Featured post

God Of Masses Nandamuri Balakrishna, Blockbuster Maker Boyapati Sreenu, Raam Achanta, Gopi Achanta, 14 Reels Plus,

 God Of Masses Nandamuri Balakrishna, Blockbuster Maker Boyapati Sreenu, Raam Achanta, Gopi Achanta, 14 Reels Plus, M Tejaswini Nandamuri Pr...

Thursday, 2 October 2025

Kantara Movie Review

*Kantara Review, Kantara Movie Rating:4/5*

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம kanthara chap 1 படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தோட கதையை எழுதி direct பண்ணிருக்கறது rishab shetty . 2022 ல வெளி வந்த kantara ன்ற திரைப்படம் மிக பெரிய அளவு ல hit அடிச்சுது னு உங்க எல்லாருக்கும் தெரியும். அதோட அந்த படத்துக்காக rishab shetty national award யும் வாங்குனாரு. இந்த படத்தோட வெற்றியை தொடர்ந்து இந்த கதையோட prequel அ ready பண்ணிட்டு இருக்கோம் னு announce பன்னிருத்தங்க. இந்த படத்துக்கான கதையை 8 மாசத்துல முடிச்சிருக்காரு rishab shetty . panjurli தெய்வமும் guliga தெய்வமும் எப்படி வந்தது, இந்த தெய்வங்களோட வரலாறு என்னன்றது தான் இந்த kanthara  chapter 1. karnataka ஓட pre colonial period அ காமிச்சிருக்காங்க. கெட்ட ராஜாக்கும் kantara காட்டுக்குள்ள இருக்கற மலைவாழ் மக்களோட சண்டை தான் இந்த படம் னு கூட சொல்லலாம். இந்த படத்தோட shooting அ முக்காவாசி kundapura ன்ற ஊர் ல தான் எடுத்துருக்காங்க. இந்த கதைக்கான set அ மிக பெரிய அளவுல போட்ருக்காங்க. இந்த படத்துக்காக rishab shetty horse riding, kalari payattu , கத்தி சண்டை னு பல விஷயங்களை கத்துக்கிட்டாரு.  ஒரு பெரிய war sequence யும் இந்த படத்துல வரும். இதை cherograph பண்ணிருக்கற action directors international experts . அதோட இந்த sequence அ முடிகிறதுக்கு 50 நாள் ஆச்சா அது மட்டும் இல்ல , இதுல நடிச்ச 3000 artist ல நெறய பேர் உண்மையான fighters யும் கூட னு சொல்லிருக்காங்க. இந்த படம் dubbed version ல hindi, tamil, malayalam, telugu, english அப்புறம் spanish ளையும் release ஆகுது. spanish dubbed version ல release ஆகுற முதல் kannada படமும் இதுதான்.  




சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். படத்தோட ஆரம்பத்துல kadamba  ராஜ்யத்தை காமிக்கறாங்க. இந்த ராஜா ரொம்ப கொடுமைக்காரரை இருக்காரு. இவருக்கு மண் , பெண், பொன் இது எதுக்குமே விதயசம் தெரியாம எல்லாமே தனக்கு  தான் சொந்தம் ன்ற நினைப்புல இருக்காரு. இவருக்கு எதிரா நிக்கறவங்கள கொன்னு பயத்தை காமிச்சு மக்களை ஆளுறாரு. அப்படி ஒரு இடத்துக்கு போகும் போது தான் ஒரு மீனவனை பாக்குறாரு. தன்னோட காவலனை கூப்டு அந்த மீனவனை பிடிச்சு கொண்டு வர சொல்லுறாரு. அந்த மீனவனை கொண்டு வந்து ராஜா முன்னாடி நிக்க வைக்கும் போது, அவனோட bag  ல இருந்து ஒரு சில அரிய பொருட்கள் விழுது. இந்த பொருள் எல்லாத்தயும் ராஜா பாக்குறாரு அப்போ இதை பத்தி விசாரிக்கும் போது தான் kantara ன்ற காட்ட பத்தி கேள்வி படுறாரு. இந்த காட்டு ல இருக்கற மக்கள் எல்லாரும் இயற்கையோட ஒன்றி வாழுவாங்க. அதோட இந்த ராஜாவோட கண்ணு eeswara  poondhottam  ன்ற இடத்து மேல விழும். இந்த இடத்தை தான் kantara  ஓட தெய்வம் பாதுக்காக்கும். அதுக்கு அப்புறம் பல வருஷங்களுக்கு அப்புறம் bhangra  ஓட ராஜா vijeyandra  வா நடிச்சிருக்க jayaram  அ காமிக்கறாங்க. இவரோட ஆட்சி க்கு அப்புறம் தன்னோட பையன் ஆனா kulasekhra வா நடிச்சிருக்க gulshen deviah வா காமிக்கறாங்க. இவரை தான் ராஜா வா அறிவிக்கறாங்க. அதுக்கு அப்புறம் vijeyandra ஓட பொண்ணு kanakavathi யா நடிச்சிருக்க rukmini vasanth தான் ராஜ்யத்தோட கஜானா க்கு பொறுப்பு எடுத்துக்கறாங்க. 


