Featured post

2K Love Story Movie Review

2K Love Story Movie Review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம 2k love ஸ்டோரி ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை suseendran தான் இயக...

Saturday, 15 February 2025

2K Love Story Movie Review

2K Love Story Movie Review

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம 2k love ஸ்டோரி ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை suseendran தான் இயக்கி இருக்காரு. இந்த படத்தோட core theme அ பாத்தீங்கன்னா modern day ல இருக்கற friendship அ பத்தியும் relationship அ பத்தியும் தான் சொல்லறாங்க. இன்னிக்கு release ஆகிருக்ற இந்த படத்துல Jagaveer , Meenakshi , Bala Saravanan, Antony Bhagyraj, Jayaprakash, Vinodhini Vaidyanathan  னு நெறய பேர் நடிச்சிருக்காங்க. இந்த படத்தோட கதை என்னனு பாக்கலாம் வாங்க. 


2k Love Story Movie Video Review: https://www.youtube.com/watch?v=O8ra3NSpt6U

கார்த்திகா நடிச்சிருக்க ஜெகவீரும் மோனிகாவா நடிச்சிருக்கற மீனாட்சி  சின்ன வயசுல இருந்தே க்ளோஸ் பிரண்ட்ஸ் இருக்காங்க. ஸ்கூல்ல ஆரம்பிச்ச இவங்களோட ஃப்ரெண்ட்ஷிப்  காலேஜையும் தாண்டி  office ளையும் continue ஆகுது. இப்படி எல்லாம் segment ளையும்  இவங்க டிராவல் பண்ணும் போது பாக்குறவங்க எல்லாருமே  இவங்க லவ் பண்றாங்க என்ற decision க்கு வந்துடுறாங்க. ஆனா இவங்க எப்பவுமே friends  தான் இருக்காங்க. இப்படி இவங்க life  smooth அ போயிடு இருக்க karthik  pavithra ன்ற பொண்ண love பண்ண ஆரம்பிக்குறாரு. என்னதான் இவரு பவித்ரா வ true வா love பண்ணாலும், monica ஓட close அ இருக்கிறது pavithra க்கு பிடிக்கல. இதுனால pavithra ஒரு முடிவுக்கு வராங்க அது என்னனா monica ஓட friendship அ cut பண்ணிட சொல்லறாங்க. இதை கேட்ட karthik ரொம்ப கோவம் பட்டு தன்னோட friendship அ நான் எதுக்காகவும் விட்டு குடுக்க மாட்டேன் னு சொல்லி pavithra ஓட love relationship அ break up பண்ணிடுறாரு. இவங்க ரெண்டு பெறுயும் சேது வைக்கறதுக்கு monica நெறய முயற்சி பண்ணறாங்க. ஆனா pavithra ஒரு accident ல இறந்து போயிடுறாங்க. 


தன்னோட lover இறந்ததை கேட்டு depression ல போட்டுறாரு karthik. இது ல இருந்து கார்த்திக் அ வெளில கொண்டு வர்ரது monica தான். இதுக்கு அப்புறமா இவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணிவைக்கறதுக்கான ஏற்பாடு தடபுடல நடந்துட்டு  இருக்கு. இதுக்கு அப்புறம் என்ன நடந்தது. இவங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிகிட்டாங்களா இல்ல கடைசி வரைக்கும் friends ஆவே இருந்துட்டாங்களா ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 

இந்த காலத்து youngsters க்கு பிடிச்ச மாதிரி தான் ஒரு கதை களத்தை கொண்டு வந்திருக்காரு suseendran . படத்தோட ஆரம்பத்துல இருந்து கடைசி வரைக்கும் ரொம்ப interesting அ கதையை audience க்கு பிடிச்ச மாதிரி கொண்டு வந்திருக்காரு னு  தான் சொல்லணும். usual அ ஒரு பையனும் பொன்னும் friends அ இருந்தாலே automatic அ அவங்க love பண்ணறாங்க ன்ற mindset க்கு இந்த society வந்துடுது. ஆனா ஒரு பொன்னும் பையனும் கடைசி வரையும் friends அ இருக்க முடியும் ன்றதா இந்த படத்துல காமிச்சிருக்காங்க னு தான் சொல்லணும். இவங்க ரெண்டு பேருக்குள வர பிரச்சனைகள் அ இருக்கட்டும் அதா friends ஆவே இதை எப்படி சமாளிக்கறாங்க ன்றது ரொம்ப அழகா கொண்டு வந்திருக்காங்க. இன்னும் சொல்ல போன madhavan  நடிப்புல வெளி வந்த priyamana thozhi படத்தை போலவே இந்த படமும் இருக்குனு தான் சொல்லணும். அவ்ளோ அழகா நம்மோட மனச ஈர்க்குற மாதிரி ஒரு நல்ல திரை படம் னே சொல்லலாம். 

