Featured post

Empuraan Movie Review

Empuraan  Movie Review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம empuran ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். prithiviraj direct பண்ண இந்த படத்தை murali...

Friday, 28 February 2025

ரியோ, மாஸ்டர் மகேந்திரன் மற்றும் சௌந்தர் வெளியிட்ட செகண்ட் சான்ஸ் ஆல்பம் பாடல்

 *ரியோ, மாஸ்டர் மகேந்திரன் மற்றும் சௌந்தர் வெளியிட்ட செகண்ட் சான்ஸ் ஆல்பம் பாடல் !!*








*செகண்ட் சான்ஸ் ஆல்பம் பாடல் வெளியீட்டு விழா !!*



*கவிப்பேரரசு வைரமுத்து  வரிகளில், ஸ்ரீ பி 

இசையில், கலைமாமணி ஶ்ரீதர் மாஸ்டர் நடன அமைப்பில், ஜிவி பிரகாஷ் குமார், நரேஷ் ஐயர் மற்றும் ரக்‌ஷிதா குரல்களில்

A Spot Light Entertainment தயாரிப்பில் சபரி மணிகண்டன் இயக்கத்தில், வாழ்வில் இரண்டாவது வாய்ப்பின் அருமையை பேசும் அழகான ஆல்பம் பாடலாக உருவாகியுள்ளது செகண்ட் சான்ஸ்...*


மகேஷ் சுப்பிரமணியம், அம்மு அபிராமி 

நடித்துள்ள இப்பாடல் இன்று படக்குழுவினர் கலந்துக்கொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக வெளியிடப்பட்டது. 


இளம் நட்சத்திரங்களான ரியோ, மாஸ்டர் மகேந்திரன் மற்றும் சௌந்தர் இவ்விழாவில் கலந்துகொண்டு பாடலை வெளியிட்டு, படக்குழுவை பாரட்டினர். 


இந்நிகழ்வினில் 


*நடிகர் ரியோ கூறியதாவது..*


இந்த பாடலில் மகேஷ் மற்றும் அபிராமி இருவரின்  பர்ஃபாமன்ஸ்  மிகப்பிரமாதமாக இருக்கிறது. நானும் மகேஷும் ஜோடி ரியாலிட்டி ஷோவில் ஒன்றாக பங்கேற்றோம்.

ஜிவி பிரகாஷ் மற்றும் நரேஷ் ஐயர் உடைய பாடல்கள் தனித்தனியாக பிரம்மாதமாக இருக்கும். இதில் அவர்கள் இருவரும் ஒரே நேரத்தில் பாடி இருக்கிறார்கள்.  அது இன்னும் அற்புதமாக இருக்கிறது.  ஹூக் ஸ்டெப்-க்கு பெயர் போன ஸ்ரீதர் சார்  உடைய நடன  அமைப்பு இதில் பிரம்மாதமாக இருக்கிறது. இந்த பாடல் கேட்பதற்கு கேட்சியாகவும், ரசிக்கும் படியும் இருக்கிறது. ஒட்டுமொத்த குழுவிற்கும் எனது வாழ்த்துக்கள். 


*மகேந்திரன் கூறியதாவது..*


இந்த பாடலின் தயாரிப்பாளருக்கு எனது  வாழ்த்துகள், இதுபோன்ற பாடல்களை  நீங்கள் மீண்டும் மீண்டும் கொடுக்க வேண்டும்.  நடன இயக்குனர் ஸ்ரீதர் மிகவும் திறமையானவர் மற்றும் சினிமா மீது மிகவும் நேசம் கொண்டவர், அவர் இந்த பாடலை  மிகச்சிறப்பான பாடலாக மாற்றியுள்ளார்,. இசையமைப்பாளருடைய பணியும், பேச்சும் மிகச்சிறப்பாக இருக்கிறது. பாடலின் கதாநாயகன் மகேஷ் மிக கடுமையான உழைப்பாளி. மஹேஷ் எப்போதும் "சிறந்த முறையில் செயல்பட வேண்டும், மற்றும் திறமையான முறையில் முன்னேற வேண்டும்" என கூறுவர்.மகேஷ், இப்போது நீங்கள் இருக்கும் இந்த ஸ்டேஜ் மிகவும் சிறியது; விரைவில் நீங்கள் அதற்கு மேலான, மிகப்பெரிய ஸ்டேஜ்களில் சாதனை புரிவீர்கள். அபிராமி மிகவும் திறமையான, அனைத்து மொழி  மக்களையும் ஈர்க்க கூடிய வகையில் தனது நடிப்பை கொடுத்து வருகிறார். அவருடைய திறமைக்கும், அடக்கத்திற்கும் அவர் மிகப்பெரிய வெற்றிய பெற வேண்டும். ஒட்டுமொத்த குழுவிற்கும் எனது வாழ்த்துக்கள்.


*நடிகர் சௌந்தராஜன் கூறியதாவது..*


இந்த பாடலின் கதாநாயகன் மகேஷ் தான் என்னை அழைத்தார். நாங்கள் சில நிகழ்வுகளில் சந்தித்தோம். அவர் மிகவும் கடின உழைப்பாளி. நடிகை அபிராமி மிகவும் நுணுக்கமான எக்ஸ்பிரசன் கொடுப்பதில் வல்லவர். அவருடைய நடிப்பு மிக அற்புதமாக இருந்தது.  இந்த பாடலில் எடிட்டிங் மற்றும் கதை சொல்லும் விதத்தில் ஒரு அழகான  ரிதத்தை பின்பற்றி இருக்கிறார்கள்.  பாடல் வரிகள், இசை அமைப்பு, நடன அமைப்பு என அனைத்தும் இந்த பாடலில் மிகச்சரியாக இருக்கிறது. இந்த குழுவிற்கு எனது வாழ்த்துக்கள். 


*நடன அமைப்பாளர் ஸ்ரீதர் கூறியதாவது..*


மகேஷ் மற்றும் அம்மு அபிராமி இருவரும் மிக அழகாக  நடித்து இருக்கின்றனர்.   கதையின் கருவை அவர்கள் தெளிவாக வெளிக்காட்டியுள்ளனர்.  இசையமைப்பாளர் உடைய கடின உழைப்பு, இந்த பாடலை மெருகேற்றியுள்ளது.  ஜீவி பிரகாஷ் மற்றும் நரேஷ் உடைய குரலில் இந்த பாடல் மேலும் சிறப்பாக மாறியுள்ளது. இயக்குநர் மான்டேஜ்  மற்றும் நடன அமைப்புகள் என இரண்டையும் சிறப்பாக கோர்த்துள்ளார். இந்த குழு மேலும் நிறைய படங்களை செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். படக்குழுவை வாழ்த்துக்கிறேன்.


*எடிட்டர் முத்தையன் கூறியதாவது..*


என்னை நம்பி இந்த புராஜக்ட் கொடுத்ததற்கு நன்றி. இந்த படத்தில் இசையும், வரிகளும், அதற்கான நடன அமைப்பும் மிக அற்புதமாக வந்துள்ளது.  பாடல் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் 


*ஒளிப்பதிவாளர் ஜோசப் கூறியதாவது,,*


இந்த வாய்ப்பை வழங்கிய அனைவருக்கும் நன்றி.  நான் இதை எதிர்பார்க்கவில்லை, எனக்கு இந்த பாடல் வாய்ப்பையும், மேடை வாய்ப்பையும் கொடுத்த குழுவிற்கு நன்றி. இது ஒரு மிகச்சிறந்த பாடல் அனைவரும் ரசிக்ககூடிய பாடல். அனைவருக்கும் நன்றி. 


*இசையமைப்பாளர் ஶ்ரீ பி கூறியதாவது..,*


இந்த பாடலை மகேஷ் உணர்வுபூர்வமாக கடத்தி இருக்கிறார்.  ஜிவி பிரகாஷ் சார் மற்றும் நரேஷ் இருவரும் மெர்சல் அரசன் பாடலிற்கு பிறகு, இந்த பாடலில் தான்  இணைந்து இருக்கிறார்கள்.  அவர்கள் மிகச்சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர். நடன இயக்குனர் ஸ்ரீதர் இந்த படத்தில் மெலடிக்கு ஏற்ற ஒரு நடன அமைப்பை கொடுத்து, பாடலை இன்னும் மெருகேற்றி இருக்கிறார். வைரமுத்து சாருடைய பங்களிப்பு அளப்பறியது.  இயக்குநர் இந்தப் பாடலுக்காக கடின உழைப்பை கொடுத்து இருக்கிறார்.  படக்குழுவினர் அனைவரும் கடின உழைப்பை கொடுத்து இந்த பாடலை அற்புதமான பாடலாக மாற்றி இருக்கிறார்கள். 



*நடிகர் மகேஷ் சுப்பிரமணியம் கூறியதாவது...*


தயாரிப்பாளர்கள் மது மற்றும் கார்த்திக் இருவருக்கும் நன்றி என் குறும்படம்  பார்த்து , எனக்கு இந்த வாய்ப்பை வழங்கினார்கள். ஒரு கதைக்கருவுடன் இந்த பாடலை உருவாக்கலாம் என்றார் இயக்குநர் சபரி. இது நிறைய பட்ஜெட் தேவைப்படும் பாடல் ஆனால் மிக அழகாக இதை உருவாக்கி விட்டார் சபரி. ராட்சசன் படத்திலிருந்து, நான் அம்மு அபிராமி ரசிகன் மிக அற்புதமான நடிகை என்னுடன் நடித்ததற்கு நன்றி. ஸ்ரீ என் நண்பர் இந்த ஆல்பம் பற்றி சொன்னவுடன் ஆர்வமுடன் வந்தார், மிக அழகான இசையை தந்துள்ளார். ஜீவி மற்றும் நரேஷ் ஐயர் ரசிகன் நான் இந்த பாடல் அவர்கள் பாடியது மகிழ்ச்சி. இந்த ஆல்பத்திற்கான பாடல் வரிகளை வைரமுத்து சார் எழுதியுள்ளார்.

ரியோ,அவரது பிஸியான கால அட்டவணை இருந்தபோதிலும், எனக்காக இந்த வெளியீட்டு விழாவிற்கு வந்திருந்தார். விஜய் டிவியின் ஜோடி நடன நிகழ்ச்சியில் இருந்து தொடங்கியது எங்கள் நட்பு. 

மகேந்திரன் தனது படப்பிடிப்பில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் என்னுடைய எல்லா முக்கியமான நிகழ்வுகளுக்கும் எப்போதும் உடனிருப்பவர்.


எனது பெற்றோருக்கும், மனைவி பிரேமலதாவுக்கும் எனது மனமார்ந்த நன்றி. நான் தூங்கும் வரை அவள் தூங்க மாட்டாள், ஆரம்பத்திலிருந்தே அவள் ஒரு பெரிய ஆதரவாக இருந்தாள்.கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் இந்தப்பாடல் பிடிக்கும் நன்றி. 


*நடிகை அம்மு அபிராமி கூறியதாவது..,*


இங்கிருக்கும் அனைவரும் திறமையானவர்கள் என்பதைத்  தாண்டி, அன்பானவர்கள்.  இந்த பாடல் குழு,  ஒரு குடும்பமாக செயல்பட்டு, இந்த பாடலை உருவாக்கி இருக்கின்றனர்.  இந்த படக்குழுவுடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி..  புதுமுக கலைஞர்களுக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கு நன்றி. குரல் கொடுத்த ஜீவி பிரகாஷ், நரேஷ் மற்றும்  ரக்ஷித்ராவிற்கு  நன்றி.   ஸ்ரீதர் மாஸ்டர் மிகவும் நேர்த்தியான முறையில் பாடலை உருவாக்கி கொடுத்துள்ளார். அனைவருக்கும் என் நன்றிகள் .


*தயாரிப்பாளர் மது கூறியதாவது..*


இது ஒரு சாதாரண மாலை உரையாடலுடன் தொடங்கியது

ஊடகத்துறையில் நுழைவது குறித்து எங்களிடம் எந்த தகுந்த அனுபவமும் இல்லை.


