Featured post

Otha Vottu Muthaiya Movie Review

                                        Otha Vottu Muthaiya Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம ஒத்த ஒட்டு muthaiah ன்ற படத்தோட review ...

Friday, 31 January 2025

ஜீ ஸ்டுடியோஸ் - பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் இணைந்திருக்கும்

 *ஜீ ஸ்டுடியோஸ் - பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் இணைந்திருக்கும் 'கிங்ஸ்டன்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு*






*ஜீ. வி. பிரகாஷ் குமாரின் ' கிங்ஸ்டன்' பட ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு*


இசையமைப்பாளர் - பின்னணி பாடகர்- நட்சத்திர நடிகர் -தயாரிப்பாளர்- என பன்முக ஆளுமை கொண்ட ' இசை அசுரன்' ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'கிங்ஸ்டன்' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'ராசா ராசா..'  எனும் முதல் பாடலும் , பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. 


அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில் உருவாகி வரும் 'கிங்ஸ்டன்' எனும் திரைப்படத்தில் ஜீ. வி. பிரகாஷ் குமார், திவ்ய பாரதி, அழகம் பெருமாள், 'மேற்குத் தொடர்ச்சி மலை' ஆண்டனி , சேத்தன், குமரவேல், சபுமோன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.  வசனத்தை தீவிக் எழுத, படத்தொகுப்பு பணியை ஷான் லோகேஷ் கவனிக்க, கலை இயக்கத்தை எஸ். எஸ். மூர்த்தி மேற்கொள்ள, அதிரடியான சண்டை காட்சிகளை திலீப் சுப்பராயன் அமைத்திருக்கிறார். கடல் பின்னணியில் ஃபேண்டஸி அட்வென்ச்சர் ஜானரிலான இந்த திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. தினேஷ் குணா கிரியேட்டிவ் புரொடியூசராக பொறுப்பேற்றிருக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதுமாக நிறைவடைந்து இருக்கிறது.  தற்போது இப்படத்தின் படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 


இந்நிலையில் இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியிடப்பட்டது. இந்த டீசரை ஐந்து மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்ததுடன் படத்தை பற்றிய எதிர்பார்ப்பையும் எகிற வைத்தது. இதனைத் தொடர்ந்து எதிர்வரும் மார்ச் மாதம் 7 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும்  திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற 'ராசா ராசா..' எனத் தொடங்கும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தப் பாடலை பாடலாசிரியர் யுகபாரதி எழுத பின்னணி பாடகரும், இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜீ.வி. பிரகாஷ் குமார் மற்றும் பின்னணி பாடகி சுப்லாஷினி ஆகியோர் இணைந்து பாடி இருக்கிறார்கள்.  மெலோடியாக வெளியாகி இருக்கும் இந்த பாடல்... அனைத்து தரப்பு இசை ரசிகர்களின் வரவேற்பையும், ஆதரவையும் பெற்று வருகிறது.


https://youtu.be/pu_4BrmUZIs

Zee Studios-Parallel Universe Pictures presents ‘Kingston’ First Single Release!

 *Zee Studios-Parallel Universe Pictures presents ‘Kingston’ First Single Release!*






*G.V. Prakash Kumar’s ‘Kingston’ First Single Track is Out Now!*


GV Prakash, who has proved his prodigious caliber as a reigning music director, playback singer, star actor and producer is all set to enthral the film lovers with his upcoming film ‘Kingston’, a first-of-its-kind sea fantasy adventure, featuring him in the lead role. The film’s first single ‘Raasa Raasa’ and its lyrical video has been released now. 


The film is directed by debut filmmaker Kamal Prakash, featuring a promising star-cast including G.V. Prakash Kumar, Divya Bharathi, Azhagam Perumal, ‘Merku Thodarchi Malai’ fame Antony, Chetan, Kumaravel, Sabumon and many others. 

 


 The cinematography of the film is handled by Gokul Benoy, while the dialogues are being crafted by Dhivek. The editing is managed by San Lokesh. Key technical contributors include S.S. Moorthy in the art department and Dhilip Subbarayan overseeing stunts, among others. This sea fantasy adventure film, set against a coastal landscape, is produced on a big budget by Zee Studios in association with Parallel Universe Pictures. Dinesh Guna is the creative producer of this film, which has already wrapped up with its shooting work. Currently, the postproduction phase is progressing at the perfect momentum. 


The film’s teaser that was recently released garnered wonderful response from all the places scaling more than 5 Million views within a short span of time. With the film all set for the worldwide theatrical release on March 7, the makers have unveiled the first single ‘Raasa Raasa’ along with the lyrical video. Yugabharathi has penned the poetic lyrics for this song, which is crooned by the film’s music director and lead actor - G.V. Prakash Kumar himself along with Sublashini. The melodious song has captured the hearts of music lovers, thereby gaining phenomenal response.


https://youtu.be/pu_4BrmUZIs

Disney+ Hotstar collaborates with director Ram on his next movie 'Paranthu Po

 Disney+ Hotstar collaborates with director Ram on his next movie 'Paranthu Po'




The Mirchi Shiva-starrer has been officially selected for the Rotterdam film festival


India’s leading streaming platform Disney+ Hotstar has collaborated with one of Tamil cinema’s finest directors Ram on his eagerly-awaited next film ‘Paranthu Po’, which has now been officially selected for the Rotterdam Film Festival.


The film, is a light-hearted, buoyant musical comedy featuring actors Mirchi Shiva, Grace Antony, Anjali and master Mithul Ryan in the lead. Film’s first look poster got released on Disney+ Hotstar social handles. 


The story is about an obstinate schoolboy and his loving but cash-strapped dad, both of whom undertake a road trip away from the anxieties of the city.


Speaking about ‘Parandhu Po’ being selected for the Rotterdam film festival, director Ram said, “After ‘Peranbu’ (Resurrection) and ‘Yezhu Kadal Yezhu Malai’ (Seven Seas Seven Hills), I'm thrilled to have this film premiere at the International Film Festival Rotterdam (IFFR). When 'Seven Seas Seven Hills' was premiered at IFFR 2024, Mithul Ryan asked if 'Paranthu Po' (Fly Away) would also be screened there and if he could come to Rotterdam. I am delighted that a year later, his wish has come true. ‘Paranthu Po’ (Fly Away) will have its world premiere at IFFR 2025's Limelight section.” Both Shiva and he will be attending the premiere on February 4, 8 pm at de Doelen Jurriaanse Zaal.


Talking about the film’s lead actor Mirchi Shiva, Ram said, “Shiva and I began our careers in 2007 - he with ‘Chennai 28’ and I with ‘Katrathu Tamil’. At that time, he was working at Radio Mirchi and interviewed me. We've been friends since then and have always wanted to collaborate. Finally, it happened with 'Paranthu Po' in 2024.”


‘Paranthu Po’ will also be the first time that Ram has ventured into the comedy genre.


“This film marks my first venture into feel-good comedy, featuring a talented ensemble cast. Grace Antony, known for her work in Malayalam cinema, was my perfect choice for the role given her natural flair for comedy. As always, Anjali has been incredibly supportive. Aju Varghese and Vijay Yesudas have been instrumental during both shooting and dubbing, making the process smooth.  I'm also excited to introduce Master Mithul Ryan, a gifted young actor whose natural performance will surely surprise audiences. Collaborating with Hotstar has been a wonderful experience - they trusted my vision and allowed me to stay true to my original script. The entire team made it a peaceful and pleasant journey,” Ram said.


Talking about the experience of working with the iconic director Ram, Mirchi Shiva said, “It was a fantastic, new and great experience working with Ram sir. I always say Ram sir is one of a kind. He is an asset. Thank you, Disney+ Hotstar and Pradeep sir for this wonderful opportunity. When I signed this film, a lot of people asked me how this combination was going to work. When Ram sir approached me, I asked him the same question.”


However, Shiva said he got his answer soon.


“The story is fantastic. It is a nice and feel-good film. It will definitely be a film that everybody can watch and enjoy,” he said with confidence and expressed his gratitude to the director saying, “Once again, I would like to express my special thanks to Ram sir regarding this.”


Written and directed by Ram, ‘Parandhu Po’ is presented by Disney+ Hotstar and produced by Seven Seas and Seven Hills productions. 


Background score for the film is done by Yuvan Shankar Raja and music is by Santhosh Dhayanithi. NK Ekhambram has cranked the camera for this film, which has editing by Mathi VS.


The film’s songs have lyrics by Madhan Karky while its stunts have been choreographed by Stunt Silva.


About Disney+ Hotstar:

Disney+ Hotstar (erstwhile Hotstar) is India’s leading streaming platform that has changed the way Indians watch their entertainment - from their favorite TV shows and movies to sporting extravaganzas. With the widest range of content in India, Disney+ Hotstar offers more than 100,000 hours of TV Shows and Movies in 8 languages and coverage of every major global sporting event.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம், பிரபல இயக்குநர் ராமுடன் இணைந்து

 டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம், பிரபல  இயக்குநர் ராமுடன் இணைந்து, அவரது அடுத்த படமான "பறந்து போ" படத்தை வழங்குகிறது !! 




மிர்ச்சி சிவா நடிப்பில்,  கலக்கல் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இப்படம், ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு, அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.


இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார்,  தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குநர்களில் ஒருவரான ராமுடன் இணைந்துள்ளது. ராமின்  இயக்கத்தில்  ஆவலுடன் எதிர்பார்க்கப்படும்,  அடுத்த படமான ‘பறந்து போ’ படத்தை இணைந்து வழங்குகிறது.  இப்படம் இப்போது உலகளவில் பெரும் மரியாதைக்குரிய ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.


நடிகர் மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி மற்றும் மாஸ்டர் மிதுல் ரியான் ஆகியோர் முன்னணி பாத்திரங்களில் நடித்துள்ள இந்தத் திரைப்படம்,  மனதை  இலகுவாக்கும் நகைச்சுவையுடன், மியூசிக்கல் காமெடிப் படமாக உருவாகியுள்ளது.  இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சோஷியல் மீடியா தளங்களில்  வெளியிடப்பட்டு, வரவேற்பைப் பெற்றுள்ளது.


ஒரு  பிடிவாதமான பள்ளி மாணவனும், பண வசதி இல்லாத  அவனது அன்பான அப்பாவும், கவலைமிக்க உலகிலிருந்து விடுபட,  ஒரு ரோட் டிரிப் மேற்கொள்கிறார்கள். அவர்களின் பயணம் தான் இந்தப்படத்தின் கதை. 


ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு 'பறந்து போ' திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது குறித்து இயக்குநர் ராம் பேசுகையில்…, 'பேரன்பு' மற்றும் 'ஏழு கடல் ஏழு மலை' ஆகிய படங்களுக்குப் பிறகு, இந்தப் படத்தின் பிரீமியர்  ரோட்டர்டாம் (IFFR) திரைப்பட விழாவில் அரங்கேறியதைக்  காண்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். சர்வதேச திரைப்பட விழாவான ரோட்டர்டாம் IFFR 2024 இல் 'ஏழு கடல் ஏழு மலை' திரையிடப்பட்டபோது, 'பறந்து போ' (ஃப்ளை அவே) திரையிடப்படுமா என்றும், ரோட்டர்டாமுக்கு வருவோமா? என்றும் மிதுல் ரியான் கேட்டார். ஒரு வருடம் கழித்து அவருடைய ஆசை நிறைவேறியதில் மகிழ்ச்சி அடைகிறேன். ‘பறந்து போ’ (ஃப்ளை அவே) IFFR 2025 இன் லைம்லைட் பிரிவில் ப்ரீமியர் செய்யப்படுகிறது. சிவாவும் நானும் வரும் பிப்ரவரி 4, இரவு 8 மணிக்கு de Doelen Jurriaanse Zaal இல் நடக்கும் பிரீமியரில் கலந்து கொள்கிறோம் .