இந்த படத்துல இருக்கற பெரிய plus point அ இதுல நடிச்சிருக்க actors தான். ஒரு எதார்த்தமான நடிப்பை பதிவு பண்ணிருக்காங்க. அதோட இந்த படத்துல வந்த comedy portions எல்லாமே சிரிக்கிற மாதிரியும் ரசிக்கிற மாதிரியும் இருந்தது. அதுலயும் முக்கியமா singampuli , balasaravanan ஓட காமெடி லாம் அட்டகாசமா இருந்தது. முக்கியமா second half ல singampuli ஓட performance வேற level ல இருந்தது னு தான் சொல்லணும். இந்த படத்தோட cinematography யும் editing யும் பக்கவா அமைச்சிருந்தது. அதோட iman ஓட music இந்த படத்தோட emotions அ music அண்ட் bgm னால வேற level  க்கு எடுத்துட்டு போய்ட்டாரு னு தான் சொல்லணும். 

மொத்தத்துல ஒரு நல்ல good  feel  movie தான் இது. கண்டிப்பா இந்த படத்தை பாக்கறதுக்கு miss பண்ணிடாதீங்க.

Otha Vottu Muthaiya Movie Review

                              Otha Vottu Muthaiya Movie Review 


ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம ஒத்த ஒட்டு muthaiah ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். sai rajagopal இயக்கி இருக்கற இந்த படத்துல goundamani யும் yogibabu வும் தான் lead role ல நடிச்சிருக்காங்க. இவங்களோட சேந்து Rajendran OAK sundar லாம் நடிச்சிருக்காங்க. இந்த படம் feb 14 அன்னிக்கு release ஆகியிருக்கு. இந்த படத்தோட genre னு பாக்கும் போது political comedy னு தான் சொல்லணும். சோ வாங்க இந்த படத்தோட கதை குள்ள போலாம். 

Otha Vottau Muthaiya Movie Video Review: https://www.youtube.com/watch?v=4uhydNi921U

muthaiah வ நடிச்சிருக்க goundamani ஒரு political party ல பேர் போனவரா இருக்காரு. அது மட்டும் இல்ல இவரோட மூணு தங்கச்சிகளை மூணு அன்னான் தம்பிகளுக்கு குடுக்கணும் னு ஆசை படுறாரு. இது ஒரு பக்கம் இருக்க நடக்கற election ல ஒரே ஒரு vote வாங்கி தோத்து போய்ட்டுறாரு. ஆனா அதே பெருசா எடுத்துக்காம மறுபடியும் தேர்தல் ல போட்டி போடுறதுக்கு ready ஆகுறாரு. இதுனால இவருக்கு நெறய பிரச்சனைகளும் சவால்களும் வருது. இவருக்கு opposite அ இருந்து எதிர்த்து நிக்கிறது OAK Sundar தான். இந்த பிரச்சனைகளை  தாண்டி muthaiah  ஜெய்க்கராருற இல்ல தோத்து போறாரா ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


