Featured post

அனைவரும் எதிர்பார்க்கும் நடிகை சோனாவின்

 *அனைவரும் எதிர்பார்க்கும் நடிகை சோனாவின் சுயதரிசை கதை ‘ஸ்மோக்’ வெப்சீரியஸ்.* *முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நடிகை சோனா* தென்னிந்திய ...

Wednesday 15 May 2019

Thirumala launches fortified fresh toned milk to tackle Vitamin D and Calcium deficiencies in children


குழந்தைகளிடம் காணப்படும் வைட்டமின் டி மற்றும் கால்ஷியம் குறைபாடுகளைச் சமாளிக்கத் திருமலாஅறிமுகப்படுத்தும் புத்துணர்ச்சி தரும் ஊட்டச் சத்துக்களுடன் கூடிய                      சமன்படுத்தப்பட்ட பால்

·         நாடு முழுவதுமுள்ள 80% பள்ளிக் குழந்தைகள் வைட்டமின் டி குறைபாடுள்ளவர்கள்
·         வைட்டமின் டி மற்றும் கூடுதல் கால்ஷியத்துடன், திருமலாவின் சாம்ப் அப் வளரும் குழந்தைகளின் வலுவான மற்றும் ஆரோக்கிய எலும்புகளுக்கு உத்தரவாதம் தருகிறது

சென்னை: 2019 மே 14:  நாட்டில் ஊட்டச் சத்து அளவை அதிகரிக்கும் நோக்கத்துடன், லாக்டாலிஸ் இந்தியாவின் ஓர் அங்கமான திருமலா மில்க் புராடக்ட்ஸ் நிறுவனம்,  குழந்தைகளுக்கெனப் பிரத்யேகமாக வைட்டமின் டி மற்றும் கூடுதல் கால்ஷியம் சத்துக்களுடன் புத்துணர்ச்சி தரும் ஊட்டச் சத்துக்கள் கொண்ட ‘சாம்ப் அப்’ சமன்படுத்தப்பட்ட பால் அறிமுகம் தொடர்பான அறிவிப்பை இன்று வெளியிட்டது. திருமலா ஆய்வு & வளர்ச்சிக் குழு நிபுணர்களால் உருவாக்கப்பட்ட இப்பொருள் குழந்தைகளின் அன்றாட ஊட்டச் சத்துத் தேவைகளை நிறைவு செய்வதுடன், அதிகரிக்கும் குறைபாடு அளவு பிரச்சினைக்கும் தீர்வாக அமையும். 

சமீபத்திய ஆய்வுகளின்படி நாடு முழுவதுமுள்ள 80% குழந்தைகளுக்கு வைட்டமின் டி சத்து குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது எதிர்கால சந்ததியினரின் உடல் மற்றும் மன வளர்ச்சியைத் தடுப்பதால், வளரும் பருவத்தில் குழந்தைகளின் எலும்பு மற்றும் எலும்பு அடர்த்தியைப் பெருக்க நுண் ஊட்டச் சத்துக்களை அதிக அளவில் அவர்களுக்குக் கொடுக்க வேண்டியது அவசியமாகும்.  ‘சாம்ப் அப்’ இல் உள்ள மேம்படுத்தப்பட்ட வைட்டமின் டி மற்றும் கூடுதல் கால்ஷியம், குழந்தைகளுக்குப் பரிந்துரைக்கப்படும் அன்றாட ஊட்டச்சத்து அளவுகளில் 50% ஈடு செய்யும். சாம்ப் அப் 180 மிலி 1 கோப்பைப் பாலுக்கு இணையாகும்.  இதில் குழந்தைக்குப் பரிந்துரைக்கப்பட்ட தினசரி ஊட்டச் சத்து அளவான (ஆர்டிஏ) 40% கால்ஷியம், 23% வைட்டமின் ஏ மற்றும் 13% வைட்டமின் டி இருப்பது குறிப்பிடத்தக்கது. 

அறிமுகம் குறித்து லாக்டாலிஸ் இந்தியா சிஇஓ ராகுல் குமார் கூறுகையில் ‘எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏராளமான ஆரோக்கிய மற்றும் ஊட்டச் சத்து மிகுந்த பால் பொருள்களை வழங்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கமாகும். சாம்ப் அப் அறிமுகத்தைத் தொடர்ந்து நம் நாட்டிலுள்ள குழந்தைகளுக்கு அன்றாடத் தேவையான ஊட்டச் சத்தை வழங்க வேண்டும் என்னும் எங்களது பொறுப்பு இன்னும் விரிவடைந்துள்ளது. எங்கள் ஆய்வு & வளர்ச்சிக்
குழு நாட்டிலுள்ள இளம் தலைமுறையினர் இடையே அதிகரிக்கும் வைட்டமின் டி மற்றும் கால்ஷியம் குறைப்பாட்டை ஒழிக்க உதவும் வகையில் புத்தம் புதிய பொருளைக் கண்டுபிடித்துள்ளனர். உறுதியான எலும்புகளுக்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும், தேவையான உடல் ஆரோக்கியத்தைப் பெற ஒவ்வொரு குழந்தைக்கும் போதிய அளவு வைட்டமின் டி மற்றும் கால்ஷியத்தைத் தினசரி ஒரேயொரு கோப்பை பால் மூலம் வழங்க வேண்டும் என்பதே சாம்ப் அப் நோக்கமாகும்’ என்றார். 