மேலும் படத்தின் நாயகன் மிர்ச்சி சிவா பற்றிப் பேசிய ராம், “சிவாவும் நானும் 2007 இல் எங்கள் திரை வாழ்க்கையைத் தொடங்கினோம் - அவருக்கு ‘சென்னை 28’  பட மூலமும், எனக்கு ‘கற்றது தமிழ்’ படம் மூலமும் திரை வாழ்க்கை துவங்கியது. அப்போது ரேடியோ மிர்ச்சியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சிவா, என்னைப் பேட்டி எடுத்தார். அப்போதிருந்தே நாங்கள் நண்பர்களாக இருக்கிறோம், இணைந்து வேலை செய்ய இருவருமே மிகவும் விரும்பினோம். இறுதியாக, அது 2024 இல் 'பறந்து  போ' படம் மூலம் நடந்தது.



‘பறந்து போ’ படம் மூலம் இயக்குநர் ராம்,  முதன்முறையாக காமெடி ஜானரில் களமிறங்கியுள்ளார்.


“இந்தத் திரைப்படம், காமெடி ஜானரில் வித்தியாசமான புதிய குழுவுடன் எனது முதல் முயற்சி. மலையாளத் திரையுலகில் பிரபலமான கிரேஸ் ஆண்டனி, இப்படத்தில் மிகச்சரியான ஒரு அற்புதமான பாத்திரத்தில் நடித்துள்ளார்.  எப்போதும் போல, அஞ்சலி மிக அற்புதமான நடிப்பை வழங்கியுள்ளார்.  அஜு வர்கீஸ் மற்றும் விஜய் யேசுதாஸ் இருவரும் படப்பிடிப்பு மற்றும் டப்பிங் ஆகியவற்றில், சிறப்பான பணியைச் செய்துள்ளனர். மாஸ்டர் மிதுல் ரியானை அறிமுகப்படுத்துவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், ஒரு திறமையான இளம் நடிகரின் இயல்பான நடிப்பு நிச்சயமாகப் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தும். ஹாட்ஸ்டாருடன் இணைந்து பணியாற்றுவது ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது - அவர்கள் எனது பார்வையை நம்பி, எனது திரைக்கதைக்கு முழுமையான ஆதரவு தந்தனர். ஒட்டுமொத்த குழுவிற்கும், இப்படம் ஒரு அமைதியான மற்றும் இனிமையான பயணமாக அமைந்தது,” என்று ராம் கூறினார்.


பிரபல இயக்குநர் ராமுடன் பணிபுரிந்த அனுபவம் குறித்து பேசிய மிர்ச்சி சிவா கூறுகையில்…, 

“ராம் சாருடன் பணிபுரிந்தது ஒரு அருமையான  மற்றும் சிறந்த அனுபவம். நான் எப்பொழுதும் ராம் சார் தனித்துவ மிக்கவர் என்றே சொல்வேன். அவர் நம் தமிழ் திரையுலகின் சொத்து. இந்த அருமையான வாய்ப்புக்காக டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மற்றும் பிரதீப் சார் ஆகியோருக்கு நன்றி. இந்தப் படத்தில் நான் கையெழுத்திட்டபோது, இந்தக் கூட்டணி எப்படி இருக்கும் என்று நிறையப் பேர் என்னிடம் கேட்டார்கள். ராம் சார் என்னை அணுகியபோது, நானும் அதே கேள்வியைத் தான் கேட்டேன்.


“இப்படத்தின் கதை அருமையாக உள்ளது. இது ஒரு சிறப்பான படைப்பாக  உணர்வுப்பூர்வமான படமாக இருக்கும். கண்டிப்பாக அனைவரும் பார்த்து ரசிக்கக் கூடிய படமாக இருக்கும்” என்று நம்பிக்கையுடன் கூறிய சிவா, இயக்குநர் ராமிற்கு நன்றி தெரிவித்தார். 



இயக்குநர் ராம் எழுதி இயக்கியுள்ள ‘பறந்து போ’ திரைப்படத்தை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இணைந்து வழங்குகிறது. செவன் சீஸ் மற்றும் செவன் ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் இப்படத்தைத் தயாரித்துள்ளது.


படத்தின் பின்னணி இசையை யுவன் ஷங்கர் ராஜா அமைத்துள்ளார், இசை சந்தோஷ் தயாநிதி. மதி VS படத்தொகுப்பு செய்திருக்கும் இந்த படத்திற்கு, NK ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.


படத்தின் பாடல் வரிகளை மதன் கார்க்கி எழுதியுள்ளார்.  சண்டைக்காட்சிகளை ஸ்டண்ட் சில்வா அமைத்துள்ளார்.



டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பற்றி: 

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (முந்தைய ஹாட்ஸ்டார்) என்பது இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாகும், இது இந்தியர்கள் தங்கள் பொழுதுபோக்கைப் பார்க்கும் முறையை மாற்றியுள்ளது - அவர்களுக்குப் பிடித்த டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் முதல் விளையாட்டு நிகழ்ச்சிகள் வரை, இந்தியாவில் பரந்த அளவிலான உள்ளடக்கத்துடன், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் 8 மொழிகளில் 100,000 மணிநேரத்திற்கும் அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை வழங்குகிறது.  மேலும் ஒவ்வொரு முக்கிய உலகளாவிய விளையாட்டு நிகழ்வின் கவரேஜையும் வழங்குகிறது.

Ring Ring Movie Review

Ring Ring Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம ring  ring படத்தோட review அ தான் பாக்க போறோம். sakthivel direct பண்ணிருக்கற இந்த படத்துல sakshi agarwal , swayam siddha , vivek prasanna , daniel annie , arjunan னு நெறய பேர் நடிச்சிருக்காங்க. சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போவோம். usual அ மனிதர்கள்   தான் complicated ஆனா ஜீவராசி  னே சொல்லாம். ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சுக்கறது,  மத்தவங்களோட boundary அ நம்ம மதிக்கறது  ன்ற common ஆனா விஷயங்கள் ல அடிக்கடி மறந்து போயிடுறோம். உண்மையை சொன்ன அந்த மாதிரி நடந்துக்க தான் நமக்கு தெரியாது னு சொல்லலாம்.  ஒருத்தர பத்தி புரிஞ்சுக்கறது னு ன்றது அவ்ளோ  சுலபமான விஷயம் கிடையாது. ஏன்னா தன்னோட weekness அ பத்தி தெரிஜுகிட்டு நம்மள hurt பண்ணிடுவாங்களோ னு பயந்து நெறய பேரு உண்மைல ஒரு character ஆவும் , வெளில காமிக்கிறது வேற ஒரு character ஆவும் தான் இருப்பாங்க . இந்த உலகத்துல இருக்கறவங்க முக்காவாசி பேரு இப்படி தான் நடந்துக்கறாங்க  னு சொல்லலாம். ஏன் இத பத்தி பேசுற னு நினைக்கிறீங்களா ஏன்னா இந்த idea  வ base பண்ணி தான் இந்த படத்தை எடுத்துருக்காங்க னு தான் சொல்லி ஆகணும். 


Ring Ring Movie Video Review: https://www.youtube.com/watch?v=v8pgsAOKvN4

இந்த கதைல பாத்தீங்கன்னா நாலு couples இருக்காங்க. முதல் pair  விவேக் பிரசன்னா -ஸ்வயம் சித்தா, ரெண்டாவுது pair டேனியல் அன்னி போப் – ஜமுனா , மூணாவுது pair பிரவீன் ராஜா – சாக்ஷிஅகர்வால், அப்புறம் நாலாவுது pair தான்  அர்ஜுனன் – சஹானா . இவங்க நாலு pair  யுமே close  friends அ இருக்காங்க. ஒருத்தர ஒருத்தர் கிண்டல் அடிச்சிக்கிட்டு பிரச்சனை வரும் போது ஒருத்தருக்கு ஒருத்தர் help  பண்ணறது னு ரொம்ப close அ இவங்கள ஆரம்பத்துல காமிக்கறாங்க. இப்படி jolly அ போட்டுருக்கற இவங்க life ல ஒருத்தரோட birthday party வருது. அந்த  function ல ஒரு game விளையாடலாம் னு சொல்லி ஒரு ஆபத்தான விளையாட்டை விளையாடுறாங்க னு தான் சொல்லி ஆகணும். என்ன கேம் னு கேக்குறீங்களா அதாவுது ஒருத்தருக்கு வர call  அ loudspeaker ல போட்டு எல்லாரும் கேட்கணும். இந்த மாதிரி ஓவுறுத்துருக்கும் வர call அ loudspeaker ல கேட்குறாங்க. நெறய உண்மையான  விஷயங்கள் முக்கியமா நெறய மறைச்சா  விஷங்கள் வெளில வருதுனால இதோட நிறுத்திக்கலாம் னு ஒரு வழிய இவங்க எல்லாரும் stop பண்ணிடுறாங்க.  ஆனாலும்  இந்த நாலு couple க்கு நடுவுல பெரிய பிரச்சனையே வருது. இதெல்லாம் எப்படி sort out பண்ணுறாங்க ன்றது தான் இந்த படத்தோட கதையை இருக்கு. 

இந்த நாலு couple க்கு நடுவுல நெறய சந்தேகங்கள் வருது. அதெல்லாமே தன்னோட partner கிட்ட விளக்கம் கேட்கறதுனால சண்டைகள் நடக்க ஆரம்பிக்குது. இதுக்கான காரணங்கள் பாத்தீங்கன்னா  situation னால தான் அப்படி நடந்துக்கிட்டாங்க னு எல்லாரும்  சொல்ல ஆரம்பிக்குறாங்க. ஒரு வழியா எல்லாமே புரிஞ்சுகிட்டு கடைசில மன்னிக்கிறதும் அதோட இன்னும் ஒரு step எல்லாரும் close ஆயிருக்காங்க ன்றதா நம்மால புரிஞ்சுக்க முடியது. ஒரு சில time நமக்கு பிடிச்சவங்களுக்காக ஒரு சில ரகசியங்களை மறக்கறதுல தப்பு  இல்லனும் இந்த படத்துல சொல்லிருப்பாங்க. 

ஓவுவுறு couple யும்  perfect  அ இந்த படத்துக்கு set ஆயிருக்காங்க னு தான் சொல்லணும். daniel jamuna ஜோடியா பாத்தீங்கன்னா டேனியல் drink பண்ணதுல வழி மாறி போயிட்டே னு தன்னோட காதலி கிட்ட சொல்லற விதம் ரொம்ப  comedy அ இருந்தது. அப்புறம் vivek பிரசன்ன swayam  இவங்களோட scenes லாம் எல்லாமே super அ இருந்தது. சொல்ல போன நாலு ஜோடிளா இவங்க தான் தனித்துவமா எதார்த்தமா தெரிஞ்சாங்க னு சொல்லுலாம்.praveen raja அப்புறம் sakshi agarval க்கு நடுவுல பெரிய சந்தேக போர் ஏ நடக்கும் இதெல்லாம் மெதுவா solve ஆகுறதுலம் நல்ல இருந்தது. இந்த conversation க்கு அப்புறம் ஒரு step இவங்க close ஆயிட்டாங்க னு  தான் சொல்லணும். 