மகேஷ் எங்களுக்கு எல்லாவற்றையும் விரிவாக விளக்கி சொன்னார்,என்ன எதிர்பார்க்க வேண்டும் என்பதை அவர் தெளிவான பார்வையில் வைத்திருந்தார்.. மகேஷ், தான் என்ன செய்கிறார் என்பதில் உறுதியாக இருந்தார். நடிகர்கள் மற்றும் குழுவினர் யாரையும் நாங்கள் சந்திக்கவில்லை. இங்கு நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் மகேஷ் எங்களுக்கு பதிவிட்டு வந்தார். இயக்குனர் சபரி தான் செய்வதில் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தார், அது எங்களுக்கு அதிக நம்பிக்கையை அளித்தது. இசையமைப்பாளர் ஸ்ரீ பி இசையில் சிறப்பாக பணியாற்றியுள்ளார்.


திறமையானவர்கள் அனைவரும் இந்த பாடலில் இணைந்துள்ளனர்.  அனைவரும் மிகச்சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர். தெளிவான பார்வையுடன் இந்த பாடலை அவர்கள் உருவாக்கி இருக்கின்றனர்.  பாடல் கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.  இந்த பாடலுக்கு உங்கள் ஆதரவு தேவை.


*இயக்குநர் சபரி மணிகண்டன் கூறியதாவது...*


மகேஷ் மூலம் தான் இந்த புராஜக்ட் ஆரம்பமானது, இதற்காக அவர் மிகக் கடினமான உழைப்பைத் தந்துள்ளார். நீங்கள் நடிகராக ஆசைப்படுகிறீர்கள் நான் இயக்குநராக ஆசைப்படுகிறேன் அதனால் இதில் கண்டிப்பாக கதை இருக்க வேண்டும் என்றேன், முழு அர்ப்பணிப்புடன் உழைப்பைத் தந்தார். மது இன்று தான் அமெரிக்காவில் இருந்து வந்துள்ளார், கார்த்திக் மது இருவரும் எல்லாவற்றையும் எங்களிடம் நம்பி விட்டு விட்டார், அவருக்கு என் நன்றிகள். அம்மு அபிராமி இந்த பாடலை நம்பி வந்தார்,  ஷீட்டிங்கில் முழு ஒத்துழைப்பு தந்தார். அவருக்கு என் நன்றி. 10 மணிக்கு சொன்னால் 9 மணிக்கு வந்து விடுவார்.  ஸ்ரீதர் மாஸ்டர் அவர் நடன அமைப்பு, எனக்கு மிகவும் பிடிக்கும் இந்த முழுப் பாடலும் என் கூடவே இருந்தார், அவர் பெயரால் தான் இந்த பாடல் தெரிகிறது அவருக்கு என் நன்றி. என் தொழில் நுட்ப கலைஞர்கள் எல்லோருமே என் நண்பர்கள். படம் வேலை பார்த்தால் கூட எனக்காக வந்து, செய்தனர். ஜீவி, நரேஷ் ஐயர் மற்றும் ரக்‌ஷிதா சுரேஷ்க்கு என் நன்றி, இந்தப்பாடல் கண்டிப்பாக  உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்படி செய்துள்ளோம் நன்றி. 



காதலில் நாம் செய்யும் தவறுகள், ஈகோ, அவசரம் நம்மை மீறிய கட்டத்திற்கு இழுத்து காதலை அழித்து விடுகிறது. அப்படிப்பட்ட  ஒருவனுக்கு அந்த தவறுகளை சரி செய்து கொள்ளும் வகையில் ஒரு இரண்டாவது வாய்ப்பு கிடைக்கிறது. அதனை அவன் எப்படி பயன்படுத்திக்கொள்கிறான் என்பது தான் இந்த ஆல்பம் பாடலின் கரு. 


இப்பாடலின் தீமை உருவாக்கி இன்றைய ரசிகர்கள் கொண்டாடும் வண்ணம் இயக்கியுள்ளார் இயக்குநர் சபரி மணிகண்டன். 


காதலின் பல்வேறு தருணங்களை தன் பேனாவால் வரலாறாக்கிய கவிப்பேரசு வைரமுத்து, இந்த செகண்ட் சான்ஸ் பாடலை எழுதியுள்ளார். இளம் இசையமைப்பாளர் ஶ்ரீ இப்பாடலுக்கு இசையமைத்துள்ளார். இசை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் பாடகர்கள் நரேஷ் ஐயர் மற்றும் ரக்‌ஷிதா சுரேஷ் இப்பாடலை பாடியுள்ளனர்.  


கலைமாமணி ஶ்ரீதர் மாஸ்டர் இளமை துள்ளும் வகையிலான நடன அசைவுகளுடன் அனைவருக்கும் பிடிக்கும்படியான நடன அமைப்பை செய்துள்ளார். 


ஜோசப் பால் ஒளிப்பதிவு செய்ய, முத்தையன் எடிட்டிங் செய்துள்ளார். கோபிநாத் கலை இயக்கம் செய்துள்ளார். 


பிரம்மாண்ட பொரிட்செலவில், A Spot Light Entertainment சார்பில் கார்த்திக், மது இப்பாடலை தயாரித்துள்ளனர். 


காதலின் மறுபக்கத்தை அழகாக பேசும் இந்த ஆல்பம் பாடலை அனைத்து இசை தளங்களிலும் ரசிக்கலாம்.


https://youtu.be/87pCY0Bm_8o

Sabdham Movie Review

Sabdham Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம சப்தம் படத்தோட review அ தான் பாக்க போறோம்.  Arivazhagan Venkatachalam இயக்கி இருக்கற இந்த படத்துல Aadhi யும்  Lakshmi Menon யும் தான் lead role ல நடிச்சிருக்காங்க. Eeram படத்துக்கு அப்புறமா டைரக்டர் arivazhagan யும் aadhi சேந்து work பண்ணற ரெண்டாவுது படம் இது. இந்த படம் தமிழ் ல shoot பண்ணாலும் dubbed version ல telugu ளையும் ரிலீஸ் ஆகுது. நம்ம comedy horror , romance horror ன்ற concept ல படங்களை பாத்திருக்கோம் ஆனா இது ஒரு adventure horror concept ல இருக்குனு தான் சொல்லணும். 


Sabdham Movie Video Review: https://www.youtube.com/watch?v=35eMlju-HXQ

சோ வாங்க படத்தோட கதைக்குள்ள போலாம். ஆதி ஒரு paranormal investigator அ இருக்காரு. அதுலயும் இவரு best னே சொல்லலாம். St. Angels Medical College ன்ற ஒரு college Munnar ல இருக்கு. இந்த college ல எதோ ஒரு பிரச்சனைகள் நடக்கிறதுனால இவரை இங்க வர சொல்லறாங்க. அப்படி investigate பண்ணும் போது தான் தெரியவருது ஒரு சில sound னால தான் அமோனிஷ்யாம அங்க இருக்கறவங்க இறக்குறாங்க னு தெரியவருது. அப்போ தான் ph d ல neuropsychology அ படிச்சிட்டு இருக்கற இந்த college professor அ இருக்கறாங்க lakshmi menon . இவங்க கூட aadhi friend ஆகுறாரு. இவங்கள சுத்தி தான் பேய் இருக்கு னு கண்டுபிடிச்சி இந்த mystery அ இவங்க மூலமா solve பண்ண பாக்குறாரு. அப்போ தான் ஒரு பழைய  library க்கு போறாங்க அந்த இடம் அதுக்கு முன்னாடி ஒரு church அ இருந்திருக்கும். அப்படியே investigate பண்ணிட்டு இருக்கும் போது 42 பேய்களால பிரச்சனை வருது அப்போ காலேஜ் ல இறந்தவங்க மேல இந்த பேய்களுக்கு ஏன் இவ்ளோ கோவம் னு கண்டுபிடிக்க try பண்ணுறாரு. இது எல்லாமே simran ஓட connect ஆயிருக்கு னு தெரிய  வருது.  அப்போ இவங்கள பத்தி மறுபடியும் investigate பண்ணும் போது அவங்க 34 வருஷமா coma ல இருக்காங்க னு தெரியவருது. simran க்கும் அந்த 42 பேய்களுக்கும் என்ன சம்பந்தம் ? இந்த mystery அ adhi solve பண்ணற இல்லையா ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 

first half அ பாக்கும் போது ரொம்ப interesting இருக்கும். படம் போக போக விறுவிறுப்பா இருக்குனு தான் சொல்லணும். முதல் ல இது ஒரு serial killer pattern மாதிரி போகுது அதுக்கு அப்புறம் adhi இதை investigate பண்ணும் போது ஒரு சில hostel scenes அ காமிக்கறாங்க. அதுலாம் super அ இருந்தது. இன்டெர்வல்  block ல தான் இந்த படத்தோட highlight அ இருக்கு. அதுக்கு நடக்கற twist , modern sound devices அ காமிக்க்ர விதம் னு எல்லாமே புதுசாவும் படத்தை பாக்கற audience ஓட curiosity அ எழுப்பற விதமாவும் இந்த படம் அமைச்சிருக்கு னு தான் சொல்லணும். sound க்கும் noise க்கும் இருக்கற difference எப்படி இருக்கும் ன்றது அழகா எடுத்து சொல்லிருக்காங்க. flashback story அ இருக்கட்டும், dialogues அ இருக்கட்டும் investigation போற விதமா இருக்கட்டும் எல்லாமே top notch ல தான் இருக்கு. library ல நடக்கற closing act super அ இருந்தது. 

cast ஓட performance னு பாக்கும் போது adhi ஓட costumes அ இருக்கட்டும் அவரை ஒரு paranormal investigator அ super அ portray பண்ணிருக்காரு. laskhmi menon ஓட perfromance அவ்ளோ அழகா இருந்தது. இவங்களோட part தான் இந்த படத்துல முக்கியமானதா இருக்கு னு சொல்லலாம். simran ஓட character க்கும் அதிகமான importance அ குடுத்திருக்காங்க. அதுலயும் இவங்களோட flashback portions லாம் super  அ இருந்தது. laila வ ஒரு anglo indian women அ காமிச்சிருக்காங்க. இவங்களோட dialogues எல்லாமே ரொம்ப different அ இருந்தது. redin kingsley ஓட comedy scenes யும் ரசிக்கிற மாதிரி இருந்தது. 

thaman ஓட music bgm தான் இந்த படத்துக்கு அட்டகாசமா இருந்தது. இந்த படத்தோட core அ பாத்தீங்கன்னா sound தான் அதுனால இந்த படத்துல வந்த sounds அண்ட் bgm தான் பக்க பலமா இருக்கு. cinematography யும் இந்த படத்துக்கு super அ இருந்தது. camera movements அ இருக்கட்டும் camera angle ல ஓவுவுறு scene  யும் capture பண்ண விதமா இருக்கட்டும் எல்லாமே அழகா இருந்தது. 

ஒரு நல்ல adventurous ஆனா horror  படம் தான் இது. இந்த படத்தை worth watching னு தான் சொல்லணும். கண்டிப்பா இந்த படத்தை உங்க பேமிலி and friends ஓட theatre  ல போய் பாக்குறதுக்கு miss  பண்ணிடாதீங்க.

Suzhal 2 Review

Suzhal 2 Web Series Review

 ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம suzhal season 2 vortex webseries ஓட review அ தான் பாக்க போறோம். இந்த webseries amazon prime ல இன்னிக்கு release ஆயிருக்கு. ஏற்கனவே season one க்கு நல்ல வரவேற்பு கிடைச்சது. பொதுவா படங்களுக்கு இருக்கற expectation webseries க்கு வர்ரது கொஞ்ச கஷ்டம் தான் ஆனா தமிழ் ல வந்த webseries ஆனா ayali , vadhanthi , inspector rishi அப்புறம் village எல்லாமே நல்ல hit ஆச்சு னு சொல்லலாம். kathir aishwarya rajesh தான் மறுபடியும் lead roles ல suzhal 2 ல நடிச்சிருக்காங்க. 

Suzhal 2 Web Series Video Review: https://www.youtube.com/watch?v=FW4rwhVOeQc


இதை பத்தி pushkar gayathri பேசும் போது ரெண்டு season யும் ஒரு particular festival அ base பண்ணி தான் எடுத்திருக்கோம் னு சொல்லிருக்காங்க. அது என்னனா season one sambaloor ல இருக்கற ஒரு மலை கிராமத்துல mayana kolli விழா வ base பண்ணி தான் கதை நகரும் அதே மாதிரி ரெண்டாவுது season க்கு kaalipattanam ன்ற கடற்கரை பகுதில அஷ்டகாளி விழா வை base பண்ணி எடுத்திருக்கோம் னு சொல்லிருக்காங்க. இதுக்காக நெறய research பண்ணி அந்த எடத்துல சொல்ல படுற கதைகள் என்னனா னு அங்க இருக்கற மக்கள் கிட்டயே interview எடுத்து உருவான கதை தான் suzhal season 2 vortex . அஷ்டகாளி ன்றது எட்டு காளிகளை குறிக்கும். இதை base பண்ணி தான் கதையை எட்டு பொண்ணுகளை ஒரு crime ஓட prime suspect அ வச்சு கதையை நகர்த்திருக்கோம் நும் சொல்லிருக்காங்க.


