Featured post

Sony Entertainment India releases trailer of action-thriller, Sisu: Road to Revenge; releases on

 *Sony Entertainment India releases trailer of action-thriller, Sisu: Road to Revenge; releases on 21st November, 2025 in English, Hindi, Ta...

Thursday, 30 October 2025

ஒற்றுமையை வலியுறுத்தும் 'RAGE OF KAANTHA' தமிழ்-தெலுங்கு ராப் பாடல் டீசர்

 *ஒற்றுமையை வலியுறுத்தும் 'RAGE OF KAANTHA' தமிழ்-தெலுங்கு ராப் பாடல் டீசர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று இணையத்தில் டிரெண்டாகியுள்ளது!*



வெளிவர இருக்கும் 'காந்தா' திரைப்படத்தின் டைட்டில் டிராக்கான 'RAGE OF KAANTHA' புதிய எனர்ஜியையும் அதிர்வையும் இசை உலகில் அறிமுகப்படுத்தியுள்ளது. 


இது வெறும் பாடல் என்று கடந்து செல்ல முடியாத அளவுக்கு தீவிரமான, கதாபாத்திரத்தால் இயக்கப்படும் இசையமைப்பு, கலாச்சாரங்கள், மொழிகள் மற்றும் உணர்ச்சிகளைக் கடந்து ஒற்றுமையை எதிரொலிக்கும் வகையில் தமிழ்- தெலுங்கில் ராப்-ஸ்டைல் டிராக்காக வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. இந்தப் பாடலின் டீசர் வெளியான 32 நிமிடங்களிலேயே டிவிட்டரில் டிரெண்ட் ஆனது.  


இன்று வெளியாகும் 'RAGE OF KAANTHA' பாடல் வரிகள் கிளர்ச்சி, மன உறுதி மற்றும் லட்சியத்தை பிரதிபலிப்பதாக இருக்கும். மேலும், இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் நல்லிணக்கத்தை பிரதிபலிக்கும் வகையில் பாடலில் ராப் இசையுடன் கூடிய வசனங்கள் தமிழ் மற்றும் தெலுங்கில் இடம்பெறும்.  


ஜானு சந்தாரின் இசை இருமொழிகளுக்கானது மட்டுமல்ல, இருமொழி ரசிகர்களின் மனங்களையும் உள்ளடக்கியது. ஒன்று உணர்வையும் மற்றொன்று தடைகளுக்கு எதிரான கோபம் மற்றும் தன்னம்பிக்கையின் நெருப்பாக இருக்கும். அதிரும் இசை, பவர்ஃபுல் கிட்டார்ஸ் மற்றும் புதிய வடிவத்தில் பழங்கால இசை என இந்தப் புதுமையை பாடலில் மட்டுமல்லாது படத்திலும் ரசிகர்கள் எதிர்பார்க்கலாம். 


துல்கர் சல்மான், சமுத்திரக்கனி பாக்கியஸ்ரீ போர்ஸ் மற்றும் பலர் நடித்திருக்கும் இந்த பீரியட் டிராமா த்ரில்லர் கதையான 'காந்தா'வின் தன்மைக்கும் பிரதிபலிக்கும் ஆன்தமாக, வெளியாகும் இந்தப் பாடல் இருக்கும்.  


செல்வமணி செல்வராஜ் இயக்கிய 'காந்தா' திரைப்படம்  இந்த வருடம் நவம்பர் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. ஸ்பிரிட் மீடியா மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் ராணா டகுபதி, துல்கர் சல்மான், பிரசாந்த் பொட்லூரி மற்றும் ஜோம் வர்கீஸ் ஆகியோர் 'காந்தா' திரைப்படத்தைத் தயாரித்துள்ளனர்.

No comments:

Post a Comment