இவங்களுக்கு நடுவுல வர நெறய பிரச்சனைகளை audience னால கண்டிப்பா connect பண்ண முடியும். இந்த படத்தோட கதையே இந்த நாலு couple க்கு நடுவுல நடக்கற emotions தான். அதுனால full அ நமக்கு இவங்க பேசுறதிலே கதையே தெரிஞ்சுடலாம். சொல்ல போன இந்த படத்துல வில்லன்  னு யாருமே கிடையாது. அவங்க அவங்க face  பண்ணற situation  தான் வில்லன் ன்ற மாதிரி இதுல காமிச்சிருக்காங்க. அதுனால மறச்சு வச்ச விஷயங்கள் ஒண்ணா ஒண்ணா வெளில வர பாக்குற audience க்கு interesting  ஆவும் அதே சமயம் இதை எப்படி sort out பண்ண போறாங்க ன்ற ஆர்வமும் கண்டிப்பா இருக்கும். 

இந்த படத்தோட technical aspects னு பாக்கும் போது prasad ஓட சினிமாட்டோகிராபி ரொம்ப அருமையா இருந்தது. ஓவுவுறு characters  ஓட emotions அ அழகா capture பண்ணி  இருக்காங்க. vasanth ஓட music இந்த படத்தோட கதையே ஒரு step மேல தூக்கிட்டு போயிருக்கு னு தான் சொல்லணும். அதிலும் இந்த படத்துல வர alagana nerangal ன்ற பாட்டு ரசிக்கிற மாதிரி அமைச்சிருந்தது. 

ஒரு நல்ல குட் feel குடுக்கற படம் தான் ring ring . கண்டிப்பா இந்த படத்தை பாக்க miss பண்ணிடாதீங்க.

Raja Bheema Movie Review

Raja Bheema Movie Review

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம raja பீமா ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். naresh sampath இயக்கி இருக்கற இந்த படத்துல aarav , yashika anand , yogi babu , nasser , k s ravikumar னு நெறய பேர் இந்த படத்துல நடிச்சிருக்காங்க.  இந்த படத்தோட டைரக்டர் யானை அ select பண்றதுக்கு முன்னாடி கிட்ட தட்ட 700 யானைகளோட photo வை பாத்தாறாம் கடைசியா palakkad ல இருக்கற bhadra ன்ற யானையை choose பண்ணிருக்காங்க. இந்த யானை ஓட trainer malayali , ஆரவ் க்கு மலையாளம் தெரிஞ்சனால தானும் அந்த யானை கிட்ட பேசுவேன் னு ஒரு interview ல சொல்லிருக்காரு. அதுக்கு அப்புறம் shooting  அ thailand  ல எடுத்துருக்காங்க அப்போ வேற ஒரு யானை ஓட நடிக்க வேண்டியதா இருந்ததுனும் சொல்லிருக்காரு. poster அ பாத்தே நமக்கு நல்ல தெரிஞ்சுருக்கும் இது ஒரு யானை ஓட கதை தானு. சோ   31 st jan அன்னிக்கு ரிலீஸ் ஆகிருக்க்ற இந்த படத்தோட கதையை பாப்போம் வாங்க.

Raja Bheema Movie Video Review: https://www.youtube.com/watch?v=Q8o9PIek33g

raja வ நடிச்சிருக்க aarav அவரோட சின்ன வயசுல தன்னோட school க்கு பக்கத்துல வந்த ஒரு யானை யா friend பிடிச்சிருப்பாரு. இந்த யானை ஓட பேரு தான் bheema . ஆரம்பத்துல இந்த யானை கொஞ்சம் வலி ல இருக்கும் raja இதை கவனமா பாத்துகிறதுனால போக போக இவங்க ரெண்டு பேரும் நல்ல close ஆயிடுவாங்க. raja பெரியவனா வளந்துக்கு அப்புறம் wildlife protection committee க்கு unofficial அ இவரு help  பண்ணுறாரு. அது னால  யானை யா illegal அ கொன்னுடறவங்கள பிடிச்சி அடிக்கறதுனால புத்திசாலி  அ இருக்காரு. இப்படி smooth அ போயிடு இருக்கற இவரோட life ல ஒரு பிரச்சனை வருது. அது என்னனா minister mandranayakam அ இருக்கற k  s ravikumar  தமிழ்நாடு ஓட cm அ ஆகா ஆசைப்படுறாரு. அப்போ தான் ஒரு ஜோசியர் குறிப்பிட்ட ஒரு யானையை பலி குடுத்த இவரு CM ஆகிடலாம் னு சொல்லற. இதை கேட்ட ravikumar யும் forest officials அப்புறம் illegal அ மிருகங்களை சுடர ஆட்களோட சேந்து raja ஓட யானையை மயக்கடிச்சு கடத்திட்டு போயிடுறாங்க. இந்த விஷயம் raja க்கு தெரியவரவே தன்னோட friend அ காப்பாத்துறதுக்கு வராரு. இதுக்கு அப்புறம் என்ன நடக்குது ன்றது தான் இந்த படத்தோட கதையை இருக்கு.


 இந்த படத்தோட முழு focus யும் எங்க இருக்குனு பாத்தீங்கன்னா மனுஷனுக்கு யானைக்கும் இருக்கற பாச பிணைப்பை தான் காட்டுறாங்க. raja  க்கும் bheema க்கும் இருக்கற பந்தம் ரொம்ப genuine  அ இருந்தது. நம்ம யானை இருக்கற படங்களை பாத்துருக்கோம். என்னதான் அதுகளுக்கு அஞ்சு அறிவா இருந்தாலும் பாசத்தை அள்ளிக்கொட்டுற ஒரு ஜீவராசி னு புரிய வைக்கிற மாதிரி ரொம்ப emotional ஆவும் இந்த படம் அமைச்சிருந்தது னு கூட நம்ம சொல்லலாம். இந்த கதை ஒரு track ல போயிடு இருக்கற ஹீரோ க்கும் heroine க்கும் வர காதல் ஒரு பக்கம், அரசியல்வாதி ஓட கெட்ட செயல்கள் ஒரு பக்கம் னு விறுவிறுப்பா போறத நம்மள தெளிவா பாக்க முடியும். slow motion ல நடக்கற fight scene ல இருந்து romance வரைக்கும் ஒரு பக்காவான commercial படமாவும் இதை குடுத்திருக்காங்க. 


ஆரவ் ஓட நடிப்பு ரொம்ப எதார்த்தமானதா அதே சமயம் யானையோட இருக்கும் போது genuine ஆனா emotions அ வெளி கொண்டு வர்ரது, தன்னோட friend அ காப்பாத்த போகும் போது சரி இல்ல வில்லன் கள  அடிக்கும் போது வர கோவம் னு எல்லாமே அருமையா balanced அ நடிச்சிருக்காரு. இவரு நடிச்ச படங்கள் ரொம்ப கம்மிதான் இருந்தாலும் இவரு நடிச்சுதுல இந்த படம் அருமையா இருக்குனு தான் சொல்லி  ஆகணும். k s ravikumar ஒரு மினிஸ்டர் அ இருந்தும் தன்னோட செயல் மேல நம்பிக்கை வைக்காம ஜோசியத்துல கண்மூடி தனமா நம்பிக்கை வச்சுருக்கற ஒருத்தரை இருக்காரு. இவரோட நடிப்பு ரொம்ப பிரமாதமா இருந்தது னு தான் சொல்லி ஆகணும். யோகி babu ஓட screen presence ரொம்ப கம்மியா இருந்தாலும் இவரோட comedy portions ரசிக்க வைக்கிற மாதிரி அமைச்சிருந்தது. oviya இந்த படத்துல extended  cameo  role  பண்ணிருக்காங்க. இவங்க portions  யும் நல்ல இருந்தது. அதோட இந்த படத்துல நடிச்சிருக்க மத்த actors  எல்லாரும் அவங்க role  அ புரிஞ்சிக்கிட்டு நல்ல நடிச்சிருக்காங்க. simon  k  king  ஓட music  அப்புறம் bgm  இந்த படத்துக்கு நல்ல set  யிருந்தது. 


மொத்தத்துல பாக்க வேண்டிய ஒரு அருமையான திரைப்படம் தான் இது. கண்டிப்பா இந்த படத்தை theatre ல பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.

நடிகர் அசோக் செல்வன் நடிப்பில், “எமக்குத் தொழில் ரொமான்ஸ்”

 *நடிகர் அசோக் செல்வன் நடிப்பில், “எமக்குத் தொழில் ரொமான்ஸ்” இன்று முதல் SUN NXT தளத்தில் ஸ்ட்ரீமாகிறது!!*




அறிமுக இயக்குநர் பாலாஜி கேசவன் இயக்கத்தில், அசோக் செல்வன், அவந்திகா மிஸ்ரா நடிப்பில் கலக்கலான காதல் நகைச்சுவை திரைப்படமாகத் திரையரங்குகளில் வெற்றியைக் குவித்த படம் எமக்குத் தொழில் ரொமான்ஸ்.


இப்படத்தின் ஒடிடி வெளியீட்டை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த நிலையில், இப்படம் தமிழின் முன்னணி ஓடிடி தளமான SUN NXT ஓடிடி தளத்தில் இன்று முதல் ஸ்ட்ரீமாகிறது.


ரொமான்ஸ் பொங்கி வழியும் ஒரு இளைஞனின் காதல், அதனால் ஏற்படும் பிரச்சனைகள், அவனுக்கு உதவும் குடும்பம், நண்பர்கள் என, அசத்தலான ரொமான்ஸ் காமெடியாக, இன்றைய இளைஞர்களைக் கவரும் வகையில், அனைத்து தரப்பினரும் ரசிக்கும் படமாக உருவாகியிருந்த இப்படம் திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றது.


நடிகர் அசோக் செல்வன், அவந்திகா மிஷ்ரா முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில் நடிகை ஊர்வசி மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் அழகம் பெருமாள், பக்ஸ், எம்.எஸ்.பாஸ்கர், விஜய் வரதராஜ், படவா கோபி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.


இப்படத்திற்கு இசையமைப்பாளர் நிவாஸ் K பிரசன்னா இசையமைத்துள்ளார். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்ய, எடிட்டராக ஜெரோம் ஆலன் பணியாற்றியுள்ளார். பாடாலாசிரியர் மோகன் ராஜன் பாடல்கள் எழுதியுள்ளார். பிரவீன் ராஜா காஸ்ட்யூம் டிசைன் செய்துள்ளார்.


ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பாராட்டுக்களைக் குவித்த இப்படத்தின் ஓடிடி வெளியீட்டை எதிர்நோக்கு ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த நிலையில், இப்படம் SUN NXT ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.


“எமக்குத் தொழில் ரொமான்ஸ்” திரைப்படத்தை SUN NXT தளத்தின் மூலம் அனைவரும் பார்த்து ரசியுங்கள்!!


SUN NXT என்பது Sun TV Network-ன் OTT தளமாகும், இதில் 4000+ தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட திரைப்படங்கள், 30+ நேரடி தொலைக்காட்சி சேனல்கள், மற்றும் பெரும் தொகையான பிராந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இசை வீடியோக்கள் மற்றும் சிறப்பு உள்ளடக்கங்கள் உள்ளன.