கடைசியா நம்ம கௌண்டமணிய 2016 ல வெளி வந்த வாய்மை படத்துல பாத்தோம். கிட்ட தட்ட 10 வருஷம் கழிச்சு மறுபடியும் இந்த படம் மூலமா ஹீரோ வ enter ஆகிருக்காரு. இந்த படத்துல ஒரு மரியாதைக்குரிய politician அ இருக்காரு. கதை போக  போக politics யும் family emotions யும் balance பண்ணி காமிச்சிருக்காங்க. இன்னும் சொல்ல போன இவரோட அரசியல் வாழ்க்கைல படுற கஷ்டங்களும் காமிச்சிருக்காங்க அதே சமயம் இவரோட குடும்ப சூழல் அ  பத்தியும் காமிக்கறாங்க. இவருக்கு மனைவி அப்புறம் மூணு தங்கச்சிங்க இருக்காங்க. அந்த மூணு தங்கச்சிங்க பேரு தான் Malini, Shalini and Yazhini. நான் ஏற்கனவே சொன்ன மாதிரி மூணு அன்னான் தம்பிகளுக்கு தான் தங்கச்சிகளை குடுக்கணும் னு ஆசை படுறாரு. இது இவரு சும்மா எடுத்த முடிவு கிடையாது இவரோட இந்த ஆசை க்கு பின்னாடி ஒரு காரணம் இருக்கு. அது என்னனு பாத்தீங்கன்னா இவரோட மனைவி ஓட தங்கச்சி க்கு கல்யாணம் பண்ணி வச்சிருப்பாரு. அந்த பொண்ணோட husband  வீட்ல மாமியார் அப்புறம் பாட்டி ரொம்ப கொடுமை படுத்துறதுனால இந்த பொண்ணு இறந்து போய்டுற. அதுனால தான் இந்த பொண்ணுக்கு ஏற்பட்ட மாதிரி தன்னோட தங்கச்சிகளுக்கு நடக்க கூடாது னு அன்னான் தம்பிகளை இருக்கற பசங்கள தேடுறாரு. 

இருந்தாலும் இந்த மூணு பொண்ணுங்களும் ஒரு கட்டத்துல லவ் பண்ண ஆரம்பிக்கறாங்க. ஆனா அந்த பசங்க அன்னான் தம்பிகளா கிடையாது. இருந்தாலும் இந்த கல்யாணத்துக்கு அன்னான் சம்மதிக்கணும் ண்றதுனால இந்த மூணு பசங்களா  அன்னான் தம்பிங்க மாதிரி  setup பண்ணி வைக்கிறாங்க. இன்னொரு பக்கம் jail ல இருந்து ஒரு குடும்பம் வெளில வரும் அவங்க muthaiah எப்படியாது ஏமாத்தி அவரோட தங்கச்சிகளை இவங்களோட பசங்களுக்கு கட்டி வைக்கணும் ன்ற plan ல எறங்குறாங்க. அரசியல் பக்கம் னு பாக்கும் போது muthaiah ஓட driver அ வேலை பாத்துட்டு இருப்பாரு yogibabu இவருக்கும் அரசியல நிக்கணும் ன்ற ஆசை இருக்கும் ஆனா muthaiah encourage பன்னதனால இவரு வேற ஒரு கட்சி ல சேந்து muthaiah க்கு எதிரா நிப்பாரு. இப்படி muthaiah க்கு குடும்பத்தலையும் சரி arasiyal ளையும்  சரி நெறய பிரச்சனைகள் வருது.  

கதை ல நடிச்ச actors யும் சரி கதைக்களம் யும் சரி audience  க்கு interesting அ இருக்கற மாதிரி தான் கொண்டு வந்திருக்காங்க. politics அ பத்தி இந்த படத்துல சொன்ன  விஷயங்கள் எல்லாமே ரொம்ப எதார்த்தமா இருந்தது. அது மட்டும் இல்லாம அரசியல்  ல நம்ம பாத்த உண்மையான சம்பவங்களை தான் இதுல காமிச்சிருக்காங்க. இந்த சூழல் ல மக்களுக்கு என்ன வேண்டும் ன்றது தெளிவு படத்துற விதமா இந்த படம் அமைச்சிருக்கு னு தான் சொல்லணும்.  மொத்தத்துல ஒரு நல்ல காமெடி படம் தான் இது. கண்டிப்பா இந்த படத்தை பாக்குறதுக்கு மிஸ் பண்ணிடாதீங்க.

E5 என்டர்டைன்மெண்ட் சார்பில் காமாட்சி* *ஜெயகிருஷ்ணன் தயாரிக்கும் படம்

 *E5 என்டர்டைன்மெண்ட் சார்பில் காமாட்சி* *ஜெயகிருஷ்ணன் தயாரிக்கும் படம் 'பேரன்பும் பெருங்கோபமும்'.* 






'இசை ஞானி' இளையராஜா இசையமைப்பில் உருவாகி வரும்  'பேரன்பும் பெருங்கோபமும்'  திரைப்படத்திற்காக காதலர் தினத்தன்று ‘வாலண்டைன் போஸ்டர்’ வெளியாகிறது.  


