*AR ரஹ்மான் இசையில் 'தேரே இஷ்க் மே' படத்திலிருந்து ஓ காதலே பாடல் வெளியாகியுள்ளது!*
AR ரஹ்மான், ஆதித்யா RK மற்றும் மஷூக் ரஹ்மான் இணைந்து, ஆனந்த் L ராய் இயக்கும் ‘தேரே இஷ்க் மே’ திரைப்படத்தின் முதல் தமிழ் பாடல் ‘ஓ காதலே’யை வெளியிட்டுள்ளனர்.
‘ஓ காதலே’ எனும் இந்த பாடல், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ‘தேரே இஷ்க் மே’ உலகத்திற்குள் முதல் பார்வையாக அமைந்துள்ளது. டீசர் வெளியான தருணத்திலேயே உருவான உற்சாகம், இப்போது முழுமையான இசை அனுபவமாக மாறியுள்ளது. ரஹ்மானின் இசை மாயையில் உருவாகியுள்ள இந்த பாடல், உணர்ச்சிபூர்வமான மற்றும் பிரம்மாண்டமான இசை வடிவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
தனுஷ் மற்றும் க்ரிதி சனோன் இடம்பெற்றுள்ள இந்த பாடல் காணொளியில், AR ரஹ்மானின் பிரம்மிக்க வைக்கும் இசை, ஆதித்யா RK-வின் தனித்துவமான குரல், மஷூக் ரஹ்மானின் பாடல் வரிகள் ஆகியவை ஓர் அபூர்வ இணைப்பாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. மனதை உருக்கும் காட்சி வடிவங்கள் மற்றும் வீரியமான மான்டேஜ் காட்சிகள், கதாபாத்திரங்களின் ஆழமான உணர்ச்சிகளையும் சொல்லப்படாத வலியையும் பிரதிபலிக்கின்றன.
இந்த பாடல் என்பது தொடக்கமே. ‘ஓ காதலே’ மூலம் தொடங்கியுள்ள இந்த இசை பயணம், ஆனந்த் எல். ராய் மற்றும் AR ரஹ்மான் இணைக்கும் மற்றுமொரு முக்கிய படமாக உருவெடுக்கும் என ரசிகர்கள் நம்புகின்றனர்.
குல்ஷன் குமார், T-சீரிஸ் மற்றும் கலர் யெல்லோ நிறுவனங்கள் வழங்கும் ‘தேரே இஷ்க் மே’ திரைப்படத்தை ஆனந்த் L ராய் மற்றும் ஹிமான்ஷு ஷர்மா தயாரிக்க, பூஷன் குமார் மற்றும் கிருஷண் குமார் இணைந்து தயாரித்துள்ளனர். ஹிமான்ஷு ஷர்மா மற்றும் நீரஜ் யாதவ் எழுதிய திரைக்கதையுடன் ஆனந்த் L ராய் இயக்கியுள்ள இப்படம், AR ரஹ்மான் இசையமைப்பில், ஈர்ஷாத் காமில் பாடல் வரிகளுடன் உருவாகியுள்ளது. தனுஷ் மற்றும் க்ரிதி சனோன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படம் தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் வரும் நவம்பர் 28, 2025 அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.


No comments:
Post a Comment