முடியாத அளவிலான பொழுதுபோக்கை அனுபவிக்க SUN NXT-ஐ இப்போது பதிவிறக்குங்கள்:

Android: http://bit.ly/SunNxtAdroid

iOS: இந்தியா - http://bit.ly/sunNXT

உலகின் பிற பகுதிகள் - http://bit.ly/ussunnxt

அல்லது பார்வையிடவும்: https://www.sunnxt.com

Tharunam Movie Review

Tharunam Movie Review

ஹாய் மக்களே third eye reports சார்பா உங்க எல்லாருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள். இன்னிக்கு நம்ம தருணம் ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். arvindh srinivasan இயக்கி இருக்கற இந்த படத்துல kishan das , raj iyappan , smurthi venkat லாம் நடிச்சிருக்காங்க.இவரு ஏற்கனவே  deja vu படத்தை இயக்கி வெற்றி அடைச்சிருக்காரு. இவரோட ரெண்டாவுது படம் தான் தருணம்.  வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். arjun அ நடிச்சிருக்க kishan das ஒரு CRPF officer அ இருக்காரு. ஏதோ ஒரு காரணத்துக்காக இவரு ஒரு long break எடுத்திருக்காரு. அப்போ தான் ஒரு கல்யாணத்துல meera வ நடிச்சிருக்க smruthi venkat  அ சந்திக்கறாரு. இவங்க ரெண்டு பேருக்குள காதல் மலர ஆரம்பிக்குது ஒரு கட்டத்துல ரெண்டு பேருமே love பண்ண ஆரம்பிக்கறாங்க. இதோட meera பக்கத்து வீட்ல இருக்கற rohit அ நடிச்சிருக்க raj ayyappa வும் meera வ one side அ love பண்ண ஆரம்பிக்குறாரு. இதுக்கு அப்புறம் என்ன ஆகுதுன்ன rohit ஓட torcher தாங்க முடியாம  ஒரு வேகத்துல rohit  அ அடிச்சிடுறாங்க அதுனால rohit எதிர்பாராத விதமா இறந்து போய்டுறாரு. 

Tharunam Movie Video Review: https://www.youtube.com/watch?v=3-W3U5bDt8Y

இப்போ rohit அ மறைச்சு ஆகணும். இது meera கைலயும் arjun கைலயும் தான் இருக்கு. இதுக்கு அப்புறம் என்ன நடக்குது ன்றது தான் இந்த தருணம் படத்தோட கதையை இருக்கு. 





படத்தோட ஆரம்பத்துல பாத்தீங்கன்னா ஒரு CRPF officer அ arjun cases அ எப்படி புத்திசாலித்தனமா handle பண்ணறாரு. எதுக்காக அவரு long break எடுக்கறாரு ன்ற reasons அ cover பண்ணிடுறாங்க. அதோட ஒரு mission நடக்கற ப்பா அவரோட role க்கான importance அண்ட் அவரோட side னு எல்லாமே தெளிவா காமிச்சிருக்காங்க. அதுக்கு அப்புறம் arjun ஓட friend அ வராரு bala saravanan . இவரோட தான் meera work பண்ணிட்டு இருப்பாங்க. meera வவும் arjun யும் சந்திச்சிக்கிறது எல்லாமே cute அ ரசிக்கிற மாதிரி இருந்தது. 

அதுக்கு அப்புறம் இவங்க ரெண்டு பேரோட love ஒரு நல்ல understanding ல போனாலும் நடுவுல வந்து பிரச்சனை குடுக்கிறாரு rohit. rohit ஓட மரணம் இவங்க ரெண்டு பேரோட வாழக்கையை பொறட்டி போட என்ன பண்ணறதுனு தெரியாம தவிக்கறாங்க. இருந்தாலும் யாருக்கும் சந்தேகம் வராத மாதிரி இவங்க இந்த விஷயத்தை மறைக்கிற விஷயம் பாக்க ஸ்வாரஸ்யமா இருந்தது. முக்கியமா second half ல இவங்க அடுத்து என்ன பண்ண போறாங்க ன்றது பாக்கவே exciting அ இருந்தது. நெறய twists லாம் குடுத்திருக்கிற னால இந்த படத்தை பாக்கற audience அ யோசிக்க வைக்கிற மாதிரியும் guess பண்ண வைக்கிற மாதிரியும் அமைச்சிருக்கு னு சொல்லலாம். அதோட climax தான் unexpected அ இருந்திச்சு. 

கிஷன் das arjun அ வாழந்துருக்காரு னு தான் சொல்லணும். police character அ இருந்தாலும் இவரோட character அ பாக்க புதுசா இருந்தது. இந்த படத்துல supporing character அ நடிச்சிருக்க bala saravanan ஓட காமெடி அ பத்தி உங்களுக்கு நல்ல தெரியும். தொண தொண னு பேசிட்டு இருக்கற ஒரு person அ arjun க்கு ஒரு நல்ல friend அ அதோட தன்னோட friend ஓட பிரச்னை ல இவரும் இருக்கிறது னு இவரோட role அ அசத்தல் அ இருந்தது. 

 suspense , drama னு audience அ seat ஓட கட்டிபோட்டுட்டாங்க னு தான் சொல்லணும்.  இந்த படத்தோட screenplay னு பாக்கும் போது suspense , thriller அதோட கொஞ்சம் comedy னு எல்லாமே குடுத்திருக்காங்க. நெறய layers இந்த படத்துல இருந்தாலும் இது எல்லாமே perfect அ குடுத்திருக்கிறது தான் இந்த படத்தோட அழகு. தேவையில்லாத scenes இல்லனா comedy ன்ற பேறுல மொக்கை போடுறது இல்ல ரொம்ப தீவிரமா நடக்கற police investigation னு எதுமே இல்லை. அதுக்கு பதிலா படம் முழுக்க arjun அப்புறம் meera வ focus பண்ணி இவங்க ரெண்டு பேரும் எப்படி இதுல இருந்து தப்பிக்கறாங்க ன்றதா ரொம்ப அருமையா கொண்டு வந்திருக்காரு directorarvind . first half படம் konjam மெதுவா தான் இருந்தது. ஆன இந்த slow move யும் பாத்தீங்கன்னா ஓவுவுறு characters ஓட எமோஷனல் depth அ வெளி படுத்தி அதுக்கு அப்புறம் second half ல peak க்கு எடுத்துட்டு போயிருக்கிறது செமயா இருந்தது. 

darbukka siva  அப்புறம் ashwin  hementh  ஓட music இந்த படத்துக்கு அற்புதமா set ஆயிருக்கு. முக்கியமா second half ல வர scenes க்கு லாம் bgm அதிரடியா இருந்தது. raja bhattacharjee ஓட சினிமாட்டோகிராபி யும் இந்த படத்துக்கு அருப்புதமா set ஆயிருக்கு. 

ஒரு super ஆனா twist ஓட இருக்கற நல்ல படம் தான் தருணம். இன்னிக்கு theatre  ல release  ஆயிருக்கிற இந்த படத்தை பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.

கார்த்தி வெளியிட்ட நாக சைதன்யா- சாய் பல்லவி யின் 'தண்டேல்' பட

 *கார்த்தி வெளியிட்ட நாக சைதன்யா- சாய் பல்லவி யின் 'தண்டேல்' பட முன்னோட்டம்* 











*நாக சைதன்யா நடிக்கும் 'தண்டேல்' படத்தின் முன்னோட்டம் வெளியீடு*


தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான நாக சைதன்யா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' தண்டேல் ' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற பிரத்யேக வெளியீட்டு விழாவில் தமிழின் முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முன்னோட்டத்தை வெளியிட்டார். 


இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் உருவாகி வரும் ' தண்டேல் 'எனும் திரைப்படத்தில் நாக சைதன்யா, சாய் பல்லவி முதன்மையான வேடத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் பிரகாஷ் பெலவாடி, கருணாகரன், 'ஆடுகளம்' நரேன், பப்லு  உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஷாம் தத் சைனூதீன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'ராக் ஸ்டார்' தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். ரொமான்டிக் சர்வைவல் டிராமா ஜானரிலான இந்த திரைப்படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பன்னி வாஸ் தயாரித்திருக்கிறார். இதனை அல்லு அரவிந்த் வழங்குகிறார். தமிழில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு வெளியிடுகிறார். 


எதிர்வரும் பிப்ரவரி மாதம் ஏழாம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் வெளியீட்டிற்கு முன்னதான ப்ரீ- ரிலீஸ் ஈவென்ட் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படத்தின் தயாரிப்பாளர் அல்லு அரவிந்த், தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு , நடிகர் நாக சைதன்யா, நடிகை சாய் பல்லவி, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், நடிகர் கார்த்தி, இயக்குநர்கள் கார்த்திக் சுப்புராஜ் - வெங்கட் பிரபு , நடிகர் கருணாகரன், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.‌ 


இந்நிகழ்வில் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு பேசுகையில், ''தண்டேல் என்றால் என்ன? என்ற கேள்வி அனைவரிடத்திலும்  எழுந்திருக்கும். இந்திய சினிமாவில் தற்போது அனைவரும் மொழி என்ற எல்லையை கடந்து வந்து கொண்டிருக்கிறோம். தற்போது வெளியாகும் படத்தின் டைட்டில்கள் அனைவரையும் கவர்வது போல் இருக்கும். 'பாகுபலி'க்கு பிறகு இதற்கு நாம் பழகிவிட்டோம். பாகுபலி என்றால் என்ன? என்று இதுவரை யாரும் கேள்வி எழுப்பியதில்லை. அதேபோல் தண்டேல் என்பதற்கும் யாரிடமும் கேள்வி எழாமல் பெரும் ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறேன்.‌ இருந்தாலும் தண்டேல் என்றால் லீடர் என இப்படத்தில் ட்ரெய்லர் மூலம் தெரிந்து கொண்டிருப்போம்.


இந்த திரைப்படத்தை பார்க்கும் போது அர்ப்பணிப்புடன் உருவாக்கியிருக்கிறார்கள் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. பான் இந்திய அளவிலான திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்ற நெருக்கடி இல்லாமல்.. ஒரு கதையை உருவாக்கி, அது பான் இந்திய ரசிகர்களுக்கு சென்றடையும் எனும் நம்பிக்கையில் இந்த திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.‌ இதற்காக கடுமையாக உழைத்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிடுவதற்கான வாய்ப்பை எங்களுடைய ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு வழங்கியதற்காக தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 


திரைத் துறையில் தயாரிப்பாளராக 10, 15 ஆண்டுகளை கடந்து செல்வது என்பது சவாலாக இருக்கும் தருணத்தில் தொடர்ந்து 50 வருடங்களாக திரைப்படங்களை வழங்கி வருகிறார் கீதா ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான அல்லு அரவிந்த். இந்த வகையில் கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் அனைவருக்கும் முன்னுதாரணமாக திகழ்கிறது. 


நாக சைதன்யாவுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று விரும்பி இருக்கிறேன். ஆனால் தற்போது அவர் நடித்த படத்தை தமிழகம் முழுவதும் விநியோகம் செய்யும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. 


சாய் பல்லவி ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால்.. அந்தத் திரைப்படம் நன்றாக இருக்கும் என்ற ஒரு நம்பிக்கையை சாய் பல்லவி தமிழக மக்களிடத்தில் ஏற்படுத்தியிருக்கிறார். அவர் இந்தப் படத்தில் நடித்திருப்பதால் இந்த திரைப்படம் நன்றாக இருக்கும் என்று நானும் நம்புகிறேன். 


நடிகர் கருணாகரன் தற்போது பான் இந்திய நடிகராக உயர்ந்திருக்கிறார் அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். 


