Featured post

Puratchi Thalapathy Vishal & Hari combo 'Rathnam' will be setting the screens on fire tomorrow.

 Puratchi Thalapathy Vishal & Hari combo 'Rathnam' will be setting the screens on fire tomorrow Kollywood masala entertainer Har...

Thursday 24 October 2019

இந்தியன் வங்கி நிதியாண்டு 2020க்கான Q2, மொத்த வருவாய் 18% உயர்ந்துள்ளது


நிகர லாபம் 139% அதிகரித்து ரூ 359 கோடி இது திண்மையான 72% மற்ற வருவாயின் பின்புலத்தில் உள்ளது


இந்தியன் வங்கியின் இயக்குநர் குழுமம் 2019-20ன் இரண்டாவது காலாண்டிற்கான நிதிநிலையறிக்கை, லாப நஷ்ட கணக்கு அறிக்கையையும் மற்றும் செப்டம்பர் 30 2019 அன்று நிறைவடையும் அரையாண்டிற்கான அறிக்கையையும் (ஏப்ரல் முதல் செப்டம்பர் நிதியாண்டு 2020) அங்கீகரித்து ஏற்றுக் கொண்டது. 

லாபகரத்தன்மை
வங்கியின் இயக்க லாபம் நிதியாண்டு 2020 Q2வில் 26% வளர்ச்சி கண்டு ரூ 1502 கோடியாக உள்ளது. நிதியாண்டு 2019 Q2வில் ரூ 1191 கோடியாக இருந்தது. செப்டம்பர் 30, 2019 நிறைவுற்ற ஆறு மாத காலத்திற்கு 16% வளர்ச்சி கண்டு ரூ 2876 கோடியாக உள்ளது. இது செப்டம்பர் 30, 2018  நிறைவுற்ற ஆறு மாத காலத்திற்குரூ 2489 கோடி ஆக இருந்தது   
வங்கியின் நிகர லாபம் நிதியாண்டு 2020 Q2வில் ரூ 359 கோடி. வங்கியின் நிகர லாபம் நிதியாண்டு 2019 Q2வில் ரூ 150 கோடி. இதர வருவாய் 72% வளர்ச்சியினால் நிகர வருவாய் 139% வளர்ந்துள்ளது. செப்டம்பர் 30, 2019 அன்று நிறைவுற்ற ஆறு மாத காலத்திற்கான நிகர லாபம் ரூ 724 கோடி. இது 30 செப்டம்பர் 2018ல் இருந்த ரூ 359 கோடியை விட 101% வளர்ச்சியடைந்துள்ளது.

