Featured post

Thank you for the overwhelming love and support shown towards the trailer and promotional campaign of Anbil Avan.

Thank you for the overwhelming love and support shown towards the trailer and promotional campaign of Anbil Avan. The response from audience...

Wednesday, 25 February 2026

சார்மிங் ஸ்டார்' ஷர்வா நடிக்கும் 'போகி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

 *'சார்மிங் ஸ்டார்' ஷர்வா நடிக்கும் 'போகி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு*



*'சார்மிங் ஸ்டார்' ஷர்வா - பிளாக் பஸ்டர் இயக்குநர் சம்பத் நந்தி - கே. கே. ராதா மோகன் - ஸ்ரீ சத்ய சாய் ஆர்ட்ஸ் - கூட்டணியில் தயாராகும் பான் இந்திய திரைப்படமான 'போகி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் இந்த ஆண்டு ஆகஸ்ட் 28 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது*


'சார்மிங் ஸ்டார்' ஷர்வா முதன்முறையாக அதிரடி ஆக்சன் இயக்குநர் சம்பத் நந்தி இயக்கத்தில் 'போகி' எனும் பிரம்மாண்டமான பான் இந்திய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை ஸ்ரீ சத்ய சாய் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் கே. கே ராதா மோகன் தயாரிக்கிறார். மேலும் இதனை லட்சுமி ராதா மோகன் வழங்குகிறார். ஷர்வாவின் திரையுலக பயணத்தில் மிக பிரம்மாண்டமான படைப்பாக இந்த திரைப்படம் தயாராகி வருகிறது. இதன் ஃபர்ஸ்ட் லுக்கை தயாரிப்பாளர்கள் இன்று வெளியிட்டுள்ளனர். 


இதில் ஷர்வா முரட்டுத்தனமான மற்றும் மூர்க்கத்தனமான தோற்றத்தில் தோன்றுகிறார். மேலும் இந்த போஸ்டர் கடுமையான மற்றும் நெருக்கடியான காட்சியை பிரதிபலிக்கிறது. அத்துடன் வெகுஜன மக்களை கவரும் அவதாரமாகவும் தோன்றுகிறது. அவரது அடர்த்தியான ஒழுங்கற்ற தாடி, மீசை, சுருள் முடி.. ஆகியவை அவருக்குள் ஒரு தீவிரமான போர்க்குணம் இருப்பதை காட்சிப்படுத்துகிறது. இந்தத் தோற்றம் எதுவும் மெருகூட்டப்படவில்லை... எதுவும் கட்டுப்படுத்தப்படவில்லை.. என்ற எண்ணத்தையும் உருவாக்குகிறது. 


ஷர்வா துணியால் சுற்றப்பட்ட ஒரு பெரிய பழமையான கத்தி போன்ற ஆயுதத்தின் பின்னால் அமர்ந்திருப்பது- கொடூரமான மோதல்களையும் வன்முறையால் இயக்கப்படும் உலகத்தையும் சுட்டிக்காட்டுகிறார். மிதக்கும் தீப்பொறிகள் மற்றும் தீப்பொறிகளால் நிரப்பப்பட்ட இருண்ட புகை பிடித்த பின்னணி... காட்சியின் தீவிரத்தை அதிகரிக்கிறது. அத்துடன் இணைக்கப்பட்டுள்ள 'ரத்தங்களுடனான விழா' எனும் டேக் லைன் மிகச் சரியாக பொருந்துகிறது. 


ஷர்வா 'போகி' படத்திற்காக ஒரு தீவிரமான மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். அவரது கதாபாத்திரத்தின் தீவிரத்தை முழுமையாக வெளிப்படுத்தும் வகையில் ஒரு துணிச்சலான தோற்றத்தையும் ஏற்றுக் கொண்டிருக்கிறார். இது சாதாரணமான மாற்றம் அல்ல... முழுமையான மீள் கண்டுபிடிப்பு. இதற்கு முன் பார்த்திராத நடிகரின் மற்றொரு பக்கத்தையும் இது காட்டுகிறது. அத்துடன் போஸ்டரில் இடம் பிடித்துள்ள ஒவ்வொரு அம்சமும் ஒரு விசயத்தை குறிக்கிறது. அது ஷர்வா முழுமையாக ஒரு மிருகத்தனமான முயற்சியில் அடியெடுத்து வைக்கிறார் என்பதை குறிக்கிறது. 


இயக்குநர் சம்பத் நந்தி- 1960களின் பிற்பகுதியில் வடக்கு தெலுங்கானா - மகாராஷ்டிரா எல்லையில் அமைக்கப்பட்ட ஒரு ஆற்றல்மிக்க காலகட்ட பின்னணியை வடிவமைத்துள்ளார். 


இந்தக் குழு தற்போது ஹைதராபாத்தில் மிகப்பெரிய அரங்கில் அதிரடி ஆக்சன் காட்சிகளை படமாக்கி வருகிறது. இதில் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் இரண்டு பெரிய அளவிலான அதிரடி அத்தியாயங்களை படமாக்குகிறார். 


இந்தப் படத்தில் அனுபமா பரமேஸ்வரன் மற்றும் டிம்பிள் ஹயாதி ஆகியோர் முன்னணி நடிகைகளாக நடிக்கிறார்கள். மேலும் பல பிரபல நடிகர்களும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 


இந்த திரைப்படத்தில் வலிமைமிக்க தொழில்நுட்ப குழுவினர் ஒன்றிணைந்துள்ளனர். கிரண் குமார் மன்னே கலை இயக்குநராகவும், கிஷோர் குமார் ஆரோக்கியா ஒளிப்பதிவாளராகவும், பிளாக் பஸ்டர் இசைமைப்பாளரான பீம்ஸ் செசிரோலியோ இசையமைக்கிறார். 


ஆகஸ்ட் 28 ஆம் தேதி ரக்ஷா பந்தன் பண்டிகையின் போது தமிழ், தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமான முறையில் திரையரங்குகளில் வெளியாகிறது. 


நடிகர்கள் : 'சார்மிங் ஸ்டார்' ஷர்வா , அனுபமா பரமேஸ்வரன், டிம்பிள் ஹயாதி மற்றும் பலர். 


தொழில்நுட்பக் குழு : 

எழுத்து & இயக்கம் : சம்பத் நந்தி 

தயாரிப்பாளர்: கே. கே. ராதாமோகன் 

தயாரிப்பு நிறுவனம்:  ஸ்ரீ சத்ய சாய் ஆர்ட்ஸ் 

வழங்குபவர்கள் : லட்சுமி ராதா மோகன் 

இசை : பீம்ஸ் செசிரோலியோ 

ஒளிப்பதிவு : கிஷோர் குமார் ஆரோக்யா 

கலை இயக்குநர் : கிரண்குமார் மன்னே 

சண்டை பயிற்சி : திலீப் சுப்பராயன் 

மக்கள் தொடர்பு : சதீஷ்குமார் (S2 மீடியா)



No comments:

Post a Comment