இதில் நாயகனும், நாயகியும் இந்த மண்ணின் அசலான காதலர்களைப் பிரதிபலிப்பதால்.. இந்த போஸ்டர் இளைய தலைமுறையினரிடத்தில் பெரும் வரவேற்பு கிடைக்கும்.


பாலு மகேந்திராவின் 'சினிமா பட்டறை' மாணவரான அறிமுக இயக்குநர் சிவபிரகாஷ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'பேரன்பும் பெருங்கோபமும்'. 


இதில் பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான தங்கர் பச்சானின் மகன் விஜித் பச்சான் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை ஷாலி நிவேகாஸ் அறிமுகமாகிறார். இவர்களுடன் மைம் கோபி, 

அருள் தாஸ், லோகு, சுபத்ரா, தீபா, சாய் வினோத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

ஜே.பி. தினேஷ்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு இசை ஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ராமர் மேற்கொள்ள, கலை இயக்கத்தை சரவணன் கவனித்திருக்கிறார். பி.ஆர்.ஒ ஜான்சன்.


நல்ல சிந்தனை கொண்ட சாமானியனைப்  பற்றிய இந்த திரைப்படத்தை E5 என்டர்டைன்மெண்ட்  படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் காமாட்சி ஜெயகிருஷ்ணன் தயாரித்திருக்கிறார். 


படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், 

''கதை நாயகனின் வாழ்வில் மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் நடைபெறும் சம்பவங்களின் தொகுப்பாக இப்படத்தின் கதை எழுதப்பட்டிருக்கிறது. சமூகத்தால் இழைக்கப்பட்ட தீமைகளை நாயகன்  எப்படி எதிர்கொண்டான்? என்பதை விறுவிறுப்பான காட்சிகளுடனும், சுவாரசியமான திருப்பங்களுடனும் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.'' என்றார். 


இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


- Johnson PRO

Friday, 14 February 2025

Madurai Paiyanum Chennai Ponnum - Webseries on Aha OTT

 *Madurai Paiyanum Chennai Ponnum - Webseries on Aha OTT*




இன்று காதலர் தினத்தன்று ஆஹா தமிழ் அதன் புதிய வெப் சீரிஸ்  "மதுரைப் பையனும் சென்னைப் பொண்ணும்" மூலம் ஒரு புத்துணர்ச்சியூட்டும் காதலைக் கொண்டுவருகிறது. 


மதுரை பையனுக்கும் சென்னைப் பெண்ணுக்கும் இடையிலான கலாச்சார மற்றும் தனிப்பட்ட வேறுபாடுகளை ஆராயும் ஒரு மனதைக் கவரும் வெப் சீரிஸ் ஆக தயாரிக்கப்பட்டுள்ளது. மோதலில் தொடங்கும் இவர்களது தவிர்க்க இயலாத நட்பு ஒரு கட்டத்தில் காதலாக மாறுகிறது. காதலில் இணைய முடியாதபடி இரண்டு கதாபாத்திரங்கள் குறுக்கே வர, காதல் கை கூடியதா இல்லையா என்ற கதைக்களத்தை காமெடி கலந்த ஒரு நகைச்சுவை பேக்கேஜாக திரைக்கதை அமைந்துள்ளது.


பிரபல இணைய மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளினி ஏஞ்செலின் இந்த தொடரின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவருக்கு இணையாக தொடரின் நாயகனாக கண்ணா ரவி நடிக்கின்றார் .இவர்களுடன் ரேணுகா , குரேஷி, ஷ்யாமா ஷர்மி மற்றும் பலர் இணைந்து நடிக்கின்றனர்.


விக்னேஷ் பழனிவேல் இயக்கும் இந்த வெப் சீரிஸ் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் காதலர் தினமான இன்று இரவு 7 மணி முதல் ஆரம்பமாகிறது . அதனை தொடர்ந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புதிய எபிசொட் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காதலை கொண்டாடும் இந்த தொடரை காதலர் தினத்தன்று ஆஹா ஓடிடி தளத்தில் காணத்தவறாதீர்கள் .



