Featured post

ஊடகங்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்த உதயாவின் 'அக்யூஸ்ட்' படக்குழு*

 *ஊடகங்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்த உதயாவின் 'அக்யூஸ்ட்' படக்குழு* ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் சின...

Tuesday, 2 February 2021

ஸ்ரீ சிவன்யா கிரியேஷன்ஸின் முதல் தயாரிப்பில்

 அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கும்  த்ரில்லர் திரைப்படமான  "யாமா"

படத்தின் செகண்ட் லுக் போஸ்டர்!!! 



ஸ்ரீ சிவன்யா கிரியேஷன்ஸின் முதல் தயாரிப்பில் 

திரு. செந்தில் குமார் இராஜேந்திரன் வழங்கும் யாமா திரைப்படம் விறுவிறுப்பான திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது.  இப்படத்தை இயக்குனர் திரு.சையத் அவர்கள் இயக்கியுள்ளார். நாயகனாக விஜு  அவர்கள் இப்படத்தில் அறிமுகமாகிறார்.  கதாநாயகியாக லக்ஷ்மி பிரியா சந்திர மௌலி நடித்துள்ளார். "அங்காடித் தெரு"  "அசுரன் " ஆகிய படங்களில் நடித்த   இயக்குனர் 

A.வெங்கடேஷ் எதிர்நாயகனாக நடித்துள்ளார் மேலும் எஸ். சக்தி வேல் ஒளிப்பதிவில் எல். வி முத்து கணேஷ் அவர்களின் இசையில் இப்படம் உருவாகியுள்ளது.  இந்நிலையில் "யாமா" திரைப்படத்தின் தலைப்பும் ஃபர்ஸ்ட் லுக்கும் ஏற்கனவே வெளியாயிருந்த  நிலையில் தற்போது செகண்ட் லுக் வெளியாகியுள்ளது. முழுக்க முழுக்க த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் இப்படம்  அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்தின் இசை வெளியீடு விரைவில் நடத்த பெரும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.  மேலும் இப்படத்திற்கு  மக்களின் ஆதரவு வேண்டும் என்று படக்குழு கேட்டுக்கொண்டுள்ளது

No comments:

Post a Comment