அறிமுகத்தின் ஒரு பகுதியாகக், குழந்தைகளிடம் நிலவும் வைட்டமின் டி மற்றும் கால்ஷியம் குறைப்பாடு மற்றும் ஒட்டு மொத்த ஆரோக்கியப் பாதிப்பு ஆகியவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த நகரிலுள்ள அனைத்துச் சுகாதார நிபுணர்களையும் ஒரே மேடைக்குக் கொண்டு வந்தது திருமலா.  பெரியவர்களான பிறகு ஆரோக்கியத்தைப் பெற வளரும் பருவத்தில் குழந்தைகளுக்குத் தேவையான ஊட்டச் சத்து மிகுந்த டயட் உணவின் முக்கியத்துவம் பற்றியும் குழு விவாதித்தது.  

நகரின் பிரபல ஊட்டச் சத்து நிபுணரான டாக்டர் ப்ரீதி ராஜ் கூறுகையில் ‘இந்தியக் குழந்தைகளிடம் வைட்டமின் டி குறைபாடு அதிகரித்து வருவதால், நமது அன்றாட உணவில் விடுபட்டுப் போன நுண் ஊட்டச்சத்துக்களை வழங்க வேண்டியது அவசியமாகி உள்ளது.  குழந்தைகளின் அன்றாட ஊட்டச் சத்துத் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் வைட்டமின் டி மற்றும் கூடுதல் கால்ஷியத்தைத் திருமலா சாம்ப் அப் அளிக்கும்.  நாளொன்றுக்கு 2 சாம்ப் அப் எடுத்துக் கொள்வது கால்ஷியத்தின் 80% ஆர்டிஏ, புரதத்தின் 81% ஆர்டிஏ மற்றும் வைட்டமின் டி-இன் 27% ஆர்டிஏ ஆகியவற்றுக்கு இணையாகும். 

ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் டயட் உணவின் முக்கியத்துவத்தைப் பொது மக்களுக்கு எடுத்துரைக்கும் முனைவாக திருமலா ஊட்டச் சத்து ஃபவுண்டேஷனை திருமலா   தொடங்கி உள்ளது. இந்த மெய்நிகர் தளம் பால் ஊட்டச் சத்தின் சேமிப்புக் கிடங்காக விளங்கும்.  இக்குழுவிலுள்ள மருத்துவர்களும், ஊட்டச் சத்து நிபுணர்களூம் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் குடும்பங்களுக்குத் தேவையான ஊட்டச் சத்துத் தேவைகளை இந்தியர்கள் நிறைவு செய்ய உதவுவர்.

தென் இந்தியாவில் சாம்ப் அப் 180 மிலி பாக்கெட்  விலை ரூ 10/- மட்டுமே. 

திருமலா மில்க் புராடக்ஸ்

1996இல் நிறுவப்பட்ட திருமலா மில்க் புராடக்ட்ஸ் தென் இந்தியா மற்றும் மும்பையில் கணிசமான பங்களிப்புடன் விளங்கும் முன்னணி பால் மற்றும் பால் பொருள்கள் தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றாகும்.  பால், தயிர், மோர், லஸ்ஸி, நெய், ஐஸ் க்ரீம், பன்னீர், வெண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பால் பொருள்களுடன் இளைஞர்கள் மற்றும் முதியவர்களைக் கொண்ட ஒவ்வொரு குடும்ப உறுப்பினரின் தேவைகளை நிறைவு செய்கிறது.  அதி நவீன அறிவியல் தொழில்நுட்பங்களுடன் கூடிய ஆய்வு & வளர்ச்சிக் குழுவின் உதவியுடன் திருமலா புதிய பொருள்கள் உருவாக்கம் மூலம் தனது வாடிக்கையாளர்களின் தேவைகளைத் தொடர்ந்து நிறைவு செய்து வருகிறது. ‘சுத்தத்தின் ஆதாரம்’ என்னும் விளம்பர முழக்கத்துடன் திருமலா தனது வாடிக்கையாளர்களுக்கு முழுமையான, சிறந்த மற்றும் தரமான பொருள்களை வழங்குகிறது.

லாக்டாலிஸ் இந்தியா

140க்கும் அதிகமான நாடுகளில் விரிவாக்கம் செய்துள்ள உலகின் மிகப் பெரிய பால் குழுமம் லாக்டாலிஸ் ஆகும். ஆண்டுக்கு 20 பில்லியனுக்கும் அதிகமான யூரோக்கள் விற்றுமுதலுடன் ப்ரெசிடெண்ட், லாக்டெல் மற்றும் கல்பானி ஆகிய பன்னாட்டு பிராண்ட்கள்  லாக்டாலிஸுக்கு மேலும் பெருமை சேர்க்கின்றன.  2014இல் திருமலா மற்றும் 2016இல் அனிக் ஆகிய இந்தியப் பால் நிறுவனங்களைக் கையகப்படுத்தியதன் மூலம் இந்தியச் சந்தையில் தடம் பதித்துள்ள லாக்டாலிஸ் இந்தியா முழுவதும் தனது சிறகுகளை விரித்துள்ளது. நாடு முழுவதும் 10 பால் பண்ணைகளுடன் லாக்டாலிஸ் இந்தியா தினசரி 1.5 மில்லியன் லிட்டர் பாலை கையாள்கிறது.  இதன் ஆண்டு விற்றுமுதல் 350 மில்லியன் யூரோக்கள் ஆகும்.

No comments:

Post a Comment