சோ வாங்க கதைக்குள்ள போலாம். நந்தினி யா நடிச்சிருக்க aishwarya first season ல கொலை பன்னதுக்காக இப்போ jail ல இருக்காங்க. இவங்களோட case எடுத்து விசாரிக்க ஆரம்பிக்குறாரு sakkarai அ நடிச்சிருக்க kathir . நந்தினி handle பண்ணிட்டுருந்த case க்கு இவரு தான் வெளில இருந்து help பண்ணுறாரு.  வக்கீல் chellappa  வ  நடிச்சிருக்க lal , sakkarai க்கு அப்பா மாதிரி சோ இந்த case அ இவங்க ரெண்டு பேருக்கும் favor அ இருக்கற மாதிரி கொண்டு வந்துடுறாரு. 

இதுக்கு அப்புறம் தான் பிரச்சனை ஆரம்பிக்குது ஒரு private cottage ல chellappa இறந்து கிடைக்குறாரு. இதை suicide னு எடுத்துட்டு வந்தாலும் ரொம்ப மர்மமா இருக்கு ஏன்னா அந்த cottage ஓட எல்லா கதவுகளும் உள்பக்கமா பூட்டிருக்கு அதோட murder weapon யும் அங்க இல்ல. first episode ல அந்த ரூம் குள்ள இருக்கற closet ல ஒளிஞ்சுக்கிட்டு ஒரு பொண்ணு இருப்பாங்க. இவங்க தான் முதல் suspect அ போலீஸ் எடுத்துக்கறாங்க. மறுபடியும் இது complicate ஆகுது ஏன்னா இந்த closet அ வெளி பக்கமா தான் பூட்டி வச்சிருப்பாங்க. இதுக்கு அப்புறம் தான் இந்த investigation எட்டு episode அ ரொம்ப விறுவிறுப்பா எடுத்துட்டு போறாங்க. நெறய suspects இந்த வட்டத்துக்குள்ள வராங்க இதை யார் பண்ணறது தான் கதையை இருக்கு. 

first season ல கதை சொல்ற விதம் எப்படி இருந்ததோ அதே மாதிரி தான் இந்த சீசன் ஓட first episode unique அ நிக்குது னு சொல்லணும். second episode அ பாத்தீங்கன்னா main characters க்கு இருக்கற relationship அப்புறம் clues எல்லாம் சொல்லற விதமா இருக்கு. அதுக்கு அப்புறம் வர எல்லா episodes யும் பிரச்சனைகளோடு சேந்து investigation நடக்கற மாதிரி ரொம்ப விறுவிறுப்பா எடுத்துட்டு போயிருக்காங்க. அந்த local எடத்துல நடக்கற religious festival , cultural story ஓட connect பண்ணற விதமா கதை நகரதுனால ரொம்ப interesting அ இருக்குனு தான் சொல்லணும். 

first season ல sambaloor ல இருக்கற sets எப்படி audience அ capture பண்ணிச்சோ அதே மாதிரி தான் இந்த season ல kaalipatnam ன்ற கடற்கரை இடம் இருக்கு. ஓவுவுறு location அ இருக்கட்டும் எல்லாமே கதைக்கு ஏத்த மாதிரி ரொம்ப super அ இருந்தது. 

kaalipatnam க்கு லட்சக்கணக்கான பக்தர்கள் நெறய வேஷம் போட்டுக்கிட்டு வராங்க அஷ்டகாளி திருவிழா க்கு. இந்த விழா ல என்ன விஷேஷம் ந எட்டு காளிகள் ஒண்ணா சேந்து ஒரு அரக்கனை வதம் பண்ணுவாங்க. முதல் season மாதிரியே இந்த season ளையும் ஒரு festival ஓட சேந்து வர மாதிரி case அ கொண்டு வராங்க. second episode ல chellappa ஓட கொலை நடந்துதுக்கு அப்புறம் நெறய suspects வராங்க. அப்படியே அடுத்த scene ல திருவிழாக்கு வேஷம் போட்டுட்டு வரவங்கள காமிக்கறாங்க. இது visual அ பாக்குறதுக்கு ரொம்ப super அ இருந்தது. 

இவ்ளோ suspects ல யாரு உண்மையான குற்றவாளி னு கண்டுபிடிக்கறதுக்காக sakkarai யும் local inspector moorthy அ நடிச்சிருக்க saravanan யும் ஒண்ணா சேருறாங்க. இதுக்கு அப்புறம் நெறய விஷயங்களை சந்திக்கறாங்க அதோட நெறய twist யும் வருது. அதுல ஒரு scene செம highlight அ இருந்தது. அது என்னனா sakkrai எல்லா suspects யும் nandhini இருக்கற jail ல அடைச்சு வைக்கிற மாதிரி ready பண்ணிடுறாரு. இது வரைக்கும் sakkarai கிட்ட இருந்து எல்லா information யும் collect பண்ணி வச்சிருந்த nandhini இந்த பொண்ணுங்க கிட்ட பேசி யாரு குற்றவாளி னு கண்டுபிடிக்க பாக்குறாங்க. இந்த prison scenes எல்லாம் interesting அ அதே சமயம் tension ஓட இருந்தது னு தான் சொல்லணும். 

last ரெண்டு episodes ல தான் nandhini full fledged இருக்காங்க அது வரைக்கும் அவங்க acting ரொம்ப subtle அ தான் இருக்கு. ஒரு பக்கம் அவங்களோட guilty feeling இன்னொரு பக்கம் அவங்க case அ solve பண்ணறது னு ரெண்டு sides  யுமே அழகா portray பண்ணிருக்காங்க. mystery க்கு ஏத்த மாதிரியே தான் screenplay , dialogues  , background  எல்லாமே அமைச்சிருந்தது. 

ஒரு பக்காவான webseries தான் இது. இதை பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.

Aghathiyaa Movie Review

Aghathiyaa Movie Review 


ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம agathiya படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த கதையை எழுதி direct பண்ணிருக்கறது pa vijay தான். இது ஒரு period horror thriller படமா கொண்டு வந்திருக்காங்க. Jiiva, Arjun Sarja and Raashii Khanna, while Edward Sonnenblick, Yogi Babu, VTV Ganesh, Redin Kingsley, Radha Ravi, Rohini, Charle, Azhagam Perumal, Indraja Shankar, Matylda  ன்ற ஒரு பெரிய பட்டாளமே இருக்கு. சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம்.


 Aghathiya Movie Video Review: https://www.youtube.com/watch?v=K_4INsGp8sI

இந்த கதை பாத்தீங்கன்னா ரெண்டு timeline ல நடக்குது. இப்போ present ல அகத்தியவா நடிச்சிருக்க jeeva ஒரு art director அ இருக்காரு. நெறய காசு எல்லாம் போட்டு ஒரு இடத்தை  ready பண்ணி வைக்கறாரு ஷூட்டிங் க்காக ஆனா கடைசி நேரத்துல இந்த shooting நின்னு போயிடுது. agathiya ஓட அம்மாவான rohini க்கு cancer இருக்கும். இவங்களோட medical செலவு னு நெறய பிரச்சனைகள் இவருக்கு வருது. அப்போ தான், agathiya ஓட girlfriend  veena வா நடிச்சிருக்க rashi khanna ஒரு idea குடுக்கறாங்க. அது என்னனு பாத்தீங்கன்னா  இந்த வீட்டை ஒரு horror house அ மாத்துறதுதான். அதுக்கு  அப்புறம் இந்த எடத்துல கூட்டம் அள்ளுது. அப்போ தான் ஒரு பழைய piano அங்க இருக்கிறதா பாத்த veena அதா play பண்ணறாங்க அதுக்கு அப்புறம் நெறய அமனுஷியாமான விஷயங்கள் நடக்குது. அப்புறம் தான் இந்த building 1940 ல pondicherry ல french colonial rule ல இருந்தது னு கண்டுபிடிக்கறாரு agathiya. 

இப்போ அப்படியே பழைய timeline க்கு போனோம் ந sidharthan அ நடிச்சிருக்காரு arjun இவரு ஒரு சித்த வைத்தியர் அ இருக்காரு. இப்போ french ஓட colonial  rule நடந்துகிட்டு இருக்கு இந்த இடத்தை கொடூரமான  Edwin Duplex  ன்ற ஒருத்தர் தான் rule பண்ணிக்கிட்டு இருக்காரு. இவரு எந்த அளவுக்கு கொடூரமானவரு ந ஜெர்மனி க்கு எப்படி hitler ஓ அதே மாதிரி இவரு pondichery க்கு னு சொல்லறாங்க. இவருக்கு படுத்த படுக்கைய ஒரு தங்கச்சி இருப்பாங்க அவங்க தான் matlyda இவங்கள குண படத்துறதுக்காக sidharthan வேண்ட வெறுப்பா கூப்பிடுறாரு edwin duplex . ஒரே நாள் ல siddharthan matlyda வை குணப்படுத்தி காப்பாத்திடுறாரு. 

அகத்தியன் க்கு siddharthan க்கும் இவங்க இருக்கற இந்த வீட்டுக்கும் இருக்கற connection அ புரிஞ்சிகிட்டு அம்மா வோட cancer அ இவரால் குணப்படுத்த முடியும் னு அந்த period க்கு போக try பண்ணுறாரு. இதுக்கு அப்புறம் என்ன நடக்குது ன்றது தான்  இந்த படத்தோட மீதி கதையை இருக்கு.   

lyricist  அ இருக்க pa vijay ஒரு அட்டகாசமான கதையை எடுத்திருக்காரு னு தான் சொல்லணும். கதையை இருக்கட்டும் ரெண்டு time line ல வர characters அ இருக்கட்டும் எல்லாத்தயும் ரொம்ப அழகா connect பண்ணிருக்காரு. first  half ல பாத்தீங்கன்னா நெறய horror elements குடுத்திருக்காரு second  half தான் ரொம்ப விறுவிறுப்பா எடுத்துட்டு போயிருக்காரு. சொல்ல போன arjun ஓட portions எல்லாம் பாக்கறதுக்கு பக்கவா இருந்தது. rashi khanna jeeva ஓட chemistry , இவங்களோட comedy scenes லாம் ரசிக்கிற மாதிரியும் இருந்தது. 

french colony அ rule பண்ணிட்டு இருந்த கேரக்டர் அ வர Edward அப்புறம் இவருக்கு sister அ வர matlyda ஓட performance லாம் super அ இருந்தது. director pa vijay நம்ம நாட்டு  மருத்துவதோட முக்கியத்துவத்தை சொல்ற விதமா எடுத்துட்டு வந்திருக்காரு. அதுமட்டும் இல்லாம ஒரு சில செடிகளை பாத்த யானை பயத்துல ஓடி போய்டும் ன்ற விஷயங்கள் useful ஆவும் அதே சமயம் நெறய பேருக்கு தெரியாத ஒன்னாவும் 
இருந்தது.  

படத்தோட கடைசி 30 நிமிஷம் தான் ultimate அ இருக்கு. இதுல தான் jeeva , arjun அப்புறம் edward இருப்பாங்க. இந்த எடத்துல yuvan shankar raja ஓட fur elise ஓட remix bgm அ வருது தான் ultimate அ இருக்கு. அதோட ilayaraja song en iniya pon nilavae song ஓட remix version யும் super அ இருந்தது. இந்த ரெண்டு time line க்கும் இருக்கற visuals எல்லாம் colourful அ super அ இருந்தது. 

