Featured post

Charming Star Sharwa, Blockbuster Maker Sampath Nandi, KK Radhamohan, Sri Sathya Sai Arts’ Prestigious Pan India Project

Charming Star Sharwa, Blockbuster Maker Sampath Nandi, KK Radhamohan, Sri Sathya Sai Arts’ Prestigious Pan India Project #Sharwa38 Titled Bh...

Monday, 22 April 2019

கல்லூரி விடுதிகளில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம் “ மயூரன்


PFS  ஃபினாகில்  பிலிம் ஸ்டுடியோ என்ற பட நிறுவனம் சார்பில் K.அசோக்குமார்P.ராமன், G.சந்திரசேகரன்,  M .P. கார்த்திக் ஆகிய நால்வரும் இணைந்து தயாரித்திருக்கும் படம் “ மயூரன் “  மயூரன் என்றால் விரைந்து உன்னை காக்க வருபவன்வெற்றி புனைபவன் என்று பொருள்.


வேலாராமமூர்த்திஆனந்த்சாமி (லென்ஸ் )அமுதவாணன்( தாரை தப்பட்டை ),  அஸ்மிதா ( மிஸ் பெமினா வின்னர் )  மற்றும் கைலாஷ்சாஷிபாலாஜிராதாகிருஷ்ணன்ரமேஷ்குமார்கலைசிவா ஆகியோர் நடித்துள்ளனர். குணச்சித்திர நடிகர்கள் அனைவரும் கூத்துப்பட்டறையைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


ஒளிப்பதிவு           -        பரமேஷ்வர் ( இவர் சந்தோஷ்சிவனிடம்  உதவியாளராக பணியாற்றியவர் )
இசை                    -        ஜுபின் ( பழையவண்ணாரப்பேட்டை )  மற்றும்  ஜெரார்ட் இருவரும்.
பாடல்கள்             -        குகை மா.புகழேந்தி 
எடிட்டிங்              -         அஸ்வின்
கலை                    -        M.பிரகாஷ் 
ஸ்டன்ட்              -        டான்அசோக்
நடனம்                  -        ஜாய்மதி
மக்கள் தொடர்பு  - மணவை புவன்   


தயாரிப்பு  - K.அசோக்குமார்P.ராமன், G.சந்திரசேகரன்M .P. கார்த்திக்                                               
கதைதிரைக்கதைவசனம்இயக்கம்  -  நந்தன் சுப்பராயன் ( இவர் இயக்குனர் பாலாவின் நந்தா,பிதாமகன்  போன்ற படங்களில் உதவியாளராக பணியாற்றியவர் )
படம் பற்றி இயக்குனர் நந்தன்சுப்பராயன் கூறியது...
சாதாரண குடும்பத்தின் கனவுகளை சுமந்துகொண்டு விடுதியில் தங்கி பொறியியல் உயர்கல்வி படிக்க வரும் மாணவன்ஒரு நள்ளிரவில் காணாமல் போனால் என்னவாகும் என்பதே கதை.
மொத்த குடும்பத்தின் ஒற்றை ஆதாரமான  அவனைத் தேடிச் செல்கையில் காணாமல் போனதின் மர்ம முடிச்சுகள் மேலும்மேலும் இறுகிஅது சிக்கல்களையும்பிரச்சனைகளையும் உருவாக்குகின்றது. கல்லூரி விடுதிகள் என்பது வெறும் தங்கி போகும் வாடகை சத்திரம் அல்ல அது வாழ்க்கையை செதுக்கும் பட்டறை களம். அவர்களது எதிர்காலத்தை நல்ல விதமாகவோ மோசமானதாகவோமாற்றும் ரசவாதக் கூடம். 
நட்புஅன்புநெகிழ்வு,  குற்றப் பின்னணிகுரூர மனம்எனும் பல்வேறு மனித இழைகளால் நெய்யப்பட்ட உலகம்தான் கல்லூரி விடுதிகள்.
சாதாரண கூழாங்கற்கள்வைரக்கற்களாகவும் வைரக்கற்கள் கண்ணிமைக்கும் வினாடிகளில் காணாமல் போகவும் வாய்ப்பு உள்ள இடம். அங்கு ஏற்படும் பிரச்சனைகள் ஒரு தனி மனித வாழ்வை எவ்வாறு தலைகுப்புற கவிழ்த்து போடுகிறது என்பதை பற்றி பேசும்
படம் தான் மயூரன்.ஒரு அருமையான கதை களத்தை விறுவிறுப்பான திரைக்கதை
தேன் தடவி உருவாக்கியிருக்கிறோம். 
படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது என்றார் இயக்குனர் நந்தன் சுப்பராயன்.

No comments:

Post a Comment