Wednesday, 22 April 2020

கோவிட்-19 தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் திருச்சி

கோவிட்-19 தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் திருச்சி தேசிய தொழில்நுட்பக்கழக முன்னாள் மாணவர்களின் பங்களிப்பு

உலகம் முழுதும் கொரோனாவைரஸ் தோற்று பரவியுள்ள சூழலில், ருச்சிராப்பள்ளி 
தேசிய தொழில்நுட்பக்கழக முன்னாள் மாணவர்கள் பலரும் தொற்றைக் கண்டறிதல், 
வசதி மேம்பாடு, முகக்கவசம் வழங்குதல் போன்ற பல பணிகளை மேற்கொண்டு 
வருகின்றனர். இவர்களுள் திரு. மனோகர் (1977), திரு. ரமேஷ் (1981), திரு. ஸ்ரீதர் (1982), டாக்டர் வெங்கட் வெங்கட்ராமன் (1982), திரு. மதுமோகன் ஸ்ரீராம் (1982), திரு. ரிச்சர்ட் சேகர் (1983), செல்வி. சப்னா பேகார் (1990), ரீயர் அட்மிரல் ஸ்ரீகுமார் நாயர் (1986), திரு. சூர்யா சங்கர் (2010), திரு. ரமேஷ் (1991) ஆகியோரின் பங்கு குறிப்பிடத்தக்கது.இந்திய ஸ்டெம் செல் நிறுவனமான ஸ்டெம்பியூடிக்ஸ்,  ஸ்டெம் செல்லின் 
உலகளாவிய கூட்டமைப்புடன் இணைந்து மூன்றாம் கட்ட கொரோனா வைரஸ் 
நோயாளிகளுக்கு ஒரு சக்திவாய்ந்த மருந்து கொண்டு வர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு.பீ.என்.மனோகர், ஸ்டெம்பியூட்டிக்ஸ் நிறுவனம் மருத்துவ தரம் கொண்ட எம்.எஸ்.சி க்களை (மெசன்கிமல் ஸ்டெம் செல்கள்: எலும்பு மஜ்ஜையில் காணப்படும் பன்மடங்கு ஸ்டெம் செல்கள், இவை எலும்பு திசுக்களை உருவாக்குவதற்கும் சரிசெய்வதற்கும் முக்கியமானது) தயாரிக்கும் முயற்சிகளில் உள்ளது எனக்கூறினார்.பல்வேறு நோயாளிகளிக்குத் தேவையான ஆக்ஸிஜனை ஒரே நேரத்தில் வழங்கும் நோக்கில் ரியர் அட்மிரல் ஸ்ரீகுமார் நாயர் மற்றும் அவரது விசாகப்பட்டினம் கப்பல்துறை அணியின் உதவியோடு மல்டி-ஃபீட் சிலிண்டர் ஒன்றை வடிவமைத்துள்ளார். இதன் ஆறுவழி தலைப்பின் மூலம் ஒரே நேரத்தில் ஆறு பேருக்கு ஆக்ஸிஜன் வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிண்டோ நிறுவனக் குழுவின் பொறியியல் மற்றும் மென்பொருள் பிரிவின் 
துணைத்தலைவராக பணிபுரியும் முன்னாள் சூர்யா சங்கர் அவர்கள், தன பிரிவின் 
உதவியுடன் முகக்கவசங்கள் மற்றும் கையுறைகள் ஆகியவற்றை எளிதில் 
வழங்குவதற்கேதுவான முறையில் தயாரித்து குறைந்த விலையில் வழங்கி வருகிறார்.

முன்னாள் மாணவரான அர்ச்சனா ஹரி அவர்கள், அடையார் மற்றும் அதனைச் 
சுற்றியுள்ள பகுதிகளில் நிதி சேகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு 
அந்நிதியின் மூலம் சுகாதார ஊழியர்களுக்கு உதவி வருகிறார். இதேபோன்று 
செங்கல்பட்டு மாவட்டத்தில் நியூ லைப் அறக்கட்டளையின் நிறுவனர் திரு. 
ரமேஷ் அவர்கள் தனது நண்பர்களின் உதவியோடுமாவட்டத்தில் உள்ள சுகாதார 
ஊழியர்கள், பிறமாநில ஊழியர்கள், தொழுநோயாளிகள் மற்றும் 
காவல்துறையினருக்கு உணவுப்பொருட்களை வழங்கி வருகிறார்.

