Featured post

உலக உணவு தினத்தை முன்னிட்டு, உணவில்லாதவர்களுக்கு உணவளிக்கும்

 *உலக உணவு தினத்தை முன்னிட்டு, உணவில்லாதவர்களுக்கு உணவளிக்கும் திட்டம்  நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் துவக்கி வைத்தார் !!* ஹெல்ப் ஆன் ஹங்கர் பௌண்டேஷ...

Monday, 13 October 2025

உங்கள் கனவுகளை ஒருபோதும் கைவிடாதீர்கள்!”- கார் எக்ஸ்போவில் 2025 ரசிகர்களை கவர்ந்த, சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ்

 *உங்கள் கனவுகளை ஒருபோதும் கைவிடாதீர்கள்!”- கார் எக்ஸ்போவில் 2025 ரசிகர்களை கவர்ந்த, சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ் !!*









ஹைதராபாத்தில் நடைபெற்ற தி ஃபாஸ்ட் அண்ட் க்யூரியஸ் - தி ஆட்டோ எக்ஸ்போ 2025 நிகழ்ச்சியில் சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ் கலந்துகொண்டு ரசிகர்களுடன் உரையாடி, தனது வாழ்க்கை அனுபவங்கள், போராட்டங்கள் மற்றும் சினிமா பயணம் குறித்து ஊக்கமூட்டும் கருத்துக்களை பகிர்ந்துகொண்டு ரசிகர்களை மகிழ்வித்தார். பாதுகாப்பாக வாகனம் ஓட்ட வேண்டும் என்ற முக்கியமான செய்தியுடன், அவருடைய கருத்துக்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.


நிகழ்ச்சியைத் தொடங்கிய சாய் துர்கா தேஜ், அனைவருக்கும் தலைக்கவசம் அணிந்து பாதுகாப்பாக ஓட்டுமாறு வேண்டுகோள் விடுத்தார்..,“அனைவரும் ஹெல்மெட் அணியுங்கள். வேகமாக ஓட்டாதீர்கள். பாதுகாப்பாக ஓட்டுங்கள்,”என்று கூறிய அவர், தனது உயிருக்கு ஆபத்தான விபத்துக்குப் பிறகு வாழ்க்கை குறித்து தன் கண்ணோட்டம் மாறியதை வெளிப்படுத்தினார்.


“அந்த விபத்துக்குப் பிறகு எனக்கு நிறைய சவால்கள் வந்தது. ஒரு கட்டத்தில் சரியாக பேச முடியாத நிலையும் வந்தது. அப்போது நான் தினமும் உடற்பயிற்சி செய்து, புத்தகங்கள் வாசித்தேன். இப்போது எல்லாரிடமும் சொல்ல விரும்புவது ஒன்றே — ‘பாதுகாப்பே எப்போதும் முதன்மையானது.’”



அவர் தனது தொடக்கக் காலப் போராட்டங்களை நினைவுகூர்கையில்..,

 

“நான் என் ப்ரொஃபைல் எடுத்துக்கொண்டு பல ஆபீசுகளுக்குப் போனேன். சிலர் என் போட்டோவை பயன்படுத்தி நிலக்கடலை சாப்பிட்டார்கள்! அப்படியொரு நேரத்தில் மஞ்சு மனோஜ் அவர்களின் ஆபீசில் இருந்தபோது வைகுண்டம் யு.வி.எஸ். சௌதரி அவர்கள் தான்  என்னை முதன் முதலில் தேர்ந்தெடுத்தார்.— அப்படித்தான் ‘ரே’ படம் ஆரம்பமானது. பண பிரச்சனைகள், தாமதங்கள் வந்தாலும்  நான் என்  கனவை ஒருபோதும் கைவிடவில்லை.”



அவரது வாழ்க்கையில் மிகப் பெரிய ஊக்கமாக இருப்பவர் பவன் கல்யாண் என்று சாய் துர்கா தேஜ் பெருமையுடன் கூறினார்..,


“பவன் கல்யாண் அவர்கள் எனக்கு ஒரு குருவைப் போல. சிறுவயதிலிருந்து அவர் என்னை நடிப்பு, நடனம், ஜிம்னாஸ்டிக்ஸ், கிக் பாக்சிங் ஆகிய எல்லாவற்றிலும் வழிகாட்டி வந்திருக்கிறார். எனக்குப் பிடித்த ஆசிரியர் மாதிரி அவர் எப்போதும் என்னை ஊக்கப்படுத்துபவர்.”


சிரமங்களை எப்படி சமாளிப்பீர்கள் என்ற கேள்விக்கு அவர் சிரித்தபடி பதிலளித்தவர்.., “நான் எந்த சூழ்நிலையையும் லைட்டாகவே எடுத்துக்கொள்கிறேன். அதிகமாக சீரியஸாக நினைப்பதில்லை. கடினமான தருணங்களிலும் நான் சிரித்தபடியே முன்னேறுகிறேன். எனக்கு விபத்து நடந்த பிறகு ‘நான் கோமாவில் இருந்தேன்’ என்று சொல்லவில்லை — ‘நான் ஹாஸ்பிட்டலுக்கு ரிலாக்ஸ் பண்ணிக்க போயிருந்தேன்’ என்று தான் சொன்னேன்!”


சினிமா பற்றி பேசும்போது அவர் கூறியதாவது..? “எனக்கு ‘ரிபப்ளிக்’ படம் மிகவும் பிடிக்கும், குறிப்பாக அதன் கிளைமேக்ஸ். அப்படி ஒரு சமூக அர்த்தமுள்ள கதைகள் மீண்டும் கிடைத்தால் கண்டிப்பாக செய்வேன். ஆதார் கார்டை சமூக ஊடகக் கணக்குகளுடன் இணைப்பது அனைவருக்குமான பொறுப்பு என்று நம்புகிறேன்.”


கார்களை மிக விரும்பும் சாய் துர்கா தேஜ், தனது கனவு வாகனத்தை குறித்து கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்..,“எனக்கு என் ராயல் என்ஃபீல்டும், மஹிந்திரா தார்- காரும் ரொம்பவும் பிடிக்கும். ஆனால் என் கனவு கார் 1968 ஷெல்பி GT 500 மஸ்டாங்க். ஒருநாள் அதை கண்டிப்பாக வாங்குவேன்.”


தனது நேர்மை,  தாழ்மை, உறுதியின் மூலம், சாய் துர்கா தேஜ் திரையுலகத்திலும் வாழ்க்கையிலும் உண்மையான ஹீரோவாக ரசிகர்களின் இதயங்களை வென்று வருகிறார் — உண்மையான ஹீரோக்கள் சினிமாவில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் தங்கள் மனப்பாங்கினாலும் மக்களை ஊக்கப்படுத்துவதை அவர் நிரூபித்துள்ளார்.



*

No comments:

Post a Comment