இந்தத் திரைப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். எதிர்வரும் பிப்ரவரி மாதம் ஏழாம் தேதி அன்று திரைப்படம் தமிழகம் முழுவதும் வெளியாகிறது. இதற்கும் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார். 


இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேசுகையில், '' ரெட்ரோ படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் தருணத்தில் நடிகர் கருணாகரன் இப்படத்தைப் பற்றி சொல்லி இருக்கிறார். அப்போதிருந்து இப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு என்னிடமிருக்கிறது.  இயக்குநர் சந்துவின் முந்தைய திரைப்படங்கள் நன்றாக இருக்கும்.  நாக சைதன்யா - சாய் பல்லவி போன்ற திறமையான நட்சத்திர நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இவர்களுக்கு இடையேயான காதல் கதை. இதற்கு தனித்துவமான பின்னணி என்பதால் சுவாரசியமாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன். 


கருணாகரன் விவரிக்கும் போது நிறைய பயணம் செய்ததாக குறிப்பிட்டார். கதை நிகழும் இடத்தைப் பற்றி சொல்லும் போதும்.. அதனை முன்னோட்டத்தில் பார்க்கும் போதும்.. இன்ட்ரஸ்டிங்காக இருந்தது. ராக்ஸ்டாரின் பாடல்களும் நன்றாக இருந்தது. படக் குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.  


நடிகர் கருணாகரன் திறமையானவர். காமெடி மட்டுமல்ல அவர் எந்த கேரக்டரிலும் நடிக்கக்கூடியவர். இந்தப் படத்தின் மூலம் அவர் தெலுங்கில் அறிமுகமாகிறார். அவருக்கும் தெலுங்கிலும் வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். படம் வெற்றியடைய வேண்டும் என வாழ்த்துகிறேன்'' என்றார். 


இயக்குநர் வெங்கட் பிரபு பேசுகையில், '' மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு நாக சைதன்யாவை இப்போதுதான் சந்திக்கிறேன். அவருடைய ஸ்கிரிப்ட் செலக்சன் என்பது தனித்துவமானதாக இருக்கும். நாக சைதன்யாவை கண்வின்ஸ் செய்வது கடினம். 


இந்த ஜானர் புதிது. படத்தைப் பற்றி கருணாகரன் என்னிடம் சொல்லும் போது உண்மை சம்பவத்தை தழுவி தயாரான படம் இது என்றார். படத்தின் முன்னோட்டத்தை பார்க்கும் போதே படக்குழுவினரின் கடின உழைப்பு தெரிகிறது. கடலில் படப்பிடிப்பு நடத்துவது என்பது கடினமானது. சவாலானது. ஆனால் அதனை அழகாகவும், நேர்த்தியாகவும் படமாக்கி இருக்கிறார்கள். இயக்குநருக்கும், ஒட்டுமொத்த குழுவினருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். 


நான் சாய் பல்லவியின் பெரிய ரசிகன். நான் மட்டுமல்ல ஏராளமான இயக்குநர்கள் உங்களுடைய ரசிகர்கள். நீங்கள் மீண்டும் திரையில் ஜோடியாக இணைந்திருப்பதை வரவேற்கிறேன். உங்கள் இருவரையும் திரையில் பார்க்கும்போது பாசிட்டிவ்வான எனர்ஜி இருக்கிறது. 


நானும் டிஎஸ்பியும் சிறிய வயதில் இருந்து ஒன்றாக - வெட்டியாக சுற்றிக் கொண்டிருந்தோம். தற்போது தான் இண்டிபெண்டன்ட் மியூசிக் ஆல்பம் பிரபலமாகி இருக்கிறது ஆனால் 90 களிலேயே தேவி ஸ்ரீ பிரசாத் - எஸ் பி பி சரண் ஆகியோர் இணைந்து இண்டிபெண்டன்ட் மியூசிக் ஆல்பத்தினை வெளியிட்டு இருக்கிறார்கள். அந்தக் குழுவில் நான் இருந்தாலும் என்னை பாட அனுமதிக்க மாட்டார்கள். அவரும் இந்த படத்திற்காக தன்னுடைய கடும் உழைப்பை வழங்கியிருக்கிறார். அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். 


இயக்குநர் சந்து - இதற்கு முன் இயக்கிய ' கார்த்திகேயா ' உள்ளிட்ட படங்களை பார்த்திருக்கிறேன். அவரும் நாக சைதன்யாவும் மூன்றாவது முறையாக இணைந்து இருக்கிறார்கள். இயக்குநர் சந்து வெவ்வேறு ஜானர்களில் படங்களை இயக்கி வருகிறார். அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். 


எங்களின் கருணாகரனை தெலுங்கில் அறிமுகப்படுத்தி இருக்கிறீர்கள். இதற்கும் படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். 


நாக சைதன்யா திறமையானவர். அர்ப்பணிப்புடன் உழைப்பவர். நன்றாக தமிழ் பேச கூடியவர். தமிழ் இயக்குநர்கள் அவரிடம் சென்று கதையையும் , காட்சியையும் தமிழிலேயே விளக்கிச் சொல்லலாம். அவரும் ஒரு காட்சியை மேம்படுத்துவதற்காக நிறைய மெனக்கெடுவார். நாங்கள் இருவரும் மீண்டும் ஒரு திரைப்படத்தில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று ஆசை. ஆனால் அது தெலுங்கு படமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஏனென்றால் தெலுங்கு - தமிழ் என கலவையாக இருக்கக் கூடாது.  மிகப்பெரிய திரையுலக ஆளுமை மிக்க குடும்பப் பின்னணியில் இருந்து வந்தாலும் எளிமையாக பழகக் கூடியவர். இதற்காகவும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று புதிய உயரத்தை தொட வேண்டும் என வாழ்த்துகிறேன்'' என்றார். 


இசையமைப்பாளர் 'ராக்ஸ்டார்' தேவி ஸ்ரீ பிரசாத் பேசுகையில், '' ரொம்ப மகிழ்ச்சி. ' தண்டேல் ' எனக்கு ஸ்பெஷலான திரைப்படம். தண்டேல் படத்தை பற்றி தயாரிப்பாளர் பன்னி வாஸ் மற்றும் இயக்குநர் சந்து ஆகியோர் என்னை சந்தித்து படத்தை பற்றி ஒரு வரி கதையாக சொன்னார்கள்.‌ அதுவே சுவராசியமாக இருந்தது. அந்த  சுவாரஸ்யம் படம் முழுவதும் இருந்தது. அதனால் பணியாற்றுவதற்கு உற்சாகமாக இருந்தது. இது உங்கள் அனைவருக்கும் கிடைக்கும் என்று நம்புகிறேன். 


கடல் என்று வந்து விட்டால்.. அந்தப் படத்திற்கும் சென்னைக்கும் தொடர்பு எளிதாக அமைந்து விடும்.  இந்த படத்திலும் கடல்- கடற்கரை- மீனவர்கள்- காதல் -என அனைத்தும் இருக்கிறது. அதனால் இந்த திரைப்படம் தமிழக ரசிகர்களுக்கும் நெருக்கமானதாக இருக்கும். 


அல்லு அரவிந்த் அவர்களுக்கு என்னை சிறிய வயதில் இருந்தே தெரியும். அவரும் சிறந்த இசை ரசிகர். இந்தத் திரைப்படத்தை தயாரித்ததற்காகவும், எனக்கு வாய்ப்பளித்ததற்காகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 


நாக சைதன்யா என் நண்பர். என் சகோதரர். திறமையானவர். தண்டேல் படத்தின் போஸ்டரை பார்த்தவுடன் ஆச்சரியப்பட்டேன். அவர் இந்த கதாபாத்திரத்திற்காக தன்னுடைய உடல் அமைப்பை மாற்றி அமைத்து இருந்தார். இது நம்முடைய வழக்கமான நாக சைதன்யா இல்லையே..! என்ற எண்ணம் வந்தது. படத்திற்காக கடும் உழைப்பை வழங்கிய அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். 


சாய் பல்லவி இந்த பெயரை உச்சரித்தாலே போதும். அனைவருக்கும் பிடித்து விடும். இந்தியாவின் சிறந்த இயக்குநரான மணிரத்தினமே சாய் பல்லவியின் ரசிகர் தான். இந்த திரைப்படத்தில் அவரும் தன்னுடைய சிறப்பான பங்களிப்பை வழங்கி இருக்கிறார். அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.  அவர் சிறந்த நடிகை மட்டுமல்ல. நன்றாக நடனம் ஆடக்கூடிய கலைஞர். அவருடைய படங்களில் இடம்பெறும் பாடல்களில் அவர் நடனமாடி இருக்கிறாரா..? என்பதை நான் ஆவலுடன் எதிர்பார்ப்பேன். ஒரு பாடலுக்கு என்ன தேவையோ.. அதனை அந்த பாடலுக்குள்ளேயே சின்ன சின்ன நடன அசைவுகள் மூலம் அழகூட்டுபவர். 


இந்த படத்தின் காட்சிகள் எல்லாம் சிறப்பாகவும், பிரமிப்பாகவும், பிரம்மாண்டமாகவும் இருக்கிறது. இந்தத் திரைப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். 


இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டிருக்கும் கார்த்தி, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் , வெங்கட் பிரபு ஆகியோருக்கும் என்னுடைய நன்றிகள்.  


நான் பாடலாசிரியர்களுக்கு எப்பொழுதும் முக்கியத்துவமும், முன்னுரிமையும் வழங்குவேன். ஏனெனில் நான் பிரபல கதாசிரியர் சத்தியமூர்த்தியின் மகன். அவர் கதாசிரியர் மட்டுமல்ல. பாடலாசிரியரும்  கூட. ஒரு பாடலுக்கு அழகாக டியூன் அமைத்தாலும் அதனை வெளிப்படுத்துவது பாடல் வரிகள் தான். இந்த வகையில் இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் பாடலாசிரியர் விவேகா எழுதியிருக்கிறார். அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். 


பிப்ரவரி 7ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் தண்டேல் திரைப்படத்தை அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசித்து ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார். 


நடிகை சாய் பல்லவி பேசுகையில், '' இங்கு சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்திருக்கும் கார்த்தி சார் - வெங்கட் பிரபு சார் - கார்த்திக் சுப்புராஜ் சார்-  ஆகியோருக்கு நன்றி. நீங்கள் அனைவரும் உங்களுடைய பரபரப்பான வேலைகளுக்கு இடையே நேரம் ஒதுக்கி இங்கு வந்து படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்ததற்கு நன்றி.  


தண்டேல் படத்தின் கதையை கோவிட் காலகட்டத்தின் போது இயக்குநர் சந்து ஒரு உண்மை சம்பவத்தை தழுவி, 20 பக்க அளவிலான கதையாக சொன்னார். அதை இவ்வளவு அழகான காதல் கதையாக மாற்றி வழங்கி இருக்கிறார்கள். இதற்காக மூன்றாண்டு காலம் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். ஒன்றரை ஆண்டு காலம் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்த பயணம் மறக்க முடியாதது. 


சக நடிகரான நாக சைதன்யா ஒன்றரை ஆண்டு காலத்தை இந்த கதாபாத்திரத்திற்காக வழங்கி, கடுமையாக உழைத்திருக்கிறார். இன்னும் இதற்காக உழைக்க வேண்டும் என்றாலும் அதற்கும் அவர் தயாராக இருக்கிறார்.‌ அவருடன் மீண்டும் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாத இனிய அனுபவமாக இருந்தது. 