முன்னாள் மாணவர்கள் வெளிநாடுகளிலும் தொற்றுதடுப்பு நடவடிக்கைகளில் 
ஈடுபட்டு வருகின்றனர். சி.எஸ்.யூ நார்த்ரிட்ஜில் எய்ம்ஸ் 2 திட்டத்தின் 
இயக்குனர் திரு.எஸ்.கே.ரமேஷ் ஆவார்கள், சுய பாதுகாப்பு உபகரணங்கள் 
தயாரிப்பு  திட்டத்தின் ஆசிரிய உறுப்பினரான பேராசிரியர் பிங்கிங் லி 
மூலம் COVID19 தொற்றுநோயை எதிர்த்து  பணியாற்றும் லாஸ் ஏஞ்செலஸ் நகரின்   
முன் வரிசை தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். தமிழரான சான் ஜோஸ் நகரினைச் சேர்ந்த கே.ஆர். ஸ்ரீதர் அவர்களால் நிறுவப்பட்ட ப்ளூம் எனர்ஜி நிறுவனம், ஆயிரம் உடைந்த 
வென்டிலேட்டர்களைப் புதுப்பிப்பதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளது. 
மேலும் ஸ்டான்போர்ட் ஹெல்த் கேர் உடன் இனைந்து மருத்துவ உதவிகளையும் 
இந்நிறுவனம் செய்து வருகிறது.டல்ஸ்கோ அமைப்பின் தலைமை புதுமை அதிகாரி திரு. மதுமோகன் ஸ்ரீராமின் தலைமையில் துபாய் மாநகராட்சியில் பெரிய அளவு தோற்று நீக்க நடவடிக்கைகளை செயல்முறையின் மூலம் விளக்கப்பட்டது.
லைஃப் சிக்னல்கள் நிறுவனம் இக்காரஸ் நோவாவுடன் இணைந்து   
தனிமைப்படுத்தப்பட்ட சூழலில் நோயாளிகளை தொடர்ந்து கண்காணிப்பதற்காக 
பயோசென்சர் அடிப்படையிலான வயர்லெஸ் திட்டுகளை  வடிவமைத்து  முன்மாதிரி தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. மேலும் இவற்றின் விற்பனையை அமெரிக்க சந்தைகளில் தொடங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. என்.ஐ.டி திருச்சிராப்பள்ளியின் முன்னாள் மாணவர் சப்னா பேஹார்  இக்காரஸ் நோவா நிறுவனத்தின் நிறுவனரும், இயக்குனரும் ஆவார்.

திரு. ரிச்சர்ட் சேகர் அவர்கள் 4 மணி நேரத்தில், சுமார் 3.0 லட்சம் ருபாய் செலவில் 20 படுக்கைகளுடன் கூடிய மேக் ஷிப்ட் கூடார மருத்துவமனையை உருவாக்குவது குறித்த அறிக்கைக்கு பங்களித்தார்.மேலும் இவர் முகக்கவசங்களைத் தைக்க உள்ளூர் சமூகத்தை அணிதிரட்டி மொத்தம் 371 துணியால் ஆன கக்கவசங்களைத் தயாரித்து அமெரிக்காவின் பே ஏரியாவில் உள்ள மருத்துவமனைக்கு நன்கொடையாக அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கல்லூரி இயக்குனர் டாக்டர் மினி ஷாஜி தாமஸ் அவர்கள் முன்னாள் ணவர்களின் 
பணிகளை பாராட்டினார். மேலும் முன்னாள் மாணவர்களின் பங்களிப்பு குறித்து 
பெருமிதம் கொள்வதாகவும் அவர் கூறினார்.

No comments:

Post a comment