கார்த்தி நடிக்கும் 'வா வாத்தியார்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

 *கார்த்தி நடிக்கும் 'வா வாத்தியார்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு*



தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி நடித்திருக்கும் 'வா வாத்தியார்' எனும் படத்தில் இடம்பெற்ற 'உயிர் பத்திக்காம..' எனும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. 


இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'வா வாத்தியார்' எனும் படத்தில் கார்த்தி, சத்யராஜ், ராஜ்கிரண், கிருத்தி ஷெட்டி, ஜி. எம். சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.‌ கலை இயக்கத்தை டி. ஆர். கே. கிரண் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை வெற்றி கையாண்டிருக்கிறார். அனல் அரசு சண்டை காட்சிகளை அமைத்திருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார்.  


இப்படத்தின் டீஸர் வெளியாகி ஏழு மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்தது. இந்நிலையில் 'வா வாத்தியார்' படத்தில் இடம்பெற்ற ' உயிர் பத்திக்காம..' எனத் தொடங்கும் முதல் பாடலும் பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுத பின்னணி பாடகர் விஜய் நாராயண்- பின்னணி பாடகி ஆதித்யா ரவீந்திரன் - பின்னணி பாடகரும், இசையமைப்பாளருமான சந்தோஷ் நாராயணன் ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். தமிழ் திரையிசையுலகின் ட்ரெண்ட்செட்டரான சந்தோஷ் நாராயணனின் வசீகரிக்கும் இசையில் உருவான இந்த பாடல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது.


https://youtu.be/KqpWxzX-sGw

A fresh new talent is set to take Tamil cinema by storm! Bhagyashri Borse makes

 A fresh new talent is set to take Tamil cinema by storm! Bhagyashri Borse makes her much-awaited Tamil cinema debut with ‘Kaantha’, a gripping period dramatic thriller set in 1950s Tamil Nadu. Stepping into a role that demanded both depth and authenticity, she has delivered a performance that is already creating a buzz within the industry.



What makes her journey even more special is the dedication she brought to the role. Despite not knowing Tamil initially, Bhagyashri took it upon herself to learn the language, ensuring she could bring her character to life with sincerity. Her hard work, passion, and natural screen presence make her stand out in every frame.


With ‘Kaantha’ slated for release in the coming months, audiences are about to witness the arrival of a star in the making. Bhagyashri’s performance is bound to leave a lasting impact, and this is just the beginning of an exciting journey in Tamil cinema for her!

தமிழ் சினிமாவில் புது அலையை உருவாக்க வரும் பாக்யஸ்ரீ!

 தமிழ் சினிமாவில் புது அலையை உருவாக்க வரும் பாக்யஸ்ரீ!



தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் 1950 களின் தமிழ்நாட்டை பின்னணியாகக் கொண்ட ‘காந்தா’ திரைப்படத்தின் மூலம் தமிழில் பாக்கியஸ்ரீ போர்ஸ் அறிமுகமாகிறார். நடிப்பு திறனை வெளிப்படுத்தும் ஆழமான கதாபாத்திரத்தில் இவர் நடித்திருப்பது திரைத்துறை வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


சினிமாத் துறையில் அவர் தனது மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்த கடின உழைப்பைக் கொடுத்திருக்கிறார். அவருக்கு தமிழ் தெரியாவிட்டாலும், இந்த மொழியைக் கற்றுக்கொள்ள சிரத்தை எடுத்துக் கொண்டார் பாக்யஸ்ரீ. இதன் மூலம் தான் நடிக்கும் கதாபாத்திரத்திற்கு இன்னும் ஆழமாக உயிர் கொடுக்க முடியும் என நம்புகிறார். அவரது கடின உழைப்பு, ஆர்வம் மற்றும் இயல்பான திரை இருப்பு அவரை ஒவ்வொரு ஃப்ரேமிலும் தனித்து நிற்க வைக்கிறது.


'காந்தா' திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் நிச்சயம் ரசிகர்கள் அவரைக் கொண்டாடுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. பாக்யஸ்ரீக்கு தமிழ் சினிமாவில் இது ஒரு அற்புத பயணத்தின் ஆரம்பம்!