இந்தப் படத்தின் பாடல்கள் தெலுங்கு ரசிகர்களிடத்தில் மிகவும் பிரபலம். இதற்காக பணியாற்றிய ராக் ஸ்டார் டிஎஸ்பிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.


தெலுங்கு திரையுலகத்திற்கு அறிமுகமாகும் கருணாகரனுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். அவரை தெலுங்கு திரையுலகம் சார்பாக வரவேற்கிறேன். படப்பிடிப்பில் மொழி தெரியாவிட்டாலும் அற்புதமாக நடித்திருக்கிறார். அவருக்கும் தெலுங்கில் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன். 


தண்டேல் படக் குழுவுடன் பணியாற்றிய ஒன்றரை ஆண்டு காலத்தில் நிறைய விசயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன். அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். எதிர்வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி இப்படம் வெளியாகிறது. அனைவரும் திரையரங்கத்திற்குச் சென்று படத்தை பார்க்க வேண்டும். அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். '' என்றார். 


தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் பேசுகையில், '' நான் சென்னையில் தான் படித்தேன். பிழைப்பிற்காகத்தான் ஹைதராபாத் சென்றேன். சென்னை அரசு கலை கல்லூரியில் தான் பட்டப் படிப்பினை படித்தேன். அதன் பிறகு சட்டக் கல்லூரியில் சட்ட படிப்பினை படிக்கத் தொடங்கினேன். இரண்டு வருடத்திற்கு பிறகு தொடர்ந்து படிக்காமல் வெளியேறி விட்டேன். 


முதலில் நடிகர் கார்த்திக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவரைத் தொடர்ந்து இயக்குநர் கார்த்தி சுப்புராஜ் மற்றும் வெங்கட் பிரபுவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 


இந்தத் திரைப்படத்தில் நாக சைதன்யா- சாய் பல்லவி இருவரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். தரமான படைப்பாக 'தண்டேல்' உருவாகி இருக்கிறது. 


இயக்குநர் சந்து அற்புதமான திறமைசாலி. நேர்த்தியாக உழைத்து தண்டேலை உருவாக்கி இருக்கிறார். கதை சிறியது தான். ஆனால் அதனை அவர் வழங்கிய விதம் சிறப்பானது. இந்தப் படத்தின் கதைக்காக 20 பேரிடம் ரைட்ஸ் வாங்கி இருக்கிறோம். அந்த 20 பேரும் பாகிஸ்தானுக்கு சென்று அங்குள்ள சிறையில் கைதியாக இருந்து அதன் பிறகு விடுதலையானவர்கள். அவர்களின் கதை இது. இயக்குநர் அதனை இரண்டு மணி நேர கதையாக விவரித்திருக்கிறார். இந்த கதையை அற்புதமான படைப்பாக உருவாக்கியதற்காக இயக்குநர் சந்துவுக்கு மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் எனக்கு மகன் போல.‌ அவரை சிறிய வயதில் இருந்தே எனக்கு தெரியும். அவரிடம் இங்கிருந்தே ஒரு கேள்வியை கேட்கிறேன். எப்படிடா இப்படி 25 வருடமாக தொடர்ந்து ஹிட் பாடல்கள் வழங்கிக் கொண்டிருக்கிறாய்? அவருடைய அப்பா எனக்கு நல்ல நண்பர்.‌ 


கருணாகரன் இந்தப் படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறார். படத்தில் அவருடைய நடிப்பு பேசப்படும். ஆடுகளம் நரேன் அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். 


இந்தத் திரைப்படத்தை தமிழில் வெளியிட வேண்டும் என்று முடிவு செய்தவுடன் என் நினைவுக்கு வந்தவர் எஸ். ஆர். பிரபு மட்டும் தான். அவர் இந்த திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிடுவதால் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தத் திரைப்படத்திற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார். 


நடிகர் கார்த்தி பேசுகையில்,'' இது எனக்கு முக்கியமான மேடை. தெலுங்கு திரையுலகிலிருந்து எனக்கு ஏராளமான அன்பு கிடைத்திருக்கிறது. அந்த அன்பை திருப்பி செலுத்துவதற்கான வாய்ப்பாக இதனை கருதுகிறேன். 


இங்கு வந்த பிறகுதான் நாக சைதன்யா என்னிடம், இந்த கதை 2018 ஆம் ஆண்டில் நடந்த உண்மை சம்பவம் என்று சொன்னார். கேட்பதற்கு இன்ட்ரஸ்டிங்காக இருந்தது. நம் ஊரில் மீன் பிடிக்கும் மீனவர்கள் பாகிஸ்தான் எல்லைக்கு சென்று மாட்டிக் கொள்கிறார்கள். இவர்கள் குஜராத்திற்குச் சென்று படகில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது எல்லை தாண்டி பாகிஸ்தானுக்கு சென்று மாட்டிக் கொள்கிறார்கள் என்றார். பிறகு அங்கிருந்து எப்படி தப்பித்து வந்தார்கள் என்பதை ஒரு அழகான காதல் கதையாக இந்த திரைப்படம் உருவாகி இருக்கிறது. 


எவ்வளவு பெரிய திரில்லாக இருந்தாலும் அது டைட்டானிக்காக இருந்தாலும் அதற்குள் ஒரு லவ் ஸ்டோரி தேவைப்படுகிறது. அந்த லவ் தான் மனதில் நிற்கிறது.‌ 20 பேரிடம் ரைட்ஸ் வாங்கி அதை ஒரு அழகான காதல் கதையாக உருவாக்கி வழங்கியிருக்கிறார்கள் என்றால் இந்த கதை மீது தயாரிப்பாளர் எவ்வளவு நம்பிக்கை இருக்க வேண்டும்.‌ இந்தப் படத்திற்காக ஒன்றரை ஆண்டு காலம் படப்பிடிப்பு நடத்தி இருக்கிறார்கள்.‌ இதன் காரணமாகவே இந்த படத்தை இந்தியா முழுவதும் நம்பிக்கையுடன் வெளியிடுகிறார்கள். 


இயக்குநர் சந்து மொண்டேட்டி இதற்கு முன் இயக்கிய படங்களும் வெற்றி படங்கள்தான். கடல் பின்னணியில் நிறைய படங்களை பார்த்திருக்கிறோம். தற்போது மீண்டும் ஒரு புதிய அனுபவத்திற்கு தயாராகி இருக்கிறோம்.‌ இதற்காக அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 


தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் திரை உலகில் பீஷ்மரை போன்றவர். திரை உலகிற்கு தயாரிப்பாளர்கள் வருவார்கள். செல்வார்கள். நீண்ட காலம் தாக்குப் பிடிப்பது கடினம். பெரிய பெரிய நிறுவனங்களே படத் தயாரிப்பு வேண்டாம் என நிறுத்திவிட்டார்கள். இந்த சூழலில் தொடர்ந்து படங்களை தயாரித்து வருகிறார் அல்லு அரவிந்த். அவர் சினிமாவில் படங்களை வியாபார நுணுக்கங்களுடன் தயாரிக்கிறார். அவர் தேவி ஸ்ரீ பிரசாத் பார்த்து எப்படிடா இத்தனை ஆண்டுகளாக ஹிட்டு கொடுக்கிறாய்? என கேட்கிறார். அதை போல் நான் அவரைப் பார்த்து, எப்படி சார் தொடர்ந்து ஹிட் படங்களை வழங்கிக் கொண்டிருக்கிறீர்கள்? என கேட்கிறேன். அவர் வேறு வேறு ஆட்களுடன்... வேறு வேறு கூட்டணியுடன்... தொடர்ந்து படங்களை பெரு விருப்பத்துடன் தயாரித்து வருகிறார். எல்லா மொழிகளிலும் படங்களை தயாரித்திருக்கிறார். சினிமா மீதான அவருடைய பற்று எனக்கு இன்று வரை ஆச்சரியத்தை அளித்துக் கொண்டிருக்கிறது. தமிழ் படங்களை தெலுங்கு திரையுலகிற்கு எடுத்துச்சென்று விளம்பரப்படுத்தும் போது அவர் ஆலோசனைகளை வழங்கிக் கொண்டே இருப்பார். ஒரு தயாரிப்பாளர் என்றால் எப்படி இருக்க வேண்டும்.. அவருடைய படத்தை எவ்வளவு நேசிக்க வேண்டும்.. படத்தை எப்படி கொண்டு மக்களிடம் சேர்ப்பிக்க வேண்டும் ...நடிகர் நடிகைகளை எப்படி பாதுகாக்க வேண்டும்.. படத்தை தயாரிக்கத் தொடங்க தொடங்கியதில் இருந்து அந்தத் திரைப்படத்தை ரசிகர்களுக்காக திரையரங்கத்திற்கு கொண்டு சேர்க்கும் வரை எப்படி உழைக்க வேண்டும் ... என்பதனை அவரைப் பார்த்துதான் கற்றுக் கொள்ள வேண்டும்.‌ அவரை எனக்குத் தெரியும் என்பதிலேயே நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இதற்காக இந்தத் தருணத்தில் அவருக்கு மனதார வாழ்த்தும், நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தின் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கை காரணமாகவே இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என வாழ்த்துகிறேன். 


கருணாகரன் இந்த படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகிறார். அவரும் ஒரு அற்புதமான நடிகர்.  அவர் தெலுங்கிலும் வெற்றி பெற வாழ்த்துகிறேன். 


ஆடுகளம் நரேன் அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். அவருக்கு தொடர்ந்து சீரியசான கதாபாத்திரங்களை வழங்கி சீரியசான நடிகராக்கிவிட்டார்கள். ஆனால் அவர் அற்புதமாக காமெடியும் செய்வார். ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில் காமெடியில் கலக்கியிருப்பார். 


நான் துருக்கி நாட்டிற்கு சென்றிருந்தபோது அங்கும் டிஎஸ்பி பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தது. இதுதான் அவருக்கு கிடைத்திருக்கும் புகழ். அவர் எப்போதும் உழைத்துக் கொண்டே இருப்பார். அவருடைய ஸ்டுடியோவுக்கு சென்றால்.. இசையை பற்றி மட்டுமே பேசிக் கொண்டே இருப்பார். அவர் இந்த நாட்டிற்கு சொந்தம்.  அவை எப்போதும் எனர்ஜியுடன் இருக்கிறார். இதற்காகவே நான் அவரை மிகவும் நேசிக்கிறேன். இந்தப் படத்தின் பாடல்களும் அற்புதமாக இருக்கிறது. அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். எல்லா இசையமைப்பாளர்களுக்கும் காதல் கதை கிடைத்து விட்டால் போதும் தங்களுடைய திறமையை வெளிப்படுத்துவார்கள். இந்த திரைப்படத்திலும் டிஎஸ்பி தன் திறமையை வெளிப்படுத்தி அனைத்து பாடல்களையும் ஹிட் ஆக்கி இருக்கிறார். 


சாய் பல்லவி மிகவும் ஸ்பெஷல் ஆனவர். அவர் ஏற்று நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் தன் திறமையை வெளிப்படுத்திக் கொண்டே இருப்பார். காதலிப்பதாகட்டும்.. அதில் காதலை கொட்டி தீர்ப்பார். இதனாலேயே இளைஞர்கள் எல்லாம் உங்கள் மீது பைத்தியமாக இருக்கிறார்கள். நடனம் சொல்லவே வேண்டாம். வலியை கடத்துவதாக இருந்தாலும் அதிலும் முத்திரை பதிக்கிறீர்கள். வயதிற்கு மீறிய கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் அனுபவமும் வித்தியாசமாக இருக்கிறது. 


