Desiya Thalaivar Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம தேசிய தலைவர் படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படம் இன்னிக்கு தான் release ஆயிருக்கு. இது பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வாழக்கை கதையை சொல்லுற படம். இவரோட journey எப்படி இருந்தது, எப்படி அரசியல் க்கு வந்தாரு, சுதந்திரத்துக்காக இவரு பண்ண செயல்கள் என்ன ன்றதா ரொம்ப detailed அ காமிச்சிருக்காங்க.
இந்த படத்துல main அ அவரோட political career அ பத்தி தான் பேசிருக்காங்க. முக்கியமா vallabhai patel ஓட request க்கு இணங்கி legislative assembly ல இவரு போனது, அப்புறம் வைத்தியநாத iyar நடத்துன சமூக போராட்டம் ஆனா temple entry act க்கு இவரு support பண்ணது னு இவரோட வாழ்க்கை ல நடந்த முக்கியமான விஷயங்களை காமிச்சிருக்காங்க. அதே மாதிரி immanuvel sekaran case ல இவரோட involvement யும் இருந்தது ன்ற குற்றச்சாட்டு அந்த காலத்துல இருந்தது. இந்த மாதிரி controversial ஆனா விஷயத்தையும் படத்துல கொண்டு வந்திருக்காங்க.
இவரை பத்தி தெரியாதவங்க யாருமே கிடையாது. பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஓட character study எப்படி இருக்குமோ அந்த மாதிரி இந்த படத்துல அவரோட வாழக்கை ல நடந்த சில முக்கியமான விஷயங்களை படத்துல கொண்டு வந்திருக்காங்க. இதெல்லாமே ரொம்ப அழகா deal பண்ணிருக்காரு இந்த படத்தோட director aravind raj. இந்த மாதிரி ஒரு challenging ஆனா character அ மக்களுக்கு cinema மூலம் உயிரோட கொண்டு வந்திருக்காரு னு சொல்லணும். அவரு இருந்த period க்கு ஏத்த மாதிரி settings எல்லாம் பக்காவா குடுத்திருக்காங்க. மக்கள் கூட்டம் கூடுறது, மக்கள் கிட்ட பேசுறது னு எல்லா detailing யும் super அ குடுத்திருக்காங்க.
bashir ன்றவரு தான் thevar கதாபாத்துரத்தில நடிச்சிருக்காரு. இவரோட dialogue delivery, body language எல்லாமே super அ இருந்தது. அப்படியே thevar அ screen ல கொண்டு வந்துட்டாரு னு தான் சொல்லணும். bharathiraja , radharavi , M S bhaskar , vagai chandrasekar இவங்களோட characters யும் அற்புதமா இருந்தது. அதோட படத்துல நடிச்சிருக்க மத்த supporting actors யும் அவங்களோட role அ புரிஞ்சுகிட்டு best ஆனா performance அ குடுத்திருக்காங்க. படத்தோட technical aspects அ பாக்கும் போது ilayaraja ஓட இசையும் akilan ஓட cinematography அப்புறம் venkatramanan ஓட editing யும் இந்த படத்துக்கு பக்க பலம் தான்.
ஒரு நல்ல திரைப்படம் தான் இந்த தேசிய தலைவர். கண்டிப்பா இந்த படத்தை பாருங்க.

No comments:
Post a Comment