ஒரு நல்ல thriller movie தான் இது. கண்டிப்பா உங்க family and friends ஓட சேந்து இந்த படத்தை பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.
[2/28, 1:51 PM] Abhinaya Viji Friend: suzhal 2 web series

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம suzhal season 2 vortex webseries ஓட review அ தான் பாக்க போறோம். இந்த webseries amazon prime ல இன்னிக்கு release ஆயிருக்கு. ஏற்கனவே season one க்கு நல்ல வரவேற்பு கிடைச்சது. பொதுவா படங்களுக்கு இருக்கற expectation webseries க்கு வர்ரது கொஞ்ச கஷ்டம் தான் ஆனா தமிழ் ல வந்த webseries ஆனா ayali , vadhanthi , inspector rishi அப்புறம் village எல்லாமே நல்ல hit ஆச்சு னு சொல்லலாம். kathir aishwarya rajesh தான் மறுபடியும் lead roles ல suzhal 2 ல நடிச்சிருக்காங்க. இதை பத்தி pushkar gayathri பேசும் போது ரெண்டு season யும் ஒரு particular festival அ base பண்ணி தான் எடுத்திருக்கோம் னு சொல்லிருக்காங்க. அது என்னனா season one sambaloor ல இருக்கற ஒரு மலை கிராமத்துல mayana kolli விழா வ base பண்ணி தான் கதை நகரும் அதே மாதிரி ரெண்டாவுது season க்கு kaalipattanam ன்ற கடற்கரை பகுதில அஷ்டகாளி விழா வை base பண்ணி எடுத்திருக்கோம் னு சொல்லிருக்காங்க. இதுக்காக நெறய research பண்ணி அந்த எடத்துல சொல்ல படுற கதைகள் என்னனா னு அங்க இருக்கற மக்கள் கிட்டயே interview எடுத்து உருவான கதை தான் suzhal season 2 vortex . அஷ்டகாளி ன்றது எட்டு காளிகளை குறிக்கும். இதை base பண்ணி தான் கதையை எட்டு பொண்ணுகளை ஒரு crime ஓட prime suspect அ வச்சு கதையை நகர்த்திருக்கோம் நும் சொல்லிருக்காங்க.

சோ வாங்க கதைக்குள்ள போலாம். நந்தினி யா நடிச்சிருக்க aishwarya first season ல கொலை பன்னதுக்காக இப்போ jail ல இருக்காங்க. இவங்களோட case எடுத்து விசாரிக்க ஆரம்பிக்குறாரு sakkarai அ நடிச்சிருக்க kathir . நந்தினி handle பண்ணிட்டுருந்த case க்கு இவரு தான் வெளில இருந்து help பண்ணுறாரு.  வக்கீல் chellappa  வ  நடிச்சிருக்க lal , sakkarai க்கு அப்பா மாதிரி சோ இந்த case அ இவங்க ரெண்டு பேருக்கும் favor அ இருக்கற மாதிரி கொண்டு வந்துடுறாரு. 

இதுக்கு அப்புறம் தான் பிரச்சனை ஆரம்பிக்குது ஒரு private cottage ல chellappa இறந்து கிடைக்குறாரு. இதை suicide னு எடுத்துட்டு வந்தாலும் ரொம்ப மர்மமா இருக்கு ஏன்னா அந்த cottage ஓட எல்லா கதவுகளும் உள்பக்கமா பூட்டிருக்கு அதோட murder weapon யும் அங்க இல்ல. first episode ல அந்த ரூம் குள்ள இருக்கற closet ல ஒளிஞ்சுக்கிட்டு ஒரு பொண்ணு இருப்பாங்க. இவங்க தான் முதல் suspect அ போலீஸ் எடுத்துக்கறாங்க. மறுபடியும் இது complicate ஆகுது ஏன்னா இந்த closet அ வெளி பக்கமா தான் பூட்டி வச்சிருப்பாங்க. இதுக்கு அப்புறம் தான் இந்த investigation எட்டு episode அ ரொம்ப விறுவிறுப்பா எடுத்துட்டு போறாங்க. நெறய suspects இந்த வட்டத்துக்குள்ள வராங்க இதை யார் பண்ணறது தான் கதையை இருக்கு. 

first season ல கதை சொல்ற விதம் எப்படி இருந்ததோ அதே மாதிரி தான் இந்த சீசன் ஓட first episode unique அ நிக்குது னு சொல்லணும். second episode அ பாத்தீங்கன்னா main characters க்கு இருக்கற relationship அப்புறம் clues எல்லாம் சொல்லற விதமா இருக்கு. அதுக்கு அப்புறம் வர எல்லா episodes யும் பிரச்சனைகளோடு சேந்து investigation நடக்கற மாதிரி ரொம்ப விறுவிறுப்பா எடுத்துட்டு போயிருக்காங்க. அந்த local எடத்துல நடக்கற religious festival , cultural story ஓட connect பண்ணற விதமா கதை நகரதுனால ரொம்ப interesting அ இருக்குனு தான் சொல்லணும். 

first season ல sambaloor ல இருக்கற sets எப்படி audience அ capture பண்ணிச்சோ அதே மாதிரி தான் இந்த season ல kaalipatnam ன்ற கடற்கரை இடம் இருக்கு. ஓவுவுறு location அ இருக்கட்டும் எல்லாமே கதைக்கு ஏத்த மாதிரி ரொம்ப super அ இருந்தது. 

kaalipatnam க்கு லட்சக்கணக்கான பக்தர்கள் நெறய வேஷம் போட்டுக்கிட்டு வராங்க அஷ்டகாளி திருவிழா க்கு. இந்த விழா ல என்ன விஷேஷம் ந எட்டு காளிகள் ஒண்ணா சேந்து ஒரு அரக்கனை வதம் பண்ணுவாங்க. முதல் season மாதிரியே இந்த season ளையும் ஒரு festival ஓட சேந்து வர மாதிரி case அ கொண்டு வராங்க. second episode ல chellappa ஓட கொலை நடந்துதுக்கு அப்புறம் நெறய suspects வராங்க. அப்படியே அடுத்த scene ல திருவிழாக்கு வேஷம் போட்டுட்டு வரவங்கள காமிக்கறாங்க. இது visual அ பாக்குறதுக்கு ரொம்ப super அ இருந்தது. 

இவ்ளோ suspects ல யாரு உண்மையான குற்றவாளி னு கண்டுபிடிக்கறதுக்காக sakkarai யும் local inspector moorthy அ நடிச்சிருக்க saravanan யும் ஒண்ணா சேருறாங்க. இதுக்கு அப்புறம் நெறய விஷயங்களை சந்திக்கறாங்க அதோட நெறய twist யும் வருது. அதுல ஒரு scene செம highlight அ இருந்தது. அது என்னனா sakkrai எல்லா suspects யும் nandhini இருக்கற jail ல அடைச்சு வைக்கிற மாதிரி ready பண்ணிடுறாரு. இது வரைக்கும் sakkarai கிட்ட இருந்து எல்லா information யும் collect பண்ணி வச்சிருந்த nandhini இந்த பொண்ணுங்க கிட்ட பேசி யாரு குற்றவாளி னு கண்டுபிடிக்க பாக்குறாங்க. இந்த prison scenes எல்லாம் interesting அ அதே சமயம் tension ஓட இருந்தது னு தான் சொல்லணும். 

last ரெண்டு episodes ல தான் nandhini full fledged இருக்காங்க அது வரைக்கும் அவங்க acting ரொம்ப subtle அ தான் இருக்கு. ஒரு பக்கம் அவங்களோட guilty feeling இன்னொரு பக்கம் அவங்க case அ solve பண்ணறது னு ரெண்டு sides  யுமே அழகா portray பண்ணிருக்காங்க. mystery க்கு ஏத்த மாதிரியே தான் screenplay , dialogues  , background  எல்லாமே அமைச்சிருந்தது. 

ஒரு பக்காவான webseries தான் இது. இதை பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.

Kooran Movie Review

Kooran Tamil Movie Review

 ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம kooran ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். இன்னிக்கு release ஆயிருக்கிற இந்த படத்தை nithin vempumathy தான் direct பண்ணிருக்காரு. இந்த படத்துல s a chandrasekran , george maryan , y g mahendran லாம் நடிச்சிருக்காங்க. சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். 

இந்த படத்தோட கதையை ஒரே வரில சொல்லனும்னா ஒரு நாய் குட்டிய ஒருத்தன் அடிச்சிட்டு போயிடுறேன். அந்த குட்டி இறந்து போயிடுது இதுக்கு நியாயம் கிடைக்கணும் ண்றதுக்காக நீதி கேட்டு இந்த குட்டி ஓட தாய் நாய் ஒரு famous ஆனா lawyer கிட்ட போய் help கேட்குது.



நம்ம இது வரையும் பாத்திராதா ஒரு மாறுபட்ட கதைக்களமா இந்த படம் இருக்குனு தான் சொல்லி ஆகணும். kodaikanal police station ல ஒரு நாய் அடிக்கடி வந்துகிட்டே இருக்கு, கண்ணு தெரியாத ஒருத்தர் தான்கிட்ட பேசுறவங்கள அப்படியே வரை ரா திறமை இருக்கு, அதுக்கு அப்புறம் ஒரு நல்ல வக்கீல் தன்னோட வீட்டு வாசல் ல ஒரு மணி அ கட்டி வச்சிருக்காரு நீதி வேண்டும் னு கேட்கறவங்க இந்த மணி அ அடிக்கலாம். இந்த concept அ பாக்கும் போது எங்கயோ கேள்வி பட்ட மாதிரியே இருக்கு ல இந்த குட்டி நாய் க்கு பதிலா ஒரு கன்னுகுட்டி அப்புறம் வக்கீல் வீட்டுக்கு வெளில இருக்கற அந்த மணி க்கு பதிலா ராஜ்ஜியத்துல வச்சிருந்த மணி கூண்டு நமக்கு ராஜா மனுநீதி சோழன்  அ தான் ஞாபக படுத்தது. சோ கதைக்கு வருவோம் நான் ஏற்கனவே சொல்லிட்டே நாய் க்கு நீதி கிடைக்கறதுக்காக lawyer dharmaraj அ நடிச்சிருக்க chandrasekran கிட்ட வருது. இவங்க ரெண்டு பேரும் எப்படி அந்த குட்டி யா அடிச்சு போட்டவனா கண்டுபிடிக்கறாங்க ன்றதா  தான் அழகா கொண்டு வந்திருக்காங்க.

இப்போ நமக்கு ஒரு கேள்வி வரும் அது என்னனா ஒரு நாய் case அ file பண்ணுது னே வச்சுப்போம் அது எப்படி court ல வந்து சாட்சி சொல்லும் ? ன்ற மாதிரி லாம் நமக்கு தோணும். இதுக்கு எல்லாமே logic அ இருக்கற மாதிரியே ஒரு பதில் ஓட கதையை எடுத்துட்டு வராங்க ன்றது தான் உண்மை. example க்கு சொல்ல போன நாய் க்கு எந்த  தேதி ல accident நடந்து னு எப்படி தெரியும் அப்படி னு கேட்போம். அது எப்படி நாய் க்கு தெரியும் ன்றத்துக்கு director அந்த scene அ எடுத்துட்டு போற விதம் தான் super அ இருக்கு. 

இந்த மாதிரி courtroom thriller படங்களை பாத்தோம்னா lawyer clues அ கண்டு பிடிக்கிற விதம் investigate பண்றது னு விறுவிறுப்பா போகும். அந்த விஷயத்துல இந்த படம் engaging அ தான் கொண்டு வந்திருக்காங்க. ஒரு சில விஷயங்கள் எல்லாமே ரொம்ப easy அ நடந்த மாதிரியே இருக்கும். அதாவுது dharmaraj church க்கு போயிடு சாமி கும்பிட்டு வரும் போது வெளில random அ witness இருப்பாங்க. இதெல்லாம் கடவுள் ஓட செயல் னு சொல்லி investigation நகர ஆரம்பிக்குது. அடுத்த விஷயம் பாத்தீங்கன்னா action scenes லாம் கூட இந்த படத்துல வச்சிருக்காங்க னு தான் சொல்லணும். அதாவுது கொடைக்கானல் road ல ஒரு car எல்லாம் chase பண்ணிட்டு போவாரு. 

dharmaraj க்கும் அந்த தாய் நாய் க்கும் நடுவுல இருக்கற அந்த bond அ ரொம்ப அழகா காமிச்சிருக்காங்க. அதெல்லாம் ரொம்ப emotional அ அதே சமயம் heart touching ஆவும்  இருந்தது.  