அமரன் படம் பார்த்துவிட்டு உங்களிடம் பேசியிருக்கிறேன். ஒரு ராணுவ அதிகாரியின் மனைவியின் தியாகம் என்ன? என்று பொதுமக்களுக்கு தெரியாது. அதை அமரன் படத்தில் நீங்கள் விவரித்திருந்த விதம் அவர்களின் வலியை எங்களுக்கு புரிய வைத்தது. இதற்காக நன்றி.‌ 


நாக சைதன்யா அவருடைய தாத்தா எனக்கு தெரியும்.‌ அவரைத் தொடர்ந்து நாகார்ஜுனாவை தெரியும். அவர் 'இதயத்தை திருடாதே' படத்தை பார்த்த பிறகு.. அவரைப் போல் டிரஸ் செய்து கொள்வது.. அதேபோல் ஓடுவது.

 என பல முயற்சிகளை பலரும் செய்தார்கள். ஆனால் அவர் செய்த ஸ்டைலில் யாராலும் செய்ய முடியவில்லை. அவரைப் போல் அழகாக பேசவும் தெரியாது.‌ அவருடன் தெலுங்கு திரைப்படத்தில் பணியாற்றிருக்கிறேன். 


நான் அங்கு சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது ஒவ்வொரு விசயத்தையும் பார்த்து பார்த்து செய்வார். அவ்வளவு அக்கறையுடன் பார்த்துக் கொள்வார். அன்பை பொழிவதில் தன்னிகரற்றவர். அவருடன் பணியாற்றி 10 வருடங்கள் ஆகிவிட்டது. இருந்தாலும் தற்போது நான் என்ன படம் செய்து கொண்டிருக்கிறேன் என்பதை அறிந்து வைத்திருப்பார். அந்தப் படத்தை பார்க்க வேண்டும் என்று சொல்வார். படம் பார்த்து பிடித்து விட்டால்.. உடனடியாக ட்வீட் செய்வார். இது போல் எனக்காக எப்போதும் அன்பு காட்டி வரும் அவருக்கு நான் திருப்பி என்ன செய்வதென்று தெரியவில்லை. 


நாக சைதன்யாவை முதன் முதலில் திரையில் பார்த்த போது கூச்ச உணர்வு உள்ள ஒரு இளைஞரை அழுத்தம் கொடுத்து நடிக்க வைக்கிறார்களோ..! என தோன்றியது. ஆனால் அவர் முகத்தில் ஒரு அப்பாவித்தனம் தெரியும்

. அந்த அப்பாவித்தனத்தை தான் ஏராளமான பெண்கள் ரசிக்கிறார்கள். அவருடைய அப்பாவித்தனமும் பிடித்தது. அவருடைய அப்பாவையும் பிடித்தது. அவருடைய தாத்தாவையும் பிடித்தது.  


நாக சைதன்யா கடுமையாக உழைப்பதில் ஆர்வம் கொண்டிருக்கிறார்.‌ ஒவ்வொரு படத்தில் அவருடைய வளர்ச்சி தெரிகிறது. இந்தத் திரைப்படத்திற்காக ஒன்றரை ஆண்டு காலம் தன் உடலமைப்பையும் மாற்றி நடித்திருக்கிறார். உழைப்பு ஒரு போதும் வீண் போகாது. உங்களுடைய கடும் உழைப்புக்கு இந்த படம் சரியான பரிசை வழங்கும். இந்தப் படம் தமிழிலும் பெரிய வெற்றியை பெறும் என்று உறுதியாக நம்புகிறேன். 


விவேகா- தேவி ஸ்ரீ பிரசாத்தின் ஹிட்டான பாடல்கள்-  சாய் பல்லவி திரைத்தோற்றம்-  உண்மை சம்பவம் - புது ஐடியா - என பல பாசிட்டிவ்வான விசயங்கள் இருப்பதால் இந்த திரைப்படம் பெரிய வெற்றியை பெரும் என்று வாழ்த்துகிறேன்'' என்றார். 


நடிகர் நாக சைதன்யா பேசுகையில், ''  ரொம்ப சந்தோசமாக இருக்கிறேன். சென்னை எனக்கு எப்போதும் ஸ்பெஷலானது. சென்னை ரசிகர்களின் அன்பிற்காகவும், ஆதரவிற்காகவும் எப்போதும் காத்துக் கொண்டிருப்பேன். 


இப்படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டதற்காக நடிகர் கார்த்திக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நடிப்பில் வெளியான ' மெய்யழகன்' படத்தை திரையரங்கில் பார்த்து ரசித்திருக்கிறேன். அதில் அவருடைய உணர்வுபூர்வமான நடிப்பையும் பார்த்து வியந்திருக்கிறேன். 


அப்பா என்னிடம் எப்போதும் சொல்வார். சென்னைக்கு செல்கிறாய் என்றால் சொல். கார்த்திக்கு போன் பண்ணி சொல்லி விடுகிறேன் என்று'. அந்த அளவிற்கு கார்த்தி எங்கள் குடும்பத்திற்கு நெருக்கமானவர்.


இயக்குநர் வெங்கட் பிரபுவிற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னை தொழில் ரீதியாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியவர். நீங்களும் இங்கு வருகை தந்திருப்பதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.‌ ஹைதராபாத்திற்கு வருகை தந்து என்னை சந்தித்து கதை சொல்லி கன்வின்ஸ் செய்து நடிக்க வைத்ததற்கும் நன்றி.


கார்த்திக் சுப்புராஜுக்கு நன்றி. உங்களுடைய இயக்கத்தில் வெளியாகும் 'ரெட்ரோ' படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.‌ 


தண்டேல் படத்தின் தொடக்கம் என்பது, இயக்ங சந்து என்னை சந்தித்து உண்மை சம்பவத்தை ஒரு சின்ன ஐடியாவாக டாக்குமென்டரி ஸ்டைலில் சொன்னார். ஸ்ரீகாகுளம் எனும் கிராமத்தில் இருந்து குஜராத்திற்கு சென்று அதன் பிறகு ஒன்றரை வருஷம் பாகிஸ்தானுக்கு சென்று திரும்பவும் வருவது.. என ஒரு பெரிய நீண்ட பயணம் இதில் இருக்கிறது. அந்த உண்மைக் கதையை கேட்டவுடன் ஒரு நடிகராக நான் ஆச்சரியமடைந்தேன். 


அதன் பிறகு ஸ்ரீகாகுளம் சென்று அங்குள்ள கிராமத்தில் வசிக்கும் மீனவர்களிடத்தில் பழகி அவர்களுடைய வாழ்வியல் முறையை தெரிந்து கொண்டேன்.‌ அந்தப் பயணம் மறக்க முடியாதது . அந்த அனுபவமும் மறக்க முடியாதது. 


இது போன்ற வாய்ப்பு மிகவும் அரிதாகத்தான் கிடைக்கும். இதற்காக என்னை நான் மாற்றி க் கொண்டேன்.‌ இது போன்ற கதை ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்பதால் இதனை உருவாக்கி இருக்கிறோம்.  ஸ்ரீகாக்குளம் மீனவர்கள் தான் இப்படத்தின் உண்மையான நாயகர்கள். 


தயாரிப்பாளர்கள் பன்னி வாஸ் மற்றும் அல்லு அரவிந்த் அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய மூன்றாவது படமான 100% லவ் படத்திற்குப் பிறகு மீண்டும் தயாரிப்பாளர் அல்லு அரவிந்துடன் இணைந்து இருக்கிறேன். இந்த படமும் பெரிய வெற்றியை பெறும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.


ஒவ்வொரு லவ் ஸ்டோரி திரைப்படத்திலும் பாடல்கள் ஹிட்டாக  அமைய வேண்டும். இதிலும் ராக் ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் எல்லா பாடல்களையும் ஹிட்டாக்கி இருக்கிறார். இதற்காக அவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர் இந்த படத்திற்கு பாடல்களுக்கு மட்டும் இசையமைக்காமல் அந்தப் பாடல்களை காட்சிப்படுத்தும் போதும் படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்து உற்சாகப்படுத்தினார். 


சாய் பல்லவி அனைவரும் சொல்வது போல் எனக்கும் அவர் ஸ்பெஷலானவர். ஒவ்வொரு நடிகரும், ஒவ்வொரு இயக்குநரும், ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞரும் உங்களைப் பற்றி பேசுவார்கள். அனைவரும் உங்களுடைய ரசிகர்கள் தான். உங்களுடன் பணியாற்றுவது இனிமையான அனுபவம். அவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 


இந்தத் திரைப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு தமிழில் வெளியிடுகிறார். இதற்காக அவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவரும் நானும் பல கதைகளை பேசி இருக்கிறோம். விரைவில் இணைந்து பணியாற்றுவோம் என்று நம்புகிறேன். 


கருணாகரனுடன் இந்தப் படத்தில் இணைந்து நடிக்கவில்லை என்றாலும் அவருடைய பங்களிப்பு நன்றாக இருந்தது. அவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 


எதிர்வரும் பிப்ரவரி மாதம் ஏழாம் தேதி தண்டேல் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசித்து ஆதரவு தரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் '' என்றார்.

Thursday, 30 January 2025

காதல் என்பது பொதுவுடமை* *படத்தின் டிரெய்லர் வெளியானது

 *காதல் என்பது பொதுவுடமை*

*படத்தின் டிரெய்லர் வெளியானது*



பிப்ரவரி 14  ல் திரைப்படம் வெளியாகிறது.

BOFTA G. தனஞ்ஜெயன்  வெளியிடுகிறார்.


இயக்குனர் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் 

லிஜோமோல், வினித், ரோகிணி, கலேஷ், தீபா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'காதல் என்பது பொதுவுடமை' .  

மனிதர்களுக்குள் காதல் வருவது  இயல்பானதாக இருந்தாலும்  காதலுக்கென்று வரைமுறைகளை வகுத்துவைத்துள்ள இந்த சமூகத்தில்  இயல்பானதாக இருக்கும் காதலுக்குள் மிகமுக்கியமான உளவியல் சிக்கலை பேசும் படமாக உருவாகியுள்ளது 'காதல் என்பது பொதுவுடமை'

நடிகர் வினித் பல வருடங்களுக்குப்பிறகு இந்தபடத்தில் நடித்திருக்கிறார்.


ரோகிணி, லிஜோமோல் , வினித் மற்றும் பலர் நடித்திருக்கும் இந்த படம் சர்வதேச திரைப்படவிழாக்களிலும் சிறந்த வரவேற்பையும் , அனைவரும் பார்க்க வேண்டிப ஒரு முக்ககிய படம் என்ற பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.


இன்று வெளியான  படத்தின் ரெய்லர் இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.


