Featured post

Daddy’s Home!’ Yash Roars In & as Raya in a Bold Toxic Birthday Reveal*

Daddy’s Home!’ Yash Roars In & as Raya in a Bold Toxic Birthday Reveal* Yash Is Raya. Period. ‘Daddy’s Home’ Echoes Through a Savage Tox...

Friday, 19 April 2019

ஓலைச்சுவடி பின்னணியில் உருவாகியுள்ள படம் கள்ளத்தனம்



கண்ணன் கிரியேசன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக K.தங்கவேலு தயாரித்திருக்கும்  படம் “ கள்ளத்தனம் “இந்த படத்தின் யுகன், வினோ இருவரும் கதாநாயகர்களாக நடித்திருக்கிறார்கள்.கதாநாயகிகளாக சொப்னா நகினா இருவரும் நடித்துள்ளனர். மற்றும் மணிகண்ணன், முல்லை, அம்மு மார்டின்,அல்வாவாசு, கோவைசெந்தில், கிச்சி மார்டின்இவர்களுடன் ஏராளமான கூத்துப்பட்டறை நடிகர்களும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு  - எடிசன் M.S. அமர்நாத்
இசை  -  ரவிகிரண்
எடிட்டிங்  - லட்சுமணன்
நடனம்  -  ராஜு
தயாரிப்பு -   K.தங்கவேலு
இணை தயாரிப்பு – T.R.கார்த்திக் தங்கவேலு  
கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் – C.தண்டபாணி
படம் பற்றி இயக்குனர் C.தண்டபாணி கூறியது..


ஹீரோ கிராமத்தில் வேளாண்மை படிப்பு படித்துவிட்டு அங்குள்ள விவசாய மக்களுக்கு மண் ஆராய்ச்சி செய்து உதவி வருகிறார். அந்த சமயத்தில் ஊரில் வில்லன் பல வகையில் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறான். எதிர்பாரா விதமாக ஹீரோ வீட்டில் புதையல் சம்மந்தமாக ஒரு ஓலைச் சுவடி இருப்பதும் அதில் பல ரகசியங்கள் அடங்கி இருப்பதை எப்படியோ தெரிந்துகொண்டு வில்லன் அந்த ஓலைச் சுவடியை கைப்பற்ற நினைக்கிறான். இதனால் நாயகனுக்கும் வில்லன் கும்பலுக்கும் சண்டை நடக்கிறது. இறுதியில் ஓலைச்சுவடியை வில்லன் கைபற்றினானா இல்லை நாயகன் அதை தடுத்தாரா புதையல் யாருக்கு கிடைத்தது என்பதை காமெடி கலந்து கமர்ஷியலாக சொல்லுகிறோம்.



படப்பிடிப்பு  செங்கம் சாத்தனூர், செஞ்சி, வேலூர் போன்ற இடங்களில் நடைபெற்றது. விரைவில் படம் திரைக்கு வர உள்ளது என்றார் இயக்குனர் C.தண்டபாணி.



No comments:

Post a Comment