என்னதான் இந்த படத்துல நடிச்சிருக்க YG Mahendran, Balaji Sakthivel, and George Mariyan ஓட performance  லாம் செமயா இருந்தாலும் actual  hero இந்த படத்துல யாரு nu கேட்டிங்கன்னா அது இந்த தாய் நாய் தான். ஒரு படத்தை முன்னாடி நகர்த்திடு போறது ஒரு தாய் நாய் ன்றதா பாக்கறதுக்கு ரொம்ப அழகா இருந்தது. அதே சமயம் இந்த நாய் ஓட emotions அ வெளில கம்மிக்க்ர விதமா bgm இருந்தது இன்னும் செமயா இருந்தது.  

மொத்தத்துல emotional ஆனா கதையை super ஆனா twist எல்லாம் வச்சு ஒரு thriller படமா கொண்டு வந்திருக்காங்க. கண்டிப்பா இந்த படத்தை பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.

சப்தம்’ படப்பிடிப்பில் அமானுஷ்ய விஷயங்களை உணர்ந்தேன்” ; நடிகர்

 *“’சப்தம்’ படப்பிடிப்பில் அமானுஷ்ய விஷயங்களை உணர்ந்தேன்” ; நடிகர் ஆதியின் அதிர்ச்சி அனுபவம்*














*“மிருகம்-2ஆம் பாகத்தில் நடிக்க மறுத்துவிட்டேன்”  ; நடிகர் ஆதி*


*“சிறந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்” ; ‘சப்தம்’ படம் குறித்து நடிகர் ஆதி பெருமிதம்*


*‘ஈரம்’ அறிவழகன் –ஆதி கூட்டணியில் இருமடங்கு எதிர்ப்புடன் வெளியாகும் ‘சப்தம்’*


7G ஃபிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சப்தம்’. இந்த படத்தில் ஆதி கதாநாயகனாக நடித்துள்ளார். ‘ஈரம்’ பிளாக் பஸ்டர் ஹிட் படத்திற்கு பிறகு 15 வருடங்கள் கழித்து இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ள இரண்டாவது படம் இது என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இருமடங்காக உள்ளது.. 


இந்த படத்தில் கதாநாயகியாக லட்சுமி மேனன் நடிக்க முக்கிய வேடங்களில் சிம்ரன், லைலா, எம்.எஸ் பாஸ்கர், ராஜீவ் மேனன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அமானுஷ்ய திரில்லர் ஜேனரில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். வரும் பிப்-28 (நாளை) இந்த படம் திரையரங்குகளில் வெளியாகிறது. 


இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த படத்தின் நாயகன் ஆதி தனது கதாபாத்திரம் குறித்தும் இந்த படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்தும் பகிர்ந்து கொண்டார்.


*பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து நடிகர் ஆதி பேசும்போது,*


“’ஈரம்’ படத்தை தொடர்ந்து இயக்குநர் அறிவழகன் உடன் இணைந்துள்ள படம் இது. எனது இரண்டாவது படமே அறிவழகன் சாருடன் தான். அந்த படம் உருவான சமயத்தில் அவரது எண்ண ஓட்டங்களே  வித்தியாசமாக இருந்தது. அதனால் இந்த முறை சேர்ந்து பணியாற்றும் போது இருவருக்கும் ஒரு புரிதல் இருந்தது. அவர் காட்சிகளை உருவாக்கும் விதம், சின்ன சின்ன நுணுக்கங்களை மேற்கொள்வது எல்லாவற்றையும் அழகாக செய்வார். ஈரம் முடிந்த பிறகு நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாகி விட்டோம். அடிக்கடி சில கதைகள் பேசுவோம். ஆனால் அதற்கான ஒரு சரியான டீம் அமையவில்லை. இந்த படத்திற்கு அது சரியாக அமைந்தது. இந்த படத்திற்குப் பிறகு நிறைய படங்கள் கொஞ்சம் விரைவாக பண்ண வேண்டும் என்கிற எண்ணம் எனக்கு தோன்றியிருக்கிறது. குறிப்பாக அறிவழகன் உடன் இணைந்து அடுத்தடுத்து பணியாற்ற விரும்புகிறேன்.


லட்சுமி மேனனும் நானும் இந்த படத்தில் நெருக்கமாக நடித்திருந்தாலும் அது மனதளவில் தானே தவிர உடல் ரீதியாக அல்ல.. ஏனென்றால் அப்படி ஒரு காட்சி இந்த படத்திற்கு தேவைப்படவில்லை.. இந்த படம் காதல் படம் அல்ல.. ஆனால் காதலும் இருக்கும்.. லட்சுமி மேனன் மட்டுமல்ல.. சிம்ரன், லைலா, ராஜீவ் மேனன் எம்.எஸ் பாஸ்கர் உள்ளிட்ட ஒவ்வொருவரின் பங்களிப்புமே இந்த படத்தில் முக்கியமானது. 


இந்த படத்தில் அமானுஷ்யங்களை ஆராய்ச்சி செய்யும் பாராநார்மல் இன்வெஸ்டிகேட்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இந்திய சினிமாவில் இதுவரை இந்த கதாபாத்திரம் வந்ததில்லை. அப்படிப்பட்ட கதாபாத்திரங்கள் உண்மையிலேயே இருக்கிறார்கள். அப்படி யாருமே இதுவரை பண்ணாத ஒரு கதாபாத்திரம் செய்யும்போது அது ரொம்பவே சுவாரசியமாக இருக்கும். இதுகுறித்த விஷயங்களை அறிவழகன் ஆய்வு செய்து என்னிடம் விளக்கி சொன்னபோது ரொம்பவே சுவாரசியமாக இருந்தது. கௌரவ் திவாரி என்கிற பாராநார்மல் இன்வெஸ்டிகேட்டர் இருந்தார். அவர் இப்போது இல்லை. அவரது மரணம் கூட இதுவரை மர்மமாகவே இருக்கிறது. அவரைப் பற்றி நிறைய படித்தேன். நிறைய வீடியோக்கள் பார்த்தேன். ரொம்பவே சுவாரசியமாக இருந்தது. ஒரு இடத்தில் அவருடைய வாழ்க்கையும் என்னுடைய வாழ்க்கையும் கூட பொருந்தி போனது. அவரைப் போலவே நானும் பைலட் பயிற்சி எடுக்க விரும்பினேன். ஆனால் சினிமாவுக்கு வந்துவிட்டேன்.. அவர் அப்படி பைலட் பயிற்சி எடுக்க சென்ற இடத்தில் தான் பாராநார்மல்  நடவடிக்கைகளை உணர்ந்திருக்கிறார். அதற்கு பிறகு தான் அது பற்றி படிக்க வேண்டும் என நினைத்து அதில் முழுமூச்சுடன் இறங்கி மும்பையில் அலுவலகம் அமைத்து நிறைய விசாரணைகளை அவர் செய்திருக்கிறார்.


இந்தப்படத்தின் படப்பிடிப்பு சமயங்களில் கூட சில அமானுஷ்ய விஷயங்களை உணர்ந்தோம். அது எங்களுக்கு நன்றாகவே தெரிந்தது. உடனே மற்றவர்களையும் உஷார்படுத்தி சீக்கிரமாக படப்பிடிப்பை நடத்தி விட்டு கிளம்புவோம். நேற்று ஒரு டீம் இன்டர்வியூ நடைபெற்றபோது கூட அங்கு அந்த அமானுஷ்யத்தை உணர முடிந்தது. சில நாட்களிலேயே இது கொஞ்சம் பழகிவிட்டது என்று சொல்லலாம். ஈரம் படத்தில் பணியாற்றும்போது எனக்கு பேய்கள் மீது நம்பிக்கை இல்லை. இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரத்திற்காக சில ஆராய்ச்சிகளை நான் படிக்கும்போது, வீடியோக்களை பார்க்கும்போது அமானுஷ்ய விஷயங்கள் இருக்கலாம் என ஒரளவுக்கு நம்பத்தான் தோன்றுகிறது.


தமிழ், தெலுங்கு என மொழிகள் பிரித்துப் பார்த்து படம் பண்ணுவதில்லை. ஒருவர் கதை சொல்ல வரும்போது அது எந்த மொழி என்பதை விட, அது நமக்கு பிடிக்கிறதா, ஒத்து வருமா என்று தான் பார்க்கிறேன். தெலுங்கில் அதிகம் நடிப்பது போன்று தோற்றம் இருக்கலாம். ஆனால் இந்த வருடம் தமிழில் சப்தம், மரகத நாணயம்-2 என அடுத்தடுத்து படங்கள் வர இருக்கின்றன.  மரகத நாணயம்-2 படப்பிடிப்பு அடுத்த மாதம் அதே குழுவினருடன் துவங்க இருக்கிறது.


தெலுங்கில் இப்போது பாலகிருஷ்ணா உடன் இணைந்து அகாண்டா இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறேன். சப்தம் படத்தின் டிரைலரை அவரும் பார்த்து விட்டு பாராட்டினார்.


ஹீரோவா, வில்லனா எது அதிக விருப்பம் என்று கேட்டால் ஹீரோவை விட வில்லனாக நடிப்பதற்கு தான் விருப்பம். அந்த கதாபாத்திரத்துக்கு என பெரிதாக எல்லைகள் எதுவும் இருக்காது என்பதால் வில்லனாக நடிப்பது ஒரு சுவாரஸ்யம் தான். அஜித் விஜய் போன்றவர்களுக்கு வில்லனாக நடிக்க ஆசை.. இருந்தாலும் கதை தானே அதை தீர்மானிக்க வேண்டும். ஆனால் ஹீரோவே சில படங்களில் வில்லன் போல தான் இருக்கிறார் என்று சொல்கிறார்கள். அப்படி இருந்தால் தானே பிடிக்கிறது. ரசிகர்களுக்கு எது பிடிக்கிறதோ அதைத்தானே கொடுக்க வேண்டும். 


வெற்றி அடைந்த படத்துக்கு இரண்டாம் பாகம் எடுப்பது தவறில்லை. ஆனால் நல்ல கதை இருந்தால் மட்டுமே எடுக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் முதல் பாகத்தின் பெருமையை குறைத்தது போல் ஆகிவிடும். மிருகம் இரண்டாம் பாகத்திற்காக என்னிடம் வந்தார்கள். அவர்கள் சொன்ன கதையில் எனக்கு ஈர்ப்பு ஏற்படவில்லை. அதனால் மறுத்து விட்டேன் வேறு யாரையாவது வைத்து எடுத்துக் கொள்ளலாமா என்றார்கள். உங்கள் விருப்பம் என சொல்லி விட்டேன்.


ஒரு தயாரிப்பாளராக நான் இருந்தால் கமர்சியல் படம் எடுக்கத்தான் விரும்புவேன். ஆனால் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் புதிய துணிச்சலான விஷயத்தை படமாக்க முன்வரும் தயாரிப்பாளர்கள் குறைவுதான். அதை நான் ஒப்புக் கொண்டாலும் கூட அதற்கு ஒரு டீம் அமைவது ரொம்பவே முக்கியம். அது சிரமமும் கூட. நான் படங்களை மெதுவாக பண்ணுவதற்கு அதுவும் ஒரு காரணம்.


டைரக்ஷனில் ஆர்வம் இருக்கிறது. ஆனால் ஒரு படத்தை டைரக்ஷன் பண்ணும் அளவிற்கு பொறுமை இல்லை. அது ரொம்பவே மன அழுத்தம் தரக்கூடியது. அதனால் நடிப்பு மட்டுமே இப்போதைக்கு போகும்.


திருமணம் ஆகிவிட்டதால் மனைவியுடன் இணைந்து தான் கதை கேட்பேன் என்பதெல்லாம் இல்லை. ஆனால் ஒரு கதை கேட்ட பின்பு நண்பர்களிடம் சொல்வது போல அவரிடம் சொல்லி அது குறித்து பேசி கொள்வேன். அவருக்கும் எனக்கு எந்த மாதிரி கதை பிடிக்கும் என்று தெரிவதால் என் பாயிண்ட் ஆப் வியூவில் இருந்துதான் யோசிப்பார். ஆனாலும் இறுதி முடிவை நான் தான் எடுக்கிறேன்.