Dawn Pictures தயாரிப்பில் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கும் “இதயம் முரளி” பட

 *Dawn Pictures தயாரிப்பில் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கும் “இதயம் முரளி” பட டைட்டில் மற்றும் டீசர் வெளியீட்டு விழா!!*

















































Dawn Pictures தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் 4 வது படைப்பாக, தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில், அதர்வா முரளி நடிக்கும், “இதயம் முரளி” படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வெளியீட்டு விழா, படக்குழுவினர் கலந்துகொள்ள, தனியார் கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில் வெகு கோலாகலமாக நடைபெற்றது. 


தமிழ் திரையுலகில் பிரம்மாண்டமாக நுழைந்து, முன்னணி நட்சத்திரங்களின் கூட்டணியில், தனுஷின் இட்லி கடை, சிவகார்த்திகேயனின் பராசக்தி,  #STR49  படத்தினைத் தொடர்ந்து, 4 வது படைப்பாக, முழுக்க முழுக்க இளைஞர்கள் கொண்டாடும், ரொமான்ஸ் திரைப்படமாக, அதர்வா முரளி நடிப்பில் “இதயம் முரளி”  படத்தைத் தயாரிக்கிறது தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures. “இதயம் முரளி” படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்குநராக அறிமுகமாகிறார்.


கல்லூரியில் நடந்த விழாவினில் இப்படத்தின் டைட்டில் டீசர் ஒளிபரப்பட்டபோது, ரசிகர்களின் உற்சாக கூச்சல் விண்ணைப் பிளந்தது. 


தமிழ் சினிமாவில் கோலோச்சிய நடிகர் முரளியின் மறக்கமுடியாத பாத்திரம் இதயம் முரளி, அவரது மகன் அதர்வா நடிக்கும் படத்திற்கு, இதயம் முரளி தலைப்பிடப்பட்டு அறிவிக்கப்பட்டது, ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியது. 


இப்படத்தில் பங்கு பெற்றுள்ள நடிகர்கள் குழு கல்லூரி மாணவர்கள் முன்னிலையில் அவர்களுடன் உரையாடி, பாடல்கள் பாடி, படத்தின் தகவல்களை பகிர்ந்து கொண்டு,  விழாவை சிறப்பித்தனர். 


இவ்விழாவில் கலந்துகொண்ட 


நடிகை மற்றும் தொகுப்பாளணி ஏஞ்சலினா பேசியதாவது… 

தொகுப்பாளிணியாக இருப்பதை விட இப்போது நடிப்பது பிடித்திருக்கிறது. இது எனக்கு மிகவும் முக்கியமான படம். இந்த வாய்ப்பைத் தந்த ஆகாஷுக்கு நன்றி. இப்படத்தின் ஷீட்டிங்கிற்கு நானும் அமெரிக்கா செல்கிறேன் என நினைக்கிறேன். இப்போது தான் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த டீசர் அனைவருக்கும் பிடித்துள்ளது என நம்புகிறேன். அதே போல் படமும் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி. 


நடிகர் ரக்‌ஷன் பேசியதாவது… 

ஆகாஷ் தமிழ் சினிமாவில் புயல் போல நுழைந்து, பெரிய பெரிய படங்கள் செய்து வருகிறார். உண்மையில் அவர் தயாரிப்பாளர் என்பதை விட இயக்குநர் தான். அவர் படத்தில் நானும் இருப்பது மகிழ்ச்சி. இந்த டீசரே கலக்கலாக இருக்கிறது. படத்தில் நானும் அதர்வாவுடன் அமெரிக்கா செல்வேன். இந்தப்படம் இளைஞர்கள் கொண்டாடும் படமாக இருக்கும். 


நடிகை பிரக்யா நாக்ரா பேசியதாவது…

இப்படத்தில் அதர்வா முரளி அவர்களுடன் நடிப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அவரது அப்பாவின் புகழ்பெற்ற கதாபாத்திரம் இப்படத்தின் தலைப்பாக அமைந்தது மகிழ்ச்சி. என்னை இப்படத்திற்கு தேர்ந்தெடுத்ததற்கு இயக்குநர் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் அவர்களுக்கு நன்றி. 