kantara மக்களுக்கு தலைவனா இருக்காரு rishab shetty . தன்னோட கிராமத்தையும் கிராம மக்களையும் நல்ல நிலைமைக்கு கொண்டு போகணும் னு நெறய விஷயங்களை பண்ணுறாரு. இதுக்கு அப்புறம் தான் இந்த நிலத்துக்காக kantara மக்களுக்கும் bhangra வை ஆளுற ராஜாக்கும் சண்டை வருது. இதுக்கு அப்புறம் என்ன நடந்து ன்றது தான் இந்த படத்தோட கதையை இருக்கு. kantara படத்தை விட இந்த படம் பத்து மடங்கு அட்டகாசமா இருக்கு னு தான் சொல்லணும்.ஓவுவுறு scene ளையும் அவ்ளோ details அ குடுத்திருக்காங்க. படத்தோட ஆரம்பத்துல kadamba அப்புறம் bangra ராஜ்யத்தை பத்தி ஒரு voice over வரும். அதா கேட்டொடனே அந்த உலகத்துல அப்படியே போயிடுவோம். படத்தோட first half அ பாத்தோம்னா கதையை அவ்ளோ interesting அ கொண்டு போயிருக்காங்க. interval க்கு முன்னாடி வர ரதம் , horse chasing scene னு எல்லாமே excellent அ இருந்தது. அதுவும் காட்டுக்குள்ள நடக்கற fight scene ல செமயா இருக்கும். kantara படத்துல எப்படி அந்த தெய்வத்தோட சத்தம் நம்ம mind ல fix ஆயிடுச்சோ அதே மாதிரி இந்த படத்துலயும் ஒரு scene இருக்கும். அது literal goosebump moment னு தான் சொல்லுவேன். rishab shetty  character ஓட emotions எல்லாமே super அ இருந்தது. rukmini vasanth ஓட character யும் இந்த படத்துக்கு strong அ இருக்கு. jayaram ஓட portions யும் super அ இருந்தது. gulshan  devaiah ஒரு குடிகார ராஜா வா , மக்களுக்கு பிடிக்காத ராஜாவா அருமையா நடிச்சிருக்காரு. 


இந்த படத்தோட story அப்புறம் actors ஓட performance யும் தாண்டி, technical department அட்டகாசமா work பண்ணிருக்காங்க னு தான் சொல்லணும். arvind kashyap ஓட cinematography அ இருக்கட்டும் ajneesh loknath ஓட music and bgm அ இருக்கட்டும் எல்லாமே இந்த படத்துக்கு பக்க பலம் தான். இந்த படத்தோட climax யும் kuliga தெய்வத்தோட scenes யும் வரும், அதெல்லாம் theatre ல பாக்கும் போது வேற level ல இருந்தது. 


ஒரு super ஆனா படம் தான் இது. sound quality , visuals , story காகவே இந்த படத்தை theatre ல பாக்குறது worth . சோ மறக்காம இந்த leave ல kantara chapter 1 அ theatre ல பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.

No comments:

Post a Comment