இப்போது கதாநாயகிகளுடன் இணைந்து நெருக்கமான நடிக்க வேண்டி இருந்தால் முன்கூட்டியே மனைவி நிக்கி கல்ராணியி’டம் அது பற்றி சொல்லி விடுவேன். அவரும் சினிமா துறையில் இருந்தவர் என்பதால் கதைக்கு தேவைப்படுகிறதா இல்லையா என்பதை புரிந்து கொள்வார். கதைக்கு தேவை இல்லை என்றால் நிச்சயம் ஒத்துக்கொள்ள மாட்டார். 


யாவரும் நா காக்க படத்திற்கு பிறகு எனது சகோதரர் இன்னொரு கதை சொல்லியிருக்கிறார். ரொம்பவே சுவாரசியமாக இருக்கிறது. சரியான நேரம் வரும்போது அதில் நடிப்பேன்” என்று கூறினார்.


- Johnson, pro

“I encountered a lot of paranormal activities during the filming of Sabdham

 “I encountered a lot of paranormal activities during the filming of Sabdham” - Actor Aadhi 














“I rejected Mirugam 2 offer as the story didn’t look engaging” - Actor Aadhi 


“I have done a unique and exceptional role in Sabdham” - Actor Aadhi 




Following the awe-inspiring cinematic experience of ‘Eeram’, both director Arivazhagan and actor Aadhi are back to offer yet another astounding theatrical gift to the audience with their new-fangled supernatural thriller titled ‘Sabdham’. Given that this marks the second collaboration between the two after a span of 15 years since their successful film 'Eeram,' the anticipation surrounding this project has significantly increased.


The film stars Lakshmi Menon as the heroine, with Simran, Laila, M.S. Bhaskar, Rajeev Menon, Reddy Kingsley and others playing important roles. Thaman has composed the music for this film, which is in the supernatural thriller genre. The film will be released in theaters on Feb-28 (tomorrow).


Marking this special occasion, actor Aadhi interacted with the press and media fraternity pertaining to the experience and the process of creating this movie ‘Sabdham’. 


Here are some excerpts from the press meet held recently in Chennai… 


“The film marks my second collaboration with director Arivazhagan after ‘Eeram’. While making this movie, we weren’t capable of understanding each other’s thought process, but now, we are so acquainted that we know the needs and expectations of each other. Significantly, it helped a lot while crafting and materialising our ambitious project ‘Sabdham’. His approach to scene creation is remarkable; he attends to every detail with great beauty. This film was ideally suited for our collaboration. Since completing this film, I feel a strong urge to undertake multiple projects at a quicker pace. I am particularly eager to collaborate with Arivazhagan consecutively.” 


“Although there are few emotional bonding between the character that I and Lakshmi Menon play, we don’t have any physical intimacy sequences in this movie. It’s because, the film does not fall under the romantic genre; however, it does encompass themes of love. The contributions of all involved, including Lakshmi Menon, Simran, Laila, Rajeev Menon, and M.S. Bhaskar, are vital to the overall success of this project.”


“In this film, I appear as a paranormal investigator getting into a supernatural world, and the role I play, is something that hasn’t been witnessed before in Indian Cinema. It’s something fresh and unique.  Courtesy to the insights provided by Arivazhagan during his research, which was totally educative. During this process, we were quite shocked by bone of the eminent icons in this respective field - Gaurav Tiwari, whose untimely demise remains a mystery. When I started my own research about him, I was literally surprised and shocked to witness some of his encounters. At one juncture, I started feeling that there are some similarities between him and me.  I had aspirations of pursuing pilot training, but my path led me to cinema. He encountered paranormal phenomena while pursuing his pilot training, which prompted him to delve deeper into the subject, ultimately establishing an office in Mumbai and conducting numerous investigations.” 


“While shooting the film, we experienced some paranormal encounters, and we could sense it very well. During those times, we would instantly alert our team members, ensuring that the shooting is completed instantly and we leave that place. We can say that we got used to it a little in a few days. While working on the film Eeram, I did not believe in ghosts. However, when I started researching for my character in this film and watched videos, I do believe to some extent that paranormal things might exist.



When it comes to choosing scripts, I don’t delineate it as Tamil and Telugu, but make sure that I feel those scripts are close to my heart and convincing. Much importantly, if the audiences will like them, and can connect with them. .This year, I have a couple of  films coming up in Tamil -  Sabdham and Maragatha Nanayam-2. The shooting of Maragatha Nanayam-2 will begin next month with the same team.


In Telugu, I am currently acting in the second part of Akandha along with Balakrishna. He also watched the trailer of Sabdham and praised it.


If you’re looking for the answer if I am keen on playing hero or villain, I would choose to embody a villain rather than a hero. The role of a villain is particularly intriguing due to the absence of significant constraints on the character. Notable actors such as Ajith, Vijay express a desire to take on villainous roles. Ultimately, the narrative should dictate the character's alignment. It is often suggested that in certain films, the hero may exhibit traits similar to those of a villain. If this is the case, then such a portrayal is likely to be well-received. It is essential to cater to the preferences of the audience.


Creating a sequel to a successful film isn’t an issue,  however, it is essential that the sequel owns a compelling narrative. Failing to do so risks diminishing the impact of the original film. When approached regarding a sequel to Mirugam, I found the proposed storyline unappealing. This is the reason I didn’t want to do this film. 



As a producer, I always desire to make a commercial film, but but I also see that very few producers aspire to produce unique content-driven movies, which has a strong storytelling. While I acknowledge this reality, assembling a capable team for such projects is crucial and presents its own challenges. This complexity contributes to my gradual approach to filmmaking.


When it comes to priority, I feel ‘Direction’ as my top priority. However it needs and demands a lot of patience, which I think is something that I lack, and it can be stressful as well. Consequently, I am currently focusing solely on acting.


When it comes to sharing the scripts and projects with my wife, I don’t see it as a mandatory thing, but casually share it as a friend. Given her understanding of my preferences, she is able to consider the story from my perspective. Ultimately, the final decision rests with me.


When it comes to acting closely with female co-stars, I make it a point to inform my wife, Nikki Galrani, beforehand. Her experience in the film industry allows her to assess whether such interactions are necessary or just superficial. If the narrative does not necessitate it, she will certainly express her disapproval. 


After working with my brother in Yagavarayanum Naa Kaakha, my brother has narrated a good script to me, and it’s quite interesting. We will be soon working together for this special project.” 


Following "Yavarum Naa Kaakka," my brother has proposed another intriguing story. I intend to participate in it when the timing is appropriate.


- Johnson PRO

Thursday, 27 February 2025

ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் 'கிங்ஸ்டன்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

 *"ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் 'கிங்ஸ்டன்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா*












ஜீ ஸ்டுடியோஸ் - பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் 'கிங்ஸ்டன்' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழில் முன்னணி நட்சத்திர நடிகரான சிவ கார்த்திகேயன் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். முன்னதாக நடைபெற்ற முன்னோட்ட வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, முன்னணி நட்சத்திர இயக்குநர்களான வெற்றிமாறன்- சுதா கொங்காரா-  பா. ரஞ்சித் - அஸ்வத் மாரிமுத்து - ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.  


அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில் உருவாகி உள்ள 'கிங்ஸ்டன் ' எனும் திரைப்படத்தில் ஜீ. வி. பிரகாஷ் குமார், திவ்யபாரதி, அழகம்பெருமாள், 'மேற்குத் தொடர்ச்சி மலை' ஆண்டனி, சேத்தன், குமரவேல், சபுமோன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். உரையாடல்களை தீவிக் எழுத, படத்தொகுப்பு பணியை ஷான் லோகேஷ் கவனிக்க, கலை இயக்கத்தை எஸ் எஸ் மூர்த்தி வடிவமைக்க, அதிரடியான சண்டைக் காட்சிகளை திலீப் சுப்பராயன் அமைத்திருக்கிறார். கடல் பின்னணியில் ஃபேண்டஸி அட்வென்ச்சர் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. தினேஷ் குணா கிரியேட்டிவ் புரொடியூசராக பொறுப்பேற்றிருக்கும் இந்த திரைப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து எதிர்வரும் மார்ச் மாதம் ஏழாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. 


இதைத் தொடர்ந்து இப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படக் குழுவினருடன் தமிழ் திரையுலகத்தின் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.


தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு பேசுகையில், '' 

'கிங்ஸ்டன்' படத்தின் முன்னோட்டத்தினை பார்க்கும் போது ஜீ.வி. பிரகாஷ் குமாரின் கடும் உழைப்பு தெரிகிறது. இப்படத்தை இயக்கிய அறிமுக இயக்குநர் கமல் பிரகாசுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். 


சினிமா மீது பேரார்வம் கொண்டிருக்கும் தமிழகத்தின் குக்கிராமங்களில் உள்ள இளம் தலைமுறையினரை கண்டறிந்து அவர்களுக்கு அறக்கட்டளை மூலம் சினிமாவின் அனைத்து நுட்பங்களையும் கற்பித்து படைப்பாளிகளாக உருவாக்கும் உழைப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் இயக்குநர் வெற்றிமாறனுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.  


இசைஞானி இளையராஜா , இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் ஆகியோருக்கு பிறகு பின்னணி இசையில் ஜீ வி பிரகாஷ் குமாரின் திறமை பளிச்சிடுகிறது. 'அசுரன்' படத்தினை தயாரித்தேன். அந்த திரைப்படத்திற்கு ஜீ வி பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். இந்த படத்தினை தெலுங்கில் ரீமேக் செய்தபோது அப்படத்தில் நடித்த வெங்கடேஷ், தமிழ் 'அசுரன்' திரைப்படத்தின் பின்னணி இசை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஆலோசனை சொன்னார். அதனை ஜீ.வி பிரகாஷிடமும், வெற்றி மாறனிடமும் சொன்ன போது எந்தவித தயக்கமில்லாமல் உடனே பயன்படுத்திக் கொள்ள அனுமதி தந்தனர். ஜீ வி பிரகாஷ் குமாரின் பின்னணி இசையால் அந்தப் படம் தெலுங்கிலும் பெரிய வெற்றியை பெற்றது. இந்தப் படத்தில் இடம்பெற்ற 'ராசா' பாடல் ஹிட் ஆகும். 


வெற்றிமாறனிடம் பேரலல் யுனிவர்ஸ் என்றால் என்ன? என கேட்டேன். எது உச்சமோ அதற்கு நிகரானது என பதிலளித்தார். அந்த வகையில் இந்த நிறுவனம் தமிழில் மிகப்பெரிய வெற்றியை பெறும். இந்த நிறுவனம் புதிய இளம் திறமையாளர்களை கண்டறிந்து வாய்ப்பு கொடுத்து தொடர்ந்து படங்களை தயாரிக்க வேண்டும் என வாழ்த்தி விடைபெறுகிறேன்'' என்றார். 


ஒளிப்பதிவாளர் கோகுல் பினோய் பேசுகையில், '' அடியே படத்தின் படப்பிடிப்பின் போது ஜீ. வி. பிரகாஷ் குமார் இது போன்றதொரு புதிய ஜானரில் கதையைக் கேட்டிருக்கிறேன். அதில் பணியாற்றுகிறீர்களா?  என கேட்டார். கதையைக் கேட்டு சம்மதம் தெரிவித்தேன். படத்தில் பணியாற்ற தொடங்கும் தருணத்தில் இந்த படத்தின் தரத்தில் எந்த சமரசமும் செய்து கொள்ளக் கூடாது. சர்வதேச தரத்தில் இந்த படைப்பு உருவாக வேண்டும் என அவருடைய விருப்பத்தை தெரிவித்தார். படத்தில் பணியாற்றும்போது ஒளிப்பதிவு தொடர்பான நுட்பங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் கொண்டவர் என்பதால் இந்த படத்திற்காக புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்கள் என்றார். அவர் சொன்னது போல் இந்த படத்தில் வி எஃப் எஸ் காட்சிகள்- கருவிகள்- ஒளி அமைப்பு - அரங்கம் - என அனைத்து விசயத்திலும் பெரிய பங்களிப்பை வழங்கினார். 


இந்தப் படத்தை தயாரிப்பதுடன் தொடர்ந்து திரைப்படங்களை தயாரிக்க வேண்டும் என்பதுதான் அவருடைய லட்சியமாக இருக்கிறது. அதற்காகவும் தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதற்காகவும் இந்த படத்தில் பணியாற்றுவதற்கு வாய்ப்பளித்ததற்காகவும் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்தில் பணியாற்றிய ஏனைய நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.'' என்றார்.