நடிகை கயாது லோஹர் பேசியதாவது… 

தமிழ் சினிமா ரசிகர்கள் கொடுத்து வரும் வரவேற்பும், அன்பும், மிகப்பெரிய மகிழ்ச்சியை தருகிறது. இந்த அன்புக்கு பதிலாக,  நல்ல படங்கள் மூலம் அவர்களை மகிழ்ச்சிப்படுத்துவேன். இது தான் நான் ஒப்பந்தாமகிய முதல் தமிழ்ப்படம், இந்த வாய்ப்பை வழங்கிய ஆகாஷுக்கு நன்றி. இந்தப்படத்திற்காக உங்களைப் போல நானும் ஆவலோடு காத்திருக்கிறேன். 


பரிதாபங்கள் புகழ் சுதாகர்  மற்றும் டிராவிட் பேசியதாவது… 

ஒன் சைட் லவ் இல்லாத ஆளே கிடையாது, சிலருக்கு ஒன் சைட் லவ் கடைசி வரை ஒன் சைடாகவே இருந்து விடும், பலர் அந்த கட்டத்தை தாண்டி விடுவார்கள். ஆனால் அந்த உணர்வு அலாதியானது. நாங்கள் இருவரும் இந்தப்படத்தில் நாயகனின் நண்பர்களாக வருகிறோம். இந்த வாய்ப்பைத் தந்த ஆகாஷ் பிரதருக்கு நன்றி. இந்த ஷீட்டிங் எப்போதும் ஜாலியாக இருக்கும். ஷீட்டிங் எப்போது நடக்கும் என எதிர்பார்ப்போடு இருப்போம். ஆகாஷ் மிகத் திறமையானவர். எங்களுக்கு மிகவும் ஆதரவாக இருந்தார். இப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் நன்றி. 


பாடலாசிரியர் விவேக் பேசியதாவது… 

இந்த டீம் மிக அற்புதமான டீம். இவர்களுடன் வேலை பார்த்தது மறக்க முடியாத அனுபவம். ஆகாஷ் மிகத் திறமையான இயக்குநர். அவரும் தமனும் சேர்ந்து அட்டகாசமான ஒரு ஆல்பத்தை உருவாக்கியிருக்கிறார்கள். தமன் பிரதர் எனக்கு எப்போதும் அட்டகாசமான பாடல்கள் தந்துள்ளார். அவருக்கு எப்போதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். அதர்வாவுடன் வேலை பார்ப்பதை பெருமையாக கருதுகிறேன்.  இப்படத்தில் நிறைய திறமையாளர்கள் இருக்கிறார்கள், அவர்களுடன் பணியாற்றியது மகிழ்ச்சி. இப்படம் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி. 


பாடகி, நடிகை ஜொனிடா காந்தி பேசியதாவது…

நான் நடிக்கும் முதல் திரைப்படம் இது. என்னை நடிக்க ஊக்கப்படுத்திய ரசிகர்களுக்கு நன்றி. இப்படத்தின் டீசர், மிக அட்டகாசமாக வந்துள்ளது.  எனக்கு மிகவும் பிடித்துள்ளது. இயக்குநர் ஆகாஷுடன் வேலை பார்க்க ஆவலாக உள்ளேன். இப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் நன்றி. 


நடிகை நிஹாரிகா பேசியதாவது… 

இயக்குநர் ஆகாஷுடம் தான், என் நடிப்பு பற்றி கேட்க வேண்டும். டீசர் அனைவருக்கும் பிடித்துள்ளது என நம்புகிறேன். இப்படம் நட்பு, காதல் பற்றியது என் கதாப்பாத்திரம் ரசிகர்களுக்கு பிடிக்கும். இந்த டீமுடன் வேலை பார்ப்பது மிக மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி. 


நடிகை ப்ரீத்தி முகுந்தன் பேசியதாவது… 

ரசிகர்கள் எனக்கு தந்து வரும் அன்புக்கு நன்றி. இப்படத்தின் கதை பற்றி இப்போது சொல்ல மாட்டேன், உங்களுக்கு நிறைய ஆச்சரியம் உள்ளது. நம்முடைய கல்லூரி காலங்களில் நாம் நிறைய பேரை சந்திப்போம், பல அனுபவங்கள் இருக்கும், அதை ஞாபகப்படுத்தும் படமாக இப்படம் இருக்கும். இந்த டீம் ஃபேமிலி மாதிரி, ஷூட்டிங் மிக ஜாலியாக  இருக்கிறது. படம் மிக நன்றாக இருக்கும் நன்றி. 


