*சன் நெக்ஸ்ட் தளத்தில் தீபாவளி கொண்டாட்டமாக வெளியாகிறது “ராம்போ” !!
தென் இந்தியாவின் முன்னணி OTT தளங்களில் ஒன்றான சன் நெக்ஸ்ட், தனது அடுத்த நேரடி OTT வெளியீடாக “ராம்போ” திரைப்படத்தை, வரவிருக்கும் தீபாவளி சிறப்பு படமாக அக்டோபர் 10ஆம் தேதி வெளியிடுகிறது.
அருள்நிதி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தை, கொம்பன், குட்டிப்புலி, புலிக்குத்தி பாண்டி, விருமன் போன்ற அழுத்தமான கிராமப்புற கமர்ஷியல் படங்களைத் தந்த, புகழ் பெற்ற இயக்குநர் முத்தையா இயக்கியுள்ளார். தன் வழக்கமான பாணியிலிருந்து விலகி, இம்முறை நகர வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கியுள்ள “ராம்போ” நகர பின்னணியில் ஒரு அதிரடி ஆக்சன் கமர்ஷியல் பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ளது.
ஒரு தைரியமான இளம் குத்துச்சண்டை வீரன், ஒரு பெண்ணுக்கு (தன்யா ரவிச்சந்திரன்) உதவ முயற்சிக்கும் போது தொடங்கும் கதை, அதன்பின் அவன் வாழ்க்கையில் நடக்கும் அதிரடி சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. முத்தையாவின் முத்திரை இயக்கத்தில், உணர்வுப்பூர்வமான அம்சங்களுடன், அதிரடி, ஆக்சன் நிரம்பிய அழுத்தமான படமாக இப்படம் வெளிவரவுள்ளது.
படம் குறித்து இயக்குநர் முத்தையா கூறியதாவது.., “இந்தப் படம் எனது பாணியிலிருந்து மாறுபட்டு, ஒரு புதிய கதையை வேறு பாணியில் சொல்லும் வாய்ப்பை எனக்கு வழங்கியது. அருள்நிதியுடன் இணைந்து பணிபுரிந்தது உற்சாகமான அனுபவமாக இருந்தது. ‘ராம்போ’ படத்தை கண்டிப்பாக ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்று நம்புகிறேன்.”
பிக் பாஸ் புகழ் ஆயிஷா இந்த படத்தின் மூலம் பெரிய திரைக்கு அறிமுகமாகிறார். மேலும் மலையாள நடிகர் ரஞ்சித் சஜீவ் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஹரீஷ் பேரடி மற்றும் VTV கணேஷ் முக்கியமான வேடங்களில் இணைந்து நடித்துள்ளனர்.
பிரபல ஒளிப்பதிவாளர் R.D. ராஜசேகர் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார், முன்னணி இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். நகரப் பின்னணியில் ஆக்சன், அதிரடி மற்றும் உணர்ச்சிரமான பொழுதுபோக்கு படமாக “ராம்போ” உருவாகியுள்ளது.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டிரெய்லர் ஏற்கனவே ரசிகர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்களிடையே சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
டிரெய்லர் லிங்க்:
https://youtu.be/t1huaCOto2k?si=cizZwmf5am-m_p5j
இந்த தீபாவளிக் கொண்டாட்டத்தை வீட்டிலிருந்தபடியே அனுபவிக்க, அக்டோபர் 10ஆம் தேதி முதல் “ராம்போ” படத்தை சன் நெக்ஸ்ட் தளத்தில் பார்த்து ரசியுங்கள்!
No comments:
Post a Comment