நடிகை சிம்ரன் வெளியிட்ட 'ரெட் லேபிள் ' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!
கோயம்புத்தூர் பின்னணியில் ஒரு கல்லூரியில் நடக்கும் கொலையும் கொலை சார்ந்த சம்பவங்களும் கொண்ட மர்மமான கதை 'ரெட் லேபிள்' என்கிற திரைப்படமாக உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தை கே .ஆர். வினோத் இயக்கியுள்ளார். ரெவ்ஜென் பிலிம் பேக்டரி சார்பில் லெனின் தயாரித்துள்ளார். இப்படத்தின் கதையை பொன்.பார்த்திபன் எழுதியுள்ளார்,முழுக்க முழுக்க இதன் படப்பிடிப்பு கோயம்புத்தூர் நகரில் நடைபெற்றுள்ளது.
சதீஷ் மெய்யப்பன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கைலாஷ் மேனன் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பு செய்துள்ளார் லாரன்ஸ் கிஷோர்.
நாயகனாக லெனின், நாயகியாக அஸ்மின் ஆகியோர் நடித்துள்ளனர்.
இவர்களுடன் முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குநர் ஆர். வி. உதயகுமார் நடித்துள்ளார். கெளரவ வேடத்தில், முனிஷ்காந்த் நடித்துள்ளார்.
'ரெட் லேபிள்' தலைப்பு " இந்த பெயரைச் சொன்னதுமே டீ வகையின் பெயர் என்றோ,மது வகையின் பெயர் என்றோதான் நினைக்கலாம். ஆனால் இரண்டும் அல்ல.ரெட் என்பது புரட்சியையும் லேபிள் என்பது அடையாளத்தையும் குறிக்கும். அவ்வகையில் அடையாளத்தைத் தேடும் பல மனிதர்களின் கதையாகவும்
இந்தப் படம் இருக்கும்.
இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகை சிம்ரன் வெளியிட்டுள்ளார்.பொதுவாகவே சிம்ரன் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர் அல்ல.
புதிய படக் குழுவினரை ஊக்குவிக்க வேண்டுமென்ற நல்லெண்ணத்தில் முதல் முறையாக சிம்ரன் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment