Featured post

Sony Entertainment India releases trailer of action-thriller, Sisu: Road to Revenge; releases on

 *Sony Entertainment India releases trailer of action-thriller, Sisu: Road to Revenge; releases on 21st November, 2025 in English, Hindi, Ta...

Thursday, 30 October 2025

Ram Abdullah Antony Movie Review

 Ram Abdullah Antony Review

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம ram abdhullah antony படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தோட கதையை எழுதி இயக்கி இருக்கிறது jayavel சோ வாங்க இந்த படத்தோட கதை என்னனு பாக்கலாம். 

ஒரு மூணு பசங்க ரொம்ப close friends அ இருக்காங்க. இவங்க மூணு பேரும் government high school ல 12த் standard படிக்கறாங்க. இவங்களுக்கு படிப்பை தவிர எல்லா விஷயமும் தெரியும். எப்பவுமே ஒண்ணா தான் சுத்துவாங்க. இப்போ இன்னொரு scene ல அந்த ஊர் ல இருக்கற பெரிய தலைக்கட்டு ஓட பேரனை கடத்தி கொலை பண்ணிடுறாங்க. அதோட குற்றம் நடந்த அந்த மூணு நாட்கள் ல என்ன நடந்தது ன்றதா ரொம்ப detailed ரொம்ப கோரம காமிச்சிருப்பாங்க. இதை பத்தி விசாரிக்கறதுக்காக soundarraja police அ வராரு. இவரோட அப்பாவான muthuram  அ அநியாயமா கொலை பண்ணிருப்பாங்க. இதுக்கு காரணம் இவரு vela ramamurthy அ பகச்சிக்கிட்டதால தான். இந்த case ல எப்படியோ இந்த மூணு பசங்களும் சம்மந்த பட்டிருக்காங்க னு தெரிய வரவும், இந்த பசங்கள arrest பண்ணி விசாரணை நடக்க ஆரம்பிக்குது. 


இப்போ படத்தோட second half ல இந்த பசங்க ஏன் இந்த வேலைய பண்ணாங்க ன்ற காரணம் தெரிய வருது. அப்போ தான் இவங்கள தாண்டி இன்னொரு ஆளும் சம்மந்த பட்டிருக்கன் னு தெரிய வருது. இந்த நாலாவுது நபர் தான் audience expect பண்ணிருக்கமாட்டாங்க. இது தான் இந்த படத்துல பெரிய twist அ இருக்கும். இந்த மூணு பசங்களையும் வேற வேற religion அ சேந்தவங்கள இருப்பாங்க படத்தோட title அ பாத்தாலே உங்களுக்கு புரிஞ்சுருக்கும். இதெல்லாம் ரொம்ப cautious அ handle பண்ணிருக்காரு. இந்த படத்துல சொல்ல வர உட்கருத்து யும் இப்போ தேவைப்படுற ஒரு விஷயம் தான். அதாவுது புகையிலை அப்புறம் அதோட products அ உற்பத்தி பண்ணவோ அதா ஆதரிக்கவோ   கூடாது ன்ற விஷயத்தை இந்த கதைல கொண்டு வந்திருக்காங்க. படத்துல ஒரு சில scenes கொஞ்சம் violent அ இருந்தாலும் நெறய எடத்துல audience அ யோசிக்க வைக்கிற விதமா வச்சிருக்காங்க னு சொல்லலாம். 


மொத்தத்துல ஒரு நல்ல கதைக்களம் தான் இந்த திரைப்படம். சோ miss பண்ணாம பாருங்க.

No comments:

Post a Comment