Featured post

Karuppu Pulsar Tamil Movie Review

 Karuppu Pulsar Movie Review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம  karuppu pulsar படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது mu...

Tuesday, 30 April 2019

நந்திவர்மன் வரலாறு குறித்த தெருக்கூத்து நிகழ்ச்சி

நான் சங்ககிரி ராஜ்குமார் வெங்காயம் திரைப்பட இயக்குனர்.



தமிழர்களின் பாரம்பரிய கலையான தெருக்கூத்துக் கலை நலிவுற்று இருக்கும் நிலையில், அதனை தற்போதைய தலைமுறை இளைஞர்களுக்கும் ரசிக்கின்ற வகையில் நவீனப்படுத்தி, கால அளவை குறைத்து, சுவாரஸ்யமான நடையில் மக்களிடம் கொண்டு செல்ல சில முன்னெடுப்புகளைச் செய்து வருகிறேன்.

     திருக்குறளை கிராமப்புற மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் அனைத்து குறளையும் தெருக்கூத்து வடிவில்  தயாரித்து வருகிறோம்.
( அதற்கான இணைப்பு: https://youtu.be/FlFPIxO7v1c  )

     நமது தமிழ் மன்னர்களின்  வரலாற்றையும் சமகால அரசியலையும்  பேசக்கூடிய கலையாகவும்  மேம்படுத்தி மக்களிடம் கொண்டு செல்ல முயன்று வருகிறோம்.
( அதற்கான இணைப்பு: https://youtu.be/TYBuB4kwWLY )

     அவ்வகையில் தமிழுக்காக முதல் முதலில் தன்னுயிர் நீத்த நந்திவர்மனின் வரலாற்றை கடந்த ஆண்டு கம்போடியா அங்கோர்வாட் கோவில் அருகே தெருக்கூத்து வடிவில் நடத்தினோம்.

  *  தற்போது , இந்நிகழ்ச்சி 28/04/ 2019 ஞாயிற்றுக்கிழமை, சென்னை- தி நகரில் உள்ள சர். பிட்டி தியாகராயர் ஹாலில் காலை 10 மணி, மாலை 3: 30 மணி என்று இரண்டு காட்சிகளாக நடத்தவிருக்கிறோம்.*

    இந்நிகழ்ச்சியில் தமிழகத்தின் அனைத்து அரசியல் இயக்கங்களின் தலைவர்கள், திரைத்துறையினர் எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களும் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.

இந்நிகழ்ச்சி நடக்கவிருக்கும் செய்தியை மக்களிடம் முன்கூட்டி கொண்டு சேர்க்கவும் நிகழ்ச்சி நடக்கும் பொழுது வந்திருந்து நிகழ்ச்சியை பதிவுசெய்து மக்களிடம் கொண்டு செல்லவும் தங்களை அன்போடு அழைக்கிறேன்.

No comments:

Post a Comment