வங்கியின் மொத்த வருவாய் செப்டம்பர் 30, 2019 ரூ 6045 கோடி. செப்டம்பர் 30, 2018  நிறைவுற்ற காலாண்டில் 5129 கோடி. இது 18% வளர்ச்சி கண்டுள்ளது.
இது  செப்டம்பர் 30, 2019 அன்று நிறைவுற்ற ஆறு மாத காலத்தில் ரூ 11877 கோடி. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ 10261 கோடியாக இருந்தது.
நிகர வட்டி வருவாய் (வட்டி வருவாய் - வட்டி செலவினம்) Q22020ல் ரூ 1863 கோடி. Q22019ல் இது ரூ 1731 கோடியாக இருந்து. இது 8% வளர்ச்சி கண்டுள்ளது. H12018ல் ரூ 3538 கோடி. இது 3% வளர்ச்சி கண்டு Hi2020யில் ரூ 3649 கோடியாக உள்ளது.
நிகர வருவாய் (நிகர வட்டி வருவாய் + இதர வருவாய்) Q22020ல் ரூ 2601 கோடி. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ 2601 கோடியாக  இருந்தது. வளர்ச்சி சதவீதம் 20% இது H12020ல் ரூ 5081 கோடி. இது இதே காலகட்டத்தில் H12019ல் ரூ 4406 கோடி.
நிகர வட்டி மார்ஜின் இது 9 அடிப்படைப் புள்ளிகள் குறைந்துள்ளது. செப்டம்பர் 30, 2019 நிறைவுற்ற காலாண்டில் 2.92% ஆகும்.   செப்டம்பர் 30, 2018 நிறைவுற்ற காலாண்டில் 3.01% ஆக இருந்தது. தொடர்ச்சியான இது 7 அடிப்படைப் புள்ளிகள் வளர்ச்சி கண்டுள்ளது.
நிகர வட்டி  மார்ஜின் (ஊள்நாடு) செப்டம்பர் 30, 2019 நிறைவுற்ற அரையாண்டில் 2.89% ஆக உள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 3.10 % ஆக இருந்தது. இது 21 அடிப்படைப் புள்ளிகள் குறைந்துள்ளது.
இதர வருவாய் (வட்டி அல்லாத வருவாய்) செப்டம்பர் 30, 2019 நிறைவுற்ற காலாண்டில் ரூ 738 கோடி. இது முதலீடுகளின் விற்பனை ரூ 249.21 கோடியின் காரண்மாக 72% வளர்ச்சி கண்டுள்ளது
இயக்க செலவுகள் செப்டம்பர் 30, 2019 நிறைவுற்ற காலாண்டில் ரூ 1099  கோடி இதே காலகட்டத்தில் கடந்த ஆண்டு இது ரூ 968 கோடியாக இருந்தது. இது செப்டம்பர் 30, 2019 நிறைவுற்ற அரையாண்டில் ரூ 2205 கோடி இதே காலகட்டத்தில் கடந்த ஆண்டு இது ரூ 1917 கோடி
செலவுகளுக்கும் வருவாய்க்குமான விகிதம் செப்டம்பர் 30, 2019 நிறைவுற்ற காலாண்டில் 42.26% ஆக இருந்தது. செப்டம்பர் 30, 2018 நிறைவுற்ற காலாண்டில் 44.84% ஆக இருந்தது. இந்த வித்தியாசம் இயக்க வருவாயில் 20% ஏற்றத்தால் ஏற்பட்டது.  இது செப்டம்பர் 30, 2019 நிறைவுற்ற அரையாண்டில் 43.39. இதே காலகட்ட்த்தில் இது கடந்த ஆண்டு இது 43.52% ஆக இருந்தது.
ஒதுக்கீடுகளும் எதிர்பாரத செலவுகளுக்குமான ஒதுக்குதல் நிதியாண்டு  Q2 2020ல் ரூ 1143 கோடி. இதில் ரூ 1041 கோடி வருமான வரிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 30, 2019 நிறைவுற்ற அரையாண்டில்  இது ரூ 2152 கோடி. ஆக உள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ 2129 கோடி ஆக இருந்தது.
சொத்துக்களின் மீதான வருவாய் செப்டம்பர் 30, 2019 நிறைவுற்ற காலாண்டில் 0.50% ஆக இருந்தது. சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில்0.23% ஆக இருந்தது. இதன் வளர்ச்சி 27 அடிப்படைப் புள்ளிகளாகும். செப்டம்பர் 30, 2019 நிறைவுற்ற அரையாண்டில் இது 0.51%.. ஆக உள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 0.28% .ஆக இருந்தது.
பங்குகள் மீதான வருவாய் நிதியாண்டு Q22020வில் 8%. இது Q22019ல் 3.71%. இது செப்டம்பர் 30, 2019 நிறைவுற்ற அரையாண்டில் 8.41%.
சொத்துக்களும் கடன்களும்
மொத்த நிதிநிலையறிக்கையின் அளவு (ஆண்டிற்கு ஆண்டு எனும் அடிப்படையில்)  செப்டம்பர் 30, 2019ல் ரூ 297662 கோடி. இது செப்டம்பர் 30, 2018ல் ரூ 261642 கோடி. (வளர்ச்சி 14%)
உலகளாவிய வர்த்தகம் (ஆண்டிற்கு ஆண்டு எனும் அடிப்படையில்)  செப்டம்பர் 30, 2019ல் ரூ 447420 கோடி. (வளர்ச்சி 14%)
மொத்த டெபாசிட்டுகள் H1 2020ல் ரூ 253172 கோடி. (வளர்ச்சி 15%)
செப்டம்பர் 30, 2019ல். உள்நாட்டு காசா டெபாசிட்டுகள். இது மொத்த டெபாசிட்டுகளில் 34.66% ஆகும். இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 36.13% ஆக இருந்தது. காசாவின் வளர்ச்சி நடப்புக் கணக்கின் ஆண்டிற்கு ஆண்டு 7.54%  வளர்ச்சி கண்டு ரூ 13244 கோடியாகவும் சேமிப்பு கணக்கு 11% வளர்ச்சி கண்டு ரூ 71864 கோடியாக உள்ளது.
வழங்கிய கடன்கள் 30 செப்டம்பர் 2019ல் ரூ 194248 கோடி 30 செப்டம்பர் 2018ல் ரூ 172322 கோடி. இது சில்லறைக் கடன் 17% (இவற்றுள் வீட்டு வசதிக் கடன் 32% வாகனக் கடன் 12% விவசாயக் கடன் 16% எம்எஸ்எம்இ 20% நிறுவனக் கடன் 6% வெளிநாட்டுக் கடன் 17%
முன்னுரிமைக் கடன் 30 செப்டம்பர் 2018ல் ரூ 64520 கோடி. 30 செப்டம்பர் 2019ல் 73217 கோடி. இது ஏஏன்பிசியில் 47% இதற்கான இலக்கு40%
நலிந்த பிரிவினருக்கான கடன் 30 செப்டம்பர் 2018ல் ரூ 16033 கோடி 30 செப்டம்பர் 2019ல் ரூ 18537 கோடி இது ஏஏன்பிசியில் 12% இதற்கான இலக்கு 10%
மூலதனப் போதுமை
மூலதனப் போதுமை விகிதம் 30 செப்டம்பர் 2019ல் பேசல் முறைப்படி 12.96% (30 செப்டம்பர் 2018ல் 12.73% ) இருக்க வேண்டிய தேவை 10.875%. அரசாங்கத்தின் மூலதன புகுத்தலைக் கணக்கில் கொண்டால் ரூ 2534 கோடி இது 14.52% ஆகியது.
30 செப்டம்பர் 2019ல் டயர் 1 சிஏஆர் 12.69% இது 30 செப்டம்பர் 2018ல்.11.53% இடரின்பாற்பட்ட சொத்துக்கள் ரூ 162717 கோடி (30 செப்டம்பர் 2018ல். ரூ 150679 கோடி )
சொத்துக்களின் தரம்
மொத்த செயலாக்கத்தன்மை இல்லாத சொத்துக்களுக்கும் மொத்த கடன்களுக்குமான விகிதம் 30 செப்டம்பர் 2019ல் 7.2%. இது 30 செப்டம்பர் 2018ல் 7.16%. 4 அடிப்படைப் புள்ளிகள் உயர்ந்துள்ளது
நிகர வாராக்கடன்களுக்கும் மொத்த நிகர வாராக்கடன்களுக்கும் விகிதம் 30 செப்டம்பர் 2019ல் 3.54%  இது 30 செப்டம்பர் 2018ல் 4.23%. இது 69 அடிப்படைப் புள்ளிகள் குறைந்துள்ளது.
இடர்ப்ப்ட்ட கடன்களுக்கும் மொத்த கடன்களுக்குமான விகிதம் 30 செப்டம்பர் 2019ல் 8.53% இது 30 செப்டம்பர் 2018ல் 8.02%
வாராக்கடன் வகைகளின் வசூல் Q2 நிதியாண்டு 2020ல் 31%, Q2 நிதியாண்டு 2019ல் 32%. இது முன்னேற்றம் கண்டுள்ளது.

