Featured post

Bison Movie Review

Bison Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம bison படத்தோட review அ தான் பாக்க போறோம். இன்னிக்கு release ஆனா இந்த படத்தை இயக்கி இருக்கிறது mari ...

Friday, 17 October 2025

ராஜ் B. ஷெட்டி (Raj B. Shetty ) நடிக்கும் ‘ஜுகாரி கிராஸ்’ (Jugaari Cross)*

 *ராஜ் B. ஷெட்டி (Raj B. Shetty ) நடிக்கும் ‘ஜுகாரி கிராஸ்’ (Jugaari Cross)*



‘கரவளி’ (Karavali) பட வெளியீட்டுக்கு முன்பே இயக்குநர் குருதத்த கனிகா (Gurudatta Ganiga )– ராஜ் B. ஷெட்டி உடன் இணைந்து,  ‘ஜுகாரி கிராஸ்’ படத்தை துவங்கியுள்ளார் !


பூர்ணச்சந்திர தேஜஸ்வியின் ( Poornachandra Tejaswi’s ) ‘ஜுகாரி கிராஸ்’ நாவலின் உலகில் காலடி வைக்கும் ராஜ் B. ஷெட்டி!


சமீப காலங்களில் நாவல்களை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. பிரபல இலக்கிய படைப்புகளை திரை உலகில் கொண்டு வர வெகு சிலரே துணிகிறார்கள். ஆனால் இப்போது பிரபல எழுத்தாளர் பூர்ணச்சந்திர தேஜஸ்வியின் புகழ்பெற்ற நாவல் ‘ஜுகாரி கிராஸ்’ திரைப்படமாக உருவாகிறது.


தனது அடுத்தப்படமான ‘கரவளி’ மூலம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இயக்குநர் குருதத்த கனிகா, தற்போது ‘ஜுகாரி கிராஸ்’ எனும் பிரபல நாவலை படமாக்கும் மிக தைரியமான முயற்சியில் களமிறங்கியுள்ளார்.


முன்னதாகவே அறிவிக்கப்பட்டிருந்த இப்படத்தின் டீசர்  தற்போது வெளியிடப்பட்டுள்ளது. பிரபல நாவலை அடிப்படையாகக் கொண்ட இப்படத்தில், யார் ஹீரோவாக நடிப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். டீசர் அந்த  ஆவலை நிவர்த்தி செய்துள்ளது. முன்னணி நட்சத்திரமான  ராஜ் B. ஷெட்டி இதில் ஹீரோவாக நடிக்கிறார்.


புதிய டீசர் மொட்டையடித்த தலை, தெறிக்கும் இரத்தம் மற்றும் சிவப்பு இரத்தினகற்களின் காட்சிகளுடன்,  மிக அழுத்தமான பின்னணி இசையும் கலந்து, ரசிகர்களின் ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் பல மடங்காக உயர்த்தியுள்ளது.


இயக்குநர் குருதத்த கனிகா மற்றும் நடிகர் ராஜ் B. ஷெட்டி முன்னதாக ‘கரவளி’ படத்தில்  இணைந்திருந்தனர். இப்போது மீண்டும் ‘ஜுகாரி கிராஸ்’ மூலம் இருவரும் கைகோர்த்துள்ளதால் இப்படத்தின் மீதான  எதிர்பார்ப்பு மேலும் உயர்ந்துள்ளது ‘கரவளி’ இன்னும் திரைக்கு வரவில்லை என்றாலும், ‘ஜுகாரி கிராஸ்’ பட வேலைகள் தொடங்கி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.


தனது கதாபாத்திரங்களை மிகவும் கவனமாகத் தேர்ந்தெடுப்பதில் பெயர் பெற்றவரான ராஜ் B. ஷெட்டி, *‘சு ஃப்ரம் சோ’*படத்தில் குருஜியாகவும், *‘கரவளி’*யில் காளைகளுடன் நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். இப்போது அவர் ‘ஜுகாரி கிராஸ்’ எனும் அழுத்தமான நாவலின்  உலகில் நுழைகிறார்.  இது அவரது வாழ்க்கையில் மிக முக்கியமான படியாகும்.


இயக்குநர் குருதத்த கனிகாவுடன்  மீண்டும் ராஜ் B. ஷெட்டி இணைந்திருப்பது, இயக்குநர் மீதான அவரது நம்பிக்கையையும் உறுதியையும் காட்டுகிறது. டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ள நிலையில், படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.


‘கரவளி’ படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அதன் இறுதிக்கட்ட பணிகளில் குருதத்த கனிகா ஈடுபட்டு வருகிறார். அதே நேரத்தில், ‘ஜுகாரி கிராஸ்’ முன் தயாரிப்பு பணிகளிலும் இணைந்துள்ளார். இந்த படத்தை அவர் தனது குருதத்த கனிகா ஃபிலிம்ஸ் (Gurudatta Ganiga Films) என்ற நிறுவனத்தின் கீழ் தயாரித்து, இயக்குகிறார். ‘கரவளி’ படத்திற்கு  ஒளிப்பதிவு செய்த அபிமன்யு சாதானந்தன் மீண்டும் ‘ஜுகாரி கிராஸ்’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். சச்சின் பஸ்ரூர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.


இப்படத்தில் பங்குபெறவுள்ள மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவின் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்

https://www.youtube.com/watch?v=Oh2_LVPuL_E&pp=ygUManVnYXJpIGNyb3Nz

*

No comments:

Post a Comment