Featured post

Charming Star Sharwa, Blockbuster Maker Sampath Nandi, KK Radhamohan, Sri Sathya Sai Arts’ Prestigious Pan India Project

Charming Star Sharwa, Blockbuster Maker Sampath Nandi, KK Radhamohan, Sri Sathya Sai Arts’ Prestigious Pan India Project #Sharwa38 Titled Bh...

Saturday, 26 October 2019

Sotta First Look Release By Arya Today 6 PM

ஒரே ஷாட்டில் ‘அகடம்’ என்ற திரைப்படத்தை எடுத்து கின்னஸ் உலக சாதனைப் படத்தை இயக்கினார் இசாக். இவர் நடிகர் ‘நெடுஞ்சாலை’ ஆரியை வைத்து ‘நாகேஷ் திரையரங்கம்’ திரைப்படத்தை இயக்கியிருந்தார். தற்பொழுது “சொட்ட” திரைப்படத்தை இயக்குகிறார்.

இப்படம் ஹிந்தியில் ‘ஹேர் இஸ் பாலிங்’ என்ற பெயரில் வெளிவந்த திரைப்படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இளம் வயதிலேயே தலைமுடி உதிரும் இளைஞன் ஒருவன் தன் வாழ்வில் காதல், தொழில், திருமணம் என அனைத்திலும் அடுக்கடுக்காக தோல்வி அடைகிறான். மீண்டும் அதே இளைஞன் எப்படி தனது வழுக்கை தலையுடன் தன் காதல், தொழில், திருமணத்தில் வெற்றி பெறுகிறான் என்பதை நகைச்சுவையுடன் சொல்லும் கதை “சொட்ட”.

இப்படத்தை மேன்டியோ பிலிம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தின் மூலம் ஜெமினி ரெய்கர் என்பவர் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவருடன் பிரபல நடிகர்கள் இத்திரைப்படத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தில் இலங்கை தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஜெ.ஷமீல் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு - மு. ரத்தீஷ்கண்ணா, எடிட்டர் - எஸ்.தேவராஜ், கலை இயக்குனர் - பூங்கா கிருஷ்ணமூர்த்தி, சண்டைப்பயிற்சி - E.கோட்டி, நடனம் - ஜானி, பாம்பே பாஸ்கர், நிர்வாக தயாரிப்பு - அபிலாஷ், மக்கள் தொடர்பு - வின்சன் C.M, பாடல்கள் - வேல்முருகன், அ.ப. ராசா, ஜெகன் சேட்

No comments:

Post a Comment