Featured post

Antony Varghese Pepe Ignites the Screen in a Fiery Mass Avatar; “Kattalan” First Look Out Now

 Antony Varghese Pepe Ignites the Screen in a Fiery Mass Avatar; “Kattalan” First Look Out Now!** The first look poster of the grand action ...

Wednesday, 8 October 2025

கார்த்தி நடிக்கும் 'வா வாத்தியார்' திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகிறது

 *கார்த்தி நடிக்கும் 'வா வாத்தியார்' திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகிறது !!*





ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள “வா வாத்தியார்”  திரைப்படம், வரும் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


இப்படம் அறிவிக்கப்பட்ட நொடியிலிருந்தே படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தொடர்ந்து வித்தியாசமான களங்களில், அழகான படைப்புகளை வழங்கி அசத்தி வரும் நடிகர் கார்த்தி மற்றும் தனித்துவமான இயக்குநரான நலன் குமாரசாமி ஆகிய இருவரும் இணைகிறார்கள் என்றவுடனே, படத்தின் மீது பலமடங்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த கூட்டணியின் மாயாஜாலத்தை திரையரங்கில் காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் ரசிகர்கள் ஆசையை நிறைவேற்றும் வகையில், இப்படம் வரும் 2025 டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவித்து, ஒரு அசத்தலான போஸ்டரை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.  


இப்படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்க, சத்யராஜ், ராஜ்கிரண், கிருத்தி ஷெட்டி, ஜி. எம். சுந்தர் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.


முன்னணி ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.‌ கலை இயக்கத்தை டி. ஆர். கே. கிரண் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை வெற்றி கையாண்டிருக்கிறார். அனல் அரசு சண்டை காட்சிகளை அமைத்திருக்கிறார்.


பெரும் பொருட்செலவில்  ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா இந்தத் திரைப்படத்தை பிரம்மாண்டமாக  தயாரித்திருக்கிறார்.  


அறிவிப்பு போஸ்டரின் பின்னணியில் கூட்டம் ஆர்ப்பரிக்க,   கார்த்தி சில்லவுட்டில் கையில் சவுக்குடன் நிற்கும், இந்த அறிவிப்பு போஸ்டரில் உலகம் முழுதும் 05.12.2025 என வெளியீட்டு தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது  இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.


படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகளும் விரைவில் வெளியாகவுள்ளது. பெரும் ஆவலைத் தூண்டியுள்ள இப்படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டிருப்பது ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

No comments:

Post a Comment