"பூங்கா" படத்தின் இசையை, பூங்காவில் வெளியிட்டனர்!
ஜாகுவார் தங்கம், விஜய் நடித்த லவ் டுடே படத்தின் இயக்குனர் பாலசேகரன், நடிகர் ஜாவா சுந்தரேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டு, "பூங்கா" படத்தின் இசையை, பூங்காவில் வெளியிட்டனர்!
அழகு மூவி மேக்கர்ஸ் உருவாக்கும் "பூங்கா"
'பூங்கா' என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல. அது ஒரு வாழ்வியல். பலதரப்பட்ட மக்கள் ஒன்று கூடும் சங்கமம். சொர்க்கம் ஆகாயத்தில் இருக்கிறது என்பார்கள், பூங்கா மண்மீது உள்ள சொர்க்கம் என்கிறார் இயக்குனர் கே.பி.தனசேகர்.
ஒரு நாலு பசங்க பிரச்சனைகளோடு பூங்கா வருகிறார்கள். அங்கு அவர்களின் பிரச்சனை தீர்ந்ததா என்பதுதான் கதை.
கதாநாயகனாக கௌசிக் நடிக்கிறார். கதாநாயகியாக ஆரா நடிக்கிறார். இவர்களுடன் சசி தயா, பிரணா, பாலசுப்பிரமணியம், பூங்கா ராமு, திண்டுக்கல் மணிகண்டன், நோயல் ரெஜி, மேஜிக் சரவணகுமார், ஸ்மூல் ராஜா, சாய் ஜேபி, வரன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் கே.பி.தனசேகர். ஒளிப்பதிவு ஆர்.ஹெச்.அசோக், இசை அகமது விக்கி, எடிட்டிங் முகன் வேல், கலை குணசேகர், சண்டை பயிற்சி எஸ்.ஆர். ஹரி முருகன், நடனம் சுரேஷ் சித், பிஆர்ஓ கோவிந்தராஜ். தயாரிப்பு கே.பி.தனசேகர், பூங்கா ஆர்.ராமு லட்சுமி, கீதாஞ்சலி லெனினிய செல்வன் மூவரும் இணைந்து தயாரத்து உள்ளனர்.
"பூங்கா" விரைவில் மண் மீது சொர்க்கமாக வெளியாகிறது!
@GovindarajPro
No comments:
Post a Comment