Featured post

*A.R. Rahman, Adithya RK and Mashook Rahman Unite for Tamil first track’ O Kadhale’ from Aanand L Rai’s ‘Tere Ishk Mein’, Backed by Bhushan Kumar

 *A.R. Rahman, Adithya RK and Mashook Rahman Unite for Tamil first track’ O Kadhale’ from Aanand L Rai’s ‘Tere Ishk Mein’, Backed by Bhushan...

Tuesday, 28 October 2025

கே ஆர் ஜி மூவிஸ் கண்ணன் ரவி தயாரிப்பில் எட்செட்ரா என்டர்டெயின்மென்ட்

*கே ஆர் ஜி மூவிஸ் கண்ணன் ரவி தயாரிப்பில் எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் வி. மதியழகன் இணை தயாரிப்பில் போஸ் வெங்கட் இயக்கும் பிரம்மாண்ட திரைப்படம்* 




*விளையாட்டு, காதல், குடும்பம், சமூகம் பற்றி பேசும் 'புரொடக்ஷன் நம்பர் 7' படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்* 


கடந்த 35 ஆண்டுகளாக துபாயில் முன்னணி தொழிலதிபராக திகழும் கண்ணன் ரவி தனது கே ஆர் ஜி மூவிஸ் நிறுவனத்தின் ஏழாவது படைப்பை போஸ் வெங்கட் இயக்கத்தில் தயாரிக்கிறார்.  


'கன்னி மாடம்', 'சார்' ஆகிய பாராட்டுகளை குவித்த வெற்றி படங்களை தொடர்ந்து போஸ் வெங்கட் இயக்கும் இப்படம் 

எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் வி. மதியழகன் இணை தயாரிப்பில் உருவாகிறது. 


இன்னும் பெயரிடப்படாத இந்த 'புரொடக்ஷன் நம்பர் 7' படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். முன்னணி நடிகர் நடிகைகளும், முதன்மையான தொழில்நுட்ப கலைஞர்களும் இப்படத்திற்காக இணைந்துள்ளனர். 


திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் போஸ் வெங்கட், "விளையாட்டை மையமாகக் கொண்ட இந்த படம் காதல், குடும்பம், சமூகம் என்று பல்வேறு முக்கிய அம்சங்களை குறித்து சுவாரசியமாக பேசும். அதிக பொருட்செலவில் உருவாகும் இப்படம் ஒரு மைல் கல்லாக இருக்கும். யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைவது மிகுந்த மகிழ்ச்சி. இதை விரைவில் திரைக்கு கொண்டு வருவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன," என்று கூறினார். 


கே ஆர் ஜி மூவிஸ் கண்ணன் ரவி தயாரிப்பில் எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் வி. மதியழகன் இணை தயாரிப்பில் போஸ் வெங்கட் இயக்கும் திரைப்படத்தின் பெயர், நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும். 


***


Mebring the film to screens soon.”


Further details regarding the title, cast, and technical crew of the film produced by KRG Movies’ Kannan Ravi, co-produced by Etcetera Entertainment’s V. Mathiyazhagan and directed by Bose Venkat, will be officially revealed soon.


***

No comments:

Post a Comment