அங்கீகாரங்கள்
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்குள் 2017-18ல் சிறந்த வங்கியாக ஃபைனான்ஷியல் எக்ஸ்பிரசில் அங்கீகரிக்கப்பட்டது
ரீடர்ஸ் டைஜஸ் பத்திரிகையால் ஏப்ரல் 2019க்கான நம்பகமான வங்கியாக தேர்வு செய்யப்பட்டது
ரூ 10 கோடி யிலிருந்து 50 கோடி பிரிவில் 2018-19க்கான Digi Dhan Payment Award “ வென்றுள்ளது – இலக்கு 160.82%
நாபார்ட் வங்கியின் 2018-19ற்கான சுய உதவிக் குழு இணைப்பு திட்ட்த்திற்கான  தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்குள் முதல் இடத்தைப் பெற்றுள்ளது
சுத்தம் சுகாரத்தை உயர்ந்த நிலையில் கடைப்பிடித்தமைக்காக “Swatchatha Pakhwada 2019  விருது
இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குநரும் முதன்மைச் செயல் அதிகாரியுமான பத்மஜா சுந்துரு அவர்கள் வங்கியின் பொருளாதார நிலை குறித்த முடிவுகளை வெளியிட்டு விமர்சிக்கையில், “எங்களது திண்மையான செயலாக்கத்திற்கான காரணிகளாக, வர்த்தக வளர்ச்சி, ஈட்டுதல்கள் மற்றும் வாராக்கடன்களை கட்டுக்குள் வைத்திருத்தல், ஆகியவற்றின் மீது நாங்கள் கவனம் செலுத்தியுள்ளதையே கூற இயலும். சமீபத்தில் இந்தியன் வங்கியுடன் அலஹாபாத் வங்கி இணைக்கப்பட்டுள்ளது. இது எங்களுக்கு தேவையான உந்துதலையும் உலகளாவிய பரந்த பார்வையையும் எற்படுத்த வல்லதாக அமையும் என்றும், இதனால் எங்களது மொத்த வர்த்தகம் முன்னேற்றம் அடையும் என்றும் நம்புகிறோம். இந்த சேர்க்கையினால் எங்களுக்கே உரித்தான திண்மையான செயலாக்கதுடன் இந்த வங்கியுடன் இணைந்து செயல்பட்டு, எங்கள் வங்கியானது வங்கித் துறையிலேயே முன்னணி வங்கியாகத் திகழும். 

Indian Bank Press Meet on Reviewed Financial Results of 2K | Padmaja Chanduru


No comments:

Post a Comment