கலை இயக்குநர் எஸ். எஸ். மூர்த்தி பேசுகையில், '' இந்தப் படத்திற்காக கடலும், கப்பலும் இணைந்த வகையில் பிரத்யேக உள்ளரங்கம் ஒன்றை வடிவமைப்பது தான் சவாலாக இருந்தது. என் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை வழங்கியதற்காக தயாரிப்பாளர் ஜீ.வி. பிரகாஷ் குமார் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். '' என்றார். 


இயக்குநர் சுதா கொங்காரா பேசுகையில், '' ஜீவி பிரகாஷ் குமாரை எனக்கு 20 ஆண்டுகளாக தெரியும். அன்றிலிருந்து இப்போது வரை ஏதாவது புதிதாக சாதிக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருப்பார். சினிமா மீது அவருக்கு இருக்கும் ஆர்வத்தை போல் வேறு யாரிடமும் நான் பார்க்கவில்லை. அவர் சொன்னது மட்டும் இல்லாமல் செய்து காட்டியிருக்கிறார். இசையமைப்பாளராகவும், நடிகராகவும், தயாரிப்பாளராகவும்.. சினிமாவில் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டே இருக்கிறார். இவருடைய தயாரிப்பு நிறுவனம் என்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனம் போன்றது.


இங்கு ஏராளமான இளம் திறமையாளர்களை காண்கிறேன். இயக்குநர் கமல் பிரகாஷின் உழைப்பு திரையில் தெரிகிறது. இந்தத் திரைப்படத்தில் பணியாற்றிய நடிகர்கள் நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெறும்'' என்றார். 


இயக்குநர் கமல் பிரகாஷ் பேசுகையில், '' இந்த நாளுக்காக நான் எத்தனை நாள் கடுமையாக உழைத்திருக்கிறேன். ..கனவு கண்டிருக்கிறேன்.. என்பதை விட, இந்தப் படத்திற்கான எங்களுடைய உழைப்பு நிச்சயமாக திரையில் பேசும் என நம்புகிறேன். 


நான் மிகக் குறைந்த பட்ஜெட்டில் குறும்படங்களை இயக்குபவன். ஆனால் நமக்கு ஒரு ஐடியா தோன்றும். அந்த ஐடியாவிற்கு பட்ஜெட் கிடையாது. ஜீவி பிரகாஷ் சாரிடம் தொடர்ந்து ஆறாண்டுகள் பயணித்திருக்கிறேன் அந்தப் பயணத்தில் ஒரு நாள் இப்படத்தை பற்றிய ஐடியாவை அவரிடம் சொன்னேன். 20000 ரூபாயில் குறும்படம் இயக்கும் என்னை நம்பி கிட்டத்தட்ட 20 கோடி ரூபாய் முதலீடு செய்து 'கிங்ஸ்டன் ' திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார் தயாரிப்பாளரான ஜீ வி பிரகாஷ் குமார். இதற்காக அவருக்கு முதலில் என்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இதற்காக உழைத்த அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 


இந்த திரைப்படத்தின் மிகப்பெரிய வலிமை ..அதன் உருவாக்கம் தான். இதற்காக தங்களின் அர்ப்பணிப்புடன் கூடிய பங்களிப்பை வழங்கிய ஒளிப்பதிவாளர் -கலை இயக்குநர்- படத்தொகுப்பாளர் - சண்டை பயிற்சி இயக்குநர் - வி எஃப் எக்ஸ் குழு - ஆகிய அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 


இந்த படத்தின் திரைக்கதையில் ஆக்சன் தனித்து இல்லாமல் திரைக்கதையுடன்  இணைந்தே இருக்கும். இதனால் சண்டை பயிற்சி இயக்குநர் திலிப் சுப்பராயனின் பங்களிப்பும் அதிகம். இதனால் திட்டமிட்ட நாட்களுக்குள் திட்டமிட்ட பட்ஜெட்டுக்குள் படத்தின் அனைத்து பணிகளையும் நிறைவு செய்தோம். 


இந்தப் படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் சேத்தன்- அழகம்பெருமாள்- குமரவேல்- ஆகியோர் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். 

இந்தத் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் என உறுதியாக நம்புகிறேன்'' என்றார். 


நடிகை திவ்யபாரதி பேசுகையில், '' இந்த முன்னோட்ட வெளியிட்டு விழாவிற்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் நன்றி. 'பேச்சுலர்' திரைப்படத்திற்குப் பிறகு மூன்றாண்டுகள் கழித்து ஊடகத்தினரை சந்திக்கிறேன். அதனால் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். 


'கிங்ஸ்டன்' படத்தின் கதையை இயக்குநர் கமல் பிரகாஷ் என்னிடம் சொல்லும் போது.. எந்த மாதிரியான தோற்றத்தில்.. கதாபாத்திரமாக திரையில் தோன்ற வேண்டும் என்பதற்கான முன்மாதிரி வீடியோ ஒன்றினை காண்பித்தார். அதை பார்த்தவுடன் இந்த படத்தில் நிச்சயம் நடிக்கிறேன் என்று சொல்லிவிட்டேன். 

'பேச்சுலர்' படத்திற்குப் பிறகு ஜீவி பிரகாஷ் குமாருடன் இரண்டாவது முறையாக இணைந்து நடித்திருக்கிறேன். மிகவும் இனிமையாக பழகக்கூடியவர். நான் சில படங்களில் நடித்திருக்கிறேன் ஆனால் அந்த படங்கள் இன்னும் வெளியாகவில்லை.  ஜீவி பிரகாஷ் குமாருடன் நடித்திருக்கும் இந்தத் திரைப்படம் வெளியாகிறது. இதனால் நான் மகிழ்ச்சி அடைகிறேன். 


இயக்குநர் கமல் பிரகாஷ் மிகவும் அமைதியானவர். பொறுமையானவர். நிதானமானவர். படப்பிடிப்பு தளத்தில் அவர் யாரிடமும் அதிர்ந்து பேசி நான் பார்த்ததே இல்லை. இதுவே எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பொதுவாக இயக்குநர்களுக்கு நிறைய டென்ஷன் இருக்கும். 


இப்படத்தின் படப்பிடிப்பு 70 நாட்கள் நடைபெற்றது. ஒரு நாள் கூட ஒளிப்பதிவாளர் கோகுல் பினோய் என்னிடம் பேசவே இல்லை. வேலையில் கவனமாக இருப்பார். 


இப்படத்தின் படப்பிடிப்பின் போது தண்ணீரில் நனைந்து கொண்டே இருப்போம். எனக்கு தலை முடி நீளம் அதிகம் என்பதால் எப்போதாவது சின்ன அசௌகரியம் ஏற்பட்டாலும் உடன் நடிக்கும் நடிகர்கள் சகஜமாக பேசி அதனை இயல்பாகி விடுவார்கள். அதனால் அவரர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 


இந்த படத்தில் நானும் சில ஆக்சன் காட்சிகளில் நடித்திருக்கிறேன். கிங்ஸ்டன் திரைப்படம் ரசிகர்களுக்கு திரையரங்க அனுபவத்தை சிறப்பாக வழங்கும். அனைவரும் மார்ச் ஏழாம் தேதி அன்று திரையரங்கத்திற்கு வருகை தந்து ஆதரவு தாருங்கள்.'' என்றார். 


இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து பேசுகையில், '' இப்படத்தின் இயக்குநர் கமல் பிரகாஷ் என் நண்பர். அவரை கடந்த ஆறு ஆண்டுகளாக ஜீ.வி. பிரகாஷ் குமார் ஆதரவு வழங்கி வந்தார். அதற்காக ஜீ வி பிரகாஷ் குமாருக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 


ஒரு முறை இப்படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றேன். பிரம்மாண்டமாக அரங்கம் வடிவமைக்கப்பட்டிருந்தது. அதைப் பார்த்து வியந்தேன். மகிழ்ச்சியும் அடைந்தேன். இயக்குநரின் கற்பனைக்கு வடிவம் கொடுத்த அனைவருக்கும் இந்த தருணத்தில் வாழ்த்துக்களையும் நன்றியையும் சொல்கிறேன். 

திவ்ய பாரதியும், ஜீவி பிரகாஷ் குமாரும் 'பேச்சுலர்' படத்தில் நன்றாக நடித்திருந்தார்கள். அவர்களுடைய கெமிஸ்ட்ரியும் நன்றாகவே இருந்தது. இந்தப் படத்திலும் அது இருக்கும் என்று நம்புகிறேன். 


'திரிஷா இல்லனா நயன்தாரா' படத்தில் ஜீவி பிரகாஷ் குமாரின் நடிப்பு எனது மிகவும் பிடிக்கும். 'தலைவா' படத்தில் வாங்கண்ணா வாங்கண்ணா படத்திலும் ஜீ வி பிரகாஷ் நடனமாடிருப்பார். ஆனால் அதன் பிறகு அவர் நடிகராகி கலக்கிக் கொண்டிருக்கிறார். 


இயக்குநர் கமல் பிரகாஷ் அடிப்படையில்  தொழில்நுட்ப திறமை மிக்கவர். திரையுலகில் ஏதாவது புதிய தொழில்நுட்பம் அறிமுகம் ஆகியிருக்கிறது என்றால்.. அதை பற்றி எங்கள் குழுவில் முதலில் தெரிந்து கொண்டு அதை பகிர்ந்து கொள்பவர் கமல் பிரகாஷ்.


'முதல் முத்தம்' எனும் என்னுடைய குறும்படத்திற்கு விருது கிடைக்கவில்லை என்றாலும்.. அந்த விழாவில் இயக்குநர் வெற்றிமாறன், 'நீ சிறந்த எழுத்தாளராக வருவாய்' என வாழ்த்தினார். அவருடைய  வாழ்த்துக்களால் தான் 'ஓ மை கடவுளே' மற்றும் 'டிராகன்' ஆகிய படங்களை எழுதி, இயக்க முடிந்தது. என்னுடைய இந்த வெற்றிக்கு உங்களின் வாழ்த்துகள் தான் காரணம். அதனால் இந்த தருணத்தில் அதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். '' என்றார். 


இயக்குநர் பா ரஞ்சித் பேசுகையில், '' இந்த படத்தின் பணிகள் தொடங்கிய தருணத்திலிருந்து ஜீ  வி பிரகாஷ் குமார் இப்படத்தைப் பற்றி எப்போதும் உற்சாகமாக பேசிக் கொண்டே இருப்பார். அதனால் இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெறும். ஒரு முதல் பட இயக்குநருக்கு பட்ஜெட்டை பற்றி கவலைப்படாமல் அவருக்கு வாய்ப்பு அளித்த ஜீ வி பிரகாஷ் குமாருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 


ஒரு கலைஞன் மீது வைக்கும் நம்பிக்கை மிக முக்கியமானது. புது கான்செப்ட் மீது நம்பிக்கை வைப்பது. அதிலும் குறிப்பாக வி எஃப் எக்ஸ் குழுவை நம்பி ஒரு படம் எடுப்பது சவாலானது. இது தொடர்பாக ஜீ வி பிரகாஷ் குமாரிடம் ஒரு முறை வி எஃப் எக்ஸ் பட்ஜெட் என்ன? என்று கேட்டிருக்கிறேன். ஆனால் அவர்கள் சொன்ன பட்ஜெட்டை விட படத்தின் தரம் உயர்வாக இருக்கிறது. 


இதை எப்படியாவது மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று எப்போதும் சிந்தித்துக் கொண்டே இருப்பார். இது நிச்சயமாக திரையரங்க அனுபவத்தை வழங்கும் என்று முன்னோட்டத்தை பார்த்ததும் தெரிந்தது.  நடிகர்கள்.. விசுவல் ..மியூசிக்.. எல்லாம் பிரம்மாண்டமாக இருந்தது. 


இன்றைய சூழலில் தமிழ் சினிமாவில் ஒரு திரைப்படத்தை உருவாக்கி அதை வெளியிடுவதில் பெரிய சவால் இருக்கிறது. இதுபோன்ற கன்டென்ட் ஓரியண்டட் படங்கள் தான் மக்கள் விரும்புகிறார்கள். 


ஜீ வி பியுடன் இணைந்து பணியாற்றும் போது ...நாம் சொல்ல நினைக்கும் விசயங்களை சரியாக புரிந்து கொண்டு பணியாற்றுவார். அதுதான் அவருடைய தனித்துவம். என்னைப் போன்ற படைப்பாளிகளுக்கு இதுதான் தேவை. இது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. அவர் இந்த குழு மீது நம்பிக்கை வைத்து இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார். அதனால் இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என வாழ்த்துகிறேன். 