பிப்ரவரி 14 ல் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தை  கிரியேட்டிவ் எண்டர்டெய்னர் & டிஸ்ட்டிபியூட்டர் (CEAD) சார்பில் G.தனஞ்ஜெயன் வெளியிடுகிறார்.

 https://youtu.be/zo75HMkj4u8?si=fQ0A1R9weLqtGdn2

ஃபேன்டஸி-ஹாரர், த்ரில்லர் திரைப்படமான அகத்தியா, வரும் பிப்ரவரி

 *"ஃபேன்டஸி-ஹாரர்,  த்ரில்லர் திரைப்படமான அகத்தியா,  வரும் பிப்ரவரி 28, 2025 அன்று  பிரமாண்டமாக , திரையரங்குகளில் வெளியாகும்  என அறிவிப்பு"*



ஜனவரி 30 2025 : மிகவும் எதிர்பாக்கப்பட்ட ஃபேன்டஸி-ஹாரர் த்ரில்லர், திரைப்படம் ‘அகத்தியா’ ,  ஜனவரி 31 2025 அன்று வெளியாகும்  என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ,  தற்போது பிப்ரவரி 28 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என திரைப்பட குழுவினர்களால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் விரிவான VFX வேலைகளை மேம்படுத்துவதில் தயாரிப்பு குழு கவனம் செலுத்துவதால் தாமதம் ஏற்படுகிறது, இது பார்வையாளர்களுக்கு  பிரமிப்பை ஏற்படுத்தும், அதுமட்டுமின்றி இது ஒரு புதுவிதமான அனுபவத்தை உறுதி செய்யும்.  உலகத் தரம் வாய்ந்த சினிமா காட்சியை  மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு இந்த தாமதம், என  பட குழுவினர்கள் தெரிவித்துள்ளனர்  .  


நட்சத்திர பட்டாளம்  மற்றும் Pan - India விவரங்கள் : 


பா.விஜய் இயக்கிய அகத்தியா படத்தில் ஜீவா, ராஷி கண்ணா, யோகி பாபு, அர்ஜுன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாகும் இப்படம், ஃபேன்டஸி-ஹாரர் விரும்பும் பார்வையாளர்களை கவர தயாராக உள்ளது.


புதுமையான சினிமா அனுபவம் :  அகத்தியா 


அகத்தியா , ஒரு திரைப்படம், என்பதை விட மேலானது - இது கற்பனை, திகில் மற்றும் ஆழமான , உணர்ச்சிகரமான கதைசொல்லல் ! ஆகியவற்றின் பிடிமான கலவையாகும். கண்கவர் காட்சியமைப்புகள், மனதைக் கவரும் இசையமைப்பு மற்றும் தீவிரமான கதையுடன், அகத்தியா திரைப்படம் சினிமா அனுபவங்களை மறுவரையறை செய்ய தயாராக உள்ளது.  பார்வையாளர்கள்  புதுவிதமாக மாறுபட்ட கற்பனைக் கூறுதல் மற்றும்  நீண்ட நாட்களுக்குப் பிறகு  ஒரு அழுத்தமான கதைக்களம் நிரம்பிய ஒரு எட்ஜ்-ஆஃப்-தி-சீட் த்ரில்லரை எதிர்பார்க்கலாம்.



தயாரிப்பாளர்களின் பார்வை : 


வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பாளர் டாக்டர் கே. ஐசரி கணேஷ்,    மற்றும் WAM India நிறுவனத்தின் தயாரிப்பாளர் அனீஸ் அர்ஜுன் தேவ்  தயாரிக்கும் இத்திரைப்படம் ,  பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுக்கும் என்பதில் எந்தவித மாற்றுகருத்தும் இல்லை.   காமெடி, திகில்  என பல சுவாரசிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.    பலவிதமான சவால்கள் மற்றும் எல்லைகளை கடந்து  திரைப்படத்தின் காட்சி கலைத்திறன் மேலோங்கி நிற்கிறது,  அதுமட்டுமின்றி ஒரு லட்சிய ஒத்துழைப்பை பிரதிபலிக்கிறது.   தயாரிப்புக் குழுவினர்களின்  உழைப்பால் இப்படம் உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களை ஈர்க்கும் இணையற்ற பிரம்மாண்டத்தின் காட்சிகளை தங்களுக்கு வழங்க காத்திருக்கிறது. 


ஃபேன்டஸி-ஹாரர்,  த்ரில்லர்  மற்றும் உணர்ச்சிகளின் தனித்துவமான கலவையுடன் ,  பாரம்பரிய வகைகளை தாண்டிய   அகத்தியா திரைப்படம் வரும் பிப்ரவரி 28 2025 அன்று  திரையிடப்படும் போது மறக்க முடியாத ஒரு அனுபவத்திற்கு தயாராகுங்கள்

ட்ரெண்டிங்கில் இருக்கும் அர்ஜுன் தாஸ் -அதிதி ஷங்கரின் 'ஒன்ஸ்மோர்' பட பாடல்

 *ட்ரெண்டிங்கில் இருக்கும் அர்ஜுன் தாஸ் -அதிதி ஷங்கரின் 'ஒன்ஸ்மோர்' பட பாடல்*






*தமிழில் மாபெரும் வரவேற்பை பெற்றிருக்கும் ஹேஷாம் அப்துல் வஹாப்*


தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் பான் இந்திய இசையமைப்பாளரான ஹேஷாம் அப்துல் வஹாப்பின் இசையில் உருவாகி, 'ஒன்ஸ்மோர்' எனும் படத்தில் இடம்பெற்ற ''வா கண்ணம்மா..' எனும் பாடல் மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருவதுடன் ஆயிரக் கணக்கிலான ' ரீல்ஸ் 'களிலும் இடம் பிடித்து புதிய மைல்கல் பயணத்தை தொடங்கி இருக்கிறது.


அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஒன்ஸ்மோர் ' எனும் திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ் , அதிதி ஷங்கர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை நாஷ் மேற்கொள்ள, கலை இயக்கத்தை ராஜ்கமல் கவனித்திருக்கிறார். இளமை துள்ளலுடன் கூடிய பொழுதுபோக்கு படைப்பாக தயாராகி வரும் இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் தயாரித்திருக்கிறார். 


'ஹிருதயம்', 'குஷி', 'ஹாய் நன்னா '' ஆகிய பான் இந்திய அளவில் வெற்றி பெற்ற படங்களுக்கு இசையமைத்து  முன்னணி நட்சத்திர இசையமைப்பாளராக உயர்ந்திருக்கும் ஹேஷாம் அப்துல் வஹாப்  ' ஒன்ஸ்மோர் ' படத்தின் மூலம் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இவரின் இசையில் ' ஒன்ஸ்மோர் ' படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்கள் வெளியாகி, இசை ரசிகர்களின் கவனத்தை கவர்ந்தது. இதனைத் தொடர்ந்து திருமண வைபவத்தை கொண்டாடும் வகையில் ' வா கண்ணம்மா..'  என்ற பாடலை படக் குழுவினர் பொங்கல் விடுமுறை தினத்தன்று வெளியிட்டனர். இந்த பாடலை பாடலாசிரியர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் எழுத , இசையமைப்பாளரும் பின்னணி பாடகருமான ஹேஷாம் அப்துல் வஹாப் மற்றும் பின்னணி பாடகி உத்ரா உன்னிகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள்.  தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரம் - பண்பாடு - இசை- திருக்குறளுடன் தொடங்கும் பாடல் வரிகள்- இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப்பின் திரை தோன்றல்- என பல சுவாரசியமான அம்சங்கள் இடம் பிடித்திருப்பதால் இந்தப் பாடல் இதுவரை ஐந்தரை மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது. அத்துடன் இந்த பாடலை இளைய தலைமுறையினரின் சமூக வலைதள நடவடிக்கையை ஊக்குவிக்கும் வகையில் படக்குழுவினர் இந்தப் பாட்டுக்கு நடனமாடி ரீல்ஸாகவும் வெளியிட்டனர். இதனால் உற்சாகமடைந்த 85 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைய தலைமுறையினர் இந்த பாடலுக்கு நடனம் ஆடி அதனை அவர்களின் சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றினர். இதுவும் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கிறது. 


இந்த பாடலுக்கான மெட்டு- பாடல் வரிகள் - இசை - நடனம் - காட்சி அமைப்பு - என அனைத்தும் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப இருந்ததால் 'வா கண்ணம்மா..' சமூக வலைதளவாசிகளால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் உற்சாகமடைந்த இசை ரசிகர்கள் அனைவரும் தமிழில் அறிமுகமாகும் ஹேஷாம் அப்துல் வஹாப்பிற்கு தங்களுடைய வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் ஹாட்டின் + பூங்கொத்து இமோஜிகளுடன் தெரிவித்து வருகின்றனர்.


தற்போது இப்படத்தின் படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. விரைவில் படத்தின் முன்னோட்டம் மற்றும் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாக கூடும் என படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். 


அர்ஜுன் தாஸ்- அதிதி ஷங்கர் - ஹேஷாம் அப்துல் வஹாப் - மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் - கூட்டணியில் தயாராகி வரும் 'ஒன்ஸ்மோர்' படத்தில் இடம்பெற்ற 'வா கண்ணம்மா..' எனும் பாடல் புதிய சாதனையை படைத்து வருவதால் இசையமைப்பாளர் உள்ளிட்ட படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர்.


https://www.youtube.com/watch?v=9fyOu2dxgOY

Screen Scene Media Entertainment's Sundar Arumugam produces 'Karate Babu

 Screen Scene Media Entertainment's Sundar Arumugam produces 'Karate Babu', a gripping political thriller directed by 'Dada' fame Ganesh K Babu, starring Ravi Mohan as protagonist*










*Tamil Nadu DGP Shankar Jiwal's daughter Daudee Jiwal makes her debut as heroine opposite Ravi Mohan*


Screen Scene Media Entertainment Private Limited, which has produced successful films and the web series 'Mathagam', has teamed up with Ravi Mohan for the third time after 'Agilan' and 'Brother'.


Produced by Sundar Arumugam on a grand budget, the film is directed by Ganesh K Babu, who helmed the super hit movie 'Dada'. This is Ravi Mohan's 34th film and will feature Tamil Nadu Director General of Police Shankar Jiwal's daughter, Daudee Jiwal, as the female lead. Director K S Ravikumar, Shakthi Vasu and Nasser play key roles. 


Speaking about the film, director Ganesh K Babu said, "Although there have been many films about politicians, their personal lives, relationships and feelings have not been discussed much on screen. This film explores another side of an MLA. It is shaping up to be an emotional and realistic political thriller."


Talking about working with Ravi Mohan, he said, "We are making the film very comfortably without any tension, unlike working with a leading actor. The reason for this is Mohan Ravi's full cooperation and dedication. I feel very happy to direct this movie."


The shooting of the film began recently and the first phase is nearing completion. Shooting is ongoing in various locations. 


Music - Sam C.S. 


Cinematography - Ezhil Arasu K 


Editing - Kathiresh Alagesan 


Production Designer: Shanmugaraja


Other cast and crew details:


Cast: VTV Ganesh, Subramaniam Siva, Kavithalaya Krishnan, Pradeep Antony, Raja Rani Pandiyan, Ilan, Sam Anderson, Sri Dhanya, Sandeep Ravi Raj, Ananthi, Sindhu Priya, Ajith Ghosh, Kalki Raja, Knife Naren, Vetri, Aravind, Dharmaraj, Nandhini Senthamizhan, Jeeva Subramaniam, Manimegala


Co-Writers: Rathna Kumar, Bakkiyam Sankar


Action Director: Dhilip Subbarayan


Sound Designer: Arunachalam Sivalingam


Choreographer: Sathish Krishnan


Costume Designer: Gayathri Balasubramanian


Production Executive: Karthick Anandkrishnan


Executive Producer: K.S. Senthil Kumar


Distribution Head: Kiran Kumar S


Producer: Sundar Arumugam 


Story, Screenplay, Dialogues, Direction: Ganesh K Babu 


***