Featured post

வடிவேலு - பகத் பாசில் நடிக்கும் 'மாரீசன்' ஜூலை 25ஆம் தேதி வெளியாகிறது

 *வடிவேலு - பகத் பாசில் நடிக்கும் 'மாரீசன்' ஜூலை 25ஆம் தேதி வெளியாகிறது* தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு - பகத் பாசில் இர...

Friday, 24 April 2020

மேல்அயனபாக்கம் வேலம்மாள் வித்யாலயா இணைப்பு பள்ளியில்

மேல்அயனபாக்கம் வேலம்மாள் வித்யாலயா இணைப்பு பள்ளியில் பூமி தினக் கொண்டாட்டம்

பூமி தினத்தின் 50வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில்,  வேலம்மாள் வித்யாலயா  மேல்அயனபாக்கம் இணைப்பு பள்ளியில் "காலநிலை நடவடிக்கைஎன்னும் தலைப்பில் சுற்றுச்சூழல் இயக்கக் கொண்டாட்டம் ஏப்ரல் 22 அன்று நடைபெற்றது.

ஊரடங்கு உத்தரவால் கிட்டத்தட்ட அனைத்து நிர்வாக அமைப்புகளும் முற்றிலும் மூடியிருந்தபோதிலும்அன்னை பூமியைப் பாதுகாப்பதில் தங்களை நிலைநிறுத்துவதற்கு மாணவர்கள் அனைவரும் இணையத்தால் இணைக்கப்பட்டனர்.
அழகியல் விளைவுகள் கொண்ட வரைபடங்கள் மூலம் மாணவர்கள் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தினர்மேலும்ரைடு சைக்கிள்கள் மூலம் புகை பழக்க வழக்கங்களைக் குறைத்தல்அதனால் புதிய காற்றைச் சுவாசித்தல்தனிமைப்படுத்தப்பட்ட நாட்களில் வீடுகளில் உள்ள குளுகுளு பெட்டிகளை அணைத்தல்,  சின்னஞ்சிறு குழந்தைகள் பெரியவர்களின் ஆசீர்வாதங்களை வாங்க முயல்தல்இயற்கை அளிக்கும் கொடைகளுக்கு நாம் திருப்பிச் செலுத்தும் பரிசாக இவைகளை உணர்தல் போன்றனவற்றுக்காக இந்தத் தருணத்தை நல்லதொரு வாய்ப்பாக அவர்கள் பயன்படுத்திக் கொண்டனர்.
இதன்மூலம் காலநிலை மாற்றங்களைத் தணிக்கவும்சுற்றுச்சூழல் மாற்றங்களுக்கான தகுந்த தீர்வுக்குத் திட்டமிடவும்ஒரு தனித்துவமான முறையை அவர்கள் கொண்டுவந்துள்ளனர்சுருக்கமாகச் சொல்வதென்றால்இந்த ஆண்டு பூமி தினத்தை மாணவர்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்களாகக் கொண்டாடினர்,வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலிருந்த போதும்பூமி மீதும் நாட்டின் மீதும்நாட்டு மக்கள் மீதும் நல்லுணர்வு கொண்ட மாணவர்களின் உயர்சிந்தனையின் முயற்சியைப் பள்ளி நிர்வாகம் பாராட்டுகிறது.

No comments:

Post a Comment