அறிமுக இயக்குநர் கமலுக்கும் வாழ்த்துக்கள். முதல் பட இயக்குநருக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் இருக்கிறது. முதல் படம் இயக்கி, இரண்டாவது படம் இயக்கும்போதும் பலருக்கும் சில கட்டுப்பாடுகள் இருக்கிறது.  குறும்படத்தை இயக்கிய அனுபவத்துடன் இதுபோன்ற பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் படத்தில் பணியாற்றுவது என்பது உங்களுக்கு கிடைத்த  முக்கியமான விசயமாக நான் பார்க்கிறேன். இதில் பணி புரிந்திருக்கும் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.


சின்ன பட்ஜெட் படங்கள் - கன்டென்ட் படங்களுக்கு திரையரங்குகளில் ஏராளமான ரசிகர்கள் வருகை தருகிறார்கள் என்பதை நாம் பார்த்திருக்கிறோம். இதற்கு 'குடும்பஸ்தன்', 'டிராகன்' போன்ற படங்களின் வெற்றி தான் சிறந்த உதாரணம். சிறிய முதலீட்டு படங்களை தயாரிப்பதில் சவால் இருந்தாலும்... அதனை வெளியிடுவதில் சவால் இருந்தாலும்... அதனை ஓ டி டி தளத்தில் விற்பனை செய்வதில் சவால் இருந்தாலும் ...தயாரிப்பாளர்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை திரையரங்குகள் தான். இதனால் என்னை போன்ற இயக்குநர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும், பெரிய நம்பிக்கையை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாவுக்கும், ரசிகர்களுக்கும், அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார். 


இயக்குநர் வெற்றிமாறன் பேசுகையில், ''  ஜீ.வி. பிரகாஷ் குமார் சோர்வே இல்லாமல் எப்போதும் உற்சாகமாக பணியாற்றிக் கொண்டே இருப்பார். இதுதான் அவரின் சிறப்பான அடையாளம்.  எந்த இயக்குநர்.. எந்த தருணத்தில் ..அவரை சந்திக்க வேண்டும் என்று அவரை தொடர்பு கொண்டாலும், உடனடியாக தொடர்பு கொண்டு சரியான பதிலை சொல்வார். அவர் பணி செய்வதற்கு ஒருபோதும் மறுப்பு சொன்னதே இல்லை. இது அவருடைய தனித்திறமை என்றே சொல்லலாம். 


பத்தாண்டு காலம் இசையமைப்பாளராக பணியாற்றிய பிறகு அவர் நடிக்க வேண்டும் என்று விரும்பினார். அப்போது நான் இசை பணி நன்றாக தானே சென்று கொண்டிருக்கிறது எதற்கு திடீரென்று நடிப்பு ? என்று கேட்டேன். ஒரே அறையில் இருந்து பணியாற்றுவது சோர்வை தருகிறது. நான் வெளியில் வந்து பணி செய்ய விரும்புகிறேன் என்றார். 


ஆனால் அவர் நடிக்க வந்த பிறகு அவருடைய இசை திறமை மேலும் விரிவடைந்தது. அவரே நடிகராக மாறிப் போனதால் தன்னுடைய இசையை அவரால் எளிதாக மேம்படுத்தி கொள்ள முடிந்தது. அத்துடன் மட்டுமல்லாமல் அவர் கற்றுக் கொள்வதற்கு எப்போதும் தயாராகவே இருக்கிறார். இந்தப் படத்திலும் ஒரு நடிகராகவும், ஒரு இசையமைப்பாளராகவும், தன்னை மேம்படுத்திக் கொண்டிருக்கிறார். 


சிறிது நாள் முன் ஒரு நாள் திடீரென்று போன் செய்து நான் தயாரிப்பாளராக போகிறேன் என்றார். வாழ்த்து சொல்லிவிட்டு யார் இயக்குநர் ? என்று கேட்டேன். புது இயக்குநர்.‌ ஸீ ஃபேண்டஸி ஜானர் படம்... இந்தியாவில் இதுதான் ஃபர்ஸ்ட் என உற்சாகம் குறையாமல் சொன்னார்.  இந்தப் படத்தின் மீது அவர் அவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தார். 


இந்த படத்திற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு பிரம்மாண்டமான அரங்கத்தை பார்வையிட சென்று இருந்தேன். அந்த அரங்கம் உண்மையிலேயே வியப்பை ஏற்படுத்தியது. கடல் அலை, படகு, மழை, பனி.. அதன் இயக்கம் பற்றி தொழில்நுட்ப ரீதியாக விவரித்தார்கள். இதையெல்லாம் பார்த்துவிட்டு என் மனதில் ஒரு கணக்கை போட்டு பட்ஜெட் எவ்வளவு? என்று கேட்டேன். நான் எதிர்பார்த்த பட்ஜெட்டில் 10%  தான் இதன் பட்ஜெட் என்று சொன்னார்கள்.  உண்மையில் அதிசயித்தேன். சின்ன பட்ஜெட்டில் பிரம்மாண்டமான அரங்கம். இதற்காகவே உழைத்த அனைவருக்கும் நன்றி. 


நடிகர்கள் குறிப்பிட்டது போல் இந்த  பிரம்மாண்டமான அரங்கத்தில் நடிப்பது கடினம் தான். சவாலானது தான். அவர்களின் கடின உழைப்பு ..திரையில் ரசிக்கும் வகையில் இருக்கிறது.  


இந்த அளவிற்கு அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை தயாரிப்பாளராகவும் நடிகராகவும் இசையமைப்பாளராகவும் வழங்கிய ஜீ.வி. பிரகாஷ் குமாருக்கும், அவருடைய நம்பிக்கைக்கு பாத்திரமாக திகழும் இயக்குநருக்கும் வாழ்த்துக்கள்.  


இது அடிப்படையில் தொழில்நுட்ப ரீதியிலான படைப்பு. தொழில்நுட்பக் கலைஞர்கள் நேர்த்தியாக உழைத்திருக்கிறார்கள். இந்த படத்தின் கமர்சியல் வெற்றி ஜீ வி பிரகாஷ் குமார் போன்ற சினிமா மீது ஆர்வமுள்ள தயாரிப்பாளருக்கு மேலும் பல தயாரிப்புகளை உருவாக்குவதற்கு உதவும். ஒட்டுமொத்த குழுவினருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார். 


தயாரிப்பாளர்- இசையமைப்பாளர் -நடிகர் ஜீ.வி. பிரகாஷ் குமார் பேசுகையில், '' இயக்குநர் வெற்றிமாறன் நம்முடைய வீட்டில் இருக்கும் அம்மா போன்றவர்.‌ அம்மா எப்போதும் பிள்ளைகளின் பாதுகாப்பிற்காக எச்சரிக்கை செய்து கொண்டு இருப்பார்.

அதன் பிறகு அவர்கள் தான் வழி காட்டுவார்கள். நான் நடிக்கிறேன் என்று சொன்னவுடன் முதலில் மறுப்பு தெரிவித்தாலும்.. அதன் பிறகு நடிப்பு பயிற்சிக்காக என்னை அனுப்பி வைத்ததும் வெற்றி மாறன் தான். 18 வருடங்களாக அவரும் நானும் இணைந்து பயணித்துக் கொண்டிருக்கிறோம். 


'தெறி', 'அசுரன்' என இரண்டு படங்கள் தாணு சார் தயாரிப்பில் பணியாற்றி இருக்கிறேன். இரண்டுமே வெற்றி. அதனால் அவர் எனக்கு ராசியான தயாரிப்பாளர். தற்போது 'வாடிவாசல் ' படத்திலும் இணைந்திருக்கிறோம். 


இயக்குநர் சுதா கொங்காரா - அவர்களும் எனக்கு 20 ஆண்டுகால நண்பர் தான். அவர்கள் மணிரத்னத்திடம் உதவியாளராக இருந்தபோது ..நான் ஏ ஆர் ரகுமானிடம் உதவியாளராக இருந்தேன். அவர்களுக்கு மேடை பயம் இருக்கிறது எப்போதும் மேடைக்கு வருகை தர மாட்டார். என்னுடைய அழைப்பிற்காக இங்கு வருகை தந்தார். அவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


பா ரஞ்சித்துடன் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பயணித்துக் கொண்டிருக்கிறேன். அவருடைய தயாரிப்பில் உருவாகும் ஒரு படத்தில்  நடித்திருக்கிறேன். 'தங்கலான்' திரைப்படத்திற்கு இசையமைத்தேன். அது ஒரு மறக்க இயலாத அனுபவம். அவர் தன்னுடைய உதவியாளர்களை இயக்குநர்களாக உயர்த்துகிறார். அதனால் அவருடன் இணைந்து பணியாற்றும்போதெல்லாம் எனக்கும் புதிய உற்சாகம் பிறக்கும். 


படப்பிடிப்பு தளத்தில் நடிகை திவ்யா பாரதி நடிக்கும் போது மட்டும் எந்த ஒரு திருத்தத்தையும் இயக்குநர் கமல் சொல்ல மாட்டார். இது எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது. அதன் பிறகு தான் அவருடைய மனைவி பெயரும் திவ்யபாரதி என்று தெரிந்து கொண்டேன். அதன் பிறகு தான் அவர் அவருடைய மனைவி மீது வைத்திருக்கும் அன்பை தெரிந்து கொண்டேன். 


இது ஒரு பெரிய கனவு தான். ஹாலிவுட் வெளியாகும் ஹாரி பாட்டர் போன்ற படங்களை பார்க்கிறோம். இதுபோல் ஏன் நம்மளால் உருவாக்க முடியாது என யோசிப்பேன். அவர்கள் அவர்களுடைய பாட்டி கதையை எடுக்கும் போது நாம் நம்முடைய பாட்டி கதையை எடுக்கலாமே என யோசித்தோம். நம்ம ஊரு பாட்டி கதை போன்ற கதை தான் கிங்ஸ்டன். 


ஒரு ஃபேண்டஸி. அதை நம்முடைய  கதைக்களத்திலிருந்து சொல்ல வேண்டும். அதாவது நம்ம ஊரு ஹாரி பாட்டர் எப்படி இருப்பார்? இதுபோன்ற எண்ணங்களை கமல் ..என்னிடம் கதையாக சொன்ன போது எனக்குள் ஏற்பட்டது. 


இந்த திரைப்படத்தில் ஜீ ஸ்டுடியோ இணைந்தது. அவர்கள் முழு ஆதரவை வழங்கினார்கள். இதற்காக இந்த தருணத்தில் அக்சய் மற்றும் வினோத் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எங்களின் கனவில் அவர்களும் ஒரு பகுதியாக இணைந்திருக்கிறார்கள். 


இந்தப் படத்தின் முதல் காட்சியை இயக்கி கொடுத்த கமல்ஹாசனுக்கும் நன்றி. அவரிடம் சென்று நான் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறேன். எங்கள் தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் தொடங்கும் முதல் படத்தின் முதல் காட்சியை நீங்கள் தான் இயக்க வேண்டும் என்று என் விருப்பத்தை சொன்னேன். அவரும் எந்தவித மறுப்பும் செல்லாமல் உடனடியாக வந்து இயக்கி தந்தார். இதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 


மேலும் இந்தப் படத்திற்காக ஒத்துழைப்பு வழங்கிய ஜீ ஸ்டுடியோஸ், வி எஃப் எக்ஸ் டீம், திலீப் சுப்பராயன், நீரவ் ஷா, கோகுல் பினோய், எஸ். எஸ். மூர்த்தி, ஷான் லோகேஷ், பூர்ணிமா, பாடலாசிரியர்கள், நடன இயக்குநர்கள், கோபி பிரசன்னா, சிங்க் சினிமா, சரிகம , அழகம் பெருமாள், சேத்தன், குமரவேல், சபுமோன், ஆண்டனி, அருண், ராஜேஷ், திவ்யபாரதி, யுவராஜ், தீவிக், வெங்கட் ஆறுமுகம், தினேஷ் குணா, கமல் பிரகாஷ் உள்ளிட்ட ஏராளமானவர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.''

என்றார்.


https://youtu.be/LwbQ5erKCp0