமீபத்திய முக்கியமான பகிர்வு இது

அயன் முகர்ஜி பிரம்மாஸ்திரா:

அனைத்து சினிமா துறை ஆர்வலர்களுக்கும் ரசிகர்களுக்கும் மற்றும் ஊடகத் துறையினருக்கும்:



இப்படத்தின் கனவானது என்னுள் 2011 இல் உருவானது;  2013இல் Yeh Jawaani Hai Deewani படம் முடித்தவுடன் இப்படத்திற்கான கதை-திரைக்கதையை
உருவாக்கத் தொடங்கினேன்.

கதை, திரைக்கதையாக்கம், கதாப் பாத்திரப்படைப்பு,  இசை மட்டுமல்லாமல் vfx துறையிலும் நம்மை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லப் போகும் ஒரு பிரமிப்பான-பிரமாண்டமான  இமாலய முயற்சி இது.

இப்படத்தின் லோகோவை(Logo) 2019 கும்பமேளாவில் பிரம்மாண்டமாக ஆகாயத்தில் வெளியிட்டோம்; அப்போது கூட இப்படத்தை 2019 கிறிஸ்துமஸ் அன்று வெளியிட முடியுமென உற்சாகமாக இருந்தோம்.

ஆனால் கடந்த ஒரு வார காலமாக எங்கள் படத்தின் vfx தொழில்நுட்பக் குழுவினர் இப்படத்தை நினைத்த அளவுக்கு பிரம்மாண்டமாக கொண்டு வர சற்று அதிக காலம் தேவை என கருத ஆரம்பித்தனர்.

இதை மனதில் கொண்டு 'பிரம்மாஸ்திரா' திரை வெளியீட்டை 2019 கிறிஸ்துமஸ் லிருந்து 2020 கோடை விடுமுறை காலத்திற்கு தள்ளிவைக்க முடிவெடுத்திருக்கின்றோம்.

இந்த தாமத காலமானது இக்கனவு திரைப்படத்தை செவ்வன முடிப்பதற்கும், திரைப்படத்தை நேசிக்கும் ஆர்வலர்களையும் ரசிகர்களையும் கொண்ட நமது நாடு பெருமைப்பட்டுக் கொண்டாடும் அளவிற்கு திரைக்காவியமாக உருவாவதற்கு ஏதுவானதாக இருக்கும் என்பதில் உறுதியாய் இருக்கிறோம் .

நன்றியுடன்- அயன் முகர்ஜி -இயக்குனர் பிரம்மாஸ்திரா.

No comments:

Post a Comment