Featured post

Antony Varghese Pepe Ignites the Screen in a Fiery Mass Avatar; “Kattalan” First Look Out Now

 Antony Varghese Pepe Ignites the Screen in a Fiery Mass Avatar; “Kattalan” First Look Out Now!** The first look poster of the grand action ...

Friday, 10 October 2025

தமிழ் சினிமாவை இன்னொரு ஸ்டெப் நகர்த்தும் முயற்சியில் சந்தோஷ் நம்பிராஜன்

 தமிழ் சினிமாவை இன்னொரு ஸ்டெப் நகர்த்தும் முயற்சியில் சந்தோஷ் நம்பிராஜன்.






கருப்பு வெள்ளை சினிமா, கலர் சினிமா டிஜிட்டல் சினிமா, ஏஐ சினிமா என செலுலாய்டு உலகம் காலத்திற்கு ஏற்ப சில மாற்றங்களை கண்டிருக்கிறது. அந்த வகையில் சந்தோஷ் நம்பிராஜன் இயக்கத்தில் "அகண்டன்" தமிழ் சினிமாவில் புதியதொரு அத்யாயத்தை தொடங்கியிருக்கிறது.


உலக நாடுகள் பலவற்றிலும் பல்வேறு விருதுகளை அள்ளிக்குவித்த படம் செழியன் இயக்கத்தில் வெளியான "டூலெட்". இந்த திரைப்படத்தின் நாயகனாக அறிமுகமானவர் சந்தோஷ் நம்பிராஜன். அதன் பின் " வட்டார வழக்கு", "உழைப்பாளர் தினம்" என இவர் நடித்த படங்கள் விமர்சகர்களால் கொண்டாடப்பட்டவை. இவர் நடிப்பில் அடுத்த விரைவில் வெளியாகும் "ஸ்டார்ட் கேமரா ஆக்‌ஷன்" இண்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவலில் கலந்து பலரது கவனத்தையும் ஈர்த்தது. சொட்ட வைக்கும் காதல் ரசத்தோடு  "காதலிசம்" திரைப்படமும் இணையத்தில் லிவிங் டுகெதர் ? கல்யாணமா?  எது வருங்கால தலைமுறைக்கு சிறந்தது என்று பேசி பலராலும் பாராட்டப்பட்டது.


தமிழில் முதல் முயற்சியாக ஐபோன் 11 மேக்ஸில் ஒரு சினிமாவை வார்த்தெடுத்திருக்கிறார் சந்தோஷ். ஆம் செல்போனில் எடுக்கும் படங்கள் ஒரு வீடு, சின்ன கிராமம் அதைத்தாண்டி அந்த பட்ஜெட்டில் யோசிக்க முடியாது. அந்த தியரியை உடைத்து இந்தியா, சிங்கப்பூர், மலேசியா என மூன்று நாடுகளில் போனில் சூட் செய்து சாத்தியம் என்பதை "அகண்டன்" திரைப்படத்தில் நிரூபித்திருக்கிறார்.


"அகண்டன்" திரைப்படம் தமிழ்சினிமாவிற்கு புதிய வாசலை திறக்கிறது.

இனி செல்போனில் படம் பார்ப்பது மட்டுமல்லாமல் படம் எடுத்து வெளியிடவும் முடியும்.

 இந்த "அகண்டன்" படம் அகண்ட திரையான திரையரங்கிற்கு வருவது தமிழ் சினிமாவில் ஒரு புதிய பாய்ச்சல். 

 புதிய முயற்சிக்கு பூஞ்செண்டு தந்து வரவேற்கும் பத்திரிகை, தொலைக்காட்சி இணையதள நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.


படத்தை சந்தோஷ் நம்பிராஜனும், அவரது சகோதரர் பிரேம்சந்த் நம்பிராஜனும் இணைந்து நம்பிராஜன் இன்டர்நேஷனல் சினிமாஸ் சார்பில் தயாரித்துள்ளனர். சிங்காவுட் என்ற சிங்கப்பூர் நிறுவனம் இணை தயாரிப்பு. 


நடிகர்கள் சந்தோஷ் நம்பிராஜன், ஹரினி, பிரபல சிங்கப்பூர் நடிகர் யாமீன் மற்றும் பலர் நடித்துள்ளனர். நான்கு சண்டை காட்சிகள் பிரமிக்க வைக்கும். 


இசை: ஏ.கே.பிராங்ளின்


எடிட்டர்: கோட்டிஸ்வரன்


கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, இயக்கம்


சந்தோஷ் நம்பிராஜன்.


@rajkumar_pro

No comments:

Post a Comment