Featured post

ROCKING STAR YASH’S TOXIC BRINGS RAYA AND TICKET TO THE FORE IN NEW POSTER; LOCKS WEDNESDAY, 26 AUGUST 2026 WORLDWIDE RELEASE

 ROCKING STAR YASH’S TOXIC BRINGS RAYA AND TICKET TO THE FORE IN NEW POSTER; LOCKS WEDNESDAY, 26 AUGUST 2026 WORLDWIDE RELEASE* Rocking Star...

Friday, 12 February 2021

தமிழ் ஆந்தாலஜி திரைப்படம் “SSHHH”

தமிழ் ஆந்தாலஜி திரைப்படம் “SSHHH” படப்பிடிப்பு முடிந்தது 


காமத்தை மையமாக வைத்து உருவாகும் தமிழ் ஆந்தாலஜி திரைப்படமான “SSHHH”, தமிழில் முதல் முறையாக மாறுப்பட்ட கோணத்தில் உருவாகும் ஆந்தாலஜி  திரைப்படமான  “SSHHH”  படத்தின், சமீபத்திய அறிவிப்பே ரசிகர்களிடம் பெரும் ஆவலை தூண்டியது. இந்த நிலையில் தற்போது “SSHHH”  படக்குழு  தமிழ் சினிமா முன்னெப்போதும் கண்டிராத வகையில், மிக விரைவாக படத்தின் படப்பிடிப்பினை முடித்து உள்ளனர்.

நான்கு வேறுவேறு வயது நிலைகளில், வேறுவேறு காலகட்டங்களில் வாழும் மனிதர்களின் காம உணர்வுகளை பேசும், நான்கு அழகான கதைகளை  உள்ளடக்கிய, இத்திரைப்படத்தின் இரண்டு பகுதிகளுக்காக, 1999 ஆம் ஆண்டு மற்றும், 2005 ஆம் ஆண்டு காலத்தை பிரதிபலிக்கும் வகையிலான வீடு மற்றும் இடம் செட் போடப்பட்டு படமாக்கப்பட்டது. 2010 மற்றும் 2020 காலகட்டங்கள் நேரிடையான லொகேஷன்களில் படமாக்கப்பட்டது.














Lust Stories” எனும் ஹிந்தி படத்தினை போன்று தமிழில் காமத்தினை பேசுபோருளாக கொண்டு உருவாகும் முதல் திரைப்படம் தான் “SSHHH”. BIG PRINT PICTURES  சார்பில் IB கார்த்திகேயன் இப்படத்தினை தயாரிப்பதோடு படத்தின் நான்கு கதைகளில் ஒரு பகுதியினை இயக்குகிறார். மற்ற மூன்று  கதைகளை

 பிருத்வி ஆதித்யா ( க்ளாப் படத்தின் இயக்குநர்), வாலி மோகன் தாஸ் ( அறிமுகம் ), ஹரீஷ் GY ( அறிமுகம் ) இயக்குகின்றனர்.


இப்படத்தில் தமிழ் சினிமா பிரபலங்களான ஶ்ரீகாந்த், இனியா, சோனியா அகர்வால், ஐஷ்வர்யா தத்தா, க்ரிஷா க்ரூப் ( கோலி சோடா 2, கிளாப் புகழ் ), அறிமுக நடிகர் மாறன் மற்றும் மைம் கோபி நடித்துள்ளனர். XLLENT PICTURE BOX LLP சார்பில் விவேக் ரவிசந்திரன் மற்றும்  DAINA PICTURES சார்பில் திரு. சுரேஷ் நல்லுசாமி  இப்படத்தினை இணைந்து தயாரித்துள்ளனர்.  PENCIL TOWN TALKIES இப்படத்தின் லைன் புரடக்சன் செய்துள்ளனர்.



தயாரிப்பாளர் IB கார்த்திகேயன் முன்பு கூறியது போல்,

 “SSHHH”  படம், காமத்தை பகடி செய்யாமல், அதிலிருந்து மாறுபட்டு, இயற்கையான காமத்தின், உணர்பூர்வமான மறுபக்கத்தை, காட்டும் படைப்பாக இருக்கும். படத்தின் ட்ரெய்லர்  மற்றும் உலகளாவிய வெளியீடு குறித்த அறிவிப்பு, மிகவிரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.



No comments:

Post a Comment