இசையமைப்பாளர் தமன் பேசியதாவது,.. 

நான் நடிப்பேன் என நினைக்கவில்லை, எனக்கு ஜோடி நிஹாரிகா என சொல்லி என்னை இம்ப்ரெஸ் பண்ணி விட்டார் ஆகாஷ். கௌதம் மேனன், ஜீவா கலந்த கலவையாக ஆகாஷ் உள்ளார். கண்டிப்பாக ஜாலியான படமாக இருக்கும். ரொம்ப நல்ல லவ் ஸ்டோரி.  உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும். நன்றி. 


இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் பேசியதாவது…,

தயாரிப்பபை விட இயக்கம் தான் ஈஸி, சின்ன வயதிலிருந்து எனக்கு இயக்குநராகும் ஐடியா இருந்தது. ரசிகர்களை உற்சாகப்படுத்த வேண்டுமென உருவாக்கிய திரைக்கதை இது. இப்படம் நம் காதல், நட்பை ஞாபகப்படுத்தும். இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட அனைவருக்கும் நன்றி. ஒரு அழகான காதல் படமாக இருக்கும் நன்றி. 


நடிகர் அதர்வா பேசியதாவது…,

ஒன் சைட் லவ் எப்போதும் வாழ்வில் மறக்க முடியாத அனுபவம், என் அப்பாவின் கொண்டாடப்பட்ட டைட்டில் இதயம் முரளி, என்னுள்ளும் ஒரு இதயம் முரளி இருக்கிறான், எல்லோருக்குள்ளும் ஒரு இதயம் முரளி இருக்கிறான், அதைக் கொண்டாடும் வகையில் மிக அழகான காதல் படமாக இருக்கும். இயக்குநர் ஆகாஷுக்கு நன்றி. இதயம் முரளி என்பது மிகவும் உணர்வுப்பூர்வமான விசயம், ஆகாஷ் மிகப்பெரிய தயாரிப்பாளர், அவரை ஒரு இயக்குநராகத் தான் தெரியும். இந்தக்கதையை 2017ல் சொன்னார், அப்போது அது நடக்கவில்லை, பின்பு தயாரிப்பாளராக மாறிவிட்டார், அதன் பிறகு இப்போது இந்தப்படம் செய்யலாம் என்றார். மிக மகிழ்ச்சியாக இருந்தது. கண்டிப்பாக இப்படம் ஒரு நல்ல படமாக இருக்கும் நன்றி. 


காதலின் மெல்லிய உணர்வுகளை கொண்டாடும் ஒரு படைப்பாக உருவாகி வரும் இப்படத்தின் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது.


நடிகர்கள் : அதர்வா , பிரீத்தி முகுந்தன் , கயாது லோஹர் , நட்டி , தமன் ,நிஹாரிகா , ரக்சன் , திராவிட் , ஏஞ்சலின் , பிரக்யா நாக்ரா , சுதாகர் , யாஷஸ்ரீ 


தொழில்நுட்பக் குழு: 


தயாரிப்பாளர், இயக்குனர் - ஆகாஷ் பாஸ்கரன் 

இசை - தமன் S

ஒளிப்பதிவாளர் - CH சாய் 

படத்தொகுப்பாளர் - பிரதீப் இ ராகவ்

தயாரிப்பு வடிவமைப்பாளர் - எம்.ஆர்.கார்த்திக் ராஜ்குமார் 

வசனங்கள் - ரமணகிரிவாசன், ஆகாஷ் பாஸ்கரன், திராவிடச் செல்வம்

பாடல் வரிகள் - விவேக்

நடன இயக்குனர் - ஷோபி

ஆடை வடிவமைப்பாளர் - பல்லவி சிங்

ஸ்டில்ஸ் - ஜெய்குமார் வைரவன்

போஸ்ட் புரொடக்‌ஷன் மேற்பார்வையாளர் - குணசேகர் எம் 

விளம்பர வடிவமைப்பாளர் - கபிலன்